Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 6.1 ஒரு வேண்டுகோள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

Question 1.
உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு கலை பற்றிய தகவல்களைத் திரட்டுக.
Answer:
எனக்குப் பிடித்த கலை சிலம்பாட்டக் கலை. இது தமிழரின் தற்காப்புக் கலை. இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்பர். இது தடியைக் கையாளும் முறை. கால அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் எனப் பல கூறுகளைக்கொண்டது. சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடவில் சிலம்புக் கம்பியினால் தொடுதல் போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.

Question 2.
உழைப்பாளர்களின் பெருமையைக் கூறும் கவிதைகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  1. “நீங்கள் சேற்றில் கால் வைத்ததல் தான் நாங்கள் சோற்றில் கைவைக்கமுடியும்”
  2. “உழைப்பாளியின் வியர்வையே அமுதம்”
  3. ”உழைப்பாளிகளே பூமியின் கதிரவன்கள்”

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மயிலும் மானும் வனத்திற்கு ………………. தருகின்றன.
அ) களைப்பு
ஆ) வனப்பு
இ) மலைப்பு
ஈ) உழைப்பு
Answer:
ஆ) வனப்பு

Question 2.
மிளகாய் வற்றலின் ……………… தும்மலை வரவழைக்கும்.
அ) நெடி
ஆ) காட்சி
இ) மணம்
ஈ) ஓசை
Answer:
அ) நெடி

Question 3.
அன்னை தான் பெற்ற ………………… சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.
அ) தங்கையின்
ஆ) தம்பியின்
இ) மழலையின்
ஈ) கணவனின்
Answer:
இ) மழலையின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

Question 4.
‘வனப்பில்லை’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ……………….
அ) வனம் + இல்லை
ஆ) வனப்பு + இல்லை
இ) வனப்பு + யில்லை
ஈ) வனப் + பில்லை
Answer:
ஆ) வனப்பு + இல்லை

Question 5.
‘வார்ப்பு + எனில்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………….
அ) வார்ப் எனில்
ஆ) வார்ப்பினில்
இ) வார்ப்பெனில்
ஈ) வார்பு எனில்
Answer:
இ) வார்ப்பெனில்

நயம் அறிக.

ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச்சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.

1. பிரும்மாக்களே – சேர்ப்பவர்களே
2. உடைப்பவனின் – உழவனின்
3. சிகரங்களா – அலைகளா – காடுகளா – பள்ளத்தாக்குகளா – தோட்டங்களா
4. வனப்பில்லை – உயிர்ப்பில்லை

குறு வினா

Question 1.
தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை?
Answer:
அன்பும் பாசமும் தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை ஆகும்.

Question 2.
ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?
Answer:
இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப்பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை .

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

சிறு வினா

Question 1.
சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
Answer:
(i) நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும்.

(ii) உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.

(iii) தாயின் மகிழ்ச்சியான ஓவியத்தை வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்து இருக்க வேண்டும்.

(iv) சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் பால் மணம் கமழ வேண்டும்.

(v) ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள் உள்ளிட்ட இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் எவையும் கலை வடிவம் பெறலாம். ஆனால் அதில் மானுடப்பண்பு கட்டாயம் இருக்க வேண்டும். மானுடம் இல்லாத எந்த அழகும் அழகன்று. மனிதன் கலக்காத எதிலும் உயிர்ப்பில்லை .

சிந்தனை வினா

Question 1.
நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்?
Answer:
நான் ஒரு ஓவியக்கலைஞராக இருந்தால் உயிரோட்டமுள்ள ஓவியங்களையும் மனித நேயச் சிந்தனையை வெளிப்படுத்தும் வகையிலும் மக்கள் விழிப்படைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களையும் சமுதாய முன்னேற்றத்திற்கான ஓவியங்களையும் உருவாக்குவேன்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஒரு வேண்டு கோள் என்னும் கவிதையை எழுதியவர் …………………
அ) தேனரசன்
ஆ) காளமேகப் புலவர்
இ) சுரதா
ஈ) முடியரசன்
Answer:
அ) தேனரசன்

Question 2.
நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் ……………… நாற்றம் வீசவேண்டும்.
அ) ஈரமண்
ஆ) வியர்வை
இ) அன்பு
ஈ) பால் மணம்
Answer:
ஆ) வியர்வை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

Question 3.
உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், …………….. அதில் மணம் வீச வேண்டும்.
அ) ஈரமண்
ஆ) வியர்வை
இ) அன்பு
ஈ) பால் மணம்
Answer:
அ) ஈரமண்

Question 4.
தாயின் மகிழ்ச்சியான ஓவியத்தை வரைந்தால், அவரின் முகத்தில் …………….. நிறைந்திருக்க வேண்டும்.
அ) ஈரமண்
ஆ) வியர்வை
இ) அன்பு பாசம்
ஈ) பால் மணம்
Answer:
இ) அன்பு பாசம்

Question 5.
சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் ………………. கமழ வேண்டும்.
அ) ஈரமண்
ஆ) வியர்வை
இ) அன்பு பாசம்
ஈ) பால் மணம்
Answer:
ஈ) பால் மணம்

பொருத்துக.

1. பிரும்மாக்கள் – அழகு
2. நெடி – மகிழ்ச்சி
3. வனப்பு – படைப்பாளர்கள்
4. பூரிப்பு – நாற்றம்
Answer:
1. பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
2. நெடி – நாற்றம்
3. வனப்பு – அழகு
4. பூரிப்பு – மகிழ்ச்சி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

குறு வினா

Question 1.
தேனரசன் கவிதைகள் எழுதிய இதழ்கள் யாவை?
Answer:

  1. வானம்பாடி
  2. குயில்
  3. தென்றல்

Question 2.
தேனரசன் எழுதிய கவிதை நூல்கள் யாவை?
Answer:

  1. மண்வாசல்
  2. வெள்ளை ரோஜா
  3. பெய்து பழகிய மேகம்

Question 3.
இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் என்று கவிஞர் தேனரசன் குறிப்பிடுவன எவை?
Answer:
ஆல்ப்ஸ் மலைச் சிகரங்கள், அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள், அமேசான் காடுகள், பனிபடர் பள்ளத் தாக்குகள், தொங்கும் தோட்டங்கள் ஆகியன இயற்கையின் விந்தைத் தோற்றங்கள் என்று கவிஞர் தேனரசன் குறிப்பிடுகின்றார்.

Question 4.
உழவரின் உருவ வார்ப்பில் நிறைந்து இருக்க வேண்டியவை யாவை?
Answer:
உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.

Question 5.
சிறு குழந்தையின் சித்திரத்தில் நிறைந்து இருக்க வேண்டியவை யாவை?
Answer:
சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் பால் மணம் கமழ வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

Question 6.
ஒரு வேண்டுகோள் கவிதை இடம்பெறும் நூல் எது? அதனை எழுதியவர் யார்?
Answer:
ஒரு வேண்டுகோள் கவிதை இடம் பெறும் நூல் : பெய்து பழகிய மேகம். அதனை எழுதியவர் : கவிஞர் தேனரசன்.

சிறு வினா

Question 1.
கவிஞர் தேனரசன் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  1. கவிஞர் தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
  2. வானம்பாடி, தென்றல், குயில் ஆகிய இதழ்களில் கவிதை எழுதியுள்ளார்.
  3. இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.
  4. படைப்புகள் : மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் முதலிய கவிதை நூல்கள்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.1 ஒரு வேண்டுகோள்

தேனரசன்
தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.
வானம்பாடி, தென்றல், குயில் ஆகிய இதழ்களில் கவிதை எழுதியுள்ளார்.
இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.
படைப்புகள் : மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் முதலிய கவிதை நூல்கள்.

சொல்லும் பொருளும்

1. பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
2. நெடி – நாற்றம்
3. மழலை – குழந்தை
4. வனப்பு – அழகு
5. பூரிப்பு – மகிழ்ச்சி
6. மேனி – உடல்