Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Students can Download 10th Tamil Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

கற்பவை கற்றபின்

Question 1.
தாகூரின் கீதாஞ்சலி தமிழ்மொழிபெயர்ப்புப் பாடல் ஒன்றையும் கலீல் கிப்ரானின் கவிதை ஒன்றின் மொழிபெயர்ப்பையும் நூலகத்தில் படித்து எழுதி வருக.
தாகூரின் கீதாஞ்சலி தமிழ்மொழிபெயர்ப்புப் பாடல்
Answer:

‘நான் எந்தப்பாடலைப் பாடுவதற்காக இங்கு வந்தேனோ
இது இன்றுவரை பாடப்படாமலேயே உள்ளது
என் இசைக்கருவிகளைச் சரிசெய்வதிலேயே
என் நாட்களைக் கழித்துவிட்டேன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

உண்மையில் நேரம் வரவில்லை
வார்த்தைகள் பொருத்தப்படவில்லை
ஆசையினால் வரும் வலி ஒன்றே என் இதயத்தில் உள்ளது
பூமலரவில்லை காற்று பெருமூச்சுவிடுகிறது

நான் அவனது முகத்தைப் பார்த்ததில்லை
அவனது குரலைக் கவனித்தது இல்லை
என் வீட்டிற்கு முன்னாள் உள்ள சாலையில் இருந்து
அவனது மெல்லிய காலடி ஓசையை மட்டும் கேட்டிருக்கிறேன்

Question 2.
மொழிபெயர்ப்புச் சிறுகதை ஒன்றைப் படித்து அதன் கதைச்சுருக்கத்தையும் உங்கள் கருத்துகளையும் வகுப்பறையில் கூறுக.
Answer:
சிப்பிப் புழு ஒன்றின் கதை இது.

சிப்பிப் புழு உலகில் தானே அதி முக்கியமான ஜீவனாக எண்ணியது. பட்டுப் புழுவும் பயன் உள்ளதே ஆனால் பட்டு முத்துக்களைப் போல் அதிக விலை பெற்றுத் தருவது இல்லை. எனவே தன்னை உயர்வாக எண்ணியது சிப்பிப்புழு .

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

ஒரு நாள் கடலில் பெரும்புயல் வீசியது. சிப்பிப் புழு தன் கூட்டை மூடிக் கொண்டு, பாதுகாப்புக்காகத் தரைக்குப் போகக் கூடாது என்று எண்ணி கடலுக்குள் இருந்தது. ஆனால் இந்த அலை சிப்பிப்புழுவை விட்டு வைக்கவில்லை. அதனைத் தூக்கிக் கடலில் வாரிப் போட்டது. புழு மெதுவாக சிப்பியைத் திறந்து வெளியில் மெதுவாக எட்டிப் பார்த்தது. அதற்குள் மற்றொரு அலை வந்து அதனை மணலில் தூக்கிப் போட்டது. கடலுக்குள் திரும்பிப் போக வழியில்லாமல் அங்கேயே கிடந்தது. அது மிகவும் கோபம் அடைந்தது.

காகம் ஒன்று சிப்பியிடம் வெளியே வா என்றது; ஆனால் சிப்பி புழு, அருவருப்பான முட்டாளான உன்னிடம் பேச முடியாது என்றது. காகம் எவ்வளவு சொல்லியும் சிப்பி புழு வெளிவரவில்லை . மாறாக காகத்தைக் கேலி செய்து கொண்டே இருந்தது. நான் முத்துகளை உண்டாக்குவதால் தான் கடலுக்குப் பெருமை என்று கர்வமாகச் சிப்பி புழு கூறியது. ‘முத்து செய்யும் பெரிய நபரைப் பார்க்கின்றேன்’ வெளியே வா என்றது காகம். ஆனால் முடிந்தால் நீ பெரிய புத்திசாலி என்றால் என் சிப்பியை நீயே திறந்து கொள் என்றது புழு.

நல்லது நீயே சொல்லி விட்டாய் என்று சொல்லிக் காகம் சிப்பியைத் தன் அலகில் தூக்கி மேலே பறந்து போய்ப் பாறைகள் நடுவே போட்டது. சிப்பி தூள் தூளானது. காகம் சிப்பியைத் தன் அலகால் கொத்தி விழுங்கியது. பிறகு காகம் முத்தைப் பார்த்தது. முத்து அதனிடம் இருந்து விலகி, சாணக்குவியலில் விழுந்தது. காகம் உயரப் பறந்து மகிழ்வுடன் கத்திச் சென்றது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி …………………………….
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
Answer:
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

குறுவினா

Question 1.
தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுது.
Answer:
தாய்மொழித் தமிழும் உலகப்பொதுமொழி ஆங்கிலமும் தவிர, நான் கற்க விரும்பும் மொழி இந்தி.

இந்தி கற்க விரும்பும் காரணம் :

  • இந்தி நமது நாட்டின் தேசிய மொழி.
  • இந்தி இந்திய பாராளுமன்ற மொழி.
  • பாராளுமன்ற விவாதங்களை அறிய உதவும் மொழி.
  • அரசு மற்றும் தனியார் வேலை வடக்கே கிடைத்தால் துணையாக இருக்கும் மொழி.
  • வடநாட்டு மக்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ளவும் உதவும் மொழி இந்தி.

சிறுவினா

Question 1.
உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
Answer:

  • என்னுடன் படித்த மாணவன் வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்கிறான்.
  • நான் அவனைக் கண்டு இளம் வயது படிப்பதற்கு உரியது, பணி செய்வதற்கு அல்ல.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா! நாம் இன்று வேலைக்குச் செல்வதால் இன்றைய தேவைதான் பூர்த்தியாகும். நாளைய தேவை பூர்த்தியாகுமா?
    Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி - 1

அப்துல் கலாம் அவர்கள் வறுமையில் வாடினாலும் காலை, மாலை வேலைக்குச் செல்வார். இடைப்பட்ட நேரத்தில் பள்ளிக்குச் சென்றதால் தான் உலகம் போற்றும் உத்தமர் ஆனார். இவர்போல நீயும் உழை; இடைப்பட்ட நேரத்தில் என்னோடே பள்ளிக்கு வா. படித்துப் பணிக்குப் போகலாம்.

அரசும், தொண்டு நிறுவனமும் உடை முதல் உணவு வரை இலவசமாகத் தருகிறது.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி - 2

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 2.
ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு

ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (Translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது. ஆனால் ஒருவர் பேசும்போதேமொழிபெயர்ப்பது, விளக்குவது என்று (InterPreting)சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணி கேட்பியில் (Head Phone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வெளியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தன்முன் உள்ள காதணி கேட்பியை (Head Phone) எடுத்து பொருத்திக் கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார்.
Answer:
இப்பகுதியில் இருந்து 5 வினாக்களை உருவாக்குக.

  1. ஐ.நா.அவையில் உறுப்பினர்கள் தம் மொழியில் பேசும்போது மொழி தெரியாதவர்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?
  2. மொழி பெயர்ப்பு என்றால் என்ன?
  3. பார்வையாளர்கள் அவையில் பேசுவோர் உரையை எப்படிப் புரிந்து கொள்கின்றனர்?
  4. மொழிபெயர்ப்பாளர்கள் எங்கு அமர்ந்திருப்பர்?
  5. ஐ.நா.அவையில் பேசுவோரின் பேச்சு எவ்வளவு நேரத்தில் மொழிபெயர்க்கப் படுகிறது?
  6. ஐ.நா.அவையில் செய்யப்பட்டுள்ள வசதி யாது?
  7. காதணி கேட்பியை எதற்குப் பயன்படுத்துவர்?
  8. ‘விளக்குவது’ (Inter Preting) என்றால் என்ன?

நெடுவினா

Question 1.
தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல்
கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை.
மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை, என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்க கட்டுரை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி - 3
முன்னுரை :
உலகம் தகவல் தொழில்நுட்பத்தினால் சுருங்கி விட்ட சூழலில் கூட மொழிபெயர்ப்புத் துறை முக்கிய இடம் பெறுகிறது. இத்தகு மொழிபெயர்ப்பு கலை மக்களின் வாழ்வில் எத்தகு போக்கினைச் செய்கிறது என்பது பற்றிக் காண்போம்.

வரையறை:
மொழிபெயர்ப்பு என்பது மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை எந்தவித பொருள் மாற்றமும் இல்லாமல் வேறு மொழியில் பெயர்ப்பு செய்வது மொழிபெயர்ப்பு எனப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

தமிழ் இலக்கிய வளம் :
தமிழ் இலக்கிய வளம் பெற வேண்டும் என்றால் பிறமொழியில் சிறந்து விளங்கிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்து தமிழில் மொழிபெயர்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கம்பரின் இராமவதாரம், வில்லிபுத்தூராரின் வில்லிபாரதம் போன்ற காவியங்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டவையே.

கல்வி மொழி :
மொழிபெயர்ப்பைக் கல்வியாக்குவதன் மூலம் அனைத்துலக அறிவை நாம் பெற்றுப் பல்வேறு துறையில் சிறந்து விளங்கமுடியும்.

பிறமொழி இலக்கியம் :
ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கீதாஞ்சலியை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தப் பிறகு நோபல் பரிசு கிடைத்தது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

அறிவியல் கருத்துகள் :
மொழிபெயர்ப்பு அறிவியல் சார்ந்த துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. Tele என்ற ஆங்கிலச் சொல் தொலை என்பதைக் குறிக்கும். இதன் அடிப்படையில் Telephone – Telescope – தொலைபேசி, தொலைநோக்கி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பல்துறை கருத்துகள் :
கல்வி, அறிவியல், இலக்கியம் மட்டுமல்லாமல் பிறதுறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளன. வானொலி, திரைப்படம், இதழியியல், விளம்பரம் போன்ற துறைகளிலும் மொழிபெயர்ப்புப் பணி சிறந்து விளங்குகிறது. தொலைக்காட்சித் தொடர்கள் வேற்றுமொழிக்கு மாற்றப்படுவதால் அனைத்து மக்களையும் சென்றடைகிறது.

முடிவுரை:
எந்த மொழியின் படைப்பாக இருந்தாலும் எதை மொழிபெயர்க்க வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்பதனை அறிந்து இலக்கண விதிமுறையுடன் செய்தால் நிலைபெற்று விளங்கும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பிறநாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் எப்போது நிறுவப்பட்டன?
அ) சுதந்திரத்திற்கு முன்
ஆ) விடுதலைக்குப் பின்
இ) குடியரசுக்கு முன்
ஈ) குடியரசுக்குப் பின்
Answer:
ஆ) விடுதலைக்குப் பின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 2.
மொழிபெயர்த்தல் என்னும் தொடரைத் தொல்காப்பியர் கையாண்ட இடம் ………………..
அ) பெயரியல்
ஆ) வினையியல்
இ) மரபியல்
ஈ) உயிரியல்
Answer:
இ) மரபியல்

Question 3.
இராமாயண மகாபாரத தொன்மச் செய்திகள் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கியம் எது?
அ) சங்க இலக்கியம்
ஆ) பக்தி இலக்கியம்
இ) சிற்றிலக்கியம்
ஈ) நவீன இலக்கியம்
Answer:
அ) சங்க இலக்கியம்

Question 4.
மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?
அ) வி.சூ. நைப்பால்
ஆ) இரட்யார்ட் கிப்ளிவ்
இ) வெங்கட்ராமன்
ஈ) இரவீந்திரநாத் தாகூர்
Answer:
ஈ) இரவீந்திரநாத் தாகூர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 5.
‘மொகு சாஸ்ட்டு’ என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்………………..
அ) பதில் தர மறுக்கிறோம்
ஆ) விடைதர அவகாசம் வேண்டும்
இ) விடைதர முடியாது
ஈ) இரவீந்திரநாத் தாகூர்
Answer:
ஆ) விடைதர அவகாசம் வேண்டும்

Question 6.
வடமொழிக் கதையைத் தழுவி படைக்கப்பட்ட நூல் ………………..
அ) கம்பராமாயணம்
ஆ) சீவகசிந்தாமணி
இ) கலிங்கத்துப்பரணி
ஈ) வில்லிபாரதம்
Answer:
இ) கலிங்கத்துப்பரணி

Question 7.
மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள்………………..
அ) சாகித்திய அகாதெமி
ஆ) தேசிய புத்தக நிறுவனம்
இ) தென்னிந்திய புத்தக நிலையம்
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 8.
பன்னாட்டு மொழிகளைக் கற்பிப்பவை………………..
அ) தனியார் நிறுவனங்கள்
ஆ) வெளிநாட்டு தூதரகங்கள்
இ) பள்ளிகள்
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்

Question 9.
‘காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப் பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று கூறியவர் யார்?
அ) குலோத்துங்கன்
ஆ) பராந்தகன்
இ) இராஜராஜன்
ஈ) இராஜேந்திரன்
Answer:
அ) குலோத்துங்கன்

Question 10.
பொருத்தித் தெரிக.
அ) 1942 – 1. யூமா வாசுகி
ஆ) 1949 – 2. முத்துமீனாட்சி
இ) 2016 – 3. ராகுல் சாங்கிருத்யாயன்
ஈ) 2018 – 4. கணமுத்தையா
அ) 3, 4, 2, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 2, 4. 3, 1
Answer:
அ) 3, 4, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 11.
நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையைத் தருவது………………..
அ) நாடகம்
ஆ) மொழிபெயர்ப்பு
இ) தியானம்
ஈ) செல்வம்
Answer:
ஆ) மொழிபெயர்ப்பு

Question 12.
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் ………………..
அ) மு. கு. ஜகந்நாதர்
ஆ) மணவை முஸ்தபா
இ) அ. முத்துலிங்கம்
ஈ) அப்துல் ரகுமான்
Answer:
ஆ) மணவை முஸ்தபா

Question 13.
உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்று………………..
கூறியவர்
அ) மு. கு. ஜகந்நாதர்
ஆ) மணவை முஸ்தபா
இ) மு. மேத்தா
ஈ) அ. முத்துலிங்கம்
Answer:
அ) மு. கு. ஜகந்நாதர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 14.
“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்று குறிப்பிடும் செப்பேட்டுக் குறிப்பு………………..
அ) உத்திரமேரூர்
ஆ) மண்டகப்பட்டு
இ) சின்னமனூர்
ஈ) ஆதிச்சநல்லூர்
Answer:
இ) சின்னமனூர்

Question 15.
சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் சான்று………………..
அ) உத்திரமேரூர் கல்வெட்டு
ஆ) உறையூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
இ) மண்டகப்பட்டுக் கல்வெட்டு
ஈ) சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
Answer:
ஈ) சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு

Question 16.
வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்படாத இலக்கியத்தைக் கண்டறிக.
அ) சீவக சிந்தாமணி
ஆ) கம்பராமாயணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) வில்லிபாரதம்
Answer:
இ) சிலப்பதிகாரம்

Question 17.
வடமொழிக் கதையைத் தழுவி எழுதப்பட்ட இலக்கியத்தைக் கண்டறிக.
அ) பெருங்கதை
ஆ) முக்கூடற்பள்ளு
இ) கலிங்கத்துப் பரணி
ஈ) மணிமேகலை
Answer:
அ) பெருங்கதை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 18.
பாரதியின் மொழிபெயர்ப்புகளைப் பொருத்திக் காட்டுக.
i) பொருட்காட்சி – 1. Strike
ii) இருப்புப் பாதை – 2. Revolution
iii) புரட்சி – 3. East Indian Railways
iv) வேலை நிறுத்தம் – 4. Exhibition
அ) 4, 3, 2,1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 1, 4, 3
ஈ) 2, 4, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 19.
ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ……………….. அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டவர்.
அ) வேர்ட்ஸ் வொர்த்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ) லாங்பெல்லோ
ஈ) ஜி.யு. போப்
Answer:
ஆ) ஷேக்ஸ்பியர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 20.
………………..ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் தமிழில் ஆக்கப்பட்டன.
அ) 16
ஆ) 17
இ) 18
ஈ) 19
Answer:
இ) 18

Question 21.
மொழிபெயர்ப்பின் மூலம் பெற்றிருக்கக்கூடிய கொள்கை ………………..
அ) நடப்பியல்
ஆ) தத்துவவியல்
இ) இலக்கியத் திறனாய்வு
ஈ) திறனாய்வு
Answer:
இ) இலக்கியத் திறனாய்வு

Question 22.
1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர் ………………..
அ) ராகுல் சாங்கிருத்யாயன்
ஆ) சசிதேவ்
இ) கணமுத்தையா
ஈ) வெ. ஸ்ரீராம்
Answer:
அ) ராகுல் சாங்கிருத்யாயன்

Question 23.
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலைக் கணமுத்தையா தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு ………………..
அ) 1942
ஆ) 1945
இ) 1949
ஈ) 1952
Answer:
இ) 1949

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 24.
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூல் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டும், மொழி……………….. பெயர்த்தவர்களையும் பொருத்திக்காட்டுக.
i) கணமுத்தையா – 1. 1949
ii) டாக்டர் என். ஸ்ரீதர் – 2. 2016
iii) முத்து மீனாட்சி – 3. 2016
iv) யூமாவாசுகி – 4. 2018
அ) 1, 2, 3, 4
ஆ) 2, 3, 4, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
அ) 1, 2, 3, 4

Question 25.
வடம் (கயிறு), ஒட்டகம் என்ற இருபொருளுக்குரியச் சொல் ………………..
அ) Camel
ஆ) Cow
இ) Horse
ஈ) Rope
Answer:
அ) Camel

Question 26.
ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து ……………….. நூல்கள் வரை மொழி பெயர்க்கப் படுகின்றன.
அ) 1000
ஆ) 2000
இ) 4000
ஈ) 5000
Answer:
ஈ) 5000

Question 27.
தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதில் முதலிடத்தில் இரண்டாமிடத்தில் ……………….. இடம் வகிக்கின்றன.
அ) ஆங்கிலம், மலையாளம்
ஆ) மலையாளம், ஆங்கிலம்
இ) தெலுங்கு, கன்னடம்
ஈ) இந்தி, வடமொழி
Answer:
அ) ஆங்கிலம், மலையாளம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 28.
மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி ……………….. ஏற்படுகிறது.
அ) மொழிவளம்
ஆ) மொழி வளமிழப்பு
இ) மொழி சிதைவு
ஈ) மொழி மாற்றம்
Answer:
அ) மொழிவளம்

Question 29.
கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் ……………….. என்று குறிப்பிடுவார்கள்.
அ) பயன்கலை
ஆ) நிகழ்கலை
இ) கவின்கலை
ஈ) ஆயக்கலை
Answer:
அ) பயன்கலை

Question 30.
………………..பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும்.
அ) கொலம்பியா
ஆ) ஆக்ஸ்போர்டு
இ) ஹார்வர்ட்
ஈ) சென்னை
Answer:
இ) ஹார்வர்ட்

Question 31.
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”  – என்று பாடியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer:
அ) பாரதியார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 32.
“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” – என்று பாடியவர்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) அப்துல் ரகுமான்
Answer:
அ) பாரதியார்

Question 33.
பிரான்சு தேசிய நூற்கூடத்தில் ஏறக்குறைய ……………….. பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன.
அ) நூறு
ஆ) ஆயிரம்
இ) மூவாயிரம்
ஈ) பதினாறாயிரம்
Answer:
ஆ) ஆயிரம்

Question 34.
‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
– பாரதியாரின் இக்கூற்று உணர்த்தும் கருத்து?
அ) பலதுறை நூல்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.
ஆ) பலகலைகள் தமிழில் புதிதாகத் தோன்ற வேண்டும்.
இ) உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்.
ஈ) கலைச் செல்வங்களை உலகம் முழுவதும் பயணம் செய்து கண்டுகளிக்க வேண்டும்.
Answer:
இ) உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

குறுவினா

Question 1.
மொழிபெயர்ப்பு குறித்து மணவை முஸ்தபா கூறுவது யாது?
Answer:
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை, வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்கிறார் மணவை முஸ்தபா.

Question 2.
மொழிபெயர்ப்பின் இன்றியமையாமை யாது?
Answer:
ஒரு மொழி, வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாதது.

Question 3.
மொழிபெயர்ப்பு குறித்து மு.கு ஜகந்நாதர் குறிப்பிடுவது யாது?
Answer:
உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு ஒரு காரணமாகும் என்று மு.கு. ஜகந்நாதர் குறிப்பிடுகிறார்.

Question 4.
மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய இலக்கண நூல் எது?
Answer:
தொல்காப்பியர் மரபியலில் மொழிபெயர்த்தல் என்ற தொடரைக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மொழிபெயர்ப்பு பற்றிக் கூறிய இலக்கண நூல் தொல்காப்பியம் என்பதை உணர முடிகிறது.

Question 5.
சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நிறுவுக.
Answer:
‘மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர் செப்பேடு குறிப்பின் மூலம் சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பதை உணர முடிகிறது.

Question 6.
வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் யாவை?
Answer:
வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள். பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியவை ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 7.
பிறமொழிக் கருத்துகள் சங்க காலத்திலேயே தமிழ்ப்படுத்தப்பட்டன என்பதை விளக்குக.
Answer:
வடமொழியில் வழங்கிவந்த இராமாயண மகாபாரத செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்று இருப்பதைக் காணும்போது பிறமொழிக் கருத்துகள் சங்க காலத்திலேயே தமிழ்ப்படுத்தப் பட்டன என்பதை உணர முடிகிறது.

Question 8.
மொழிபெயர்ப்பு முயற்சியை மேற்கொண்ட நிறுவனங்கள் யாவை?
Answer:
சாகித்திய அகாதமி, தேசிய புத்தக நிறுவனம், தென்னிந்திய புத்தக நிறுவனம் ஆகியவை மொழிபெயர்ப்பு முயற்சி மேற்கொண்ட நிறுவனங்கள் ஆகும்.

Question 9.
இந்திய அரசு மக்களிடையே மொழிபெயர்ப்பை எதற்குப் பயன்படுத்தியது?
Answer:
மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டுவதற்கும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் மொழிபெயர்ப்பை இந்திய அரசு கருவியாக பயன்படுத்தியது.

Question 10.
அனைத்துலக அறிவையும் எளிதில் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
Answer:
மொழிபெயர்ப்பைக் கல்வியாகவும் அதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதில் பெறலாம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 11.
பிறநாட்டுத் தூதரகங்கள் தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதன் நோக்கம் யாது?
Answer:
பிறநாட்டுத் தூதரகங்கள் தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்றவற்றை மக்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனே தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றன.

Question 12.
பிறநாட்டு மொழிகள் எங்கு கற்பிக்கப்படுகிறது?
Answer:
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் பிறநாட்டு மொழிகளைக் கற்கலாம். சில தனியார் நிறுவனங்களும் பிற நாட்டு மொழிகளைக் கற்பிக்கின்றன.

Question 13.
மொழிபெயர்ப்பு எதற்கு உதவுகிறது?
Answer:
பிற மொழி இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் அவை போன்ற புதிய படைப்புகளை உருவாக்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

Question 14.
மொழி வேலியை மொழிபெயர்ப்பு அகற்றுகிறது என்பதை விளக்குக.
Answer:
கலைச் சிறப்புடையதாக இருக்கின்ற இலக்கியங்கள் அனைவரது அனுபவமாக மாறும்போது பொதுநிலை பெறுகிறது. அத்தகைய பொதுநிலை பெற்ற இலக்கியத்தை மொழிவேலி சிறையிடுகிறது. மொழியை வெளியே அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 15.
ஜெர்மன் யாரை தன் நாட்டு படைப்பாளியாகக் கொண்டாடுகிறது? ஏன்?
Answer:
ஷேக்ஸ்பியர்.
காரணம்:
ஷேக்ஸ்பியர் தாம் எழுதிய நூலை ஜெர்மன் மொழிபெயர்ப்பு செய்த காரணத்தால் ஜெர்மன் தன் நாட்டுப் படைப்பாளியாகக் கொண்டாடுகிறது.

Question 16.
ஆங்கிலேயர் வருகைக்குப்பின் தமிழ் மொழியில் அறிமுகமான பிறமொழி நூல்கள் யாவை?
Answer:
ஆங்கிலேயர் வருகைக்குப் பின் ஆங்கில நூல்களும் ஆங்கிலம் வழியாக பிற ஐரோப்பிய மொழி நூல்களும் அறிமுகமாயின. இவற்றில் தரமான நூல்கள் குறைவே.

Question 17.
மொழிபெயர்ப்பால் திருக்குறள் அடைந்த பெருமை யாது?
Answer:
தமிழ் மொழிக்குரிய நூலாகிய திருக்குறள் உலகில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதன் காரணமாக உலகப் பொதுமறையாக உயர்ந்தது.

Question 18.
மொழிபெயர்ப்பின் தோற்றம் குறித்து எழுதுக.
Answer:
எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவாயினவோ அப்பொழுதே மொழிபெயர்ப்பு தொடங்கியது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 19.
மொழிபெயர்ப்பு வாயிலாக சர்வதேசத் தன்மை பெறும் முறைகள் யாவை?
Answer:
கருத்துப் பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல் அறிதல், இலக்கியம், தத்துவம் என்பன மொழிபெயர்ப்பு வாயிலாகவே சர்வதேசத் தன்மை பெறுகின்றன.

Question 20.
தன் நூலை தானே மொழிபெயர்த்தவர் யார்? அதனால் அவருக்கு கிடைத்த சிறப்பு யாது?
Answer:
இரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவர் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

Question 21.
மொழிபெயர்க்கப்படாமையால் உரிய ஏற்பு கிடைக்காத நூல் எது?
Answer:
மகாகவி பாரதியின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தால் உலகளவில் உயரிய விருதுகளும் ஏற்பும் கிடைத்திருக்கும்.

Question 22.
ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது?
Answer:
ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுகிறார்கள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 23.
ஒரு நாட்டின் பண்பாட்டு வளர்ச்சியையும் அறிவையும் மதிப்பிடுவது எது?
Answer:
ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.

Question 24.
இப்பொழுது நேரடியாக மொழிபெயர்க்கப்படும் நூல்கள் யாவை?
Answer:
பிரெஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லத்தீன், அமெரிக்கா முதலான நாடுகளின் நூல்கள் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்க தொடங்கியிருப்பது நல்ல பயனைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

Question 25.
இலக்கியத் திறனாய்வு கொள்கை பற்றி எழுதுக.
Answer:
மொழிபெயர்ப்பின் மூலம்தான் நாம் இலக்கியத்திறனாய்வு கொள்கைகளைப் பெற்று இருக்கிறோம். இன்றுள்ள திறனாய்வு குறைகளை எல்லாம் நாம் ஆங்கிலத்தின் வழியாகவே பெற்றிருக்கிறோம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 26.
மொழிபெயர்ப்பு எவ்வாறு அமைய வேண்டும்?
Answer:
மொழிபெயர்ப்புகள் கழிவின்றி சிதறலின்றி மூலமொழியின் கருத்துகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.

Question 27.
Camel என்பதன் மொழிபெயர்ப்பை விளக்குக.
Answer:
Camel என்பதற்கு வடம், ஒட்டகம் என்ற இரு பெயர்கள் உண்டு.

“ஊசி காதில் வடம் நுழையாது” என்ற வேற்றுமொழித் தொடரை “ஊசி காதில் ஒட்டகம் நுழையாது” எனத் தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே மொழிபெயர்க்கும் போது கருத்தும் பொருளும் மாறாமல் சரியாக மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

சிறுவினா

Question 1.
மொழிபெயர்ப்பு பற்றி அறிஞர்கள் கூறும் கருத்து யாது?
Answer:
மணவை முஸ்தபா :
‘ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்கிறார். மு.கு. ஜகந்நாதர்.

‘ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும் உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும்’ என்கிறார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Question 2.
மொழிபெயர்ப்பு சரியாக அமையாததால் காலத்திற்கும் அழிவு தரும் கலங்கம் நேர்ந்தது விவரி.
Answer:
உலகப் போரின்போது அமெரிக்கா சரணடையாவிட்டால் குண்டு வீசப்படும் என்ற செய்தியை ஜப்பானுக்கு அனுப்பியதாகவும் அதற்கு ஜப்பான், ‘மொகு சாஸ்ட்டு’ என்று விடை அனுப்பியதாகவும் கூறுவர். அந்தத் தொடரின் பொருள் தெரியாமையால் அமெரிக்கா, ஹிரோஷிமாவில் குண்டு வீசியது என்று சொல்கிறார்கள். அந்தத்தொடருக்கு விடைதர அவகாசம் வேண்டும்’ என்பதாம். ஆனால் அதற்கு அமெரிக்கர்கள் ‘மறுக்கிறோம்’ என்று பொருள் கொண்டதாகவும் கூறுவர். அதனால்தான் அழிவு தரும் களங்கம் நேர்ந்தது; மொழிபெயர்ப்புச் சரியாக அமைந்து இருந்தால் பேரழிவு தடுக்கப்பட்டிருக்கும்.

Question 3.
இடம்பார்த்து மொழிபெயர்க்க வேண்டும் என்பதைச் சான்றுடன் விவரிக்க.
Answer:
Tele என்பது தொலை என்பதைக் குறிக்கிறது. ஆகவே Telegraph, Television, Telephone, Telescope, Telemetry முதலிய சொற்கள் மொழிபெயர்க்கப்படுகிற போது தொலைவரி, தொலைக்காட்சி, தொலைபேசி, தொலைநோக்கி, தொலை அளவியல் என்றவாறு முன் ஒட்டுகளுடன் மொழிபெயர்க்க ப்பட்டன. இதற்கு மாறாக Transcribe, Transfer, Transform, Transact ஆகியவற்றை மொழிபெயர்க்கும்போது படியெடுத்தல், மாறுதல், உருமாற்றுதல், செயல்படுத்துதல் என்றவாறு மொழிபெயர்க்கப்படுகின்றன. இங்கு Trans என்ற முன்ஒட்டை வைத்து மொழிபெயர்க்கவில்லை. எனவே இடம் பார்த்து மொழிபெயர்க்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் – பொது

Students can Download 10th Tamil Chapter 4.5 இலக்கணம் – பொது Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.5 இலக்கணம் – பொது

கற்பவை கற்றபின்

Question 1.
கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.
அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.
ஆ) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அனைவரும் ஏற்பர்” என்று கூறினான்.
இ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்.
ஈ) செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.
Answer:
அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.
கால வழுவமைதி.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

ஆ) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அனைவரும் ஏற்பர்” என்று கூறினான்.
இட வழுவமைதி.

இ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்.
கால வழுவமைதி.

ஈ) செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.
பால் வழுவமைதி.

Question 2.
அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
அ) தந்தை, “மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா!” என்று சொன்னார்.
(ஆண்பாற் பெயர்களைப் பெண்பாற் பெயர்களாக மாற்றி எழுது)
ஆ) அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
இ) “இதோ முடித்துவிடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே முன்னர் கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)
ஈ) அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக)
உ) குழந்தை அழுகிறான் பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக).
Answer:
அ) தந்தை, “மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா!” என்று சொன்னார்.
(ஆண்பாற் பெயர்களைப் பெண்பாற் பெயர்களாக மாற்றி எழுது)
தாய், “மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா” என்று சொன்னாள்.

ஆ) அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
அக்கா நேற்று வீட்டிற்கு வந்தாள். அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பினார்(னாள்).

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

இ) “இதோ முடித்துவிடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே முன்னர் கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)
“இதோ முடித்துவிட்டேன்” என்று செயலை முடிக்கும் முன்னர் கூறினார்.

ஈ) அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக)
நீ என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை.

உ) குழந்தை அழுகிறான் பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக).
குழந்தை அழுகிறது பார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

மொழியை ஆள்வோம்

மொழி பெயர்க்க.

Malar: Devi, switch off the lights when you leave the room.
Devi: Yeah, we have to save electricity.
Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.
Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!
Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.
Devi: Superb news! If we launch artificial moons, they can assist in disaster relief by beaming light on areas that lot power!
Answer:

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 5
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 6

வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக.

காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றபடி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும் பறவைகளுக்கு பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.
யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு.
Answer:
காகத்திற்குக் காது உண்டா ? அதற்குக் காது கேட்குமா?

எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித்துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றபடி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு, காதுக் கேட்கும் பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

அ) இயற்கை – செயற்கை
எ.கா : பாதைதெரியாத இயற்கைக்காடுகளில் பயணிக்கச்செயற்கைக்கருவிகள் பயன்படுகின்றன.

ஆ) கொடு – கோடு
இராகவன் தன் நண்பன் கொடுத்த அளவுகோலைக் கொண்டு கோடு வரைந்தான்.

இ) கொள் – கோள்
கோள்களின் இயக்கம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

ஈ) சிறு – சீறு
சிறு பொந்துக்குள் இருந்து பாம்பு சீறுவதைக் கண்டேன்.

உ) தான் – தாம்
இராமன், “தான் தான் குற்றவாளி” என்று தாமே ஒப்புக் கொண்டான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

ஊ) விதி – வீதி
கண்ணனின் தலைவிதி அவனை வீதியில் நிறுத்தியது.

பத்தியைப் படித்துப் பதில் தருக.

பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவான போது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறித்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உயிர்கள் தோன்று நிலைபெறும் படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

வினாக்கள் :
1. பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்களை எடுத்து எழுதுக.
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
3. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
Answers:
1. மீண்டும் மீண்டும்.
2. தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது.
3. பெய்மழை.
4. பருப்பொருள்கள் சிதறுதல் (பெரு வெடிப்புக் கொள்கை).
5. நிலம், நீர், காற்று, நெருப்பு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

கட்டுரை எழுதுக.

தலைப்பு – விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 7

முன்னுரை :
ஆணுக்குப் பெண் சரிசமம்’ என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வண்ணம் விண்வெளியில் கால்பதித்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு :

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 8

  • 01.07.1961 அன்று இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் பிறந்தார்.
  • பெற்றோர் – பனாரஸ் லால் சாவ்லா (தந்தை), சன்யோகிதா தேவி (தாய்).
  • பஞ்சாபிக் குடும்பத்தைச் சார்ந்தவள்.
  • ‘கல்பனா’ என்றால் ‘கற்பனை’ என்று பொருள்.
  • இவருக்குச் சுனிதா மற்றும் தீபா என்ற இரு சகோதரிகளும் சஞ்சய் என்ற சகோதரனும் இருக்கின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

கல்வி :

கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். 1982-இல் சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றாள். 1984-இல் அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம்” பெற்றாள். 1988-இல் விண்வெளிப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

விண்வெளிப் பயணம் :

  • நாசா ஆராய்ச்சிக் கூடத்தில் “ஓசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல்” துணைத்தலைவராக பொறுப்பேற்றார்.
  • 1995-இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.
  • 1997 ஆம் ஆண்டு கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87ல் முதல் விண்வெளி பயணத்தைத் தொடங்கினார்.
  • 372 மணி நேரம் விண்வெளியிலேயே இருந்து சாதனை படைத்தார்.

கொலம்பியா விண்கல நிகழ்வு :

  • 16.01.2003ல் அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ் – 107 (STS – 107) விண்ணில் செலுத்தப்பட்டது.
  • இந்த விண்கலத்தில் சாவ்லா உட்பட ஏழு பேர் பயணித்தனர்.
  • பதினாறு நாட்கள் ஆய்வை முடித்துவிட்டு திரும்பிய போது, அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான் பரப்பில் அவ்விண்கலம் வெடித்துச் சிதறியது.
  • சாவ்லா உட்பட ஏழு பேரும் பலியாகினர்.

விருதுகளும் அங்கீகாரங்களும் :

  • இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க தமிழக அரசாங்கம் “கல்பனா சாவ்லா” விருதினை 2004 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.
  • நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல்.
  • நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்.
  • நியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்குக் “கல்பனா (way)” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

முடிவுரை :

பெண்ணினத்திற்கே பெருமை சேர்ந்தவர் கல்பனா.
“கனவுகளைக் கண்டு அந்தக் கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும் முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்” என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திச் சென்ற வீரப்பெண்ணை நாமும் போற்றுவோம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 9

நயம் பாராட்டுக.

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ ? – பாரதியார்
தலைப்பு : இயற்கை
ஆசிரியர் : பாரதியார்

திரண்ட கருத்து :
வாழைக்கு அழகு குருத்து
செய்யுளுக்கு அழகு திரண்ட கருத்து நிலா, விண்மீன், காற்று ஆகிய இவற்றையெல்லாம் செம்மையுற்ற ஏற்படுத்தி வைத்து, அவற்றிலெல்லாம் தோய்ந்துள்ளது. திருவருளாகிய அமுதரசம். அந்த அமுதரசத்தைப் பருகி, அழகிய உன்னத நிலைக்கு யாம் உள்ளானோம். உலவுகின்ற மனமாகிய சிறுபறவையை எங்கெங்கும் செலுத்திக் களிப்படைவோம். பலாச்சுளை ஏற்றப்பட்ட வண்டியை ஒரு வண்டானது ரீங்காரம் செய்து வட்டமிடுவது ஆச்சரியகரமானதா என்ன?

தொடை நயம் :
தொடையற்ற பாட்டு
நடையற்றுப் போகும்
செய்யுளில் எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகிய உறுப்புகளால் தொடுக்கப்படுவது தொடை.

மோனை நயம் :
மோனையற்ற பாட்டு
சேனையற்ற நாடு
செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும். சான்று: குலாவும், குழம்பைக், குடித்தொரு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

எதுகை நயம் :
வீரத்துக்கு அழகு வேங்கை
பாட்டுக்கு அழகு எதுகை
முதல் எழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை எனப்படும்.

சான்று:

அடி எதுகை:
நிலாவையும்
குலாவும்
உலாவும்
பலாவின்

அணி நயம் :
கோவிலுக்கு மணி அழகு
செய்யுளுக்கு அணி அழகு
இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது.

மொழியோடு விளையாடு

தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.
(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)
1. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன்………….
2. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை ………………
3. கல் சிலை ஆகுமெனில், நெல் ………….  ஆகும்.
4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து ………….
5. மீன் இருப்பது நீரில், தேன் இருப்பது ………….
Answer:
1. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் கற்றல்.
2. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை கரு.
3. கல் சிலை ஆகுமெனில், நெல் சோறு ஆகும்.
4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து எழுத்து.
5. மீன் இருப்பது நீரில், தேன் இருப்பது பூவில்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 13
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 10

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

அகராதியில் காண்க.

அவிர்தல், அழல், உவா, கங்குல் , கனலி
Answer:
அவிர்தல் – ஒளி செய்தல், பீரல், விரிதல், பாடம் செய்தல்.
அழல் – உட்டணம், எருக்கு, கள்ளி, கேட்டை நாள், கொடுவேலி, செவ்வாய், தீ, நரகம், வெப்பம், பொறாமை, அழுதல்.
உவா – அமாவாசி, இளமை, இளையோன், கடல், நிறைவு, பூரணை, யானை, வாலிபன்,
உகாமரம்.
கங்குல் – இரவு, இருள், பரணி நாள்.
கனலி – கள்ளி, கொடுவேலி, கரியன், நெருப்பு, சூரியன்.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 14
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 11

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

செயல்திட்டம்

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் சில இயங்கி வருகின்றன. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ரோபோக்களை உருவாக்கும் நிறுவனங்கள் சில உலகினில் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய படங்களுடன் குறிப்பு எழுதி வருக.
Answer:
செய்தி -1 :

  • ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்.
  • இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ.
  • வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்றன.
  • இவை மனிதனின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன.
  • பெப்பரை வரவேற்பாளராகவும், பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

செய்தி – 2 :
2016இல் ஐ.பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக்கணினியானவாட்சன், சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

செய்தி – 3 :

  • ஹாங்காங் நகரத்தின் ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய சோபியா என்னும் இயந்திரப் பெண்ணுக்கு சௌதி அரேபியாவில் குடியுரிமை வழங்கியிருக்கிறார்கள்.
  • இதனுடைய உரையாடல்களும், முகபாவனைகளும் மனிதர்களைப் போன்றிருந்தன.

கலைச்சொல் அறிவோம்

மீநுண் தொழில்நுட்பம் – Nanotechnology
விண்வெளித் தொழில்நுட்பம் – Space Technology
உயிரித் தொழில்நுட்பம் – Biotechnology
விண்வெளிக் கதிர்கள் – Cosmic Rays
புறஊதாக் கதிர்கள் – Ultraviolet Rays
அகச்சிவப்புக் கதிர்கள் – Infrared Rays

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

நிற்க அதற்குத் தக

தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி;
திறன் பேசியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை;
காணொலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன்;
எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி;

இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட வைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 12

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 15
Answer:

  • கபடி, சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடச் செய்வேன்.
  • கோலி, பம்பரம் போன்ற விளையாட்டுகளை விளையாடச் செய்வேன்,
  • நூலகத்திற்கு அழைத்துச் செல்வேன்.
  • சமூகசேவை செய்ய பழக்குவேன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
குலசேகர ஆழ்வார் ‘வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.
பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி
Answer:
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

குறுவினா

Question 1.
வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
Answer:
கோடையில் பள்ளி விடுமுறை என்பதால் ஆரல்வாய்மொழிக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கும் உறுதித்தன்மை நோக்கி காலவழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக இத்தொடர் அமைகிறது.

Quesiton 2.
“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்கமாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
Answer:
சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

சிறுவினா

Question 1.
நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலச்சுமி கூப்பிடுகிறாள், போய் பார்” என்றார். ‘இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, “என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள், அவளிடம், “நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்து விடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

இப்பத்தியிலுள்ள வழுக்களைத் திருத்தியும் வழுவமைதிகளைப் பட்டியலிட்டும் எழுது.
Answer:
திருத்தப்பட்ட வழுக்கள் :

  • நேற்றிரவு பெய்த மழை தொட்டியை நிறைத்தது.
  • வாழைத் தோட்டத்தில் கன்றுடன் நின்றிருந்த மாடு கதறியது.
  • துள்ளிய கன்றைத் தடவிக்கொடுத்த…..

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) தன்மை வினைகள் – 1. நடந்தாய், வந்தீர்
ஆ) முன்னிலை வினைகள் – 2. நீர், நீங்கள்
இ) படர்க்கை வினைகள் – 3. வந்தேன் வந்தோம்
ஈ) முன்னிலை பெயர்கள் – 4. வந்தான், சென்றான்
அ) 1, 2, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 1, 4, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) 3, 1, 4, 2

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 2.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) மருதன் – 1. பலர்பால்
ஆ) பெண்கள் – 2. ஒன்றன்பால்
இ) யானை – 3. ஆண்பால்
ஈ) பசுக்கள் – 4. பலவின்பால்
அ) 4, 3, 1, 2
ஆ) 3, 1, 2, 4
இ) 2, 4, 1, 3
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஆ) 3, 1, 2, 4

Question 3.
பால் என்பது ……………. உட்பிரிவு ஆகும்.
அ) திணையின்
ஆ) திணையின்
இ) காண்டத்தின்
ஈ) படலத்தின்
Answer:
ஆ) திணையின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 4.
உயர்திணையின் பிரிவுகள் ………………
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 5.
அஃறிணையின் பிரிவுகள் ………………
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு

Question 6.
இடம் ……………….. வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
Answer:
ஆ) மூன்று

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 7.
பொருத்திக் காட்டுக.
i) நான், யான், நாம், யாம் – 1. தன்மை வினைகள்
வந்தேன், வந்தோம் – 2. தன்மைப் பெயர்கள்
iii) நீ, நீர், நீவிர், நீங்க ள் – 3. முன்னிலை வினைகள்
iv) நடந்தாய், வந்தீர், சென்றீர்கள் – 4. முன்னிலைப் பெயர்கள்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 3,1
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 2, 1, 4, 3

Question 8.
பொருத்திக் காட்டுக.
i) அவன் – தன்மை வினை
ii) பறந்தன – 2. முன்னிலை வினை
iii) நடந்தாய் – 3. படர்க்கை வினை
iv) வந்தேன் – 4. படர்க்கைப் பெயர்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 9.
பொருத்திக் காட்டுக.
i) செழியன் வந்தது – 1. கால வழு
ii) கண்ண கி உண்டான் – 2. இட வழு
iii) நீ வந்தேன் – 3. பால் வழு
iv) நேற்று வருவான் – 4. திணை வழு
அ) 4,3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4,3, 2, 11

Question 10.
ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ என்று கேட்பது……………….. வழு.
அ) விடை
ஆ) வினா
இ) மரபு
ஈ) கால
Answer:
ஆ) வினா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 11.
கண்ணன் எங்கே இருக்கிறார் என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று கூறுவது ……………. வழு.
அ) பால்
ஆ) வினா
இ) விடை
ஈ) மரபு
Answer:
இ) விடை

Question 12.
தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுவது ……………….. வழு.
அ) பால்
ஆ) வினா
இ) விடை
ஈ) மரபு
Answer:
ஈ) மரபு

Question 13.
பொருத்திக் காட்டுக.
i) என் அம்மை வந்தாள் – 1. பால் வழுவமைதி
ii) கத்துங் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் – 2. கால வழுவமைதி
iii) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – 3. மரபு வழுவமைதி
iv) வாடா ராசா மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது – 4. திணை வழுவமைதி
அ) 4, 3, 2, 1
ஆ) 2, 3, 1, 4
இ) 4, 2, 3, 1
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 14.
மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான் என்று கூறுவது ………………
அ) பால் வழுமமைதி
ஆ) திணை வழுவமைதி
இ) இட வழுவமைதி
ஈ) மரபு வழுவமைதி
Answer:
இ) இட வழுவமைதி]

Question 15.
பொருத்துக.
1. வீரன், அண்ணன், மருதன் – அ) பெண்பால்
2. மகள், அரசி, தலைவி – ஆ) பலர்பால்
3. மக்கள், பெண்கள், ஆடவர் – இ) ஒன்றன்பால்
4. யானை, புறா, மலை – ஈ) ஆண்பால்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
விடை :
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.
பொருத்துக.
1. நீ வந்தேன் – அ) இட வழாநிலை
2. நீ வந்தாய் – ஆ) இட வழு
3. நேற்று வருவான் – இ) கால வழாநிலை
4. நேற்று வந்தான் – ஈ) கால வழு
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 17.
பொருத்துக.
1. என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது – அ) பால் வழுவமைதி
2. வாடா இராசா, வாடா கண்ணா என மகளைத் தாய் அழைப்பது – ஆ) இடவழுவமைதி
3. இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான் என மாறன் பிறரிடம் சொல்வது இ) கால வழுவமைதி
4. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – ஈ) திணைவழுவமைதி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

குறுவினா

Question 1.
திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
திணை இரண்டு வகைப்படும். அவை: உயர்திணை, அஃறிணை.

Question 2.
பால் என்றால் என்ன? அதன் வகைகளைக் கூறு.
Answer:
பால் என்பது திணையின் உட்பிரிவு. பால் ஐந்து வகைப்படும். அவை:
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 3.
உயர்திணைக்குரிய பால்கள் எத்தனை? அவை யாவை?
Answer:
உயர்திணைக்குரியப் பால்கள் மூன்று. அவை: ஆண்பால், பெண்பால், பலர்பால்.

Question 4.
அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் எத்தனை? அவை யாவை?
Answer:
அஃறிணைக்குரியப் பால் பிரிவுகள் இரண்டு. அவை: ஒன்றன்பால், பலவின்பால்.

Question 5.
உயர்திணைக்குரிய பால் பகுப்புகளைக் கூறுக.
Answer:

  • வீரன், அண்ணன், மருதன் – ஆண்பால் (ஒரு ஆணை மட்டும் குறிக்கும்)
  • மகள், அரசி, தலைவி – பெண்பால் (ஒன்றுக்கு மேற்பட்ட நபரைக் குறிக்கும்)
  • மக்கள், பெண்கள், ஆடவர் – பலர்பால் (ஒன்றுக்கு மேற்பட்ட நபரைக் குறிக்கும்)

Question 6.
அஃறிணைக்குரிய பால் பகுப்புகளைக் கூறுக.
Answer:

  • அஃறிணையில் ஒன்றனை மட்டும் குறிப்பது ஒன்றன்பால். எ.கா: யானை, புறா, மலை
  • அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால். எ.கா: பசுக்கள், மலைகள்.

Question 7.
இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இடம் மூன்று வகைப்படும். அவை: தன்மை, முன்னிலை, படர்க்கை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 8.
வழு – வழா நிலை இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 2

Question 9.
வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வழு ஏழு வகைப்படும். அவை:
திணை வழு, பால் வழு, இட வழு , கால வழு, வினா வழு, விடை வழு, மரபு வழு.

Question 10.
வழுவமைதி என்றால் என்ன?
Answer:
இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதி ஆகும்.

Question 11.
வழுவமைதி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வழுவமைதி ஐந்து வகைப்படும். அவை:
திணை வழுவமைதி, பால் வழுவமைதி, இட வழுவமைதி, கால வழுவமைதி, மரபு வழுவமைதி.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 12.
திணை வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
Answer:
எ.கா : “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழு.
காரணம் : உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.

Question 13.
பால் வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
எ.கா : “வாடா ராசா, வாடா கண்ணா ” என்று தன் மகளைப் பார்த்துக் கூறுவது பால் வழுவமைதி.
காரணம் : உவப்பின் காரணமாக பெண்பால் ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.

Question 14.
இட வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
Answer:
எ.கா : மாறன் என்பான் தன்னைப் பற்றி பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூற மாட்டான்” எனக் கூறுதல்.
காரணம் : தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவதால் இடவழுவமைதி ஆயிற்று.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 15.
கால வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
Answer:
எ.கா : குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார். (வருவார் என்பதே சரி)
காரணம் : குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். வருகையின் உறுதித் தன்மை காரணமாக கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.

Question 16.
மரபு வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
Answer:
எ.கா : “கத்துங் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும்”-பாரதியார்.
(குயில் கூவும் – மரபு) காரணம் : குயில் கூவும் என்பது மரபு. பாரதியார் மகாகவி, அவர் குயில் கத்தும் என்று கூறியதால்
வழுவாயினும் மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

Question 17.
வீரன், அண்ண ன், மருதன் ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : உயர்திணை
  • பால் : ஆண்பால்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 18.
மகள், அரசி, தலைவி ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : உயர்திணை
  • பால் : பெண்பால்

Question 19.
மக்கள், பெண்கள், ஆடவர் ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : உயர்திணை
  • பால் : பலர்பால்

Question 20.
யானை, புறா, மலைஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : அஃறிணை
  • பால் : ஒன்றன்பால்

Question 21.
பசுக்கள், மலைகள் ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : அஃறிணை
  • பால் : பலவின்பால்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 22.
வழா நிலை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வழாநிலை ஏழு வகைப்படும். அவையாவன:

  1. திணை வழாநிலை,
  2. பால் வழாநிலை,
  3. இடவழாநிலை,
  4. காலவழாநிலை,
  5. வினாவழாநிலை,
  6. விடைவழாநிலை,
  7. மரபுவழாநிலை

Question 23.
“நான் தேர்வில் தேர்ச்சியடைந்து விட்டேன்” என்று தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்பு கூறும் வழுவமைதி யாது?
Answer:
கால வழுவமைதி; நம்பிக்கையின் அடிப்படையில் கூறப்படுவது.

சிறுவினா

Question 1.
மூவிடப் பெயர்களைப் பெயர்/வினை அடிப்படையில் எடுத்துக்காட்டுடன் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 3

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Qeuestion 2.
செழியன் வந்தது
கண்ணகி உண்டான்
நீ வந்தேன்
நேற்று வருவான்.
ஒரு விரலைக் காட்டிச் ‘சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல்.
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல். தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல் – இத்தொடர்களில் உள்ள வழு எவ்வகை வழு எனவும் வழுவை நீக்கியும் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 4

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Students can Download 10th Tamil Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

கற்பவை கற்றபின்

Question 1.
“அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டு மொத்தப் பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து கொள்ளப் போவதையும் உள்ளடக்கியது” – ஐன்ஸ்டைன்.
“வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழி வகுப்பேன்” – ஸ்டீபன் ஹாக்கிங்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

இவ்விருவரின் கூற்றுகளைப் பாடப்பகுதி உணர்த்தும் கருத்துகளோடு ஒப்பிட்டு உரையாடுக.
Answer:
மணி: அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன் என அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைன் கூறியுள்ளாரே. அதைப் பற்றிய காரணம் என்னவாக இருக்கும்?
முகில்: அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதோடு முடிந்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டு மொத்தப் பேரண்டத்தையும் அளந்து விடுகிறது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து கொள்ளப் போவதையும் உள்ளடக்கியது.
மணி: ஐன்ஸ்டைனது E = MC2 கோட்பாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளாததற்கான காரணம் இதுவாக இருக்குமோ?
முகில்: ஆம்! ஐன்ஸ்டைன் ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளைக் கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னார். அவரது கோட்பாடுகளை அறிவுத்திறனுடன் கற்பனையையும் சேர்த்து யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 100 ஆண்டுகளுக்குப் பின் ஈர்ப்பலைகள் இருப்பதை உலகம் கண்டு கொண்டது.
மணி: ‘வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது’ என்று ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

முகில்: ஆம் ஹாக்கிங்கின் கூற்றுக்கு அவரே சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்.
மணி: எப்படி?
முகில்: 1963 ஆம் ஆண்டு பக்கவாதம் என்னும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட போது அவருக்கு வயது 21. மருத்துவர்கள் இவர் சில நாட்கள் மட்டுமே உயிரோடிருப்பார் என்றனர். ஆனால் மருத்துவ உலகமே மிரண்டு போகும்படி 53 ஆண்டுகள் இயங்கினார். 1985 இல் மூச்சுக்குழல் தடங்களால் பேசும் திறனை இழந்தார். எஞ்சியது கன்னத்தின் தசையசைவும் கண் சிமிட்டலும் மட்டுமே.
மணி: ஹாக்கிங்கின் உடல் நலக் குறைவிற்கும் தன்னம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு யாது?
முகில்: ஹாக்கிங் அவருடைய கன்னத்து அசைவுகள் மூலம் தன் கருத்தை தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார். கருந்துளை பற்றி ஆராய்ச்சி செய்து தன் கோட்பாடுகளை விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு உலகம் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கினார். 1988ஆம் ஆண்டு இவர் இயற்றிய காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல் நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அந்நூல் ஒரு கோடி படிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது.
மணி: கருந்துளைப் பெருவெடிப்பு ஆகியன பற்றிய அரிய உண்மைகள் அந்நூலில் உள்ளன. அறிவுத் தேடலில் உடல், உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை ஸ்டீபன் ஹாக்கிங்.
முகில்: உண்மைதான். அவர்கூறியதத்துவத்திற்கு அவரேசிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்திருக்கிறார். இத்தகைய அறிஞர்களைப் பற்றிய செய்திகளை விளக்கிய தங்களுக்கு மிக்க நன்றி!

Question 2.
கருந்துளைச் சார்ந்த செய்தியை அறிவியல் இதழ் ஒன்றிற்குக் குறுங்கட்டுரையாக எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை - 3
முன்னுரை :
நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் நம் ஞாயிறும் ஒன்று விண்மீன்களின் ஆயுள் கால முடிவில் நிகழும் நிகழ்வுகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விண்மீன் சுருக்கம் :
ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது. ஜான் வீலர் கருத்து கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதன் முதலில் வெளியிட்டவர் ஜான்வீலர். சுருங்கிய விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும் ஏன் ஒளியும் கூட ஈர்க்கப்படும். இவ்வாறு உள்சென்ற எதுவும் வெளிவர முடியாததனால் இதனைக் கருந்துளை என்றார் ஜான் வீலர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

ஹாக்கிங் கதிர்வீச்சு :
சில நேரங்களில் உண்மை பொய்யையும் மிஞ்சுவதாக அமைகிறது. கருந்துளைப் பற்றிய உண்மைகளும் அப்படியே. ஹாக்கிங் மேற்கொண்ட கருந்துளை ஆராய்ச்சி முடிவு ஹாக்கிங் கதிர்வீச்சு’ என அழைக்கப்படுகிறது.

கருந்துளைக் கோட்பாடு :
கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வர முடியாது. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை. கருந்துளையில் இருந்து ஒரு கட்டத்தில் கதிர் வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் கருந்துளை வெடித்து மறைந்து விடும். இக்கோட்பாடுகளை ஹாக்கிங் கோட்பாடுகளாக வெளியிடாமல் விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு விளக்கியதால் உலகம் கருந்துளைக் கோட்பாட்டை எளிதில் புரிந்து கொண்டது.

முடிவுரை :
அண்டவெளியில் காணப்படும் கருந்துளை அழிவு ஆற்றல் என்று கருதப்பட்டது. ஆனால் ஹாக்கிங், கருந்துளைப் படைப்பின் ஆற்றல் என்று நிரூபித்தார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

நெடுவினா

Quesiton 1.
“அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் ‘விண்வெளிப் பயணம்’ என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை - 1
அறிமுகவுரை:
இலக்கியங்களில் நிலவிய அறிவியல் கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் அறியும் பொருட்டு நானும், எம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரோடு ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் மேற்கொண்டோம்.

பேரண்டம்:
பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியதான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார். ‘இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார்’ என்பதை மறுத்தார். பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை’ என்றார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

விண்மீன்கள்:
விண்வெளியில் பால்வீதியில் எங்கள் விண்வெளி ஓடம் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது ஹ ாக்கின், ‘நமது பால் வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிருகின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது என்று விளக்கினார்.

கதிர்வீச்சும் துகளும்:
“சில நேரங்களில் உண்மையானது புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் என்பதை அறிந்து கொண்டோம். எப்படியெனில், கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வர முடியாது. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. கருத்துளை உண்மையிலேயே கருப்பாக இல்லை என்பதை நேரில் கண்டோம். அப்போது ஹாக்கிங், கருந்துளையிலிருந்து ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் வெடித்துவிடும் என்றார்.

முன்னர் அண்டவெளியில் காணப்படும் கருந்துளை அழிவு ஆற்றல் என்று கருதப்பட்டது. ஆனால் கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று எங்களிடம் ஹாக்கிங் விளக்கினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

திரும்புதல்:
விண்வெளி ஓடம் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது பல வடிவிலான விண்கற்கள் மற்றும் தொலைவில் தூசுகள் போன்ற பால்வீதிகளையும் கண்டு அதனைப் பற்றிய சில கருத்துகளைப் பேசிக் கொண்டே பூமியை வந்தடைந்தோம். எங்களை வரவேற்க பலரும் கூடி வந்திருந்தனர்.

நிறைவுரை:
விண்வெளிப் பயணம் மேற்கொண்ட எங்களை வரவேற்றுப் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் எம் வாழ்வில் மறக்க முடியாதவையாகவே இருக்கின்றன.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு…………………..
அ) 1978
ஆ) 1988
இ) 1972
ஈ) 1982
Answer:
ஆ) 1988

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 2.
பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்திலுள்ள காட்சிக் கூடங்கள்…………………..
அ) 8
ஆ) 9
இ) 10
ஈ) 15
Answer:
இ) 10

Question 3.
தற்காலத்தின்…………………..என்று புகழப்படுபவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
அ) விடிவெள்ளி
ஆ) நம்பிக்கை மனிதன்
இ) ஐன்ஸ்டைன்
ஈ) அரிஸ்டாட்டில்
Answer:
இ) ஐன்ஸ்டைன்

Question 4.
ஸ்டீபன் ஹாக்கிங் இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண்டு வயது…………………..
அ) 1963, 21
ஆ) 1965, 23
இ) 1961, 19
ஈ) 1959, 17
Answer:
அ) 1963, 21

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 5.
ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு ஏற்பட்ட நோய்…………………..
அ) காலரா
ஆ) தொழு நோய்
இ) பக்கவாதம்
ஈ) காய்ச்ச ல்
Answer:
இ) பக்கவாதம்

Question 6.
ஸ்டீபன் ஹாக்கிங் மூச்சுக்குழாய்த் தடங்கலால் பேசும் திறனை இழந்த ஆண்டு…………………..
அ) 1963
ஆ) 1983
இ) 1985
ஈ) 1973
Answer:
இ) 1985

Question 7.
பக்கவாதம் என்னும் நரம்பு நோய்ப் பாதிப்புடன் ஸ்டீபன் ஹாக்கிங் மேலும் இயங்கிய ஆண்டுகள்…………………..
அ) 23
இ) 43
ஆ) 21
ஈ) 53
Answer:
ஈ) 53

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 8.
இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானதே என்பதற்கான சான்றுகளை………………….. அடிப்படையில் ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கினார்.
அ) புவியியல்
ஆ) கணிதவியல்
இ) புள்ளியியல்
ஈ) வானியல்
Answer:
ஆ) கணிதவியல்

Question 9.
இப்புவியின் படைப்பில் கடவுள் என்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங்…………………..
அ) ஏற்றுக் கொண்டார்
ஆ) ஆய்வுக்கு உட்பட்டது என்றார்
இ) மறுத்தார்
ஈ) உலகம் முழுவதும் பரப்பினார்
Answer:
இ) மறுத்தார்

Question 10.
பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை என்று கூறியவர்…………………..
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஆ) வேர்ட்ஸ்வொர்த்
இ) அரிஸ்டாட்டில்
ஈ) கார்ல் மார்க்ஸ்
Answer:
அ) ஸ்டீபன் ஹாக்கிங்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 11.
கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் பயன்படுத்தியவர்…………………..
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஆ) ஜான் வீலர்
இ) வேர்டுஸ்மித்
ஈ) வாட்சன்
Answer:
அ) ஸ்டீபன் ஹாக்கிங்

Question 12.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் முன்னோடிகள்…………………..
i) ஜன்ஸ்டைன்
ii) நியூட்ட ன்
iii) கிரிகோர் மெண்டல்
அ) i, ii – சரி
ஆ) ii, ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) மூன்றும் தவறு
Answer:
அ) i, ii – சரி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 13.
நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் கணக்கியல் துறையின் லூகாசியன் பேராசிரியர் என்ற மதிப்பு மிகுந்த பதவியை வகுத்த பல்கலைக்கழகம்…………………..
அ) கொலம்பியா
ஆ) ஆக்ஸ்போர்டு
இ) கேம்பிரிட்ஜ்
ஈ) டிரான்ஸ்போர்டு
Answer:
இ) கேம்பிரிட்ஜ்

Question 14.
ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளைக் கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னவர்
அ) ஐன்ஸ்டைன்
ஆ) ஜான் வீலர்
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) சார்லஸ் டார்வின்
Answer:
அ) ஐன்ஸ்டைன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 15.
ஐன்ஸ்டைன் காலத்தில் ………….. என்னும் கோட்பாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அ) E = mc2
ஆ) F = cm2
இ) E = cm2
ஈ) F = mc2
Answer:
அ) E = mc2

Question 16.
ஐன்ஸ்டைன் ஈர்ப்பலைகள் இருப்பதாகக் கூறியதை உலகம் ……………………  ஆண்டுகளுக்குப் பின் கண்டு கொண்டது.
அ) 100
ஆ) 200
இ) 150
ஈ) 250
Answer:
அ) 1001

Question 17.
ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கிய கருந்துளைக் கோட்பாட்டை உலகம் எளிதில் புரிந்து கொள்ளக் காரணம்
அ) கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னதால்
ஆ) விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டுக் கூறியதால்
இ) பருப்பொருள்களோடு ஒப்பிட்டுக் கூறியதால்
ஈ) பெருவெடிப்பைச் சான்று காட்டியதால்
Answer:
ஆ) விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டுக் கூறியதால்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 18.
அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருதினைப் பெற்றவர் …………………….
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஆ) அன்னை தெரசா
இ) ஹெலன் ஹெல்லர்
ஈ) கிரிகோல் மெண்டல்
Answer:
அ) ஸ்டீபன் ஹாக்கிங்

Question 19.
ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றுள்ள விருதுகளைக் கண்டறிக.
i) ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது
ii) உல்ஃப் விருது
iii) காப்ளி பதக்கம்
iv) அடிப்படை இயற்பியல் பரிசு
அ) i, ii – சரி
ஆ) i, ii, iii – சரி
இ) i, iv – சரி
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 20.
கலீலியோவின் நினைவு நாளில் பிறந்து, ஐன்ஸ்டைனின் பிறந்த நாளில் இறந்தவர் …………………….
அ) நியூட்டன்
ஆ) ஹெலன் கெல்லர்
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) கிரிகோர் மெண்டல்
Answer:
இ) ஸ்டீபன் ஹாக்கிங்

Question 21.
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல்……………..மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
அ) 30
ஆ) 40
இ) 50
ஈ) 70
Answer:
ஆ) 40

Question 22.
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ வெளிவந்த ஆண்டு……………………..
அ) 1972
ஆ) 1976
இ) 1982
ஈ) 1988
Answer:
ஈ) 1988

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 23.
பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உண்மைகளைப் பொதுமக்களிடையே பரப்பி, ஒரு கோடிப் படிகளுக்கு மேல் விற்பனையான நூல்…………
அ) காலத்தின் சுருக்கமான வரலாறு
ஆ) ஞாலத்தின் சுருக்கமான வரலாறு
இ) ஹாக்கிங்கின் தத்துவங்கள் ஈ) பெருவெடிப்பும் கருந்துளையும்
Answer:
அ) காலத்தின் சுருக்கமான வரலாறு

Question 24.
“கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை
திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை” என்று குறிப்பிடும் நூல்?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) பரிபாடல்
Answer:
அ) அகநானூறு

Question 25.
“திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை” என்பதில் குறிப்பிடப்படும் மாவட்டம்
அ) கரூர்
ஆ) பெரம்பலூர்
இ) தஞ்சாவூர்
ஈ) திருச்சி
Answer:
அ) கரூர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 26.
………………. இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றார்.
அ) 2010
ஆ) 2005
இ) 2007
ஈ) 2012
Answer:
ஈ) 2012

Question 27.
ஸ்டீபன் ஹாக்கிங் பங்கேற்ற தொலைக்காட்சித் தொடர்கள்
i) அடுத்த தலை முறை
ii) முந்தைய தலை முறை
iii) பெருவெடிப்புக் கோட்பாடு
iv) சிறுவெடிப்புக் கோட்பாடு
அ) i, ii – சரி
ஆ) i, iii – சரி
இ) iii, iv – சரி
ஈ) நான்கும் சரி
Answer:
ஆ) i, ii – சரி

Question 28.
ஸ்டீபன் ஹாக்கிங் சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது………….. ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அ) 40
ஆ) 50
இ) 60
ஈ) 70
Answer:
இ) 60

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 29.
ஸ்டீபன் ஹாக்கிங் ………………. என்ற விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்.
அ) போயிங் 725
ஆ) போயிங் 726
இ) போயிங் 727
ஈ) போயிங் 729
Answer:
இ) போயிங் 727

Question 30.
அறிவுத் தேடலில் உடல், உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை…………………………
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஆ) எடிசன்
இ) நியூட்டன்
ஈ) மேரி கியூரி
Answer:
அ) ஸ்டீபன் ஹாக்கிங்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 31.
தலை விதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? என்று கூறியவர் ……………
அ) அரிஸ்டாட்டில்
ஆ) பெர்னாட்ஷா
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) டெமாதனிஸ்
Answer:
இ) ஸ்டீபன் ஹாக்கிங்

Question 32.
அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன் என்று கூறியவர்
அ) ஐன்ஸ்டைன்
ஆ) நியூட்டன்
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) எடிசன்
Answer:
அ) ஐன்ஸ்டைன்

Question 33.
வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன் மூலம் மனித இனம் தொடர வழி வகுப்பேன் என்று கூறியவர் ………..
அ) ஐன்ஸ்டைன்
ஆ) நியூட்டன்
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) எடிசன்
Answer:
இ) ஸ்டீபன் ஹாக்கிங்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

கூடுதல் வினா

நெடுவினா

Question 1.
“விண்ணைத் தாண்டிய நம்பிக்கை” கதையினைச் சுருக்கி எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை - 2
முன்னுரை:
உண்மையைக் கண்டறியும் அறிவியல் கொள்கை போற்றுதலுக்குரியது ஆகும். தன்னால் எந்த இயக்கமும் செய்ய இயலாத நிலையிலும், அறிவியலின் உண்மைகளைச் சொன்ன ஒருவர் ஸ்டீபன் ஹாக்கிங். அவரின் பாராட்டுக்குரிய செயல்களைக் காண்போம்.

தளராத நம்பிக்கை :
21ஆம் அகவையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் ஹாக்கிங். மருத்துவ உலகமே மிரண்டு போகுமளவு மேலும் 53 ஆண்டுகள் இயங்கினார். மூச்சுக்குழாய் தடங்களால் பேச்சை இழந்தார். பேசும் திறனை இழந்தபோதும் கன்னத்தசை அசைவு, கண் சிமிட்டல் மூலம் தன் கருத்துகளைக் கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

ஹாக்கிங் கதிர்வீச்சு:
பேரண்டப் பெருவெடிப்பினால் உருவானதே இந்தப் புனித பூமி ஆகும். ஸ்டீபன் ஹாக்கிங் அமெரிக்க அறிவியல் அறிஞர் ஜான் வீலரின் கருந்துளைக் கோட்பாட்டை ஆராய்ச்சி செய்தார். கருந்துளையில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் இறுதியில் வெடித்து மறையும். கருந்துளைக்குள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளிவர இயலாது. இந்த ஆராய்ச்சியின் முடிவே ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ எனப்படுகிறது.

சிறப்புகள்: அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது, உல்ப் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். 2012 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பைப் பெற்றார்.

முடிவுரை:
“பூ ஒற்றைக் காலில் நிற்பதால் ஊனம் என்று கருதுவதில்லை ” அதுபோல, தன் உடல் இயலாமையைப் பொருட்படுத்தாமல் சாதனைப்பூவாகி அறிவியல் உலகில் திகழ்ந்த ஹாக்கிங்கே நமக்குத் தன்னம்பிக்கைப் பாடம் எனலாம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Students can Download 10th Tamil Chapter 4.3 பரிபாடல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.3 பரிபாடல்

கற்பவை கற்றபின்

Question 1.
பரிபாடல் இசைப்பாடல் ஆகும். பாடப்பகுதியின் பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
(மாணவர் செயல்பாடு)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 2.
பரிபாடல் காட்டும் பெருவெடிப்புக் காட்சியைப் படங்களாக வரைந்து பொருத்தமான செய்திகளுடன் வழங்குக.
Answer:
இந்த அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. இப்பால் வீதிகள் தூசுகள் போன்று தோன்றும் இப்பிரபஞ்சம் உருவாக பெருவெடிப்புக் கொள்கையே காரணம். இந்த பெருவெடிப்புக் கொள்கைக்கு முன் எதுவுமே இல்லா பெருவெளி மட்டுமே இருந்தது.

இன்றைய அறிவியல் கொள்கைகளின்படி இந்த பிரபஞ்சமானது கிட்டத்தட்ட பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெருவெடிப்பும் என்ற ஒரு சம்பவத்துடனே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது. இவ்வாறு பெருவெடிப்பு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு பிரபஞ்சத்தின் தோற்றத்தினை விளக்கும் முறையினைப் பெருவெடிப்புக் கொள்கை என்கிறோம். இதைப் பரிபாடல் எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்கு காரணமான கரு பேரொலியுடன் தோன்றியது என்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல் - 1

பெருவெடிப்பிற்குப் பின் உருவமில்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் முதலிய பூதங்கள் உருவாகின. அந்த அணுக்களின் ஆற்றலால் பருப்பொருள் சிதறின. இதனால் நெருப்புப் பந்து போல பூமி உருவாகியது. தொடர்ந்து பெய்த மழை வெள்ளத்தால் பூமி மூழ்கியது. பின்னர் இப்புவி உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தந்ததாலும், சூழல் மாற்றத்தாலும் உயிர்கள் தோன்றி நிலைபெற்றன எனப் பரிபாடல் குறிப்பிட்டுள்ளது. இப்பிரபஞ்சமானது விரிவடைந்து கொண்டே செல்கின்றது என்பதனை 1929ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரான எட்வின் ஹப்பிள் கண்டறிந்துள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வானத்தையும் புகழையும்
இ) வானத்தையும் பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
Answer:
ஈ) வானத்தையும் பேரொலியையும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

குறுவினா

Question 1.
உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
Answer:
நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு.

நெடுவினா

Question 1.
நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.
பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ் மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன.
சங்க இலக்கியமான பரிபாடலில்……. பூமியின் தோற்றம் குறித்து சொல்லப்பட்டுள்ளது.
Answer:

  •  எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான கரு பேரொலியுடன் தோன்றியது.
  • உருவமில்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதங்கள் உருவாகின.
  • அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்தது.
  • பின்னர் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
  • மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தில் இப்பெரிய புவி மூழ்கி உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது.
  • இச்சூழல் மாற்றத்தினால் உயிர்கள் தோன்றி நிலை பெற்று வாழ்கின்றன.
  • புவி உருவாகிய நிகழ்வை அறிவியல் அறிஞர்கள் கண்டறியும் முன்பே நம் தமிழர் கண்டறிந்தனர் என்பது தமிழருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியும் பெருமைக்குரிய செயலுமாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

இலக்கணக் குறிப்பு.

ஊழ்ஊழ் – அடுக்குத் தொடர்
வளர் வானம் – வினைத்தொகை
செந்தீ – பண்புத்தொகை
வாரா (ஒன்றன்) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
தோன்றி, மூழ்கி – வினையெச்சங்கள்
கிளர்ந்த – பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல் - 2

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
1. தண்பெயல் – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
2. ஆர் தருபு – செறிந்து திரண்டு
3. பீடு – குளிர்ந்த மழை
4. ஈண்டி – சிறப்பு
அ) 1, 3, 2, 4
ஆ) 3, 2, 4, 1
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 1, 4, 2
Answer:
ஈ) 3, 1, 4, 2

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 2.
இதுவரைக்கும் நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
அ) 24
ஆ) 34
இ) 44
ஈ) 54
Answer:
அ) 241

Question 3.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
அ) பரிபாடல்
ஆ) முல்லைப் பாட்டு
இ) நாலடியார்
ஈ) மூதுரை
Answer:
அ) பரிபாடல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 4.
‘விசும்பில் ஊழி’ எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர்.
அ) நக்கீரர்
ஆ) மருதனார்
இ) கீரந்தையார்
ஈ) ஓதலாந்தையார்
Answer:
இ) கீரந்தையார்

Question 5.
பரிபாடல் “ ……………….. ” என்னும் புகழுடையது.
அ) நற்பரிபாடல்
ஆ) புகழ் பரிபாடல்
இ) ஓங்கு பரிபாடல்
ஈ) உயர் பரிபாடல்
Answer:
இ) ஓங்கு பரிபாடல்

Question 6.
சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் …………………
அ) நற்றிணை
ஆ) முல்லைப்பாட்டு
இ) பட்டினப் பாலை
ஈ) பரிபாடல்
Answer:
ஈ) பரிபாடல்

Question 7.
பரிபாடலில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளவர்கள் ………………………
அ) புலவர்கள்
ஆ) வரலாற்று ஆய்வாளர்கள்
இ) இலக்கிய ஆய்வாளர்கள்
ஈ) உரையாசிரியர்கள்
Answer:
ஈ) உரையாசிரியர்கள்

Question 8.
எட்வின் ஹப்பிள் என்பவர்………………….
அ) அமெரிக்க மருத்துவர்
ஆ) பிரெஞ்சு ஆளுநர்
இ) அமெரிக்க வானியல் அறிஞர்
ஈ) போர்ச்சுக்கீசிய மாலுமி
Answer:
இ) அமெரிக்க வானியல் அறிஞர்

Question 9.
எட்வின் ஹப்பிள் ………………..இல் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.
அ) 1921
ஆ) 1821
இ) 1924
ஈ) 1934
Answer:
இ) 19241

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 10.
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்.
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” – என்று குறிப்பிடும் நூல்?
அ) பரிபாடல்
ஆ) கலித்தொகை
இ) பெருமாள் திருமொழி
ஈ) திருவாசகம்
Answer:
ஈ) திருவாசகம்

Question 11.
பொருத்திக் காட்டுக.
i) ஊழ் ஊழ் – 1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
iii) வளர் வானம் – 2. பண்புத்தொகை
iii) செந்தீ – 3. வினைத்தொகை
iv) வாரா – 4. அடுக்குத் தொடர்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 2, 4, 1, 3
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 12.
பொருத்திக் காட்டுக.
i) விசும்பு – 1. சிறப்பு
ii) ஊழி – 2. யுகம்
iii) ஊழ் – 3. வானம்
iv) பீடு – 4. முறை
அ) 3, 2, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 3, 2, 4, 1

Question 13.
‘கிளர்ந்த’ என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை ………………
அ) கிளர்ந்து + அ
ஆ) கிளர் + த் + த் + அ
இ) கிளர் + ந் + த் + அ
ஈ) கிளர் + த்(ந்) + த் + அ
Answer:
ஈ) கிளர்+த்(ந்)+த்+அ

Question 14.
முதல் பூதம் எனப்படுவது ………………..
அ) வானம்
ஆ) நிலம்
இ) காற்று
ஈ) நீர்
Answer:
அ) வானம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 15.
“கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்”
– இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்?
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை

Question 16.
முதல் பூதம் …………..
அ) வானம்
ஆ) நிலம்
இ) நீர்
ஈ) காற்று
Answer:
அ) வானம்

Question 17.
பரிபாடலில் புவிக்குக் கூறப்பட்ட உவமை ……………………..
அ) நெருப்புப் பந்து
ஆ) உருவம் இல்லாத காற்று
இ) வெள்ளம்
ஈ) ஊழி
Answer:
அ) நெருப்புப் பந்து

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 18.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் அமைந்துள்ள பெரும்பான்மை நயம் ……………….
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
ஆ) மோனை

Question 19.
நெருப்புப்பந்தாய் வந்து குளிர்ந்தது ……………
அ) பூமி
ஆ) காற்று
ஈ) நீர்
Answer:
அ) பூமி

Question 20.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘விசும்பு’ என்னும் சொல்லின் பொருள் ………………….
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
அ) வானம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 21.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழி’ என்னும் சொல்லின் பொருள் ………………….
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
இ) யுகம்

Question 22.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழ்’ என்னும் சொல்லின் பொருள் ……………………
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
ஈ) முறை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 23.
1300ஆண்டுகளுக்கு முன் திருஅண்டப்பகுதி பற்றிக் கூறியவர் ……………………
அ) மாணிக்கவாசகர்
ஆ) கீரந்தையார்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) கபிலர்
Answer:
அ) மாணிக்கவாசகர்

Question 24.
“தண்பெயல் தலைஇய ஊழியும்” இதில் ‘குளிர்ந்த மழை’ என்னும் பொருள் தரும் சொல் ……………………
அ) தண்பெயல்
ஆ) தலை
இ) இய
ஈ) ஊழி
Answer:
அ) தண்பெயல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

குறுவினா

Question 1.
சங்க இலக்கிய நூல்கள் மூலம் நீவீர் அறிந்து கொள்ளும் செய்தி யாது?
Answer:

  • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை,
  • அறிவாற்றல்,
  • சமூக உறவு,
  • இயற்கையைப் புரிந்து கொள்ளும் திறன்.

Question 2.
பரிபாடல் நூல் குறிப்பு வரைக.
Answer:

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல் – அகம் புறம் சார்ந்த நூல்.
  • இந்நூல் “ஓங்கு பரிபாடல்” என்னும் புகழுடையது.
  • சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.
  • உரையாசிரியர்கள் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
  • 24 பாடல்களே கிடைத்துள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 3.
அண்டப்பகுதி குறித்து மாணிக்கவாசகர் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:

  • அண்டப்பகுதியின் உருண்டை வடிவம் ஒப்பற்ற வளமான காட்சியும் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்புடன் நூறுகோடிக்கும் மேல் விரிந்து நின்றன.
  • கதிரவனின் ஒளிக்கற்றையில் தெரியும் தூசுத்துகள் போல அவை நுண்மையாக இருக்கின்றன.

Question 4.
பால்வீதி குறித்து எட்வின் ஹப்பிள் நிரூபித்துக் கூறிய செய்தியை எழுது.
Answer:

  • அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால் வீதிகள் உள்ளன.
  • வெளியே எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.
  • வெளியே நின்று அதைப் பார்த்தோமெனில் சிறுதூசி போலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூ சுகளாகத் தெரியும்.

Question 5.
பூமி வெள்ளத்தில் மூழ்கக் காரணம் என்ன?
Answer:
தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.

Question 6.
“மீண்டும் பீடு உயர்பு ஈண்டி , அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்” – தொடர் பொருள் விளக்குக.
Answer:
மீண்டும் மீண்டும் நிறைவெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது, அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலை பெறும்படியான ஊழிக்காலம் வந்தது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 7.
“விசும்பில் ஊழி ஊழ்” என்பதில் விசும்பு, ஊழி, ஊழ் ஆகிய சொற்களின் பொருள் யாது?
Answer:

  • விசும்பு – வானம்
  • ஊழி – யுகம்
  • ஊழ் – முறை

சிறுவினா

Question 1.
அண்டப் பெருவெளி குறித்து மாணிக்கவாசகர் மற்றும் எட்வின் ஹப்பிள் ஆகியோர் மூலம் அறியப்படும் செய்தி யாது?
Answer:
மாணிக்கவாசகர் கூற்று :

  • அண்டப் பகுதியின் உருண்டை வடிவம், ஒப்பற்ற வளமான காட்சியும் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்புடன் நூறு கோடிக்கும் மேல் விரிந்து நின்றன.
  • “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” என்னும் திருவாசகப் பாடலில் மேற்கண்ட செய்தியை 1300 ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.

எட்வின் ஹப்பிள் கூற்று :

  • அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.
  • வெளியே நின்று அதைப் பார்த்தோமெனில் சிறு தூசி போலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும்.
  • மேற்கண்ட செய்தியை அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 இல் நிரூபித்தார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 2.
“மீண்டும் பீடு உயர்பு ஈண்டி , அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
இவ்வடிகள் பரிபாடலில் கீரந்தையார் பாடலில் இடம்பெறுகின்றது.

பொருள்:
உயிர்கள் தோன்றி நிலைபெறுதல்.

விளக்கம் :
மீண்டும் மீண்டும் நிறைவெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது, அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான
ஊழிக்காலம் வந்தது.

Question 3.
பால்வீதிகள் கண்டுபிடிப்பில், “எட்வின் ஹப்பிளுக்கு முன்னோடி மாணிக்கவாசகர்” என்பதை நிரூபிக்க.
Answer:
எட்வின் ஹப்பிள்:
நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. வெளியில் நின்று பார்த்தால் , சிறு தூசி போல கோடிக்கணக்கில் பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும். இதனை 1924 இல் அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நிரூபித்தார்.

மாணிக்கவாசகர்:
1300 ஆண்டுகளுக்கு முன் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் திரு அண்டப்பகுதியில்,

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
…………………. ………………….
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்”

– என்ற அடிகள் பால்வீதிகள் பற்றிய கருத்துகளைக் கூறுகின்றது. இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக் கற்றையில் தெரியும் தூசுத் துகள்போல பால்வீதிகள் நுண்மையாக இருக்கின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

பால்வீதிகள் கண்டுபிடிப்பில், “எட்வின் ஹப்பிளுக்கு முன்னோடி மாணிக்கவாசகர்” என்பதை அறியமுடிகின்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Students can Download 10th Tamil Chapter 4.2 பெருமாள் திருமொழி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.2 பெருமாள் திருமொழி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 1.
தமிழர் மருத்துவமுறைக்கும், நவீன மருத்துவமுறைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒப்படைவு உருவாக்குக.
Answer:
தமிழர் மருத்துவம்:

  • தமிழர் மருத்துவமுறை என்பது சித்த மருத்துவம் ஆகும்.
  • தாவரம், விலங்கு, உலோகம் அதாவது பஞ்சபூதங்கள் எல்லாம் மனித நலனுக்காக பயன்படுவன என்பது சித்த மருத்துவத்தின் கோட்பாடு.
  • தமிழர்கள் நோயைச் சரிப்படுத்த இயற்கை தரும் இலை, காய், கனிகளிலிருந்தே மருந்தைக் கண்டனர்.
  • வாதம், பித்தம், சீதம் இவை மூன்றும் சமநிலையில் இருந்தால் நோய் நம்மை நாடாது.
  • தமிழர் மருத்துவமுறையில் பக்க விளைவுகள் ஏதுமில்லை . குணமாவதற்குச் சில நாட்கள் ஆனாலும் மீண்டும் அந்நோய் நம்மைத் தாக்காது.

நவீன மருத்துவம்:

  • அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, மருத்துவத்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. அறிவியல் முறையில் சுகமளித்தவர்களில் சிறந்தவர் ஹிப்போகிரேடஸ்.
  • நவீன மருத்துவ முறையினால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறுகள் உண்டு.
  • நோய்கிருமிகள் உடனடியாக அழிக்கப்படுகின்றன. நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால் இவ்வகை மருத்துவத்துறையில் கவனக்குறைவு ஏற்பட்டால் உயிர் இறுதியாகிவிடும்.
  • உதாரணமாக, குருதி ஏற்றும்போது தொடர்புடையவரின் குருதி ஒரே இனமாக இருக்க வேண்டும். இவையெல்லாம் பரிசோதனை செய்து நோயாளியைக் குணப்படுத்த வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Quesiton 1.
‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி
ஈ) நோயாளியிடம் மருத்துவர்
Answer:
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

குறுவினா

Question 1.
மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
Answer:
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அத்துன்பம் தனக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

சிறுவினா

Question 1.
“மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
Answer:
உடலில் ஏற்பட்ட புண் :

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைத் துன்பம் தரும்படி கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அத்துன்பம் தனக்கு நன்மையே என்று உணர்ந்து நோயாளி மருத்துவர் மீது அன்பு காட்டுவார்.

நீங்காத துன்பம் :

வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! மருத்துவரைப் போன்று நீ எனக்குத் துன்பத்தைத் தந்தாலும், உன் அடியவனாகிய நான் (நோயாளியைப் போல) உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

அறுத்து – வினையெச்சம்
மிளாத்துயர் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
ஆளா உனதருளே – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி - 1

பலவுள் தெரிக

Question 1.
பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
அ) 105
ஆ) 155
இ) 205
ஈ) 255
Answer:
அ) 105

Question 2.
வித்துவக்கோடு என்னும் ஊர், …………………. மாநிலத்தில்……………….. மாவட்டத்தில் உள்ளது.
அ) கேரள, பாலக்காடு
ஆ) கர்நாடக, மாண்டியா
இ) ஆந்திரா, நெல்லூர்
ஈ) கேரள, திருவனந்தபுரம்
Answer:
அ) கேரள, பாலக்காடு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 3.
குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள இறைவனை உய்ய வந்த பெருமாளை ………………….. உருவகித்துப் பாடுகிறார்.
அ) அன்னையாக
ஆ) காதலியாக
இ) தோழனாக
ஈ) தந்தையாக
Answer:
அ) அன்னையாக

Question 4.
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – என்னும் அடிகளில் இடம் பெற்றுள்ள நயம்.
அ) மோனை
ஆ) எதுகை
இ) உருவகம்
ஈ) அந்தாதி
Answer:
ஆ) எதுகை

Question 5.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் …………. திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
Answer:
இ) ஐந்தாம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 6.
பெருமாள் திருமொழியைப் பாடியவர்…………………..
அ) திருமங்கையாழ்வார்
ஆ) குலசேகராழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) பொய்கையாழ்வார்
Answer:
ஆ) குலசேகராழ்வார்

Question 7.
குலசேகர ஆழ்வாரின் காலம்……………..நூற்றாண்டு.
அ) ஆறாம்
ஆ) ஏழாம்
இ) எட்டாம்
ஈ) பத்தாம்
Answer:
இ) எட்டாம்

Question 8.
‘வாளால் அறுத்து’ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழியின் பாடப்பகுதியாக உள்ள முதலாயிரத்தின் பாசுரம்?
அ) 681
ஆ) 691
இ) 541
ஈ) 641
Answer:
ஆ) 691

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 9.
‘மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்’ என்னும் அடிகளில் ‘மாயம்’ என்பதன் பொருள்
அ) பொய்மை
ஆ) நிலையாமை
இ) விளையாட்டு
ஈ) அற்புதம்
Answer:
இ) விளையாட்டு

Question 10.
காதல் நோயாளன் போன்றவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
அ) குலசேகராழ்வார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 11.
மருத்துவன் போன்றவர் அ) குலசேகராழ்வார்…………………..
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

Question 12.
“நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேன்” என்றவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்க ள்
ஈ) மருத்துவர்
Answer:
அ) குலசேகராழ்வார்

Question 13.
மாயத்தால் மீளாத் துயர் தருபவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்

Question 14.
பொருத்தமில்லாத ஒன்றினைத் தேர்வு செய்க.
அ) நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
ஆ) முதலாயிரம்
இ) ஐந்தாம் திருமொழி
ஈ) திருப்பாவை
Answer:
ஈ) திருப்பாவை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 15.
வாளால் அறுத்துச் சுடுபவர் …………………..
அ) குலசேகராழ்வார்
ஆ) வித்துவக்கோட்டு இறைவன்
இ) மக்கள்
ஈ) மருத்துவர்
Answer:
ஈ) மருத்துவர்

Question 16.
சரியான சொற்றொடரைத் தேர்வு செய்க.
அ) சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன.
ஆ) அறிவியல் கருத்துகள் சங்க இலக்கியத்தில் நிறைந்துள்ளன.
இ) இலக்கியத்தில் அறிவியல் சங்க கருத்துகள் நிறைந்துள்ளன.
ஈ) சங்க அறிவியல் இலக்கியத்தில் கருத்துகள் நிறைந்துள்ளன.
Answer:
அ) சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன.

Question 17.
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்”
– இவ்வடிகளில் அமைந்த அடிஎதுகைச் சொற்கள்
அ) வாளால் – மாளாத
ஆ) நோயாளன் – மாயத்தால்
இ) மருத்துவன் – நோயாளன்
ஈ) வாளால் – நோயால்
Answer:
அ) வாளால் – மாளாத

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 18.
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்” இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்கள்
அ) வாளால் – மாளாத
ஆ) நோயாளன் – மாயத்தால்
இ) மருத்துவன் – நோயாளன்
ஈ) வாளால் – நோயால்
Answer:
இ) மருத்துவன் – நோயாளன்)

குறுவினா

Question 1.
பெருமாள் திருமொழி நூல் குறிப்பு வரைக.
Answer:

  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி ஆகும்.
  • இதில் 105 பாடல்கள் உள்ளன.
  • இயற்றியவர் : குலசேகராழ்வார்

Question 2.
குலசேகர ஆழ்வார் குறித்து குறிப்பு வரைக.
Answer:
பெயர் – குலசேகர ஆழ்வார்
ஊர் – திருவஞ்சிக்களம் (கேரளம்)
நூல்கள் – பெருமாள் திருமொழி, முகுந்தமாலை.
புலமை – வடமொழி, தென்மொழி
காலம் – எட்டாம் நூற்றாண்டு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

Question 3.
“நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே” என்று யார் யாரிடம் கூறினார்?
Answer:
குலசேகர ஆழ்வார் திருவித்துவக் கோட்டம்மாவிடம் கூறினார்.

Question 4.
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்” – மாயம் செய்தவர் யார்?
Answer:
மாயம் செய்தவர் : திருவித்துவக் கோட்டம்மா

Question 5.
“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்”
– இவ்வடிகளில் சுட்டப்படும் ‘மருத்துவன்’ மற்றும் ‘நோயாளன்’ போன்றவர் யாவர்?
Answer:

  • மருத்துவன் போன்றவர் : திருவித்துவக் கோட்டம்மா
  • நோயாளன் போன்றவர் : குலசேகர ஆழ்வார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.2 பெருமாள் திருமொழி

சிறுவினா

Question 1.
குலசேகரர் திருவித்துவக் கோட்டம்மா இறைவனிடம் வேண்டுவது யாது?
Answer:
மருத்துவரை நேசித்தல் :
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என உணர்ந்து நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

இறைவன் அருளை எதிர்பார்த்தல் :
இறைவா! நீ உன் விளையாட்டால் எனக்கு நீங்காத துன்பத்தைத் தந்தாலும் நோயாளியைப் போல உன் அருளை எதிர்பார்த்து வாழ்கிறேன்.

Samacheer Kalvi 10th Maths Model Question Papers 2020-2021 English Tamil Medium Tamil Nadu

Subject Matter Experts at SamacheerKalvi.Guide have created Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Maths Model Question Papers 2020-2021 Pdf Free Download in English Medium and Tamil Medium of TN SSLC Class 10th Maths Model Question Papers, Previous Year Question Papers, Sample Papers are part of Samacheer Kalvi 10th Model Question Papers 2021 Tamilnadu.

Let us look at these Government of TN State Board Samacheer Kalvi 10th Std Maths Model Question Papers with Answers 2020-21 Tamil Medium Pdf. Students can view or download the Samacheer Kalvi Class 10th Maths New Model Question Papers 2021 Tamil Nadu English Medium Pdf for their upcoming TN SSLC board examinations. Students can also read Tamilnadu Samacheer Kalvi 10th Maths Guide.

Tamil Nadu Samacheer Kalvi 10th Maths Model Question Papers 2020 2021 Tamil English Medium

Tamil Nadu Samacheer Kalvi 10th Maths Model Question Papers English Medium

Tamil Nadu Samacheer Kalvi 10th Maths Model Question Papers Tamil Medium

  • Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1
  • Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2
  • Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3
  • Samacheer Kalvi 10th Maths Model Question Paper 4
  • Samacheer Kalvi 10th Maths Model Question Paper 5

Samacheer Kalvi 10th Maths Model Question Paper Design 2020-2021 Tamil Nadu

Types of Questions Marks No. of Questions to be Answered Total Marks
Part-I
Multiple Choice Questions
1 14 14
Part-II
(Totally 14 questions will be given. Answer any Ten. Any one question should be answered compulsorily)
2 10 20
Part-Ill
(Totally 14 questions will be given. Answer any Ten. Any one question should be answered compulsorily)
5 10 50
Part-IV 8 2 16
Total Marks 100

Samacheer Kalvi 10th Maths Model Question Paper Weightage of Marks

Purpose Weightage
1. Knowledge 30%
2. Understanding 40%
3. Application 20%
4. Skill/Creativity 10%

It is necessary that students will understand the new pattern and style of Tamil Nadu Samacheer Kalvi 10th Maths Model Question Papers 2021 according to the latest exam pattern. These State Board 10th Standard Maths Public Exam Model Question Papers 2020-21 Tamil Nadu in Tamil Medium and English Medium are useful to understand the pattern of questions asked in the board exam. Know about the important concepts to be prepared for TN SSLC Board Exams and Score More marks.

We hope the given Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi Class 10th Maths Model Question Papers 2020 2021 Pdf Free Download in English Medium and Tamil Medium will help you get through your subjective questions in the exam.

Let us know if you have any concerns regarding the Government of TN State Board Samacheer Kalvi SSLC 10th Standard Maths Model Question Papers with Answers 2020 21, Sample Papers, Previous Year Question Papers, drop a comment below and we will get back to you as soon as possible.

Samacheer Kalvi 10th Model Question Papers 2020-2021 Tamil Nadu English Tamil Medium

Subject Matter Experts at SamacheerKalvi.Guide have created Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Model Question Papers 2020-2021 Pdf Free Download in English Medium and Tamil Medium of TN SSLC Class 10th Model Question Papers, 10th Quarterly Half Yearly Model Question Papers Tamil Nadu, Previous Year Question Papers, Sample Papers, are part of Samacheer Kalvi.

Let us look at these Government of TN State Board Samacheer Kalvi 10th Std Model Question Papers for All Subjects with Answers 2020-21 Tamil Medium Pdf. Students can view or download the Samacheer Kalvi Class 10th New Model Question Papers 2021 Tamil Nadu English Medium Pdf for their upcoming TN SSLC board examinations. Students can also read Tamilnadu Samacheer Kalvi 10th Books Solutions.

Directorate of Tamil Nadu Government Conducts SSLC 10th Examinations in the month of March-April 2021. Tamil Nadu Government has made some changes to SSLC Students, TN Government has declared a single language paper for 10th examinations. Recently Tamil Nadu Government has made new changes in English Question Paper and Tamil Question Paper. To score more marks in public examination keep practicing by downloading Samacheer Kalvi 10th Model Question Papers. Students who are going to prepare for the upcoming exams of SSLC examinations can download Samacheer Kalvi 10th Model Question Papers. By Practicing these Samacheer Kalvi 10th Model Questions Papers students will get grip on their preparation. After Practicing all 10th Model Question Papers 2021 Students can also practice TN Previous Year Question Papers to score high marks in SSLC/10th Examinations.

Tamil Nadu Samacheer Kalvi 10th Public Model Question Papers 2020 2021 English Tamil Medium

Samacheer Kalvi 10th Model Question Papers for All Subjects

Here we have provided 10th Model Question Papers 2021 Tamil Nadu in both Tamil and English mediums. Before appearing for public examinations Students can download all Subjects of Maths, Science, Social Science, English, Tamil Model Question Papers PDF in both Tamil and English Medium. Recently DGE has uploaded TN SSLC last year exam Question Paper 2021 at the official site for Practice purpose. On this page, we have provided Samacheer Kalvi 10th Model Question Papers 2021 Tamil Nadu for all subjects in English and Tamil Medium.

It is necessary that students will understand the new pattern and style of Tamil Nadu Board Model Question Papers for 10th Standard Samacheer Kalvi according to the latest exam pattern. These State Board 10th Public Model Question Papers 2020-21 Tamil Nadu in Tamil Medium and English Medium are useful to understand the pattern of questions asked in the board exam. Know about the important concepts to be prepared for TN SSLC Board Exams and Score More marks.

We hope the given Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi Class 10th Model Question Papers 2020 2021 Pdf Free Download in English Medium and Tamil Medium will help you get through your subjective questions in the exam.

Let us know if you have any concerns regarding the Government of TN State Board Samacheer Kalvi SSLC 10th Standard Model Question Papers with Answers 2020 21, 10th Quarterly Half Yearly Model Question Papers Tamil Nadu, Sample Papers, Previous Year Question Papers, drop a comment below and we will get back to you as soon as possible.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Students can Download 10th Tamil Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

கற்பவை கற்றபின்

Question 1.
இன்றைய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளைச் செய்தித்தாளிலோ இணையத்திலோ கண்டு அட்டவணையாகத் தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு - 3

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 2.
கொடுக்கப்படுகின்ற எல்லாவற்றையும் உள்ளீடு செய்து, தேவைப்படும் வேளையில் வெளிப்படுத்துவதில், இன்று மூளைக்கு இணையாகத் தொழில்நுட்பமும் முன்னேறியுள்ளது.
Answer:
இக்கருத்தையும், படத்தையும் ஒப்புநோக்கிக் கலந்துரையாடுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு - 4

யாழினி : கொடுக்கப்படுகின்ற எல்லாவற்றையும் உள்ளீடு செய்து, தேவைப்படும் வேளையில் வெளியிடுவதில் இன்று மூளைக்கு இணையாகத்தொழில் நுட்பமும் முன்னேறியுள்ளது
என்பதைப் பற்றி உன் கருத்து என்ன?
பைந்தமிழ் : இன்றைய தேவைகளை விரைவில் பூர்த்தி செய்ய பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவே பயன்படுகிறது. இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவே.
யாழினி : இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் காரணம் என்ன?
பைந்தமிழ் : எந்த ஒரு தொழில் நுட்பமும் ஒரே நாளில் வந்து விடுவதில்லை . 1980களில் ஒவ்வொருவருக்குமான தனி நபர் கணினிகளின் வளர்ச்சியும் இணையப் பயன்பாட்டின் பிறப்புமே இம்மாற்றத்திற்குக் காரணம்.

யாழினி : மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பற்றி உன்னுடைய கருத்து யாது?
பைந்தமிழ் : ‘கல்விசார் புரட்சி’ என்பதே என் கருத்து. நாம் ஒரு நூலைத் தேடி எடுத்து அதில் நாம் தேடும் சொற்களைக் கண்டு பிடிப்பதற்கு காலவிரயம் ஏற்படும். ஆனால் திறன் பேசியோ கணினியோ நாம் சொல்லச் சொல்லத்தன் அகண்டதரவுகளில் உள்ள கோடிக்கணக்கான சொற்களுடன் ஒப்பிட்டுச் சரியான சொல்லைக் கால் நொடிக்கும் குறைவான நேரத்தில் தேர்ந்தெடுத்துத் திரையில் காண்பிக்கிறது. கல்விசார் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இத்தொழில் நுட்பம் மிகவும் பயனுடையதாக அமையும். நன்றி!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு : செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.
அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
Answer:
அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 2.
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ) துலா
ஆ) சீலா
இ) குலா
ஈ) இலா
Answer:
ஈ) இலா

குறுவினா

Question 1.
வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.
Answer:
எ.கா: செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்

  • செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதன் (Robo-ரோபோ)
  • செயற்கை நுண்ண றிவால் இயங்கும் திறன்பேசி (Smart Phone)

சிறுவினா

Question 1.
இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
Answer:

  • இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்தவில்லை.
  • அது மனிதனுக்குரியத் தேவைகளை மட்டுமே மேம்படுத்தி இருக்கிறது.
  • அறிவியலால் இன்று மனிதன் மனிதனாக வாழவில்லை .
  • இயந்திரம் மனிதனாகிவிட்டது. மனிதன் இயந்திரம் ஆகிவிட்டான்.
  • மனிதநேயத்தையும் அன்பையும் இரக்கத்தையும் இன்றைய மனிதனிடம் பார்க்க முடியவில்லை.
  • பணிகளால் அவன் எந்திரத்தைப் போல ஓடிக்கொண்டே உள்ளான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 2.
மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு ‘எதிர்காலத் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் எழுதுக.
Answer:

எதிர்காலத் தொழில்நுட்பம்

உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே! அந்தச் சிந்தனைக்குத் தொழில்நுட்பமும் துணை செய்கிறது. திறன்பேசிகளில் இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி உதவி செய்கிறது.

நாம் சொல்கிறவர்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கும். நாம் திறக்க கட்டளையிடுகிற செயலியைத் திறக்கும். நாம் கேட்பதை உலாவியில் தேடும். நாம் விரும்பும் அழகான கவிதைகளை இணையத்தில் தேடித்தரும். எந்தக்கடையில் எது விற்கும் என்று சொல்லும். படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும். நாம் எடுத்த ஒளிப்படங்களைப் பற்றி பட்டியலிடும்.

எதிர்காலத்தில் நம் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் உதவு மென்பொருள் நம்மை நன்கு அறிந்திருக்கும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

நெடுவினா

Question 1.
ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் “செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்” பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு - 1
முன்னுரை:
ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளும் வெறும் வணிகத்துடன் அது நின்றுவிடாது. செயற்கை நுண்ணறிவின் வெளிப்பாடுகள் இனி மிகுதியாக இருக்கும்.

ஊர்திகளை இயக்குதல் :

எதிர்காலத்தில் நாம் இயக்கும் ஊர்திகளைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படும்.

  • இத்தகைய ஊர்திகள் ஏற்படுத்தும் விபத்து குறையும்.
  • போக்குவரத்து நெரிசல் இருக்காது.
  • பயண நேரம் குறையும்.
  • எரிபொருள் மிச்சப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

மனிதர்களிடம் போட்டி :
மென்பொருள்கள், கவிதைகள், கதைகள், விதவிதமான எழுத்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு மனிதர்களிடம் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை.

கல்வித்துறை :
கல்வித்துறையில் இத்தொழில்நுட்பத்தைப் பல விதங்களில் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

பிற செயல்பாடுகள் :

  • விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதன் அளிக்கும் சேவையை இயந்திர மனிதன் செய்யும்.
  • நம்முடன் உரையாடுவது, ஆலோசனை வழங்குவது, பயண ஏற்பாடு செய்து தருவது, தண்ணீர் கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்குப் பொம்மை கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுவது எனப் பலவற்றையும் செய்யும் நிலை வரும்.

வேலை வாய்ப்புகளில் மாற்றம் :
வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றத்தை எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரும்.

இயந்திர மனிதனிடம் குழந்தை :
எதிர்காலத்தில் இயந்திர மனிதனிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அலுவலகம் செல்லும் பெற்றோரைப் பார்க்க முடியும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

தோழனாய் இயந்திர மனிதன் :
வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும், அவர்களுக்கு உற்ற தோழனாய்ப் பேச்சுக் கொடுத்தும் பேணும் இயந்திர மனிதர்களை நாம் பார்க்க முடியும்.

உயிராபத்தை விளைவித்தல் :

  • செயற்கை நுண்ணறிவுள்ள இயந்திர மனிதர்களால், மனிதர் செய்ய இயலாத அலுப்புத் தட்டக்கூடிய கடினமான செயல்களையும் செய்ய முடியும்.
  • மனித முயற்சியில் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களையும் செய்ய முடியும்.

வணிக வாய்ப்புகள் :

பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திக் கொடுக்கும்.

முடிவுரை:

செயற்கை நுண்ணறிவு சாதனங்களால் மனிதனின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) மின்ன ணுப் புரட்சி – 1. Browser
ஆ)செயல்திட்ட வரைவு – 2. Data
இ) உலாவி – 3. Computer Program
ஈ) தரவு – 4. Digital Revolution
அ) 1, 4, 3, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 4, 3, 2, 1
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 2.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) பெப்பர் ஜப்பான் சாப்ட் வங்கி
ஆ) வாட்சன்
ஐ.பி.எம். நிறுவனம்
இ) இலா – பாரத ஸ்டேட் வங்கி
ஈ) பெப்பர்
புற்றுநோயைக் கண்டுபிடித்தது
Answer:
ஈ) பெப்பர் – புற்றுநோயைக் கண்டுபிடித்தது

Question 3.
சீன நாட்டில் சூவன்சௌ துறைமுக நகரில் கட்டப்பட்ட கோயில்…………………………
அ) சிவன் கோயில்
ஆ) பெருமாள் கோயில்
இ) முருகன் கோயில்
ஈ) பிள்ளையார் கோயில்
Answer:
அ) சிவன் கோயில்

Question 4.
உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின்…………………………
அ) சிந்தனை ஆற்றல்
ஆ) செல்வம்
இ) வாழ்நாள்
ஈ) ஆற்றல்
Answer:
அ) சிந்தனை ஆற்றல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 5.
…………………………களில் ஒவ்வொருவருக்குமான தனி நபர் கணினிகளின் வளர்ச்சியும், இணையப் பயன்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் காரணமாயின.
அ) 1970
ஆ) 1960
இ) 1980
ஈ) 1950
Answer:
இ) 1980

Question 6.
இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில் நுட்பம்…………………………
அ) செயற்கை நுண்ணறிவு
ஆ) மென்பொருள்
இ) மீத்திறன் நுண்ண றிவு
ஈ) முகநூல், புலனம் போன்றவை
Answer:
அ) செயற்கை நுண்ணறிவு

Question 7.
இயல்பான மொழிநடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளின் பெயர்…………………………
அ) வேர்டுஸ்மித்
ஆ) வேர்டுபீட்டர்
இ) வேட்ஸ்வொர்த்
ஈ) வேர்ல்டுஸ்மித்
Answer:
அ) வேர்டுஸ்மித்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 8.
வேர்டுஸ்மித் என்பதைத் தமிழில் ………………………… என்று அழைப்பர்.
அ) எழுத்தாளி
ஆ) எழுத்தாணி
இ) எழுத்தோவியம்
ஈ) குரலாளி
Answer:
அ) எழுத்தாளி

Question 9.
இதழியலில் செயற்கை நுண்ணறிவு செய்துள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றங்களில் ஒன்று…………………………
அ) இயல்பான மொழிநடை
ஆ) கடினமான மொழிநடை
இ) தாய்மொழிநடை
ஈ) உலக மொழிகள் இணைப்பு
Answer:
அ) இயல்பான மொழிநடை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 10.
2016 இல் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்த ஐ.பி.எம். நிறுவனத்தின் கணினியின் பெயர்…………………………
அ) வாட்சன்
ஆ) வேர்டுஸ்மித்
இ) ஸ்டீவ்ஸ்மித்
ஈ) பெப்பர்
Answer:
அ) வாட்சன்

Question 11.
செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன் சில நிமிடங்களில் ………………………… தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.
அ) இருபதாயிரம்
ஆ) இரண்டு இலட்சம்
இ) இரண்டு கோடி
ஈ) இருபது கோடி
Answer:
இ) இரண்டு கோடி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 12.
…………………………உதவியாளர்களை ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்று பாரதியார் மெச்சுவதுபோல் மெச்சிக்கொள்ளலாம்.
அ) மெய்நிகர்
ஆ) பொய் நிகர்
இ) செயற்கை
ஈ) முதன்மை
Answer:
அ) மெய்நிகர்

Question 13.
இவ்வுலகை இதுவரை…………………………ஆண்டு கொண்டிருக்கிறது; இனிமேல் ………………………… தான் ஆளப்போகிறது.
அ) மென்பொருள், செயற்கை நுண்ணறிவு
ஆ) செயற்கை நுண்ணறிவு, மென்பொருள்
இ) நுண்ண றிவு, முகநூல்
ஈ) முகநூல், புலனம்
Answer:
அ) மென்பொருள், செயற்கை நுண்ணறிவு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 14.
செயற்கை நுண்ணறிவின் மிகுதியான வளர்ச்சியால் ………………………… தேவை கூடியுள்ளது.
அ) மெய்நிகர் உதவியாளர்களின்
ஆ) தரவு அறிவியலாளர்களின்
இ) உதவியாளர்களின்
ஈ) அறிவியலாளர்களின்
Answer:
ஆ) தரவு அறிவியலாளர்களின்

Question 15.
ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்…………………………
அ) வாட்சன்
ஆ) பெப்பர்
இ) சோபியா
ஈ) வேர்டுஸ்மித்
Answer:
ஆ) பெப்பர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 16.
உலக அளவில் அதிகம் விற்பனையாகும் ரோபோ…………………………
அ) வாட்சன்
ஆ) பெப்பர்
இ) இலா
ஈ) சோபியா
Answer:
ஆ) பெப்பர்

Question 17.
பெப்பர் ரோபோக்களின் மூன்று வகையினுள் பொருந்தாததைக் கண்டறிக.
அ) வீட்டுக்குப் பயன்படுவது
ஆ) வணிகத்துக்குப் பயன்படுவது
இ) படிப்புக்குப் பயன்படுவது
ஈ) நாட்டுக்குப் பயன்படுவது
Answer:
ஈ) நாட்டுக்குப் பயன்படுவது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 18.
இந்தியாவின் பெரிய வங்கி…………………………
அ) இந்தியன் வங்கி
ஆ) பாரத ஸ்டேட் வங்கி
இ) கனரா வங்கி
ஈ) பரோடா வங்கி
Answer:
ஆ) பாரத ஸ்டேட் வங்கி

Question 19.
‘இலா’ என்ற உரையாடு மென்பொருளை உருவாக்கியது…………………………
அ) ஐ.பி.எம். நிறுவனம்
ஆ) பாரத ஸ்டேட் வங்கி
இ) ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்
ஈ) சாப்ட் வங்கி
Answer:
ஆ) பாரத ஸ்டேட் வங்கி

Question 20.
இதழியலில் இயல்பான மொழிநடையை உருவாக்கும் மென்பொருள்…………………………
அ) வாட்சன்
ஆ) வழிகாட்டி வரைபடம்
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 21.
தகவல்களைக் கொடுத்தால், அழகான சில கட்டுரைகளை உருவாக்கும் மென்பொருள்…………………………
அ) வாட்சன்
ஆ) வழிகாட்டி வரைபடம்
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

Question 22.
2016 இல் ஐ.பி.எம். நிறுவனத்தின் நுண்ண றிவுக் கணினி…………………………
அ) வாட்சன்
ஆ) வழிகாட்டி வரைபடம்
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
அ) வாட்சன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 23.
50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களைப் பணியமர்த்தியுள்ள நாடு…………………………
அ) இந்தியா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான்
Answer:
ஆ) சீனா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 24.
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு…………………………
அ) வன்பொருள்
ஆ) மென்பொருள்
இ) இயந்திர மனிதன்
ஈ) கணினி
Answer:
ஆ) மென்பொருள்

Question 25.
“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்று பாடியவர்…………………………
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ) வைரமுத்து
Answer:
அ) பாரதியார்]

Question 26.
‘இலா’ மென்பொருள் ஒரு விநாடிக்கு உரையாடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை…………………………
அ) பத்தாயிரம்
ஆ) ஆயிரம்
இ) ஐயாயிரம்
ஈ) பத்து
Answer:
அ) பத்தாயிரம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 27.
சாப்ட் வங்கி உருவாக்கிய நாடு…………………………
அ) இந்தியா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான்
Answer:
ஈ) ஜப்பான்

Question 28.
பெப்பர் என்பது ஒரு…………………………
அ) வன்பொருள்
ஆ) மென்பொருள்
இ) இயந்திர மனிதன்
ஈ) கணினி
Answer:
இ) இயந்திர மனிதன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 29.
ஜப்பானில் வரவேற்பாளராகவும் பணியாளராகவும் உள்ள இயந்திர மனிதன்
அ) வாட்சன்…………………………
ஆ) இலா
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
ஈ) பெப்பர்

Question 30.
ஜப்பானில் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவுவிடுதிகளிலும் பயன்பாட்டில் உள்ள இயந்திர மனிதன்…………………………
அ) வாட்சன்
ஆ) இலா
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
ஈ) பெப்பர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 31.
காண்டன் நகர் அமைந்துள்ள நாடு…………………………
அ) இந்தியா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான்
Answer:
ஆ) சீனா

Question 32.
தமிழ்க் கல்வெட்டு காணப்படும் பிற நாடு…………………………
அ) ஆஸ்திரேலியா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான்
Answer:
ஆ) சீனா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 33.
பண்டையத் தமிழர் அடிக்கடி வணிகத்திற்காகச் சென்று வந்த சீன நகர்…………………………
அ) காண்டன்
ஆ) சூவன்சௌ
இ) குப்லாய்கான்
ஈ) பெய்ஜிங்
Answer:
ஆ) சூவன்சௌ

Question 34.
சீனப்பேரரசர் அ) காண்டன்…………………………
ஆ) சூவன்சௌ
இ) குப்லாய்கான்
ஈ) பெய்ஜிங்
Answer:
இ) குப்லாய்கான்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 35.
சீனாவில் சிவன் கோவில் கட்டிய சீனப்பேரரசர்…………………………
அ) காண்டன்
ஆ) சூவன்சௌ
இ) குப்லாய்கான்
ஈ) பெய்ஜிங்
Answer:
இ) குப்லாய்கான்

Question 36.
பொருத்துக.
1. பெப்பர் – அ) கட்டுரை உருவாக்கும் மென்பொருள்
2. எழுத்தாளி – ஆ) இயந்திர மனிதன்
3. இலா – இ) நுண்ணறிவுக் கணினி
4. வாட்சன் – ஈ) வாடிக்கையாளர்களுடன் உரையாடும் மென்பொருள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 37.
ஸ்மார்ட்போன் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்…………………………
அ) திறன் பேசி
ஆ) தொலைபேசி
இ) அலைபேசி
ஈ) செல்பேசி
Answer:
அ) திறன் பேசி

Question 38.
…………………… தொழிற்புரட்சியின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவும் நம்மை வளப்படுத்த உதவும்.
அ) மூன்றாவது
ஆ) நான்காவது
இ) ஐந்தாவது
ஈ) இரண்டாவது
Answer:
ஆ) நான்காவது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

குறுவினா

Question 1.
மின்னணுப் புரட்சிக்கான காரணங்களைக் கூறுக.
Answer:

  • 1980களில் ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் வளர்ச்சி.
  • இணையப் பயன்பாட்டின் பிறப்பு. இவையே இன்றைய மின்னணுப் புரட்சிக்கான காரணங்களாகும்.

Question 2.
‘வேர்டுஸ்மித்’ குறிப்பு வரைக.
Answer:

  • இதழியலில் மொழிநடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் வேர்டுஸ்மித்.
  • இதற்கு ‘எழுத்தாளி’ என்று பெயர்.
  • இதில் தகவல்களைக் கொடுத்தால் மட்டும் போதும்; சில நொடிகளிலேயே அழகான கட்டுரையை உருவாக்குகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 3.
‘வாட்சன்’ குறிப்பு வரைக.
Answer:

  • 2016ல் ஐ.பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ண றிவுக் கணினி வாட்சன்.
  • சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

Question 4.
செயற்கை நுண்ணறிவு நமக்கு எப்படி அறிமுகமாகிறது?
Answer:

  • சமூக ஊடகங்கள்.
  • மின்னணுச் சந்தைகள்.
    இவற்றின் மூலம் செயற்கை நுண்ணறிவு நமக்கு அறிமுகமாகிறது.

Question 5.
செயற்கை நுண்ணறிவு குறித்த தொழில்நுட்ப வரையறையைக் கூறுக.
Answer:
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு செயல்திட்ட வரைவு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 6.
செயற்கை நுண்ணறிவின் பொதுவான பணி யாது?
Answer:
மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு.

Question 7.
சீனாவில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் இயந்திர மனிதனின் செயல்பாடுகளைக் கூறுக.
Answer:

  • மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் குரலையும் முகத்தையும் அடையாளம் கண்டு அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றன.
  • சீன மொழியின் வெவ்வேறு வட்டார வழக்குகளையும் கூட அவை புரிந்து கொண்டு பதில் அளிக்கின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 8.
‘இலா’ என்னும் மென்பொருள் குறித்து எழுதுக.
Answer:

  • பாரத ஸ்டேட் வங்கி இலா’ என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியுள்ளது.
  • ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.
  • அவர்களுக்கான சேவையை இணையம் மூலம் அளிக்கிறது.

Question 9.
இலா (ELA) என்பதன் ஆங்கில விரிவாக்கத்தை எழுதுக.
Answer:
ELA – Electronic Live Assistant

Question 10.
செயற்கை நுண்ணறிவின் சிறப்பு யாது?
Answer:

  • செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை.
  • செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்து கொள்ளவும் முடியும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

சிறுவினா

Question 1.
‘பெப்பர்’ குறிப்பு வரைக.
Answer:

  • ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்.
  • இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ.
  • வீட்டுக்கு, வணிகத்துக்குப், படிப்புக்கு என மூன்று வகை ரோபோக்கள் உள்ளன.
  • இவை மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன.
  • பெப்பரை வரவேற்பாளராகவும் பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

Question 2.
செயற்கை நுண்ணறிவு குறித்த தொழில் நுட்ப வரையறையைக் கூறி விளக்குக.
Answer:
வரையறை :
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு எனலாம்.

வடிவமைப்பு :
ஒலிப்படங்கள், எழுத்துகள், கானொலிகள், ஒலிகள் போன்றவற்றிலிருந்து கற்றுக் கொள்ளும் மென்பொருளை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைக்கின்றனர்.

முடிவெடுக்கும் திறன் :
இந்த மென்பொருள் அறிவைக் கொண்டு தனக்கு வரும் புதிய புதிய சூழ்நிலைகளில் மனிதரைப் போல தானே முடிவெடுக்கும் திறனுடையது.

சிறப்பு :
செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை. செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்து கொள்ளவும் முடியும். மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு.

Question 3.
மெய்நிகர் உதவியாளர் பற்றி விவரி.
Answer:
உதவு மென்பொருள் :
திறன் பேசியில் இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி சில உதவிகளைச் செய்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

செயல்பாடுகள் :

  • இம்மென்பொருள் நாம் சொல்லுகிறவர்களுக்குத் தொலைபேசி அழைப்பு விடுக்கும்.
  • நாம் திறக்கக் கட்டளையிடுகிற செயலியைத் திறக்கும்.
  • நாம் கேட்பதை உலாவியில் தேடும். நாம் விரும்பும் அழகான கவிதையை இணையத்தில் தேடித் தரும். எந்தக் கடையில் எது விற்கும் என்றும் சொல்லும்.
  • படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும்.
  • நாம் எடுத்த ஒளிப்படங்களைப் பற்றிக் கருத்துரைக்கும்.

எதிர்காலத்தில் :
எதிர்காலத்தில் நம் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் இது போன்ற மெய்நிகர் உதவியாளர் நம்மை நன்கு அறிந்திருக்கும்.

Question 4.
ஒளிப்படக்கருவியில் செயற்கை நுண்ணறிவு குறித்து சுருக்கி வரைக.
Answer:

  • சில உயர்வகைத் திறன் பேசியின் ஒளிப்படக்கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.
  • கடவுச் சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது.
  • உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு திறப்பது இன்றைய தொழில்நுட்பம்.
  • படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.
  • திறன் பேசியில் உள்ள ஒளிப்படக் கருவியில் எடுக்கும் படங்களை மெருகூட்ட இத்தொழில் நுட்பம் உதவுகிறது.

பயன்கள் :
காணொலிகளைத் தொகுக்கும் மென்பொருள்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் பயன்படுகிறது. நேரம் வீணாவது தவிர்க்கப்படுகிறது.

Question 5.
செயற்கை நுண்ணறிவின் பொதுவான கூறுகளை விளக்குக.
Answer:

  • நம்மை அறியாமலேயே நம் வாழ்க்கையையும், வணிகத்தையும் வளப்படுத்துகிறது.
  • இத்தொழில் நுட்பத்தைக் கண்டு அச்சப்படுபவர்களின் அலறல்களை நாம் எதிர்கொள்வதே முதல் அறை கூவல்.
  • ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும் அறிமுகமாகும் போது புதிய வடிவில் மாற்றம் பெறுகின்றன.
  • மனித இனத்தைத் தீங்குகளிலிருந்து காப்பாற்றி, உடல் நலத்தைப் பேணுகிறது.
  • கொடிய நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்தல், மருத்துவரைப் போல பரிந்துரை செய்தல் போன்ற மேற்கண்ட செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 6.
நீவிர் அறிந்த செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மூன்றினை எழுதுக.
Answer:

  • கண்காணிப்புக் கருவியில் பொதிந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு பலவிதங்களில் உதவியாக இருக்கின்றது.
  • வழிகாட்டி வரைபடமாகத் திறன் பேசியிலிருந்து செயற்கை நுண்ணறிவு
  • பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டுகிறது.
  • செயற்கை நுண்ணறிவைக் கொண்ட இயந்திரம் மனிதர்களுடன் சதுரங்கம் முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது.
  • கண் அறுவை மருத்துவம் செய்கிறது.
  • சமைக்கிறது.
  • சில புள்ளிகளை வைத்துப் படம் வரைகிறது.

Question 7.
முக்காலக் கல்வியறிவு குறித்து எழுதுக.
Answer:
முந்தைய கல்வியறிவு :
ஒரு காலத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எழுதப் படிக்கத் தெரிந்த கல்வியறிவே போதுமானதாக இருந்தது. ஆனால் இன்று, கல்வியறிவுடன் மின்னணுக் கல்வியறிவையும் மின்னணுச் சந்தைப்படுத்துதலையும் அறிந்திருத்தல் வேண்டும். இது வாழ்க்கையை எளிதாக்கவும் வணிகத்தில் வெற்றியடையவும் உதவுகிறது.

எதிர்காலக் கல்வியறிவு :
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவும் நான்காவது தொழிற் புரட்சியின் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவுமே நம்மை வளப்படுத்தும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 8.
சீன நாட்டில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டு குறித்து எழுதுக.
Answer:
சூவன்சௌ துறைமுக நகர் :
சீன நாட்டில் காண்டன் நகருக்கு வடக்கே 500 கல் தொலைவில் உள்ளது. சூவன்சௌ துறைமுக நகர். தமிழ் வணிகர் :
சூவன்சௌ துறைமுக நகருக்குத் தமிழ் வணிகர் அடிக்கடி வந்து சென்றனர்.

சிவன் கோவில் :

  • தமிழர்களின் வரவு காரணமாக சீனாவில் சிவன் கோவில் கட்டும்படியாக அந்நாட்டு மன்னர் குப்லாய்கான் ஆணையிட்டார்.
  • இம்மன்னரது ஆணைப்படி இக்கோவில் கட்டப்பட்டது எனத் தமிழ்க் கல்வெட்டு ஒன்று இக்கோவிலில் உள்ளது.
  • இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நெடுவினா

Question 1.
செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி, மென்பொருள், இயந்திர மனிதன் குறித்த செய்திகளைத் தொகுத்தெழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு - 2
முன்னுரை:
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு ஆகும். இது பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை.

வேர்டுஸ்மித்:

  • இதழியலில் மொழிநடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் வேர்டுஸ்மித்.
  • இதற்கு எழுத்தாளி என்று பெயர்.
  • இதில் தகவல்களைக் கொடுத்தால் மட்டும் போதும்; சில நொடிகளிலேயே அழகான கட்டுரையை உருவாக்குகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

இலா:

  • பாரத ஸ்டேட் வங்கி இலா’ என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியுள்ளது.
  • ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.
  • அவர்களுக்கான சேவையை இணையம் மூலம் அளிக்கிறது.

வாட்சன்:

  • 2016ல் ஐ.பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ண றிவுக் கணினி வாட்சன்.
  • சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

பெப்பர்:

  • ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்.
  • இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ.
  • வீட்டுக்கு, வணிகத்துக்குப், படிப்புக்கு என மூன்று வகை ரோபோக்கள் உள்ளன.
  • இவை மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன.
  • பெப்பரை வரவேற்பாளராகவும் பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

முடிவுரை:
இன்று அங்கும் இங்குமாய் இருக்கும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, நாளை உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Students can Download 10th Tamil Chapter 3.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.6 திருக்குறள்

பாடநூல் வினாக்கள்

கற்பவை கற்றபின்

Question 1.
படங்கள் உணர்த்தும் குறளின் கருத்தினை மையமிட்டு வகுப்பில் கலந்துரையாடுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள் - 7
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள் - 1
படம் – 1 (அ) :

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

அறிவு : மேற்கண்ட படத்தைக் காணும் போது நீ என்ன நினைக்கிறாய்?
மதி : மாட்டு வண்டிக்காரனின் உழைப்பு தெரிகிறது.
அறிவு : எப்படி?
மதி : சொந்த வண்டியோ, வாடகை வண்டியோ தெரியவில்லை. எனினும் மூட்டைகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் தன்னுடன் கூலியாட்களை வைக்காமல் தானே அச்செயலைச் செய்கிறான். மேலும் அவன் வண்டியில் அமர்ந்து செல்லவில்லை. இது அவனிடமுள்ள சோம்பலின்மையை வெளிப்படுத்துகிறது.
அறிவு : இதன் மூலம் நீ கூறவிருக்கும் கருத்து யாது?
மதி : இப்படிப்பட்ட கடின உழைப்பாளி வாழ்வில் ஒரு நாளும் வறுமை நிலையை
அடையமாட்டான். வாழ்வில் உயர்வடைவான்.

படம் – 1 (ஆ) : (உரையாடல் தொடர்ச்சி)
மதி : இப்படத்தில் குடும்பத்தலைவன் உழைப்பின்றி சோம்பேறி இருத்தலால் அவன் குடும்பம் வறுமை நிலையில் உள்ளது.

படம் – 2 (அ) : பண்என்னாம் பாடற் இயைபின்றேல்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.
அறிவு : மேற்கண்ட படத்தைப் பார்க்கும் போது உன் மனதில் தோன்றும் கருத்து யாது?
மதி : ‘தா’ என்று பிறரிடம் யாசித்தல் இழிவான செயலாகும். அப்படி கேட்டும் கேட்ட பொருளைக் கொடுக்காமல் இருப்பது அதைவிட இழிவாகும்.
அறிவு : இச்செயல் குறித்து நீ என்ன கருதுகிறாய்?
மதி : ஐயன் வள்ளுவன் கூறியது போல இரக்கம் இல்லாத கண்களால் பயன் என்ன? என்று கருதுகிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

படம் – 2 (ஆ) : (உரையாடல் தொடர்ச்சி)
மதி : இசையோடு பாடல் பொருந்தாததால் மக்கள் அதனை விரும்பாமல் அவ்விடத்தை விட்டுக் கடந்து செல்கின்றனர், பாடல், இசை இரண்டும் வேறுபட்டால் என்ன பயன். இதைப் போலவேதான் இரக்க குணமில்லாதவனுக்குக் கண் இருந்தும் அதனால் பயன் ஒன்றும் இல்லை .

Question 2.
கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.
‘சின்னச்சாமி… யாரோ மரத்தோரமா நிற்கிறாங்க… யாராய் இருக்கும்…” மாட்டு வண்டிய ஓட்டிக்கிட்டே அப்பா கேட்டார். “தெரியலப்பா ….”
“இறங்கி யாருன்னு பாரு…”
வாட்டசாட்டமாய், கண்ணாடியும் அலைபேசியும் கையுமாய் சாலையோரத்தில் வண்டியுடன் ஒருவர் நின்றிருந்தார்.
“ஐயா… நீங்க…”
வெளியூருப்பா… வண்டி நின்று போச்சு…!”
“அப்படியா… வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க. மழை வர்ற மாதிரியிருக்கு… ஊரு ரொம்ப தூரம்.. வேற வண்டியும் வராது…”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

அவர் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்து வரலைன்னுட்டார். மூன்று நான்கு பேர்தான் வண்டியில் இருந்தோம்… சிறிது தூரம் போறதுக்குள்ள மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிருச்சு… நாங்க வீட்டுக்குப் போயிட்டோம்.

இரவுல தூங்கப் போறப்ப… அப்பா சொன்னார். தம்பி… அந்த சூட்டுக்காரர் மழை தாங்காம நடந்திருக்காரு. தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சு… வேற யாரோ தூக்கிட்டு வந்திருக்காங்க. நம்ம ஊரு ஆசுபத்திரியில் … கட்டுப்போட்டுக்கிட்டு இருந்தாங்க.. பாவம் படிச்சவரா இருக்காரு… சூழ்நிலை புரியாம வரமாட்டேன்னு சொன்னாரு. இப்ப வேதனைப்பட்டாரே…

அ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலா தார்.
ஆ)பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
இ) ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்
தாழாது உஞற்று பவர்.
Answer:
அ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
காரணம் :
வண்டிக்காரரின் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்த சூட்டுக்காரன் தனக்கு உதவ வந்த அவனை ஒதுக்கித் தள்ளினான். உலகத்தானோடு பொருத்தி வாழும் தன்மையற்றவனாய் இருந்ததால் அவன் விபத்திற்குள்ளாக நேர்ந்தது. இவன் கற்றிருந்தும் அறிவில்லாதவனே.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

குறுவினா

Question 1.
‘நச்சப் படாதவன்’ செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
Answer:
நச்சப் படாதவன் என்பதன் பொருள், பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர்.

Question 2.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
Answer:
கொடுப்பதூஉம் – இன்னிசை அளபெடை துய்ப்பதூஉம் – இன்னிசை அளபெடை

Question 3.
பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள் - 2
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள் - 3

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 4.
எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம் தேமா மலர்
ஆ) கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா காசுஈ) புளிமா தேமா பிறப்பு
Answer:
அ) கூவிளம் தேமா மலர்

சிறுவினா

Question 1.
வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
Answer:
இப்பாடலில் உவமையணி பயின்று வந்துள்ளது.

அணி இலக்கணம் :
உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமையணி ஆகும்.
உவமை : வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிபறி செய்தல்.
உவமேயம் : ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு மன்னன் வரி விதித்தல்.
உவம உருபு : போல (வெளிப்படை)

விளக்கம் : ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 2.
கவிதையைத் தொடர்க.
தண்ணீர் நிறைந்த குளம்
தவித்தபடி வெளிநீட்டும் கை
கரையில் கைபேசி படமெடுத்தபடி
…………………………………………………………………..
…………………………………………………………………..
…………………………………………………………………..
Answer:
கவிதையைத் தொடர்க.
தண்ணீர் நிறைந்த குளம்
தவித்தபடி வெளிநீட்டும் கை
கரையில் கைபேசி படமெடுத்தபடி
பதறுகிறது என் நெஞ்சமடி
வருங்கால சமுதாயம் என்னவாகுமடி
எப்போது தீரும் தன்படம் மோகமடி
மூழ்கியவன் மூச்சு நின்னுப்போச்சு
மனிதநேயம் செத்துப்போச்சு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள் - 4

திருக்குறள் பற்றிய கவிதை :

உரை(றை) ஊற்றி ஊற்றிப்
பார்த்தாலும்
புளிக்காத பால்!
தந்தை தந்த
தாய்ப்பால்
முப்பால் ………………… – அறிவுமதி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

எய்துவர், காண்பர் – வினையாலணையும் பெயர்கள்
எய்தாப் பழி, தமராக் கொளல், ஏமரா மன்னன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சங்கள்
புகுத்தி – வினையெச்சம்
கொடுப்பதூஉம், தூய்ப்பதூஉம் – இன்னிசையளபெடைகள்

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள் - 5

பலவுள் தெரிக

Question 1.
கீழக்காண்பனவற்றுள் பொருந்தாத இணை எது?
அ) உயிரினும் மேலானது – ஒழுக்கம்
ஆ) ஒழுக்கமுடையவர் – மேன்மை அடைவர்
இ) உண்மைப் பொருளைக் காண்பது – அறிவு
ஈ) உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் – அறிவுடையவர்
Answer:
ஈ) உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் – அறிவுடையவர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 2.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
Answer:
அ) அழிக்க வேண்டியவை – ஆசை, சினம், அறியாமை
ஆ) பெரியோரை துணையாக்கிக் கொள்ளுதல் – பெறும்பேறு
இ) நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் – பிறர் நன்மையைக் கருதுபவர்
ஈ) ஆராயாத மன்னன் – நாட்டின் வளத்தைப் பெருக்குவான்
Answer:
ஈ) ஆராயாத மன்னன் – நாட்டின் வளத்தைப் பெருக்குவான்

Question 3.
நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் பயின்று வரும் அணி எது?
அ) உவமையணி
ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) உருவக அணி
Answer:
அ) உவமையணி

Question 4.
பொருத்துக.
1. மேன்மை – அ) சினம்
2. வெகுளி – ஆ) உயர்வு
3. மயக்கம் – இ) வறுமை
4. இன்மை – ஈ) அறியாமை
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 5.
உயிரினும் மேலானதாகக் கருதிப் பாதுகாக்க வேண்டியது……………………………….
அ) ஒழுக்கம்
ஆ) மெய் உணர்தல்
இ) கண்ணோட்டம்
ஈ) கல்வி
Answer:
அ) ஒழுக்கம்

Question 6.
“ஒழுக்கம் விழுப்பம் தரலான்” என்பதில் அமைந்துள்ள நயம்……………………………….
அ) மோனை
ஆ) எதுகை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
ஆ) எதுகை

Question 7.
“பெரியாரைப் பேணித் தமராக் கொளல்” இதில் “தமர்” என்பதன் பொருள்……………………………….
அ) நூல்
ஆ) துணை
இ) பேறு
ஈ) அரிய
Answer:
ஆ) துணை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 8.
“முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்” இதில் “இன்மை’ என்பதன் பொருள்……………………………….
அ) வறுமை
ஆ) இல்லை
இ) முயற்சி
ஈ) செல்வம்
Answer:
அ) வறுமை

Question 9.
பொருத்துக. 1. ஒழுக்கமுடைமை – அ) 36 வது அதிகாரம்
2. மெய்உணர்தல் – ஆ)14 வது அதிகாரம்
3. பெரியாரைத் துணைக்கோடல் – இ) 56வது அதிகாரம்
4. கொடுங்கோன்மை – ஈ) 45 வது அதிகாரம்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4. ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

குறுவினா

Question 1.
உயிரினும் ஓம்பப்படுவது எது? ஏன்?
Answer:

  • உயிரினும் ஓம்பப்படுவது ஒழுக்கம்.
  • ஏனெனில் ஒழுக்கமானது அனைத்துச் சிறப்புகளையும் தருகிறது.

Question 2.
ஒழுக்கத்தினால் கிடைப்பது எது? இழுக்கத்தினால் கிடைப்பது எது?
Answer:

  • ஒழுக்கத்தினால் கிடைப்பது மேன்மை.
  • இழுக்கத்தினால் கிடைப்பது அடையக்கூடாத பழிகள்.

Question 3.
பல கற்றும் கல்லாதவராகக் கருதப்படுபவர் யார்?
Answer:
உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றறிந்தாலும் கல்லாதவராகவே கருதப்படுவார்.

Question 4.
எப்பொருளைக் காண்பது அறிவு?
Answer:
எந்தப் பொருள் எந்த இயல்பினதாய்த் தோன்றினாலும், அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பது அறிவு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 5.
நாமம் கெடக்கெடும் நோய் பற்றி எழுதுக.
Answer:

  • ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றும் அழிதல் வேண்டும்.
  • இம்மூன்றும் அழிந்தால் அவற்றால் வரும் துன்பங்களும் அழியும்.

Question 6.
பெரும்பேறு எது?
Answer:
பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதலே கிடைத்தற்கரிய பெரும்பேறாகும்.

Question 7.
கெடுப்பார் இலானும் கெடுபவர் யார்? ஏன்?
Answer:
குற்றம் கண்டபோது இடித்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத மன்னன் தன்னைக் கெடுக்க பகைவர் இல்லை எனினும் தானே கெட்டழிவான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 8.
நல்லார் தொடர்பை கைவிடல் எத்தன்மையது?
Answer:
தான் ஒருவனாக நின்று பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தரும். ஆகவே நல்லார் நட்பைக் கைவிடல் கூடாது.

Question 9.
ஆட்சியதிகாரம் கொண்டுள்ள அரசன் குறித்துக் கூறப்பட்டுள்ள செய்தி யாது?
Answer:

  • ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பான்.
  • அரசனது இச்செயலானது வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகராகும்.

Question 10.
ஆராயாது ஆட்சி செய்யும் மன்னனைக் குறித்து குறள் கூறும் செய்தி யாது?
Answer:
தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் தன் நாட்டை நாள்தோறும் இழக்க நேரிடும்.

Question 11.
இரக்கம் இல்லா கண்கள் எதனைப் போன்று பயனற்றது?
Answer:

  • பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை.
  • அதைப் போல இரக்கம் இல்லாத கண்களாலும் பயனில்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 12.
உலகமே உரிமையுடையதாகும் எப்போது?
Answer:
நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

Question 13.
நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் யார்? ஏன்?
Answer:

  • விரும்பத்தக்க இரக்ககுணம் கொண்டவர்கள் நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர்.
  • ஏனெனில் பிறர் நன்மை கருதித் தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவர்.

Question 14.
ஒருவருக்கு பெருமை தருவது எது?
Answer:

  • ஒரு செயலை முடிப்பதற்கு இயலாது என்று எண்ணிச் சோர்வடையக் கூடாது.
  • அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்.

Question 15.
உயர்ந்த நிலையை எப்போது அடைய முடியும்?
Answer:
விடாமுயற்சி என்னும் உயர்பண்பு கொள்ளுதல், பிறருக்கு உதவுதல். இவ்விரு பண்புகளால் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 16.
‘செல்வம் பெருகுதல்’ ‘வறுமை வருதல்’ எப்போது?
Answer:

  • முயற்சி செய்வதால் செல்வம் பெருகும்.
  • முயற்சி இல்லாவிட்டால் வறுமையே வந்து சேரும்.

Question 17.
இழிவற்றது இழிவானது எது?
Answer:

  • ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருப்பின் அது இழிவன்று.
  • அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாததே இழிவாகும்.

Question 18.
சோர்விலாது முயற்சி செய்வோர் குறித்துக் கூறு.
Answer:
சோர்விலாது முயற்சி செய்வோர் செய்கின்ற செயலுக்கு இடையூறாய் வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடையவர்.

Question 19.
பல கோடி பெறினும் பயனில்லை எப்போது?
Answer:
பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவர் பல கோடிப் பொருள்களைப் பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 20.
விரும்பப்படாதவர் செல்வம் எதனைப் போன்றது?
Answer:
பிறருக்கு உதவாமல் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம், ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றதாகும்.

Question 21.
“பொறியின்மை யார்க்கும் பழியன்று” – இவ்வடிகளில் “பொறி” என்பது எதனைக் குறிக்கும்?
Answer:
பொறி என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைக் குறிக்கும்.

Question 22.
“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.” – இக்குறட்பாவில் அமைந்த முரண்சொற்கள் எவை?
Answer:

  • முயற்சி – முயற்றின்மை
  • திருவினை (செல்வம்) – இன்மை (வறுமை)

Question 23.
“அடுக்கிய கோடி உண்டாயினும் இல்” ஏன்?
Answer:
பிறருக்கும் கொடுக்காமல், தானும் அனுபவிக்காமல் இருப்பவர் அடுக்கிய பல கோடி பெரினும் பயன் இல்லை .

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 24.
“உரிமை உடைத்து இவ்வுலகு” – யாருக்கு?
Answer:
நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு, உலகமே உரிமை உடையதாகும்.

Question 25.
நாள்தோறும் நாடு கெடும் – என்று வள்ளுவர் கூறக் காரணம் யாது?
Answer:
தன் நாட்டில் நடக்கும் நன்மை தீமைகளை ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் நாடு நாள்தோறும் கெடும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 26.
கற்றும் கல்லாதார் அறிவிலாதார் – யார்?
Answer:
உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதார், பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்.

Question 27.
பாடலோடு பொருந்தா இசையால் பயனில்லை என்னும் உவமையைக் கொண்ட திருக்குறளை எழுதுக.
Answer:
பண்என்னாம் பாடற் இயைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

Question 28.
முயற்சி இல்லாதவருக்கு வறுமையே கிட்டும் என்பதற்குச் சான்றாக விளங்கும் திருக்குறளை எழுதுக.
(அ) முயற்சி செய்பவருக்கு செல்வம் பெருகும் என்பதற்குச் சான்றாக விளங்கும் திருக்குறளை எழுதுக.
Answer:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 29.
ஒரு செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும் என்பதை வலியுறுத்தும் குறட்பாவினை எழுதுக.
Answer:
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

Question 30.
நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுவது பலமடங்கு தீமையைத் தரும் என்பதைக் குறிப்பிடும் திருக்குறளை எழுதுக.
Answer:
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

Question 31.
எந்தப் பொருளாயினும் அதன் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவு என்பதை விளக்கும் குறட்பாவினை எழுதுக.
Answer:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

சிறுவினா

Question 1.
ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறிய செய்தி யாது?
Answer:
உயிரினும் மேலானது :
ஒழுக்கம் எல்லாருக்கும் அனைத்துச் சிறப்புகளையும் தருவதால் அதை உயிரினும் மேலானதாகக் கருதிக் காத்தல் வேண்டும்.

மேன்மை – பழி :
ஒழுக்கத்தினால் கிடைப்பது மேன்மை. இழுக்கத்தினால் கிடைப்பது அடையக் கூடாத பழி.

பல கற்றும் அறிவிலார் :
உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றவராயினும் அறிவு இல்லாதவராகவே கருதப்படுவார்.

Question 2.
மெய்யுணர்தல் குறித்து எழுதுக.
Answer:
உண்மைப் பொருளைக் காணல் :
எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பது அறிவு.

துன்பம் அழிதல் :
ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றையும் அழித்தால் அதனால் வரும் துன்பமும் அழியும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 3.
பெரியாரைத் துணைக்கோடல் குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக.
Answer:
பெரும்பேறு :
பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதலே பெரும்பேறாகும்.

பாதுகாப்பற்ற மன்னன் :
குற்றம் கண்ட இடத்து இடித்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத மன்னன் தன்னைக் கெடுக்கப் பகைவர்கள் இல்லையெனினும் தானே கெட்டழிவான்.

பெரியோர் நட்பைக் கைவிடல் :
நற்பண்புடைய பெரியோரின் நட்பைக் கைவிடுவதானது, தனியொருவனாக நின்று பகைவர் பலரைப் பகைத்துக் கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தரும்.

Question 4.
கொடுங்கோன்மை பற்றிய செய்தியைக் கூறு.
Answer:
ஆட்சியதிகாரம் : தன் ஆட்சியதிகாரத்தைக் கொண்டு வரி விதிக்கும் மன்னனது செயலானது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிபறி செய்பவனின் செயலுக்கு ஒப்பானது.

தன் நாட்டை இழத்தல் : தன் நாட்டின் நன்மை, தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் தன் நாட்டை இழக்க நேரிடும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 5.
கண்ணோட்டம் குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுது.
Answer:
இரக்கம் இல்லாத கண்கள் : பாடலோடு பொருந்தாத இசையால் பயன் ஒன்றுமில்லை. அதுபோல, இரக்கமில்லாக் கண்களால் பயன் ஒன்றுமில்லை

நடுநிலை : நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

நஞ்சை உண்ணும் பண்பாளர் : விரும்பத் தகுந்த இரக்க இயல்பைக் கொண்டவர்கள், பிறரது நன்மைக்காக தனக்கு நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் ஆவார்.

Question 6.
ஒருவனது செல்வம் பயனற்றதாய்ப் போவது எப்போது?
Answer:
பல கோடிப் பொருள்கள் :
பிறருக்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் இருப்பவர் பல கோடிப் பொருள்கள் பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை.

நச்சுமரம் பழுத்தது :
பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம் ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும்.

Question 7.
பண்என்னாம் பாடற் இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில் பயின்று வரும் அணியைக் கூறி விளக்குக.
Answer:
இப்பாடலில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.
அணி இலக்கணம் :
உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உவமஉருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.
உவமை : பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையால் பயனில்லை.
உவமேயம் : இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் பயன் இல்லை.
உவம உருபு : போல (மறைந்து வந்துள்ளது)
விளக்கம் : பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையால் பயன் இல்லை. அதுபோலவே, இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் பயன் இல்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள்

Question 8.
கீழ்க்காணும் பாடலில் உள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதி அடிக்கோடிடுக.
1. பண்என்னாம் பாடற் இயைபின்றேல் ; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.6 திருக்குறள் - 6

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

Students can Download 10th Tamil Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

கற்பவை கற்றபின்

Question 1.
இன்று நீங்கள் படித்த செய்தித்தாள்களில் உள்ள தொகாநிலைத் தொடர்களைத் தொகுத்து வருக.
பத்தி செய்தி :
கதிரவன் வந்தான். கதிரவா வா என அழைத்தாள் சீதா. சீதையைக் கண்டேன் எனக் கூறிய கதிரவன், அம்மா நலமா? எனக் கேட்டான். அம்மா நனி நலம்; நேற்றுதான் வந்து போனாள்; உன்னை விசாரித்தாள் எனச் சீதா கூறினாள். இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சீதாவின் கழுத்தில் கத்தியை வைத்தான் கதிரவன். உன் சங்கிலியைத் தா என்றான். அவள், அவன் கையைத் தட்டிவிட்டு வெளியே ஓடிப்போனாள். திருடன், திருடன் என அவள் கூச்சலிட்டதைக் கேட்ட ஊர் மக்கள் அனைவரும் திரண்டனர்; கதிரவனைப் பிடித்தனர். பின் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர் காவலர் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். நம்பிக்கை துரோகி ஒருவனிடமிருந்து தான் காப்பாற்றப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி கூறினாள்.
Answer:
கதிரவன் வந்தான், அம்மா நலமா?, சீதா கூறினாள்,அனைவரும் திரண்டனரா? – எழுவாய்த் தொடர்கள்
கதிரவா வா  – விளித்தொடர்
திருடன் திருடன் – அடுக்குத்தொடர் (அச்சம் காரணமாக)
அழைத்தாள் சீதா – வினைமுற்றுத் தொடர்
நனிநலம் – உரிச்சொல் தொடர்
கூறிய கதிரவன், கேட்ட ஊர் மக்கள் – பெயரெச்சத் தொடர்கள்
வந்து போனாள் – வினையெச்சத் தொடர்
சீதையைக் கண்டேன், உன்னை விசாரித்தாள், கத்தியை வைத்தான், கதிரவனைப் பிடித்தனர், சங்கிலியைத் தா – இரண்டாம் வேற்றுமைத்  தொகாநிலைத் தொடர்கள்
கழுத்தில் கத்தி, சிறையில் அடைத்தனர் – ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத்
தொடர்கள்
காவல் நிலையத்திற்குத் தகவல், இறைவனுக்கு நன்றி  – நான்காம் வேற்றுமைத்   தொகாநிலைத் தொடர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

Question 2.
கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.
மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.
Answer:

  • இறங்கினார் முகமது – வினைமுற்றுத் தொடர்
  • அவர் பாடகர் – எழுவாய்த் தொடர்
  • பாடுவது கேட்பது – கூட்டு வினையெச்சத் தொடர்
  • கேட்ட பாடல்கள் – பெயரெச்சத் தொடர்
  • கேட்காத பாடல்கள் – எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்
  • அடுக்கு அடுக்காக – அடுக்குத் தொடர்

Question 3.
வண்ணச் சொற்களின் தொடர் வகைகளை எழுதுக.
Answer:

  • பழகப் பழகப் பாலும் புளிக்கும் – அடுக்குத்தொடர்
  • வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன் – பெயரெச்சத் தொடர்
  • மேடையில் நன்றாகப் பேசினான். – வினையெச்சத் தொடர்
  • வந்தார் அண்ணன் – வினைமுற்றுத் தொடர்
  • அரிய கவிதைகளின் தொகுப்பு இது. – ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க.

Respected ladies and gentleman, I am llangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil Culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should proud about our culture. Thank you one and all.
Answer:

தமிழ்ப் பண்பாடு

மரியாதைக்குரியவர்களே! என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பில் படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வந்திருக்கிறேன். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழரே வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி!

பழமொழிகளை நிறைவு செய்க.

  • உப்பில்லாப் …………………………..
  • ஒரு பானைச் …………………………..
  • உப்பிட்டவரை …………………………..
  • விருந்தும் …………………………..
  • அளவுக்கு …………………………..

Answer:

  • உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
  • ஒரு பானைச் சோற்றுக்கு, ஒரு சோறு பதம்.
  • உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
  • விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்.
  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுது.

பழையசோறு

பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம் வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் கடுப்பு மணத்தை சோறாகு முன் கை நிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்தக் காலையில் அதன் பெயர் பழைய சோறு அல்லது பழையது காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒரு வகை. வாழை இலையில் அந்தப் பழையச் சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நார்த்தங்காய் அதனுடன் சேர்த்துக் கொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்ட வைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்ல பழையது மாம்பழம் வாசம் வீசுமாம். பழைய சோறு அது கிராமத்து உன்னதம்.
“கைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து” – முக்கூடற்பள்ளு
Answer:
நெல்லை அவித்து காயவைத்து எடுக்கும் புழுங்கல் அரிசியைச் சோறாக்கி, அதனை இரவெல்லாம் நீரில் ஊறவைத்து, கிடைக்கும் பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வடுமாங்காய், உப்பு நாரத்தங்காய் மற்றும் சுண்ட வைத்த குழம்பு இவற்றில் ஒன்றைக் கூட்டாக வைத்து சாப்பிடுவது கிராமத்து உன்னதம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

கதையாக்குக.

மனித வாழ்வில் ஒவ்வொரு நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம்; புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகிற கருப்பொருளைத் திரட்டி, கற்பனை நயம் கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம். புதினமாக இருக்கலாம். அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக……. இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.
Answer:

உதவி

அந்திமாலைப் பொழுதில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது பாலத்தின் கீழிருந்து சத்தம் கேட்டு பாலத்தின் அடியில் எட்டிப் பார்த்தேன். பசிமயக்கத்தால் சுருண்டு கிடந்தாள் ஒரு பெண். குளிர் தாங்க முடியாமல் சத்தம். அரைகுறை ஆடையில் இருந்தாள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எனக் கண்டுபிடித்தேன். உடனே, வீட்டிற்கு வந்து உணவை ஒரு பாத்திரத்திலும், ஆடை மற்றும் ஒரு போர்வையை ஒரு பையிலும் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தேன்.

அவ்வுணவை எடுத்து சாப்பிடுவதற்குக் கூட அவளிடம் பலமில்லை. பாதி சாப்பிட்டு விட்டு உட்கார முடியாமல் அவ்வுணவின் மீதே சரிந்து விழுந்தாள். உடனே அருகில் இருந்த மருத்துவரை அழைத்து வந்து மருத்துவம் பார்த்து, அவளை மருத்துவரின் உதவியுடன் மனநலக் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தேன். அவள் மனதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி தென்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

கடிதம் எழுதுக.

உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
Answer:

உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம்

அனுப்புநர்
கண்ணன்,
25, வள்ளல் தெரு,
அண்ணாநகர்,
திருநெல்வேலி – 11.

பெறுநர்
உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
உணவு பாதுகாப்பு ஆணையம், திருநெல்வேலி.

மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுதல் – தொடர்பாக.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

வணக்கம்.
இன்று காலை பேருந்துநிலையத்திற்கு வெளியில் உள்ள “சுவையகம்” என்ற உணவகத்திற்குச் சென்றோம். நானும் என் நண்பனும் உணவு உண்டோம். உணவில் கல்லும், குழம்பில் பூச்சியும் கிடந்தது. உணவக மேலாளரிடம் முறையிட்டோம். அதற்குச் சரியான காரணத்தை அவர் அளிக்கவில்லை. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு விலைப்பட்டியல் பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்த தொகையை வாங்காமல் கூடுதலாக இருபது ரூபாயைக் காசாளர் வாங்கினார்.

எனவே, தரமற்ற உணவையும், விலை கூடுதலாகவும் விற்பனை செய்த, அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதற்கான தக்க சான்றுகள் (புகைப்படம்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

நன்றி!

திருநெல்வேலி.
23.03.2020.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
கண்ணன்.

உறைமேல் முகவரி:
Samacheer Kalvi 10th Tamil Guide Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் - 1

நயம் பாராட்டுக.

“கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்”. – காளமேகப் புலவர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

திரண்ட கருத்து :

வாழைக்கு அழகு குருத்து
செய்யுளுக்கு அழகு திரண்ட கருத்து

கடல் சூழ்ந்த ஊர் நாகப்பட்டினம். அங்குள்ள காத்தான் சத்திரத்தில் பொழுது இறங்கும் போதுதான் அரிசி வரும். அதனைத் தீட்டி உலையில் போடும்போது ஊரே அடங்கிப் போயிருக்கும். ஓர் அகப்பைச் சோறு இலையில் போடும்போது விடிவெள்ளி முளைத்துவிடும்.

தொடை நயம் :

தொடையற்ற பாட்டு
நடையற்றுப் போகும்

செய்யுளில் எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகிய உறுப்புகளால் தொடுக்கப்படுவது தொடை.

மோனை நயம் :

மோனையற்ற பாட்டு
சேனையற்ற நாடு

செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

சான்று:

கத்துகடல், காத்தான்
உலையிலிட, ஊரடங்கும்
அத்தமிக்கும், அரிசி வரும்

எதுகை நயம் :
வீரத்துக்கு அழகு வேங்கை
பாட்டுக்கு அழகு எதுகை

அடிதோறும் அல்லது சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.

சீர் எதுகை:
கத்துகடல், காத்தான், சத்திரத்தில்; அத்தமிக்கும், குத்தி

அடி எதுகை:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் - 3

அணி நயம் :
கோவிலுக்கு மணி அழகு
செய்யுளுக்கு அணி அழகு

இப்பாடல் இரு பொருள்பட வந்து இரட்டுற மொழிதல் அணியால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

பா நயம் :
இப்பாடல் நேரிசை வெண்பா வகையைச் சார்ந்தது.

தலைப்பு :
‘நாகை சத்திரம்’ என்பது இப்பாடலுக்குப் பொருத்தமான தலைப்பு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

மொழியோடு விளையாடு

விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடி.

இ – கு (பறவையிடம் இருப்பது)
கு – தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)
வா –  (மன்னரிடம் இருப்பது)
அ – கா (தங்கைக்கு மூத்தவள்)
ம –  (அறிவின் மறு பெயர்)
பட – (நீரில் செல்வது படகு)
Answer:
கு (பறவையிடம் இருப்பது)
குருதி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)
வாள் (மன்னரிடம் இருப்பது)
க்கா (தங்கைக்கு மூத்தவள்)
தி (அறிவின் மறு பெயர்)
படகு (நீரில் செல்வது படகு)
Answer:
திருக்குறள்

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

சிலை – சீலை, தொடு – தோடு, மடு – மாடு, மலை – மாலை, வளி – வாளி, விடு – வீடு
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் - 4
Answer:

  • சிலை – சீலை : எ.கா: சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருந்தனர்.
  • தொடு – தோடு : காதைத் தொடும்போது தோடு அழகாக ஆடியது.
  • மடு – மாடு : மடுவில் (குட்டையில்) மாடு நீர்க் குடித்தது.
  • மலை – மாலை : மலை மீது ஏறி மாலையில் விளையாடினேன்.
  • வளி – வாளி : வளியும் (காற்றும்) வாளியும் (அன்பும்) இல்லாமல் வாழ முடியாது.
  • விடு – வீடு : அகந்தையை விடு, வீடுபேறு (சொர்க்கம்) கிடைக்கும்.

அகராதியில் கண்டு பொருள் எழுதுக.

அ) ஊண், ஊன்
ஆ) திணை, தினை
இ) அண்ணம், அன்னம்

Answers:

அ) ஊண், ஊன்
ஊண் – இரை, உண்டி, சோறு, உணவு, ஆன்மாவின் சுகதுக்கனுபவம்.
ஊன் – உடல், தசை, நிணம், மாமிசம், சரீரம்.

ஆ) திணை, தினை
திணை – இடம், ஒழுக்கம், குடி, குலம், பூமி, பொருள்.
தினை – ஒரு சாமை (தானியம்), சிறுமை.

இ) அண்ணம், அன்னம்
அண்ணம் – மேல்வாய், மேல் நாக்கு.
அன்னம் – கவரிமான், சோறு தானியம், பிரம்ம வாகனம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

ஈ) வெல்லம், வெள்ளம்
வெல்லம் – கருப்பஞ்சாற்றுக்கட்டி.
வெள்ளம் – நீர்ப்பெருக்கு, கடல், கடலலை, நீர், ஈரம், மிகுதி, உண்மை .

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் - 5
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள் - 2

செயல் திட்டம்

உணவு, விருந்து சார்ந்த பழமொழிகளையும் விழிப்புணர்வுத் தொடர்களையும் திரட்டி, அகர வரிசைப்படுத்தி வகுப்பறையில் காட்சிப்படுத்துக.

எ.கா: நொறுங்கத் தின்றால் நூறு வயது

  • அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
  • உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
  • உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே.
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.
  • பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.
  • பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.
  • பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
  • முழு பூசணியைச் சோற்றில் மறைக்காதே.
  • வாழ்வதற்காக உண்; உண்பதற்காக வாழாதே.
  • விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
  • விளையும் பயிர் முளையிலே தெரியும்.
  • வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
  • வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

கலைச்சொல் அறிவோம்

  • செவ்விலக்கியம் – Classical literature
  • காப்பிய இலக்கியம் – Epic literature
  • பக்தி இலக்கியம் – Devotional literature
  • பண்டைய இலக்கியம் – Ancient literature
  • வட்டார இலக்கியம் – Regional literature
  • நாட்டுப்புற இலக்கியம் – Folk literature
  • நவீன இலக்கியம் – Modern literature

நிற்க அதற்குத் தக

“தம்பி… உனக்குப் பிடிச்ச காய் சொல்லு” – “கேரட்”
“பிடிச்ச பழம்” – “ஆப்பிள்”
“பிடிச்ச காலை உணவு” – “நூடுல்ஸ் ”
“மத்தியானத்துக்கு” – “ஃப்ரைடு ரைஸ்”
“ராத்திரி” – “பீட்ஸா அல்லது பாஸ்தா”

இது ஏதோ ஆங்கிலப்படத்தின் வசனம் அல்ல. “சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர்” என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல் ஒட்டு மொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும் சாம்பார் சாதமும் கத்திரிக்காய்ப் பொரியலும் இனி காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில் ஆம் காணாமல் போய்விடும்! உங்கள் குழந்தைகள் “ஆடு மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி? என எதிர்காலத்தில் கேட்கக்கூடும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

மருத்துவர் கு. சிவராமனின் இக்கருத்திற்குச் சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?
Answer:
நாகரிகம் கருதியோ, நாச்சுவை கருதியோ நம் பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்தல் கூடாது. வெப்பமயமான நம் நாட்டிற்கு புழுங்கல் அரிசியே ஏற்றது. ஆகவே, நம் நாட்டுச் சூழலுக்கு ஏற்ற பாரம்பரிய உணவுகளைத் தினமும் கட்டாய உணவாக உட்கொள்ளும் போது அது நம் உடலுக்கு மிகுந்த சக்தியைக் கொடுக்கும். பாரம்பரிய உணவுகளைத் தவிர்க்கும் போது ‘உணவே மருந்து என்ற நிலை மாறி ‘மருந்தே உணவு’ என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது…………………………….
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
Answer:
அ) வேற்றுமை உருபு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

குறுவினா

Question 1.
‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத் தொடரானது. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
Answer:
‘சிரித்து பேசினார்’ என்பது, உவகை காரணமாக சிரித்து சிரித்து பேசினார்’ என அடுக்குத்தொடராகும்.

Question 2.
பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?.
Answer:

  • பெயர்ப் பயனிலை –
  • வினை பயனிலை – சென்றார்
  • வினா பயனிலை – யார்?

சிறுவினா

Question 1.
‘கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!
இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
Answer:
‘கண்ணே கண்ணுறங்கு – விளித்தொடர்
காலையில் நீயெழும்பு – ஐந்தாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர்
மாமழை பெய்கையிலே – உரிச்சொல் தொடர்
மாம்பூவே கண்ணுறங்கு – விளித்தொடர்
பாடினேன் தாலாட்டு – வினைமுற்றுத் தொடர்
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – அடுக்குத்தொடர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
அ) காவிரி பாய்ந்தது – எழுவாய்த் தொடர்
ஆ) பாடினாள் கண்ணகி – வினைமுற்றுத் தொடர்
இ) நண்பா எழுது – விளித்தொடர்
ஈ) பாடி மகிழ்ந்த னர் – பெயரெச்சத்தொடர்
Answer:
ஈ) பாடி மகிழ்ந்தனர் – பெயரெச்சத்தொடர்

Question 2.
சரியான வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுது.
i) பாடத்தைப் படித்தாள் – 1. இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
ii) இசையால் ஈர்த்தார் – 2. மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
iii) கயல்விழிக்குப் பரிசு – 3. ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
iv) முருகனின் சட்டை – 4. நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
அ) 1, 2, 3, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 1, 2, 4, 3
ஈ) 4, 3, 2, 1
Answer:
இ) 1, 2, 4, 3

Question 3.
ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது……………………………
அ) தொகை நிலைத்தொடர்
ஆ) தொகாநிலைத்தொடர்
இ) மரபுத்தொடர்
ஈ) உவமைத்தொடர்
Answer:
ஆ) தொகாநிலைத்தொடர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

Question 4.
தொகாநிலைத் தொடரின் வகைகள்……………………………
அ) 6
ஆ) 7
இ) 8
ஈ) 9
Answer:
ஈ) 9

Question 5.
விளியுடன் எது தொடர்வது விளித்தொடர் ஆகும்?
அ) பெயர்
ஆ) வினா
இ) வினை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) வினை

Question 6.
வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது……………………………
அ) எழுவாய்த்தொடர்
ஆ) விளித்தொடர்
இ) வினையெச்சத்தொடர்
ஈ) வினைமுற்றுத்தொடர்
Answer:
ஈ) வினைமுற்றுத்தொடர்

Question 7.
முற்றுப் பெறாத……………………………பெயர்ச்சொல்லைத் தொடர்வது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
அ) வினா
ஆ) எழுவாய்
இ) வினை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) வினை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

Question 8.
……………………………உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
அ) உவம்
ஆ) வேற்றுமை
இ) பண்பு
ஈ) வினை
Answer:
ஆ) வேற்றுமை

Question 9.
பொருத்திக் காட்டுக.
i) கட்டுரையைப் படித்தாள் – 1. உரிச்சொல் தொடர்
ii) அன்பால் கட்டினார் – 2. நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
iii) அறிஞருக்குப் பொன்னாடை – 3. மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
iv) சாலச் சிறந்தது – 4. இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 3, 1, 4
ஈ) 4, 2, 3, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Question 10.
பொருத்திக் காட்டுக.
i) காவிரி பாய்ந்தது – 1. வினையெச்சத்தொடர்
ii) நண்பா எழுது – 2. பெயரெச்சத்தொடர்
iii) கேட்ட பாடல் – 3. எழுவாய்த்தொடர்
iv) பாடி மகிழ்ந்த னர் – 4. விளித்தொடர்
அ) 3, 4, 2, 1
ஆ) 2, 1, 4, 3
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 3, 4, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

Question 11.
இடைச்சொல் தொடரில் இடைச்சொல்லுடன் தொடர்வது……………………………
அ) பெயர், வினை
ஆ) வினா, விடை
இ) பெயர், வினா
ஈ) வினை, வினா
Answer:
அ) பெயர், வினை

Question 12.
மற்றொன்று என்பது……………………………
அ) வினையெச்சத்தொடர்
ஆ) வினைமுற்றுத்தொடர்
இ) இடைச்சொல் தொடர்
ஈ) உரிச்சொல் தொடர்
Answer:
இ) இடைச்சொல் தொடர்

Question 13.
ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது……………………………
அ) இரட்டைக்கிளவி
ஆ) அடுக்குத்தொடர்
இ) இரட்டுறமொழிதல்
ஈ) உரிச்சொல் தொடர்
Answer:
ஆ) அடுக்குத்தொடர்]

Question 14.
கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி ஆகியன……………………………
அ) பெயரெச்சங்கள்
ஆ) கூட்டுநிலைப் பெயரெச்சங்கள்
இ) கூட்டுநிலை வினையெச்சங்கள்
ஈ) வினையெச்சங்கள்
Answer:
ஆ) கூட்டுநிலைப் பெயரெச்சங்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

Question 15.
அன்பால் கட்டினார், அறிஞருக்குப் பொன்னாடை ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
Answer:
அ) வேற்றுமை உருபு

குறுவினா

Question 1.
தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?
Answer:

  • ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருக்கும்.
  • அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்தும்.
  • இதுவே தொகாநிலைத் தொடர் எனப்படும்.

Question 2.
தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
தொகாநிலைத் தொடர்கள் ஒன்பது வகைப்படும். அவை:

  • எழுவாய்த் தொடர்
  • வேற்றுமைத் தொடர்
  • விளித்தொடர்
  • இடைச்சொல் தொடர்
  • வினைமுற்றுத் தொடர்
  • உரிச்சொல் தொடர்
  • பெயரெச்சத் தொடர்
  • அடுக்குத் தொடர்
  • வினையெச்சத் தொடர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

Question 3.
எழுவாய்த் தொடர் என்றால் என்ன? சான்றுகள் தருக.
Answer:
எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர்.
சான்று :

  • இனியன் கவிஞர் – பெயர் பயனிலை
  • காவிரி பாய்ந்தது – வினை பயனிலை
  • பேருந்து வருமா? – வினா பயனிலை

Question 4.
விளித்தொடர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர்.
சான்று : நண்பா எழுது.

Question 5.
வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:

  • வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடரும்.
  • வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக் கொண்டு முடியும்.
    சான்று : பாடினாள் கண்ணகி.

Question 6.
பெயரெச்சத் தொடர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
முற்றுப் பெறாத வினை (எச்ச வினை) பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் எனப்படும்.
சான்று : கேட்ட பாடல் (கேட்ட – எச்சவினை, பாடல் – பெயர்ச்சொல்)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

Question 7.
வினையெச்சத் தொடர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
முற்றுப் பெறாத வினை (எச்சவினை) வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர் எனப்படும்.
சான்று : பாடி மகிழ்ந்தனர்.

Question 8.
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடராகும்.
சான்று : கட்டுரையைப் படித்தான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

Question 9.
இடைச்சொல் தொடர் என்றால் என்ன? சான்றுடன் விளக்குக.
Answer:
இடைச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
சான்று :

  • மற்றொன்று – மற்று + ஒன்று
  • மற்று – இடைச்சொல்
  • ஒன்று – இடைச்சொல்லை அடுத்து நின்று பொருள் தரும் சொல்.

Question 10.
உரிச்சொல் தொடர் என்றால் என்ன? சான்று தந்து விளக்குக.
Answer:
உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.

சான்று : சாலச் சிறந்தது
சால – உரிச்சொல்
சிறந்தது – உரிச்சொல்லைத் தொடர்ந்து சிறந்தது என்ற சொல் நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகின்றது.

Question 11.
அடுக்குத் தொடர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
ஒரு சொல் இரண்டு, மூன்று முறை அடுக்கி வரும்.
சான்று : வருக! வருக! வருக!
(பிரித்தால் பொருள் தரும். உவகை, விரைவு, அச்சம், வெகுளி ஆகிய பொருள்களில் வரும். சொற்கள் தனித்தனியே நிற்கும்).

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

சிறுவினா

Question 1.
கூட்டுநிலைப் பெயரெச்சத்தை சான்றுடன் விளக்குக.
Answer:
கூட்டுநிலைப் பெயரெச்சம் :
ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது கூட்டுநிலைப் பெயரெச்சம்.

உருவாக்கம் :
வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.

சான்று : கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி.

Question 2.
வேற்றுமைத் தொகாநிலைத் தொடரைச் சில சான்றுகளுடன் விளக்குக.
Answer:
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் :
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்.

சான்று :

இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’
கட்டுரையைப் படித்தாள் – இத்தொடரில் ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பட வந்துள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.5 தொகாநிலைத் தொடர்கள்

மூன்றாம் வேற்றுமை உருபு ‘ஆல்’
அன்பால் (ஆல்) கட்டினார் – இத்தொடரில் ‘ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு வெளிப்பட – வந்துள்ளது.

நான்காம் வேற்றுமை உருபு ‘கு’
அறிஞருக்குப் பொன்னாடை – இத்தொடரில் ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்பட வந்துள்ளது.