Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 2.5 நால்வகைக் குறுக்கங்கள்
கற்பறை கற்றபின்
Question 1.
ஐகார, ஔகார, மகர, ஆய்தக்குறுக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் சொற்களைத் தொகுத்தெழுதுக.
Answer:
எடுத்துக்காட்டு :
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு …………………
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) இரண்டு
Answer:
ஆ) ஒன்று
Question 2.
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ………………
அ) போன்ம்
ஆ) மருண்ம்
இ) பழம் விழுந்தது
ஈ) பணம் கிடைத்தது
Answer:
ஈ) பணம் கிடைத்தது
Question 3.
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ……………….
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்
குறு வினா
Question 1.
ஔகாரம் எப்போது முழுமையாக ஒலிக்கும்?
Answer:
ஔ, வௌ என ஔவைகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தன்னுடைய இரண்டு மாத்திரையில் முழுமையாக ஒலிக்கும்.
Question 2.
சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
Answer:
ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை
முதல் – 1 1/2 மாத்திரை
இடை – 1 மாத்திரை
கடை – 1 மாத்திரை
Question 3.
மகரக்குறுக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
1. வலம் வந்தான்
2. போன்ம்
மொழியை ஆழ்வோம்
கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.
Question 1.
காட்டு வளமே நாட்டு வளம்!
Answer:
அனைவருக்கும் வணக்கம். காட்டு வளமே நாட்டு வளம்! என்பதைப் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். ஒரு நாட்டு வளம் எப்படி முடிவு செய்யப்படுகின்றது என்றால், அந்த நாட்டில் உள்ள நீர் வளம், நில வளம், தொழில் வளம் ஆகியவை கொண்டு தான் கணக்கிடப்படுகின்றது. நீர் வளத்திற்குக் காரணம் மழை. மழையினால் மட்டுமே நீர் வளத்தைப் பெருக்க முடியும்.
அந்த மழைக்கு அடிப்படைக் கராணம் காடுகள்தான். காடுகள் இல்லையென்றால் நீர் வளம் நாட்டில் இல்லை. காடுகளும் காட்டுயிரிகளும் நிலவளமாகிய மண்வளத்தை மேம்படுத்துகின்றது.நிலமும் நீரும் பெருகவில்லை என்றால் நாட்டின் தொழில் வளம் கிடையாது. எனவே காட்டு வளமே நாட்டு வளம் என்று கூறி நிறைவு செய்கின்றேன். நன்றி.
Question 2.
காட்டின் பயன்கள்
Answer:
அனைவருக்கும் வணக்கம். காட்டின் பயன்கள் என்பதைப் பற்றி சில நிமிடங்கள் பேசுகின்றேன். காட்டின் பயன்கள் ஒன்றல்ல. இரண்டல்ல.அவை பலவாகும்.விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிரிகள், ஊர்வன ஆகிய எண்ணற்ற உயிரிகளுக்கு உணவையும் உறைவிடத்தையும் தருவது காடே. உயிர்வளியை அதிகமாக உற்பத்தி செய்து கொடுக்கின்றது.
மழை வளத்தைப் பெருக்குகின்றது. மண்ணைப் பண்படுத்துகின்றது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும். உணவுப்பெருக்கம் ஏற்படும். பருவநிலை சீரடையும். மண்ணரிப்பு தடுக்கப்படும். நிலத்தடி நீர் மட்டத்தைப் பெருக்கும். புவி வெப்பமயமாதலைத் தடுக்கும். எனவே காட்டின் பயன் அறிந்து காடுகள் வளர்ப்போம் என்று கூறி நிறைவு செய்கின்றேன்.நன்றி.
அறிந்து பயன்படுத்துவோம்
எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.
1. மகளிர் × ஆடவர்
2. அரசன் × அரசி
3. பெண் × ஆண்
4. மாணவன் × மாணவி
5. சிறுவன் × சிறுமி
6. தோழி × தோழன்
படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுக
ஒன்றன் பால்
ஆண்பால்
ஒன்றன் பால்
பெண்பால்
பலர்பால்
பலவின் பால்
பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.
(எ.கா) : கண்ண கி சிலம்பு அணிந்தான்.
Answer:
கண்ணகி சிலம்பு அணிந்தாள்.
கடிதம் எழுதுக.
Question 1.
நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
Answer:
நண்பனுக்குக் கடிதம்
23, பெரியார் வீதி,
சேலம் – 3.
10.6.2019.
ஆருயிர் நண்பா !
உன் அன்பு நண்பன் எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தாரும் மிகுந்த நலத்துடன் இருக்கின்றோம். நீயும் உன் குடும்பத்தாரும் நலமா?எங்கள் பள்ளியில் கடந்த வாரம் மதுரைக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள்.
அங்குச் சென்ற அனுபவத்தை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். மதுரை என்றால் இனிமை என்பதைப் பாடநூலில் தான் படித்திருக்கின்றேன். அங்குச் சென்றபோது தான் அந்த இனிமையை உணர்ந்தேன்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றேன். அங்கு எவ்வளவு நுணுக்கமான கலைநுட்பம் தெரியுமா? காணக் கண் கோடி வேண்டும் நண்பா! குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்ப்பாடல்கள் கல்வெட்டுகளில் அங்குச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.பின்னர் நாயக்கர் மகாலுக்குச் சென்றோம். அங்குள்ள ஒவ்வொரு தூ ணும் கதைகள் பல சொல்லும்.
அங்குள்ள நாட்டிய அரங்கு மிகவும் பொலிவுடன் உள்ளது. மதுரை காமராசர் பல்கலைக் கழகம் சென்றோம்.அங்குள்ள நூலகத்தைக் கண்டு வியந்து தமிழ்ச்சங்கமே! இதுவோ? என்று நினைத்தேன். அடுத்த வாரம் நேரில் வரும் போது இன்னும் விளக்கமாகக் கூறுகின்றேன். அன்புடன் முடிக்கின்றேன்.வாழ்க வளமுடன்.
இப்படிக்கு
உயிர் நண்பன்,
ப. இளங்கதிர்
உறைமேல் முகவரி
பெறுநர்
ச.கதிரவன்,
34,புதுக் காலனி,
மொழியோடு விளையாடு
வட்டத்திலுள்ள எழுத்துக்களைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.
/>
1. புதையல்
2. இயல்
3. கயல்
4. புயல்
5. கடல்
6. தையல்
7. புல்
8. கல்
9. இல்லை
10. இயல்பு
(எ.கா) : வாழை + காய் – வாழைக்காய்
1. குருவி + கூடு – குருவிக்கூடு
2. விளையாட்டு + திடல் – விளையாட்டுத் திடல்
3. தயிர் + சோறு – தயிர்ச் சோறு
4. கொய்யா + பழம் – கொய்யாப் பழம்
5. விளையாட்டு + போட்டி – விளையாட்டுப்போட்டி
6. அவரை + காய் – அவரைக்காய்
விடுகதைக்கு விடை எழுதுக.
Question 1.
மரம் விட்டு மரம் தரவுவேன்; குரங்கு அல்ல.
வளைந்த வாலுண்டு; புலி அல்ல கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல.
முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?……………..
Answer:
அணில்
Question 2.
என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது.
முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன்.
இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன்.
மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்? ……………..
Answer:
குதிரை
Question 3.
வெள்ளையாய் இருப்பேன். பால் அல்ல.
மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல
தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?……………..
Answer:
கொக்கு
கலைச்சொல் அறிவோம்
1. தீவு – Island
2. இயற்கை வளம் – Nature Resource
3. வன விலங்குகள் – Wild Animals
4. வனப் பாதுகாவலர் – Forest Conservator
5. உவமை – Parable
6. காடு – Jungle
7. வனவியல் – Forestry
8. பல்லுயிர்மண்ட லம் – Bio Diversity
கூடுதல் வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.
Question 1.
மூவிடங்களிலும் குறுகும் குறுக்கம் …………………
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
அ) ஐகாகரக்குறுக்கம்
Question 2.
சொல்லுக்கு முதலில் மட்டுமே குறுகும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்
Question 3.
வையம், சமையல், பறவை ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
அ) ஐகாகரக்குறுக்கம்
Question 4.
ஔவையார், வௌவால் ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்
Question 5.
சொல்லின் இடையிலும் கடையிலும் வராத குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஆ) ஔகாகரக்குறுக்கம்
Question 6.
மகரக்குறுக்கத்தின் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
ஈ) கால்
Question 7.
ஆய்தக்குறுக்கத்தின் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
ஈ) கால்
Question 8.
மெய்யெழுத்து பெறும் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
அ) அரை
Question 9.
உயிர்க்குறில் பெறும் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) கால்
Answer:
ஆ) ஒன்று
Question 10.
உயிர்க்நெடில் பெறும் மாத்திரையளவு
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) இரண்டு
Answer:
ஈ) இரண்டு
Question 11.
வலம் வந்தான், போன்ம், மருண்ம் ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாகரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
இ) மகரக்குறுக்கம்
Question 12.
முஃடீது, கஃறீது ஆகிய சொற்களில் பயின்று வரும் குறுக்கம்
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஔகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்
Answer:
ஈ) ஆய்தக்குறுக்கம்
Question 13.
பொருத்துக.
1. ஐகாரக்குறுக்கம் – அ) ஔவையார்,வௌவால்
2. ஔகாரக்குறுக்கம் – ஆ) வலம் வந்தான்
3. மகரக்குறுக்கம் – இ) முஃடீது , கஃறீது
4. ஆய்தக்குறுக்கம் – ஈ) சமையல் , பறவை
அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
Answer:
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
Question 14.
ஆய்தக்குறுக்கம் இடம் பெறாத சொல்
அ) அஃது
ஆ) முஃடீது
இ) கஃறீது
ஈ) பஃறுளி
Answer:
அ) அஃது
Question 15.
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
1. ஐகாரக்குறுக்கம் – ஒன்றரை மற்றும் ஒரு மாத்திரை
2. ஔகாரக்குறுக்கம் – இரண்டு மாத்திரை
3. மகரக்குறுக்கம் – கால் மாத்திரை
4. ஆய்தக்குறுக்கம் – கால் மாத்திரை
Answer:
2. ஔகாரக்குறுக்கம் – இரண்டு மாத்திரை
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. சில இடங்களில் தன்னுடைய மாத்திரையளவு குறைந்து ஒலிப்பவை ………………..
2. ‘ஐ’ என்ற எழுத்து பெறும் மாத்திரையளவு …………………
3. அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து பெறும் மாத்திரையளவு……………….
4. ………………. சொல்லின் இடையிலும் இறுதியிலும் வாராது.
5. ஆய்தம் தன் மாத்திரையில் குறைந்து ஒலிப்பது …………………
Answer:
1. குறுக்கங்கள்
2. இரண்டு
3. அரை
4. ஔகாரம்
5. ஆய்தக்குறுக்கம்.
குறுவினா
Question 1.
ஔகாரக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
ஒளகாரம் தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஔகாரக்குறுக்கம் எனப்படும். சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும். சான்று: ஔவையார் , வௌவால்
Question 2.
ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
ஐகாரம் தன் இரண்டு மாத்திரை அளவிலிருந்து ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஐகாரக்குறுக்கம் எனப்படும். சொல்லுக்கு முதல் , இடை , கடை ஆகிய இடங்களில் குறுகும்.
சான்று: சைவம் , சமையல்
Question 3.
மகரக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
மகரம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும்.
சான்று: வலம் வந்தான்
Question 4.
ஆய்தக்குறுக்கம் என்றால் என்ன?சான்று தருக.
Answer:
ஆய்தம் தன் அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் எனப்படும்.
சான்று: கற்றீது.