Students can Download 9th Tamil Chapter 9.3 குறுந்தொகை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 9.3 குறுந்தொகை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

Question 1.
நீங்கள் கண்ட / உதவி செய்து மனம் நெகிழ்ந்த நிகழ்வை வகுப்பறையில் பதிவு செய்க.
Asnwer:
ஒருநாள், நான் காய்கறி வாங்குவதற்காகச் சந்தைக்குச் சென்றேன். காலை நேரமாக இருந்தாலும், வெயில் சுறுசுறுவென்று எரிந்துகொண்டிருந்தது. வெப்பம் அதிகமாக இருந்தது. இந்த வெயிலில் அம்மா அனுப்பி விட்டாளே என்று எண்ணிக்கொண்டே சென்றேன்.

என் முன்னே 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் தடியின்றி நடந்து கொண்டிருந்தார், நான் அவரைக் கடந்து செல்ல முயன்றபோது, சோர்வுற்று கீழே விழுந்து விட்டார், தண்ணீர் தெளித்து, தேநீர் வாங்கிக் கொடுத்து என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உதவி செய்தனர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

சற்று அவர் தெளிந்து எழுந்து உட்கார்ந்தார். நான் அருகில் சென்று ஐயா! ஏன் விழுந்து விட்டீர்கள்? என்ன காரணம்? என்றேன்,
தம்பி நான் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. என்னால் பசி மயக்கத்தில் ஓரடி கூட நடக்க முடியாது போல் உள்ளது என்ன செய்வேன் என்றார் என் கையில் அம்மா காய்கறி வாங்கி வரச் சொல்லி கொடுத்த 50 ரூபாய் இருந்தது. அருகில் ஒரு சிற்றுண்டிச் சாலை 20 ரூபாய்க்கு 4 இட்லியை வாங்கி கொடுத்துவிட்டு, மீதி உள்ள பணத்தில் காய்கறி வாங்கிச் சென்றேன். அம்மாவிடம் பயந்து கொண்டே கூறினேன். இப்பதாண்டா நீ என் பிள்ளை! என்று கூறி என்னை உச்சி முகர்ந்தாள்.

நான் மகிழ்ந்தேன்; நெகிழ்ந்தேன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) பாலை
ஈ) நெய்தல்
Answer:
இ) பாலை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

குறுவினா

Question 1.
பிடிபசி களைஇய பெருங்கை வேழம் – இவ்வடியில் உள்ள இலக்கணக் குறிப்புகளை கண்டறிக.
Asnwer:

  1. பிடிபசி – ஆறாம் வேற்றுமைத்தொகை
  2. களை இய – சொல்லிசை அளபெடை
  3. பெருங்கை – பண்புத்தொகை
  4. பெருங்கை வேழம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

Question 2.
குறுந்தொகை – பெயர் காரணம் எழுதுக.
Answer:
குறுமை + தொகை – குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகளால் குறுகிய பாக்களால் ஆன தொகுக்கப்பட்ட நூல் ஆதலால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

சிறுவினா

Question 1.
‘யா’ மரத்தின் பட்டையை உரித்தது எது? எதற்காக? விளக்குக.
Answer:

  • யா மரம் என்பது பாலை நிலத்தில் உள்ள ஒருவகை மரம் அதன் பட்டை ஈரத் தன்மையுடையது பாலை நிலத்தின் வழியாகக் கடந்து செல்லும் யானைகள்.
  • அப்போது ஆண் யானை பெண் யானையின் பசியையும் களைப்பையும் போக்கும் பொருட்டு அம்மரப்பட்டைகளை தன் தும்பிக்கையில் உரித்து பெண் யானைக்கு கொடுக்கும் காட்சியை குறுந்தொகை,
  • “பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும்” என்று விளக்குகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘நசை பெரிது’ – எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் யார் யாரிடம் கூறியது?
அ) தோழியிடம் தலைவி கூறியது
ஆ) தலைவியிடம் தோழி கூறியது
இ) தலைவன் தலைவியிடம் கூறியது
ஈ) தலைவி தலைவனிடம் கூறியது
Answer:
அ) தோழியிடம் தலைவி கூறியது

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

Question 2.
பொருத்துக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை - 1
Answer:
சொல்
அ) 4, 3, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 3, 4, 1
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 3.
குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை யாது?
அ) 4 – 8
ஆ) 3 – 9
இ) 9 – 12
ஈ) 13 – 39
Answer:
அ) 4 – 8

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

Question 4.
‘குறுந்தொகை’ நூலைப் பதிப்பித்தவர் யார்?
அ) பூரிக்கோ
ஆ) சௌரிப்பெருமாள் அரங்கனார்
இ) பிள்ளைப்பெருமாள்
ஈ) உ.வே.சாமிநாதர்
Answer:
ஆ) சௌரிப்பெருமாள் அரங்கனார்

Question 5.
குறுந்தொகை நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எது?
ஆ) 1915
இ) 1925
ஈ) 1920
Answer:
ஆ) 1915

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

Question 6.
கலித்தொகையில் “பாலைத்திணை” பாடியவர் யார்?
அ) கபிலர்
ஆ) ஓதலாந்தையார்
இ) பெருங்கடுங்கோ
ஈ) அம்மூவனார்
Answer:
இ) பெருங்கடுங்கோ

Question 7.
“நசை பெரிது” என்னும் குறுந்தொகைப் பாடலை பாடியவர் யார்?
அ) கபிலர்
ஆ) ஓதலாந்தையார்
இ) பெருங்கடுங்கோ
ஈ) அம்மூவனார்
Answer:
இ) பெருங்கடுங்கோ

Question 8.
பாலை பாடிய பெருங்கடுங்கோ மரபைச் சார்ந்தவர்?
அ) சோழ
ஆ) பாண்டிய
இ) சேர
ஈ) பல்லவ
Answer:
இ) சேர

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

Question 9.
‘நசை பெரிது’ பாடலில் அமைந்துள்ள இலக்கிய உத்தி எது?
அ) உள்ளுறை உவமை
ஆ) இறைச்சி
இ) உவமை
ஈ) உருவகம்
Answer:
ஆ) இறைச்சி

Question 10.
‘களை இய’ என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?
அ) இன்னிசை அளபெடை
ஆ) வினையெச்சம்
இ) சொல்லிசை அளபெடை
ஈ) இசைநிறை அளபெடை
Answer:
இ) சொல்லிசை அளபெடை

குறுவினா

Question 1.
குறுந்தொகை – குறிப்பு வரைக.
Answer:

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை.
  • இது தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது.
  • கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டது.
  • 4 அடி சிற்றெல்லையும் 8 அடி பேரெல்லையும் கொண்டவை.
  • 1915 ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 9.3 குறுந்தொகை

Question 2.
பெருங்கடுங்கோ – குறிப்பு வரைக.
Answer:

  • குறுந்தொகையின் 37ஆவது பாடலைப் பாடியவர் பெருங்கடுங்கோ.
  • இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர் ஆவார்.
  • கலித்தொகையில் பாலைத்திணையைப் பாடியதால் ‘பாலை பாடிய பெருங்கடுங்கோ’ என அழைக்கப் பெற்றார்.