Students can Download 8th Tamil Chapter 4.2 புத்தியைத் தீட்டு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு
கற்பவை கற்றபின்
Question 1.
அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளைத் திரட்டுக.
Answer:
(i), அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
(ii) அறிய அறியக் கெடுவார் உண்டா ?
(iii) அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
(iv) அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
(v) அற்ப அறிவு அல்லற் கிடம்.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் …………………. இன்றி வாழ்ந்தார்.
அ) சோம்பல்
ஆ) அகம்பாவம்
இ) வருத்தம்
ஈ) வெகுளி
Answer:
ஆ) அகம்பாவம்
Question 2.
‘கோயிலப்பா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ), கோ + அப்பா
ஆ) கோயில் + லப்பா
இ) கோயில் + அப்பா
ஈ) கோ + இல்லப்பா
Answer:
இ) கோயில் + அப்பா
Question 3.
பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………
அ) பகைவென்றாலும்
ஆ) பகைவனென்றாலும்
இ) பகைவன்வென்றாலும்
ஈ) பகைவனின்றாலும்
Answer:
ஆ) பகைவனென்றாலும்
குறுவினா
Question 1.
யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
Answer:
பிறரை மன்னிக்கத் தெரிந்தவரின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது.
Question 2.
பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?
Answer:
பகைவர்களிடம் நாம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
சிறுவினா
Question 1.
புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகள் :
(i) கத்தியைக் கூர்மையாக்குவதைத் தவிர்த்து விட்டு அறிவைச் கூர்மையாக்க வேண்டும்.
(ii) கோபம் நம் கண்ணை மறைத்துவிடும். அப்போது அறிவுடன் செயல்பட்டு சரியான முடிவெடுக்க வேண்டும்.
(iii) நம்மை அழிக்க நினைக்கும் பகைவர்களிடமும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
(iv) பிறருடைய குறைகளை மன்னிக்கத் தெரிந்தவர்களின் உள்ளம் மாணிக்கக் கோயிலைப் போன்றது. இதை மறந்தவர்களின் வாழ்வு அடையாளம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
(v) நாம் செருக்கின்றி வாழ வேண்டும். செருக்குடன் வாழ்வதால் நமக்கு எந்த லாபமும் இல்லை என்பதை எண்ணிப் பார்த்தால் நம் வாழ்வு தெளிவாகும். இவையே புத்தியைத் தீட்டி வாழவேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவனவாகும்.
சிந்தனை வினா
Question 1.
உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
Answer:
(i) என் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் நான் என் பொறுமையால் அவரை வெல்வேன்.
(ii) அன்போடு பழகுவேன்.
(iii) வெறுப்பதற்கான காரணம் அறிந்து அதைச் சரி செய்வேன்.
(iv) அவருடைய மனதில் உள்ள குழப்பத்தை நீக்குவேன்.
(v) விட்டுக் கொடுத்துப் பழகும் என்னுடைய செயல்பாட்டை அறிந்து அவர் தன்னை மாற்றிக் கொள்ளும்படிச் செய்வேன்.
கூடுதல் வினாக்கள்
சொல்லும் பொருளும் :
1. தடம் – அடையாளம்
2. அகம்பாவம் – செருக்கு
நிரப்புக :
1. ஆலங்குடி சோமு ………………………… ஆசிரியராகப் புகழ் பெற்றவர்.
2. ஆலங்குடி சோமு தமிழ்நாடு அரசின் ………………….. விருது பெற்றவர்.
3. தீட்ட வேண்டியது ……………………
4. …………………… கண்ணை மறைத்துவிடும்.
5. மன்னிக்கத் தெரிந்தவனின் உள்ளம் ……………………..
6. அகம்பாவத்தினால் ஒரு …………………….. இல்லை.
7. பகைவனிடமும் ……………….. காட்ட வேண்டும்.
Answer:
1. திரைப்படப் பாடல்
2. கலைமாமணி
3. புத்தி
4. ஆத்திரம்
5. மாணிக்கக் கோயில்
6. லாபமும்
7. அன்பு
விடையளி:
Question 1.
ஆலங்குடி சோமு – குறிப்பு வரைக.
Answer:
(i) ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர்.
(ii) சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
(iii) தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
நூல் வெளி
ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
இவரது திரையிசைப் பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.