Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Question 1.
பல்வகையான கப்பல்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை 1

Question 2.
தரைவழிப்பயணம், கடல்வழிப்பயணம், வான்வழிப்பயணம் ஆகியவை குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
ஆசிரியர் :
மாணாக்கர்களே! தரைவழிப்பயணம் , கடல்வழிப்பயணம் , வான்வழிப்பயணம் ஆகியவை குறித்து இன்று கலந்துரையாடல் செய்யுங்கள்.

யாழினி :
இன்றைய நிலையில் தரைவழிப்பயணம் மட்டுமே சிறந்தது. ஏனென்றால், செல்லவேண்டிய இடத்திற்கு ஊர்திகள் மூலம் விரைவாகச் செல்லலாம். எவ்விதக் கட்டுப்பாடுமின்றிச் செல்லலாம்.

அமுதன் :
கடலின் அழகைக் கண்டு மகிழவும் , கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும், கடல் தீவுகளின் இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழவும் கடல்வழிப் பயணமே சிறந்தது. எனவே, நான் கடல்வழிப் பயணத்தை விரும்புகின்றேன்.

காவ்யா :
தரை மற்றும் கப்பல் வழி பயணங்களைவிடச் சிறந்தது வான்வழிப்பயணம் ஆகும். பல நாட்கள் செல்ல வேண்டிய பயணத்தை ஒரு சில மணி நேரங்களிலேயே செல்லலாம். அதிவிரைவுக்கு ஏற்றது.

ஆசிரியர் :
நன்று மாணவர்களே!

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தமிழரின் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது …………………
அ) கலம்
ஆ) வங்கம்
இ) நாவாய்
ஈ) ஓடம்
Answer:
ஈ) ஓடம்

Question 2.
தொல்காப்பியம் கடற்பயணத்தை ………………… வழக்கம் என்று கூறுகின்றது.
அ) நன்னீர்
ஆ) தண்ணீ ர்
இ) முந்நீர்
ஈ) கண்ணீ ர்
Answer:
இ) முந்நீர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Question 3.
கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி
அ) சுக்கான்
ஆ) நங்கூரம்
இ) கண்டை
ஈ) சமுக்கு
Answer:
அ) சுக்கான்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் ……………… என அழைக்கப்படும்.
2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது ……………………
3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ……………….. எனக்குறிக்கப்படும்.
Answer:
1. தொகுதி
2. நங்கூரம்
3. கண்ணடை

பொருத்துக.

1. எரா – திசைகாட்டும் கருவி
2. பருமல் – அடிமரம்
3. மீகாமன் – குறுக்கு மரம்
4. காந்த ஊசி – கப்பலைச் செலுத்துபவர்
Answer:
1. எரா – அடிமரம்
2. பருமல் – குறுக்கு மரம்
3. மீகாமன் – கப்பலைச் செலுத்துபவர்
4. காந்த ஊசி – திசைகாட்டும் கருவி

தொடர்களில் அமைத்து எழுது.

1. நீரோட்டம் – ஆழ்துளைக்கிணறு அமைக்கும் முன்னர் நீரோட்டம் பார்ப்பர்.
2. காற்றின் திசை – கப்பலைக் காற்றின் திசைக்கேற்ப செலுத்துவர்.
3. வானியல் அறிவு – தமிழர் வானியல் அறிவில் சிறந்து விளங்கினர்.
4. ஏற்றுமதி – பண்டைய காலத்தில் கடல்வணிகம் மூலம் ஏற்றுமதி நடைபெற்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

குறு வினா

Question 1.
தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.
Answer:
எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து தோண்டப்பட்டவை ‘தோணி’ எனப்பட்டன.

Question 2.
கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் (அ)பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?
Answer:
மரங்களையும் பலகைகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்க இடையே தேங்காய் நார் (அல்லது) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இருக்கி ஆணிகளை அறைந்தனர்.

Question 3.
கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களை க் கூறுக.
Answer:

  1. எரா
  2. பருமல்
  3. வங்கு
  4. கூம்பு
  5. பாய்மரம்
  6. சுக்கான்
  7. நங்கூரம் – போன்றவை கப்பல் உறுப்புகள் ஆகும்.

சிறு வினா

Question 1.
சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.
Answer:
சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள் :

  1. தோணி
  2. ஓடம்
  3. படகு
  4. பணை
  5. மிதவை
  6. தெப்பம்

கடல்களைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள் :

  1. கலம்
  2. வங்கம்
  3. நாவாய்

Question 2.
பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றிக் கூறுக.
Answer:
(i) காற்றின் திசை அறிந்து கப்பல்கள் செலுத்தும் முறையைத் தமிழர் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

(ii) கடலில் காற்று வீசும் திசை, நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் நன்கு அறிந்து வைத்து, உரிய காலத்தில் உரிய திசையில் கப்பலைச் செலுத்தினர்.

(iii) திசைகாட்டும் கருவி மற்றும் விண்மீன்களின் நிலையை வைத்து திசையை அறிந்து கப்பலைச் செலுத்தினர்.

(iv) சிறந்த வானியல் அறிவை மாலுமிகள் பெற்றிருந்தனர்.

(v) கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல் நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து சரியான காலத்தில் கப்பலைச் செலுத்தினர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Question 3.
கப்பல் பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை?
Answer:
(i) கப்பல் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத மரங்களையே பயன்படுத்தினர்.

(ii) நீர்மட்டவைப்பிற்கு வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் மரங்களையும் பக்கங்களுக்குத் தேக்கு, வெண் தேக்கு மரங்களைப் பயன்படுத்தினர்.

(iii) சுழி உடைய மரங்களைத் தவிர்த்தனர்.

(iv) மரங்களையும் பலகைகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்க இடையே தேங்காய் நார் (அல்லது) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இருக்கி ஆணிகளை அறைந்தனர்.

(v) சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இதனால் கப்பல் பழுதடையாமல் நீண்டகாலம் உழைத்தன.

(vi) இரும்பு துருப்பிடிக்கும் என்பதால் மரஆணிகளைப் பயன்படுத்தினர்.

சிந்தனை வினா

Question 1.
இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது ஏன் எனச் சிந்தித்து எழுதுக.
Answer:

  1. கப்பலில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தால் நீண்டநாட்கள் பயணம் செய்யவேண்டும். அதனால் கால விரையம் ஏற்படும்.
  2. அதிவிரைவுக்குக் கடற்பயணம் பயன்படுவதில்லை .
  3. கடல் உயிரினங்கள் மற்றும் புயல் போன்றவை அச்சத்தை ஏற்படுத்தும்.
  4. அதிகபொருட்செலவை ஏற்படுத்தும்.
    – போன்ற காரணங்களால் இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளவில்லை.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டதைக் கூறும் நூல்
அ) திருக்குறள்
ஆ) பட்டினப்பாலை
இ) பதிற்றுப்பத்து
ஈ) சேந்தன் திவாகரம்
Answer:
ஆ) பட்டினப்பாலை

Question 2.
பலவகையான கப்பல்களின் பெயரைக்குறிப்பிடும் நூல்
அ) திருக்குறள்
ஆ) பட்டினப்பாலை
இ) பதிற்றுப்பத்து
ஈ) சேந்தன் திவாகரம்
Answer:
ஈ) சேந்தன் திவாகரம்

Question 3.
மரத்தினால் ஆன ஆணி
அ) தச்சுமுழம்
ஆ) தொகுதி
இ) கண்ண டை
ஈ) கம்மியர்
Answer:
ஆ) தொகுதி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Question 4.
பழந்தமிழர் …………………. வழிகாட்டிகளாகப் பயன்படுத்தி கடல்பயணம் செய்திருக்கலாம்.
அ) ஆமைகள்
ஆ) குதிரைகள்
இ) யானைகள்
ஈ) மரங்கள்
Answer:
அ) ஆமைகள்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. தமிழர்கள் முற்காலத்திலேயே கப்பல் ………………… நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
2. கப்பல் கட்டும் கலைஞர்கள் ……………….. என்று அழைக்கப்பட்டனர்.
3. ……………… என்பது இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ஆகும்.
4. மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை ………………… என்பர்.
5. இத்தாலி நாட்டு கடற்பயணி ……………….
6. காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள் …………………. எனப்பட்டன.
Answer:
1. கட்டும் கலையை
2. கம்மியர்
3. கண்ணடை
4. வெட்டுவாய்
5. மார்க்கோபோலா
6. பாய்மரக்கப்பல்கள்

குறுவினா

Question 1.
தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலில் பரந்து பட்ட அறிவு பெற்றிருந்தனர் என்பதை விளக்கும் நூல்கள் எவை?
Answer:

  1. திருக்குறள் பட்டினப்பாலை
  2. அகநானூறு
  3. பதிற்றுப்பத்து
  4. சேந்தன் திவாகரம்

Question 2.
தமிழர்கள் அயல்நாடுகளுக்குக் கப்பலில் சென்றனர் என்பதற்குச் சான்று ஒன்று தருக.
Answer:
நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதுவே, தமிழர்கள் அயல்நாடுகளுக்குக் கப்பலில் சென்றனர் என்பதற்குச் சான்று ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Question 3.
பெரிய கப்பற்படை கொண்டு பலநாடுகள் வென்ற சோழர்கள் யாவர்?
Answer:

  1. இராசராச சோழன்
  2. இராசேந்திர சோழன்

Question 4.
கரிமுக அம்பி , பரிமுக அம்பி என்றால் என்ன?
Answer:
கரிமுக அம்பி :
பெரிய படகுகளில் முன்பக்கத்தில் யானையின் தலை போன்று வடிவமைப்பது.

பரிமுக அம்பி :
பெரிய படகுகளில் முன்பக்கத்தில் குதிரையின் தலை போன்று வடிவமைப்பது.

Question 5.
தமிழர்கள் பயன்படுத்திய பாய்மரங்கள் யாவை?
Answer:

  1. பெரிய பாய்மரம்
  2. திருக்கைத்திப் பாய்மரம்
  3. காணப்பாய் மரம்
  4. கோசுப்பாய்மரம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Question 6.
கப்பல் செலுத்துபவர்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
Answer:

  1. மாலுமி
  2. மீகாமன்
  3. நீகான்
  4. கப்பலோட்டி

சிறு வினா

Question 1.
பாய்மரங்களைக் கட்டும் கயிற்றின் வகைகள் யாவை?
Answer:

  1. ஆஞ்சான் கயிறு
  2. தாம்பாங்கயிறு
  3. வேடாங்கயிறு
  4. பளிங்கைக்கயிறு
  5. மூட்டாங்கயிறு
  6. இளங்கயிறு
  7. கோடிப்பாய்க்கயிறு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 4.3 தமிழரின் கப்பற்கலை

Question 2.
கலங்கரை விளக்கம் – பொருள் விளக்கம் தருக.
Answer:

  1. கலம் என்றால் கப்பல்.
  2. கரைதல் என்றால் அழைத்தல்.
  3. கப்பலை அழைக்கும் விளக்கு என்னும் பொருளில் ‘கலங்கரை விளக்கம்’ எனப்பட்டது.