Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

11th History Guide அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர் …………………..
அ) தாமஸ் சாண்டர்ஸ்
ஆ) ஜேம்ஸ் பிரின்செப்
இ) சர் ஜான் மார்ஷல்
ஈ) வில்லியம் ஜோன்ஸ்
Answer:
ஆ) ஜேம்ஸ் பிரின்செப்

Question 2.
மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர். ஹர்யங்காவம்சத்தைச் சேர்ந்த ……………………
அ) பிம்பிசாரர்
ஆ) அஜதாசத்ரு
இ) அசோகர்
ஈ) மகாபத்ம நந்தர்
Answer:
அ) பிம்பிசாரர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர் ………………….
அ) மகாபத்ம நந்தர்
ஆ) தன நந்தர்
இ) பிந்து சாரர்
ஈ) பிம்பிசாரர்
Answer:
ஆ) தன நந்தர்

Question 4.
……………………… என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்.
அ) மகாவம்சம்
ஆ) தீபவம்சம்
இ) பிரமாணம்
ஈ) முத்ராராட்சசம்
Answer:
அ) மகாவம்சம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 5.
………………… என்ற விசாகதத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது.
அ) முத்ராராட்சசம்
ஆ) ராஜதரங்கிணி
இ) அர்த்தசாஸ்திரம்
ஈ) இண்டிகா
Answer:
அ) முத்ராராட்சசம்

Question 6.
மெகஸ்தனிஸ் எழுதிய ……………….. சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது.
அ) இண்டிகா
ஆ) முத்ராராட்சசம்
இ) அஷ்டத்யாயி
ஈ) அர்த்தசாஸ்திரம்
Answer:
அ) இண்டிகா

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 7.
………………….. நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.
அ) அர்த்தசாஸ்திரம்
ஆ) இண்டிகா
இ) ராஜதரங்கிணி
ஈ) முத்ராராட்சசம்
Answer:
அ) அர்த்தசாஸ்திரம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
மகதத்தின் தலைநகரம் ………………………
அ) ராஜகிருகம்
ஆ) உஜ்ஜயினி
இ) கோசலம்
ஈ) கோசாம்பி
Answer:
அ) ராஜகிருகம்

Question 2.
நந்தவம்சத்திற்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் ………………………
அ) மௌரியர்கள்
ஆ) சிசுநாகர்கள்
இ) ஹர்யாங்கர்கள்
ஈ) குப்தர்கள்
Answer:
ஆ) சிசுநாகர்கள்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
16 மகாஜனபதங்களில் ………………… தொடக்கத்தில் சக்தி வாய்ந்ததாக இருந்தது.
அ) மகதம்
ஆ) கோசலம்
இ) காசி
ஈ) அவந்தி
Answer:
இ) காசி

Question 4.
குஜராத்தில் கிர்ணார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜீனகாத் கல்வெட்டு ……………….. காலத்தைச் சேர்ந்தது.
அ) பொ. ஆ. 130 – 150
ஆ) பொ. ஆ. 170 – 190
இ) பொ. ஆ. 150 – 170
ஈ) பொ. ஆ. 190 – 210
Answer:
அ) பொ. ஆ. 130 – 150

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 5.
ஹரியங்கா வம்சத்தின் ………………………. மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
அ) பிந்து சாரர்
ஆ) பிம்பிசாரர்
இ) சந்திர குப்தர்
ஈ) அஜாகத் சத்ரு
Answer:
ஆ) பிம்பிசாரர்

Question 6.
ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து …………………….. வம்சம் ஆட்சிக்கு வந்தது.
அ) மௌரிய
ஆ) கனிஷ்க்
இ) வர்த்த ன
ஈ) சிசுநாக
Answer:
ஈ) சிசுநாக

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 7.
பாரசீக பேரரசர் சைரஸ் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து …………………. என்ற நகரை அழித்தார்.
அ) கபிஷா
ஆ) ஆக்கிமீனைட்
இ) கதாரா
ஈ) ஹராவதி
Answer:
அ) கபிஷா

Question 8.
அஷ்டத்தாயி என்ற இலக்கிய நூலை எழுதியவர் ……………………
அ) ஜான் மார்ஷல்
ஆ) கபிஷா
இ) மித்ரா
ஈ) பாணினி
Answer:
ஈ) பாணினி

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 9.
நாணயத்திற்கான இந்திய சொல்லான ………………… பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும்.
அ) கசாய்
ஆ) லிடா
இ) கார்சா
ஈ) டிடா
Answer:
இ) கார்சா

Question 10.
அலெக்ஸாண்டரிடம் சரணடைந்த தட்சசீலரின் அரசர் ………………………
அ) அம்பி
ஆ) போரஸ்
இ) பிரசேனஜித்
ஈ) கோசலம்
Answer:
அ) அம்பி

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 11.
அலெக்ஸாண்டரின் வரலாற்று சிறப்புமிக்க இந்திய போர் …………………. எனப்படுகிறது.
அ) ஜீலம்
ஆ) பாரசீக
இ) ஹைடாஸ்பஸ் போர்
ஈ) தட்சசீல
Answer:
இ) ஹைடாஸ்பஸ் போர்

Question 12.
……………………. தந்தை பிம்பிசாரரை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார்.
அ) பிந்துசாரர்
ஆ) அஜாத சத்ரு
இ) மகாபத்ம நந்தர்
ஈ) போரஸ்
Answer:
ஆ) அஜாத சத்ரு

Question 13.
முதல் நந்த அரசர் …………………..
அ) அஜாத சத்ரு
ஆ) மகாபத்ம நந்தர்
இ) பிம்பிசாரர்
ஈ) பிந்து சாரர்
Answer:
ஆ) மகாபத்ம நந்தர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 14.
அலெக்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்து வந்த ஆண்டு …………………..
அ) பொ. அ. மு. 236
ஆ) பொ. அ. மு. 232
இ) பொ. அ. மு. 326
ஈ) பொ. அ. மு. 362
Answer:
இ) பொ. அ. மு. 326

Question 15.
சந்திரகுப்தர் …………………. ல் மௌரிய பேரரசை அமைத்தார்.
அ) பொ. அ. மு. 297
ஆ) பொ. அ. மு. 272
இ) பொ. அ. மு. 321
ஈ) பொ. அ. மு. 231
Answer:
இ) பொ. அ. மு. 321

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 16.
மெகஸ்த னிஸ் எழுதிய நூல் ………………………
அ) அர்த்தசாஸ்திரம்
ஆ) முத்ராராட்சசம்
இ) இண்டிகா
ஈ) தீபவம்சம்
Answer:
இ) இண்டிகா

Question 17.
கூற்று : அலெக்ஸாண்டர் பேரரசிடம் நாட்டை திரும்ப அளித்தார்.
காரணம் : போரஸ் கண்ணியமாக அலெக்ஸாண்டரிடம் நடந்து கொண்டார்.
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்றும், காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.
ஈ) கூற்றும் காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்கவில்லை .
Answer:
இ) கூற்றும், காரணமும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.

Question 18.
கௌடில்யர் எழுதிய நூல் …………………………
அ) முத்ராராட்சசம்
ஆ) அர்த்தசாஸ்திரம்
இ) தீபவம்சம்
ஈ) மகாவம்சம்
Answer:
ஆ) அர்த்தசாஸ்திரம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 19.
விஷ்ணு குப்தர் என்று அழைக்கப்பட்டவர் ……………………..
அ) சாணக்கியர்
ஆ) விசாகதத்தர்
இ)சந்திரகுப்தர்
ஈ) பிந்து சாரர்
Answer:
அ) சாணக்கியர்

Question 20.
ஹதிகும்பா கல்வெட்டு …………………. பேரரசைப் பற்றி குறிப்பிடுவது.
அ) ஹரியங்கா
ஆ) மௌரியர்கள்
இ) நந்தர்கள்
ஈ) சிசுநாகம்
Answer:
இ) நந்தர்கள்

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 21.
“இந்து” என்ற வார்த்தை முதன்முதலில் காணப்படும் கல்வெட்டு ……………………….
அ) அய்கோப்ன கல்வெட்டு
ஆ) முதலாம் டாரியஸின் கல்வெட்டு
இ) ஜீனாகத் கல்வெட்டு
ஈ) சாரநாத் கல்வெட்டு
Answer:
ஆ) முதலாம் டாரியஸின் கல்வெட்டு

Question 22.
பாடலிபுத்திரத்தில் அசோகரால் மூன்றாம் பௌத்த சங்கம் கூட்டப்பட்ட ஆண்டு
அ) பொ. ஆ. மு. 350
ஆ) பொ. ஆ. மு. 450
இ) பொ. ஆ. மு. 250
ஈ) பொ. ஆ. மு. 400
Answer:
அ) பொ. ஆ. மு. 350

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

II. குறுகிய விடை தருக :

Question 1.
பிம்பிசாரர் எவ்வாறு மகதப் பேரரசை விரிவுபடுத்தினார்?
Answer:

  • ஹரியங்கா வம்சத்தில் பிம்பிசாரர் மகதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
  • அவர் திருமண உறவுகள் மற்றும் போர்கள் மூலம் மகதப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார்.
  • கோசல அரசர் பிரசேனஜித்திற்கு தனது சகோதரியை மணம் செய்து தந்ததன் மூலம் காசியை வரதட்சணையாகப் பெற்றார்.
  • லிச்சாவி, மாத்ரா இளவரசிகளை அவர் மணந்தார். அங்கத்தை ராணுவ பலத்தால் இணைத்துக்கொண்டார். இவ்வாறு பிம்பிசாரர் மகதப் பேரரசை விரிவு படுத்தினார்.

Question 2.
மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக.
Answer:

  • மகாபத்ம நந்தர் நந்த பேரரசின் முதல் அரசர்.
  • சிசுநாக அரசரைக் கொன்று அரியணையைக் கைப்பற்றினார்.
  • நந்தர்களின் கீழ் பேரரசு நன்கு விரிவடைந்தது.
  • நந்தர்களின் செல்வமும், அதிகாரமும் இவர் காலத்தில் பெருகியது. எதிரிகளுக்கு அச்ச மூட்டுவதாக இருந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
எதன் காரணமாக மகா அலெக்சாண்டர் போரஸின் அரியணையைத் திருப்பித் தந்தார்?
Answer:

  • போரஸ் ஜீலம் நதிக்கரைக்கும் பியாஸ் நதிக்கரைக்கும் இடைப்பட்ட பகுதியை ஆண்டார்.
  • அலெக்சாண்டரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹைடாஸ்பெஸ் போர் போரஸ் மன்னனுக்கு எதிராக நடைபெற்றது.
  • போரின் முடிவில் அலெக்சாண்டரால் போரஸ் கைது செய்யப்பட்டார்.
  • பின்னர் போரஸின் கண்ணியத்தால் ஈர்க்கப்பட்ட அலெக்சாண்டர் தனது மேலாதிக்கத்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவரது அரியணையைத் திருப்பி தந்தார்.

Question 4.
ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை?
Answer:

  • கிரேக்க வரலாற்றாளர்கள் மௌரிய அரசை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு என்று குறிப்பிடுகிறார்கள்.
  • மையப்படுத்தப்பட்ட அரசு என்றால், பேரரசின் பரந்து விரிந்த பகுதிகள் முழுவதிலும் ஒரே விதமான நிர்வாக அமைப்பே நிலவியது என பொருள் கொள்ள வேண்டும்..
  • ஆனால், அன்றிருந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை வைத்து பார்க்கும்போது மையப்படுத்தப்படாத நிர்வாக முறைகள் இருந்திருக்க வேண்டும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 5.
மௌரிய அரசு பற்றி ஆய்வுக்கு உதவும் இலக்கியச் சான்றுகள் பற்றிச் சிறு குறிப்பு தருக.
Answer:

  • கெளடில்யர் (சாணக்கியர்) எழுதிய அர்த்த சாஸ்திரம் மௌரியரின் அரசியல் நிர்வாகம் குறித்து தெளிவாக விளக்குகின்றது.
  • மெகஸ்தனிஷ் எழுதிய இண்டிகா – சந்திரகுப்தரின் – அரசு நிர்வாகத்தைப் பற்றி கூறுகிறது.
  • விசாகதத்தரின் முத்ராராட்சசம் என்ற நாடக நூல்.
  • பிராமணங்கள் மற்றும் மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும் உள்ளன.

Question 6.
அலெக்சாண்டரின் படையெடுப்பு எந்த வகைகளில் இந்திய வரலாற்றில் திருப்பு முனையாக அமைகிறது?
Answer:

  • அலெக்சாண்டரின் படையெடுப்பு பிற்காலத்தில் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரப்போகும் இந்தியா மற்றும் மேற்கு உலகிற்கு இடையிலான தொடர்பின் ஆரம்பமாக அமைந்தது.
  • நான்கு வணிகப் பெருவழிகள் வாயிலாக கிரேக்க வணிகர்களும், கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்.
  • இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடி தொடர்பு ஏற்றபடி இது உதவியது.
  • இது இந்திய ஆட்சியிலும் கலைகளிலும் ஒரு புதிய பாணியை உருவாக்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
குறிப்பு தருக : முத்ராராட்சசம்
Answer:

  • முத்ராரர்ட்சசம்’ என்பது விசாகத்தத்தரால் எழுதப்பட்ட நாடக நூல்.
  • இந்நூல் மகத அரியணையில் சந்திரகுப்தர் அமர்ந்ததைப் பற்றியது. சந்திரகுப்தருக்கு எதிரான படையெடுப்பைத் தடுக்க அவரது தலைமை ஆலோசகர் ‘சாணக்கியர் அல்லது ‘கௌடில்யா’ தீட்டிய யுக்திகளைப் பட்டியலிடுகிறது.

Question 2.
ஜீனாகாத் கல்வெட்டைப் பற்றி கூறுக.
Answer:

  • குஜராத் மாநிலத்தில் உள்ள கிர்நார் என்ற இடத்தில் இக்கல்வெட்டு காணப்படுகிறது.
  • ருத்ரராமன் என்ற மன்னர் இக்கல்வெட்டை செதுக்கினார்.

இக்கல்வெட்டு இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.

  • மேற்கே குஜராத் வரை மௌரியப் பேரரசு பரவி இருந்ததை உறுதி செய்கிறது.
  • சந்திர குப்தரின் புகழ் அவர் இறந்து நான்கு நூற்றாண்டு ஆன பின்னரும் தொடர்ந்தது என்பகைக் கூறுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
குறிப்பு வரைக. தட்சசீலம் :
Answer:

  • தட்சசீலம் கல்வி மற்றும் கலாச்சாரத்தை போதிக்கும் முக்கிய மையமாகும். 1940ல் சர்ஜாண் மார்ஷல் இந்த நகரைக் கண்டறிந்தார்.
  • இங்கு கல்வி கற்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வந்துள்ளார்கள்.
  • எந்த ஒரு நாகரீகத்திலும் இல்லாத உயர்ந்த அறிவார்ந்த சாதனைகளைப் படைத்ததாக தட்சசீலம் கருதப்படுகிறது.
  • பாணினி தனது புகழ்பெற்ற “அஷ்டத்யாயி” என்ற இலக்கிய நூலை இங்கு தான் எழுதினார்.

Question 4.
குறிப்பு வரைக. பிந்துசாரர்
Answer:

  • சந்திர குப்தரின் புதல்வர் பிந்துசாரர் பொ.ஆ.மு. 297-ல் அமைதியான, இயல்பான ஆட்சி மாற்றம் மூலம் அவருக்கு பின் ஆட்சியில் அமர்ந்தார்.
  • பிந்து சாரர் நல்ல திறமையான அரசர், மேற்கு ஆசியாவின் கிரேக்க அரசுகளுடன் நல்லுறவு பேணும் தனது தந்தையின் வழியைத் தொடர்ந்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

III. சுருக்கமான விடை தருக

Question 1.
தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் தெரியவரும் நகரப் பண்புகளைக் கூறுக.
Answer:

  • தொல்லியல் அகழ்வாய்வுகளின் மூலம் நகரபுறத் தோற்றம் பற்றியும், நகரத்தின் அமைப்பு, கட்டிடங்களின் கட்டுமானம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
  • அக்கால மக்களுக்குத் தெரிந்த உலோகங்கள் அவர்கள் பயன்படுத்திய கருவிகள், அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் என்று மக்களின் தன்மையை அறிய முடிகிறது.
  • கங்கைப் பகுதியில் தொல்லியல் கண்டுபிடிப்புகள் அப்பகுதியில் உருவான நகர மையங்களின் தன்மை குறித்த சான்றுகளைத் தந்துள்ளன.

Question 2.
கங்கைச் சமவெளி முடியாட்சிகளின் அம்சங்களை விளக்குக.
Answer:

  • பொ. ஆ. மு. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து 3ம் நூற்றாண்டு வரை வட இந்தியா பல முக்கிய அரசியல் மாற்றங்களை கண்டது.
  • கங்கைச் சமவெளியில் ஆட்சி செய்வதற்காக இனக் குழுக்களுக்குள் சண்டைகள் ஏற்பட்டன.
  • வெற்றி பெற்றவர் கங்கைச் சமவெளியில் முடியாட்சி தோன்றுவதற்கு காரணமாய் அமைந்தது.
  • சக்ரவர்த்தி அல்லது ஏக்ராட் என்ற உயர்ந்த பதவிகளால் அரசாட்சி செய்தனர்.
  • முடியாட்சி அரசுகளுள் காசி முதலில் பலம் வாய்ந்ததாக இருந்தது.
  • பிற்காலத்தில் மகதம் பலம் வாய்ந்ததாக மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.
Answer:

  • அலெக்சாண்டரின் படையெடுப்பு இந்தியர்களைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் கிரேக்க சத்ரப்புகள் அமைவதற்கு இட்டுச்சென்றது.
  • மேற்குலகிற்காக வணிகப் பெரு வழிகள் திறக்கப்பட்டன.
  • இதனால் கிரேக்கர்களும் கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்.
  • இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடி தொடர்பு ஏற்பட இது உதவியது.
  • மௌரியர்களின் கீழ் வட இந்தியாவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற்பட்டது.
  • சிறு அரசுகள் என்ற முறை முடிவுக்கு வந்தது.

Question 4.
அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?
Answer:

  • மகதத்திலிருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தைக் கைப் பற்றுவதற்காக நடைபெற்ற போர் கலிங்கப்போர்.
  • அசோகரது ஆட்சிகாலத்தின் முக்கியமான நிகழ்வு அவரது ஆட்சியில் நடைபெற்ற கலிங்கப்போர் ஆகும்.
  • போரில் கொல்லப்பட்டவர்கள் காயம் அடைந்தவர்கள் பல பத்தாயிரங்களாகும்.
  • இப்போர் மற்ற போர்களை விட மிக கொடூரமானதாக இருந்திருக்க வேண்டும்.
  • போருக்குப்பின் அசோகர் கலிங்கத்தை மௌரிய அரசுடன் இணைத்துக்கொண்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 5.
மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.
Answer:

  • நாடெங்கும் கிடைத்த பருத்தியைக் கொண்டு பருத்தி ஆடைகளுக்கான நூற்பிலும் நெசவிலும் ஈடுபட்டன.
  • ஆடை வணிகம் அதிகம் நடைபெற்றது.
  • சாதாரண மக்கள் பயன்படுத்திய முரட்டு ரகம் முதல் உயர்குடியினர் முதல் அரசக் குடும்பத்தினர் வரை பயன்படுத்திய மெல்லிய ரகம் வரை பல்வேறு ரகங்களில் பருத்தி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
  • காசி, வங்கம், காம்ரூபம், மதுரை போன்ற
    இடங்களில் சிறப்பான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
  • சீனா மற்றும் இலங்கை போன்ற இடங்களிலிருந்தும் துணி, கம்பளி, பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

Question 6.
இந்தியா மற்றும் மேற்கு, மத்திய ஆசியா இடையில் வணிகம் செய்யப்பட்ட பொருள்கள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
Answer:

  • அர்த்தசாஸ்திரம் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் விற்கப்பட்ட பொருள்களின் விவசாயப் பொருட்களின் பட்டியலைத் தருகிறது.
  • இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் சீனா, இலங்கை போன்ற இடங்களிலிருந்தும் வந்த துணி கம்பளி, பட்டு, வாசணை மரக்கட்டை, விலங்குத்தோல், நவரத்தினக் கற்கள் அடங்கும்.
  • அவுரி (சாயம்), தந்தம்? ஆமை ஓடு, முத்து, வாசணை திரவியங்கள், அபூர்வ மரக்கட்டைகள் ஆகியன எகிப்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
அஜாதத் சத்ரு எவ்வாறு தமது பேரரசை விரிவுப்படுத்தினார்?
Answer:
அஜாதசத்ரு தந்தை பிம்பிசாரரைக் கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார். உடனடியாக, பிம்பிசாரருக்கு வரதட்சணையாகத் தந்திருந்த காசியை அரசர் பிரசேனஜித் திரும்ப எடுத்துக்கொண்டார்.
இதனால் மகத நாட்டிற்கும் கோசல நாட்டிற்கும் மோதல் உருவானது. பிரசேனஜித் தனது நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, இராஜகிருகத்தின் கோட்டை வாசலில் இறந்து போகும் வரை போர் தொடர்ந்தது. பின்னர் கோசல நாட்டுடன் மகத நாடு இணைந்தது.
அஜாகத்சத்ரு லிச்சாவியரையும் மல்லர்களையும் வென்றார்.
பொ. ஆ. மு. 461 இல் அஜாகத் சத்ரு மறைந்த போது மகதம் அசைக்க முடியாத வலுவான அரசாகிவிட்டது.

Question 2.
இந்தியா என்ற சொல் எப்படி வந்தது?
Answer:
ஈரானில் உள்ள பெர்சிபோலிசிஸ் காணப்பட்ட முதலாம் டாரியஸின் கல்வெட்டில் தான் “இந்து” என்ற வார்த்தை முதன் முறையாகக் காணப்படுகிறது.
சிந்துநதியை குறிக்கும் “சிந்து” என்ற சொல் பாரசீகத்தில் “இந்து” வானது. கிரேக்கர்கள் ளுேைனர என்பதில் உள்ள ளு ஐ நீக்கிவிட்டு, ஐனேர என்றார்கள். அது பின்னர் ஹிந்து என்றானது. பின்னர் அதிலிருந்து ‘இந்தியா வந்தது.

Question 3.
சமஸ்கிருதத்திற்கும் பாரசீகத்திற்கும் உள்ள தொடர்பு யாது?
Answer:
ரிக் வேதத்திற்கும் அவஸ்தாவிற்கும் பல மொழியியல் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆரியர்கள் என்ற சொல்லைப் பண்டைக்கால பாரசீகர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்திய மொழி பண்பாட்டு ஆய்வாளர் தாமஸ் பரோவின் கூற்றின்படி, உச்சரிப்பு மட்டும் காலப்போக்கில் மாறியிருக்கலாம்.

பொ. ஆ. மு. 1380 ஐச் சேர்ந்த போகஸ் கோய் (வடகிழக்கு சிரியா) கல்வெட்டு ஒன்று ஒரு ஹிட்டைட் அரசனுக்கும், மிட்டன்னி அரசனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தைப் பற்றிக் கூறுகிறது. அது சில ரிக்வேத கடவுளர்களின் இந்தரா, உருவ்னா (வருணா), மித்ரா, நஸதயா (அஸ்வினி) ஆகிய பெயர்களைக் குறிப்பிடுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 4.
அசோகரின் மூன்றாம் பௌத்த சங்கம் பற்றிக் கூறுக.
Answer:

  • அசோகர் ஆட்சியில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று. பொ. ஆ.மு. 250 இல் தலைநகரமான பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த சங்கத்தைக் கூட்டியது ஆகும்.
  • அசோகரது ஆழமான பௌத்த ஈடுபாட்டால் பௌத்த மதத்திற்கு அரசு அதரவு கிட்டியது.
  • பௌத்தத்தை மற்ற பகுதிகளுக்கும் பரப்பவும், மக்களை பௌத்த மதத்திற்கு மாற்ற பிரச்சாரகாரர்களை அனுப்பவும் வேண்டும் என்பது இச்சங்கத்தின் முக்கியமான முடிவாகும்.
  • இவ்வாறாக பௌத்தம் மதமாற்றம் செய்யும் மதமாகவும் மாறியது.

IV. விரிவான விடை தருக :

Question 1.
மௌரியப் பேரரசு பற்றி நாம் அறிய உதவும் சான்றுகளைப் பற்றி விளக்கவும்.
Answer:
மௌரிய பேரரசு பற்றி அறிந்துகொள்வதற்கு பல வகையான சான்றுகள் கிடைத்துள்ளன.
1. இலக்கிய ஆதாரங்கள்
2. தொல்லியல் சான்றுகள்
3. அசோகரின் கல்வெட்டுகள்
4. பிற சான்றுகள்

1. இலக்கிய ஆதாரங்கள் :

  • இந்து மத இலக்கியமான பிராமணங்கள்
  • இலங்கையில் கிடைத்த பாலி மொழி நூலான மகாவம்சம் ஆகியவைகளில் மௌரிய பேரரசு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது.
  • சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம் மௌரியர்களின் அரசியல் நிர்வாகம் குறித்து தெளிவாக கூறுகிறது.
  • விசாகதத்தரின் முத்ராராட்சசம் என்ற நாடக நூல் மற்றொரு சிறந்த இலக்கிய சான்றாகும்.

2. தொல்லியல் சான்றுகள் :

  • வரலாற்றின் தொடக்க காலம் பற்றி அறிந்துகொள்ள தரும் முக்கியமான சான்றாக விளங்குகிறது.
  • தொல்லியல் அகழ்வாய்வுகளின் மூலம் நகரபுறத்தோற்றம், நகரத்தின் அமைப்பு, கட்டிடங்களில் கட்டுமானம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது.
  • அக்கால மக்களுக்குத் தெரிந்திருந்த உலோகங்கள் அவர்கள் பயன்படுத்திய கருவிகள் அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் அன்றாட வாழ்வியல் பண்பாடு குறித்த தகவல்களையும் அறிய முடிகிறது.

3. அசோகரின் கல்வெட்டுகள் :

  • மௌரிய அரசின் அனைத்து கல்வெட்டு | கட்டளைகள் ஒரு பெரிய அரசரைக் குறிப்பிட்டே தொடங்குகின்றன.
  • பல கல்வெட்டுக் கட்டளைகளின் பொருளும் ஒவ்வொன்றாகக் கண்டறியப்பட்டபோது, பொ. ஆ. 1915 இல் அந்த அரசர் அசோகர் தான் என உறுதிசெய்யப்பட்டது. இது மௌரிய வரலாற்றை
    மறு உருவாக்கம் செய்தவதை சாத்தியமாக்கியது.

4. பிற சான்றுகள் :

  • குஜராத்தில் உள்ள கிர்நார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜீனகாத் பாறைக்கல்வெட்டு – ருத்ரதாமன் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டது. இது தரும் செய்தி .
  • மேற்கே வெகு தூரத்திற்கு குஜராத் வரை மௌரிய பேரரசு பரவி இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. .
  • சந்திரகுப்தர் இறந்து நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலும் நாட்டின் பல பகுதிகளில் அறியப்பட்டவராக இருந்திருக்கிறார்.
  • வாய்மொழிக் கதையாடல் பாரம்பரியங்களின் முக்கியத்துதுவத்தினை உறுதிப்படுகின்றன. அவை தற்போது ஒரு நம்பகமான வரலாற்றுச் சான்றுகளாக ஏற்படுகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 2.
மௌரிய ஆட்சியமைப்பின் முக்கியக் கூறுகளை விவரிக்கவும்.
Answer:

  •  கிரேக்க வரலாற்றாளர்கள் மௌரிய அரசை ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு என்றும் பேரரசின் பரந்து விரிந்த பகுதிகள் முழுவதிலும் ஒரே விதமான நிர்வாக அமைப்பே நிலவியது எனவும் குறிப்பிடுகிறார்கள்.
  • அதிகாரமுறை என்பது கிராமங்கள், நகரங்கள், மாகாணத் தலைநகரங்கள், முக்கிய நகரங்கள் என்ற படி நிலைகளைக் கொண்டதாக இருந்தது.

மாகாண நிர்வாகம் :

  • நாட்டின் நிர்வாகத்தலைவர் அரசர்.
  • அரசருக்கு உதவியாக அமைச்சர்கள், மதகுரு. மகாமாத்தியர்கள் என்ற செயலாளர்கள் இருந்தனர்.
  • தலைநக;ா பாடலிபுத்திரம் நேரடியாக நிர்வாகம் செய்யப்பட்டது.
  • எஞ்சியப் பகுதிகள் சுவர்ணகிரி, உஜ்ஜயினி, தட்சசீலம், தோசாலி என நான்கு பெரும் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு அரசரின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டன.
  • ஒரே மாதிரியான நிதி வருவாய் மற்றும் நிதி நிர்வாகம் இருந்தது. வரி வசூல் சமஹர்த்தா என்பவரின் பொறுப்பாக இருந்தது. இவர் நிதி அமைச்சர் போல் இருந்தார்.
  • வரி வசூல் குறித்த ஆவணங்களை நிர்வகிப்பது கருவூல நிர்வாகியின் பொறுப்பு.
  • ஒவ்வொரு துறையிலும், மத்திய மற்றும் உள்ளூர் நிர்வாகங்களோடு இணைக்கப்பட்ட ஏராளமான கண்காணிப்பாளர்களும் துணை அதிகாரிகளும் இருந்தனர்.

மாவட்ட, நகர மற்றும் கிராம நிர்வாகம்:

  • மாவட்ட நிர்வாகம், ஸ்தானிகர் என்பவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. கோபா என்று அழைக்கப்பட்ட அதிகாரிகள் ஐந்து முதல் பத்து கிராமங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர்.
  • நகர நிர்வாகம் நகரகா என்பவர் வசம் இருந்தது.
  • கிராமங்கள் ஓரளவிற்குத் தன்னாட்சி பெற்றிருந்தன. கிராமணி என்பவரின் அதிகாரத்தின் கீழ் ஒவ்வொரு கிராமமும் இயங்கியது.

வருவாய் ஆதாரம் :

  • பொருளாதாரத்தில் மிக முக்கியமான வேளாண்துறையின் வருவாயை அதிகரிக்கும் வகையில், வேளாண்மை உற்பத்திகளை சேமிக்க கிடங்குகள் இருந்தன . கட்டுப்படுத்தப்பட்ட சந்தை வசதிகள் இருந்தன.
  • நிலவரி, நீர்பாசன வரி, வீட்டு வரி, சுங்க வரி மற்றும் நுழைவு வரி உள்ளீட்ட பிற வரி வருவாய்களும் இருந்தன.
  • காடுகள், சுரங்கங்கள் ஏகபோகமாக இருந்த உப்பு உற்பத்தி ஆகியவை வருவாய்க்கான முக்கியமான ஆதாரங்களாகும்.

நீதி ஆதாரம் :

நீதிமன்றங்கள் மூலம் நீதி வழங்கப்பட்டது. தர்மஸ்தியா, கந்தகோசந்தனா என்ற இரண்டு வகை நீதிமன்றங்கள் இருந்தன.

தர்மஸ்தியா :

திருமணம் வாரிசுரிமை உள்ளிட்ட குடியுரிமைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்தன. இதில் மதச்சட்டங்கள் நன்கு தெரிந்த மூன்று நீதிபதிகளும் மூன்று அமர்த்தியாக்களும் இருந்தன.

கந்தகோசந்தனா :

  • இதன் பணி சமூக விரோதிகளையும், பல்வேறு விதமான குற்றங்களையும் அகற்றுதலாகும். இதிலும் மூன்று நீதிபதிகளும், மூன்று செயலாளர்களும் இருந்தனர்.
  • சமூக விரோதச் செயல்களை அறிய ஒற்றர் முறை இருந்தது.
  • குற்றங்களுக்கான தண்டனை மிகக் கடுமையாக இருந்தது.
  • மனித நேயமும் பரிவும் கொண்ட ஒரு நல்ல முன்மாதிரி அரசாக மௌரியப் பேரரசு இருந்துள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 3.
இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம் குறித்து நாம் அறிவது என்ன?
Answer:
பாரசீக தொடர்பு பண்டைய இந்தியாவின் கலை, எழுத்து முறை, கட்டிடக்கலை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

எழுத்து முறை :
மிக முக்கியமான தாக்கம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பயன்படுத்தப்படும் கரோஷ்டி எழுத்து முறையின் வளர்ச்சியாகும். இந்த கரோஷ்டி எழுத்தை காந்தாரப்பகுதியில் தன்னுடைய கல்வெட்டுகளுக்காக அசோகர் பயன்படுத்தினார்.

இது ஆக்கி மீனைட் பேரரசில் பயன்பட்டு வந்த அராமிக்கிலிருந்து உருவானதாகும். அராமிக் போலவே கரோஷ்டியும் வலது புறம் இருந்து இடது புறமாக எழுதப்படும் எழுத் முறையாகும்.

நாணயம் :
பாரசீகத்தில் சிக்லோய் என்ற வெள்ளி நாணயம் இப்பகுதியிலிருந்து மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டதே ஆகும். இந்தியாவின் மிகப் பழமையான நாணயங்கள் மகாஜனபத அரசின் காலத்தவையாகும் நாணயத்திற்கான இந்தியச் சொல்லான “கார்சா” பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும்.

கல்வெட்டு :
அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகள் ஆக்கிமினைட் அரசர் டாரியஸின் கல்வெட்டுக் கட்டளைகளைப் பார்த்து உருவாக்கப் பட்டிருக்கலாம்.

கட்டிடக்கலை:
மௌரியக் கலைகளும் கட்டிடக் கலைகளும் பாரசீகத் தாக்கத்துக்கான அடையாளங்களை கொண்டுள்ளன. மௌரியத் தூண்களான அசோகர் தூண்கள் ஆக்கிமினைட் பேரரசில் காணப்படும் தூண்களை ஒத்துள்ளன.

தூண்களின் முகட்டில் உள்ள மணி போன்ற உச்சி குறிப்பாக சாரநாத் தூணின் சிங்க உச்சி, ராம்பூர்வால் தூணின் மணி உள்ளவை ஆக்கிமினைட் தூண்களில் காணப்படும் உச்சிகளை ஒத்தே உள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 4.
அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் பற்றிக் கூறுக.
Answer:

  • அசோகருடைய கல்வெட்டுக் கட்டளைகள் மௌரியப் பேரரசு பற்றிய தகவல்களுக்கான நம்பகத்தன்மை கொண்ட சான்றுகளாகத் திகழ்கின்றன.
  • 14 முக்கியமான பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் கலிங்க கல்வெட்டுக் கட்டளைகள் என்று அழைக்கப்படும்.
  • 2 கல்வெட்டுக் கட்டளைகள்
  • 7 தூண் கல்வெட்டுக் கட்டளைகள்
  • சில சிறு பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள்
  • மிகச் சில சிறு தூண்களில் பதியப்பட்ட கல்வெட்டுக் கட்டளைகள் என்று மொத்தம் 33 கல்வெட்டு கட்டளைகள் கிடைத்துள்ளன.
  • இந்த மௌரியப் பேரரசின் கல்வெட்டுக் கட்டளைகள் புவியியல் நோக்கில் பரவியுள்ள விதம், அசோகர் ஆட்சி செய்த ஒரு பெரிய பேரரசின் பரப்பளவைக் காட்டுகிறது.

இரண்டாவது அரசாணை அவரது பேரரசின் எல்லைக்கு வெளியேயான நிலப்பரப்புகளைக் கூறுகிறது. அவை; “சோழர்கள், பாண்டியர்கள், சத்திய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் (சேரர்கள்), தாமிரபரணி, யோன (யவன) அரசர் அந்தியோகா (அந்தியோகஸ்) இந்த அந்தியோகாஸ் அருகில் இருந்த நாடுகளின் அரசர்கள்.

இந்த அரசாணை அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றில் அசோகருக்கு இருந்த நம்பிகை, மக்களது நல்வாழ்வின் மீது அவருக்கிருந்த அக்கறை ஆகியவற்றை வலியுறுத்திக் கூறுகின்றன.

வன்முறை, போர் ஆகியவற்றை நிராகரித்து, அமைதியையும் தர்மத்தையும் வலியுறுத்தியதன் மூலம் அசோகர் ஒரு பேரரசர் போர்கள் மூலம் தனது அரசை விரிவுபடுத்தி, வலுப்படுத்த வேண்டும் என்று அக்காலத்தில் நிலவி வந்த கொள்கையை முற்றிலும் நிராகரித்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
அசோகரின் ஆட்சி தம்ம அரச பற்றி விவரி.
Answer:
அசோகரது ஆட்சி ஒரு நல்ல அரசர். நியாயமான ஆட்சி என்பதற்கான ஒரு முன்மாதிரியைக் காட்டுகிறது.

அவர் தனது அதிகாரிகளான யுக்தர்கள் (கீழ்நிலை அதிகாரிகள்), ராஜிக்கர்கள் (கிராம நிர்வாகிகள்), பிரதேசிகர்கள் (மாவட்டத் தலைவர்கள்) ஆகியோரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கு தம்மத்தை போதிக்குமாறு அறிவுறுத்தினார்.

எல்லா மக்களும் தமது குழந்தைகள் என்றும் தன் சொந்தக் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் அவர்கள் (மக்கள்) இந்த உலகிலும் அடுத்த உலகிலும் நலமும் மகிழ்வும் பெற வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட அதிகாரிகளுக்கும் நகர நீதிபதிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார்.

இந்த அதிகாரிகள் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும். சரியான காரணம் இன்றி மக்களை சிறைப்படுத்தக் கூடாது, சித்ரவதை செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் போன்றவை அசாகரின் கட்டளைகளாக இருந்தன.

தன்னுடைய இந்த கட்டளைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறதா என்பதைப் பார்க்க ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஒரு அதிகாரியை அனுப்பப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

ஒரு திறமையான அரசர் தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்பதை அசோகர் உணர்ந்திருந்தார்.

அனைத்து மதங்களும் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என்றும் எல்லா மதத்துறவிகளுக்கும் மரியாதை தரப்பட வேண்டும் என்று கூறினார்.

மருத்துவ வசதி தருவது அரசாங்கத்தின் பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார். பேரரசர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவம் பார்க்க மருத்துவமனைகளைத் திறக்க உத்தரவிட்டார்.

தேவையின்றி விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும். எல்லா உயிரினங்களுக்கும் மரியாதை காட்டப்பட வேண்டும் என்பது அவரது கல்வெட்டுக் கட்டளைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் கருத்துக்களில் ஒன்று.

அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகளில் மனிதநேயமும் பரிவும் கொண்ட ஒரு நல்ல முன் மாதிரியாகக் கொள்ளத் தகுந்த அரசாங்கத்தைப் பார்க்கிறோம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Question 2.
பாடலிபுத்திர நகர அமைப்பைப் பற்றிக் கூறுக.
Answer:

பாடலிபுத்திரம் மௌரியப் பேரரசின் மாபெரும் தலைநகரமாகும். இது கங்கையின் சோன் நதியும் சங்கமமாகும் இடத்தில் ஒரு இணைநகரத்தின் வடிவில் இருந்த பெரிய செல்வமிக்க நகரம் என்று வர்ணிக்கப்படுகிறது.

இது 14 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமும், சுமார் இரண்டரை கிலோமீட்டர் அகலமும் கொண்டது. வெளியே பாதுகாப்பிற்காக மரத்தாலான சுற்றுச்சுவர் இருந்தது. எதிரிகள் மீது அம்பு எய்வதற்காக இதில் ஆங்காங்கே ஓட்டைகள் இருந்தன. நகரத்திற்க 64 வாசல்கள் இருந்தன. 570 கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன.

சுவருக்கு வெளியே அகலமான, ஆழமான அகழி இருந்தது. அகழிக்கு ஆற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. பாாதுகாப்பிற்காகவும், கழிவுநீர் வடிகாலாகவும் அகழி பயன்பட்டது. நகரத்திற்குள் பல அழகிய அரண்மனைகள் இருந்தன.

அதன் மக்கள்தொகை மிகவும் அதிகம். நகரம் 30 பேர் கொண்ட ஒரு கழகத்தால் நிர்வகிக்கப்பட்டது. அசோகர் இங்கு பல தூண்கள் கொண்ட அரங்கை நிர்மானித்து நகரத்தின் கம்பீரத்தை அதிகரித்தார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

காலக்கோடு வரைக.
V. பேரரசு உருவாக்க காலத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து காலக்கோடு வரைக.

நிகழ்ச்சி

ஆண்டுகள்

1. சைரஸ் (பாரசீகப் பேரரசர்) படையெடுப்பு பொ.ஆ.மு. 530
2. நந்தர்கள் மகதத்தில் தங்களது பேரரசைத் தோற்றுவித்தல் பொ. ஆ. மு. 362
3. அலெக்சாண்டரின் படையெடுப்பு பொ. ஆ. மு. 326
4. சந்திரகுப்தர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தல் பொ. ஆ. மு. 321
5. சந்திரகுப்தரால் செலியுகஸ் தோற்கடிக்கப்படுதல் பொ. ஆ. மு. 301
6. சந்திரகுப்தருக்குப் பின் பிந்துசாரர் ஆட்சியில் அமர்தல் பொ. ஆ. மு. 297
7. அசோகர் தலைமையில் மூன்றாம் பௌத்த சங்கம் கூடியது பொ. ஆ. மு. 250
8. அசோகரின் மறைவு பொ.ஆ. மு. 231

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Business Maths Guide Pdf Chapter 4 Differential Equations Ex 4.3 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 4 Differential Equations Ex 4.3

Question 1.
Solve:
x\(\frac { dy }{dx}\) = x + y
Solution:
x\(\frac { dy }{dx}\) = x + y
x\(\frac { dy }{dx}\) = x + y ⇒ \(\frac { dy }{dx}\) = \(\frac { x+y }{x}\) ……… (1)
It is a homogeneous differential equation, Same degree in x and y
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 1
Integrating on both sides
∫\(\frac { 1 }{x}\) dx = ∫dv
log x = v + c ⇒ x = e(v+c)
x = ev.ec
x = ev. c ⇒ x = cev [⇒ v = \(\frac { y }{x}\)]
⇒ x = cey/x

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Question 2.
(x – y) \(\frac { dy }{dx}\) = x + 3y
Solution:
(x – y) \(\frac { dy }{dx}\) = x + 3y
\(\frac { dy }{dx}\) = \(\frac { x+3y }{(x-y)}\) ……… (1)
It is a homogeneous differential equation same degree in x and y
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 2
Integrating on both sides
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 3

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Question 3.
x\(\frac { dy }{dx}\) – y = \(\sqrt { x^2+y^2}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 4
It is a homogeneous differential equation, same degree in x and y
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 5

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Question 4.
\(\frac { dy }{dx}\) = \(\frac { 3x-2y }{2x-3y}\)
Solution:
\(\frac { dy }{dx}\) = \(\frac { 3x-2y }{2x-3y}\) …….. (1)
It is a homogeneous differential equation same degree in x and y
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 6
Integrating on both sides
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 7
Squaring on both sides
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 8

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Question 5.
(y² – 2xy) dx = (x² – 2xy)dy
Solution:
(y² – 2xy) dx = (x² – 2xy)dy
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 9
Integrating on both sides
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 10
Cubing on both sides
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 11

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Question 6.
The slope of the tangent to a curve at any point (x, y) on it is given by (y³ – 2yx²) dx + (2xy² – x³) dy = 0 and the curve passes throngh (1, 2). Find the equation of the curve.
Solution:
Given that equation of the slope of tangent
(y³ – 2yx²) dx + (2xy² – x²) dy = 0
(2xy² – x³) dy = – (y³ – 2yx²) dx
(2xy² – x³) dy = (2yx² – y³) dx
\(\frac { dy }{dx}\) = \(\frac { (2yx^2-y^3) }{(2xy^2-x^3)}\) ………. (1)
It is a homogeneous differential equation same degree in x and y.
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 12
⇒ 2v² – 1 = A(v² – 1) + B(v) (v + 1) + C(v) (v – 1) ………. (4)
Put v = 0 in (2)
-1 = A(-1) ⇒ A = 1
Put v = -1
2(-1)² – 1 = [A(-1)² -1] + B(0) + C(-1) (-1 -1)
2 – 1 = A(0) + B(0) + C(-1) (-2)
1 = 2C ⇒ C = 1/2
Put v = 1
2(1)² – 1 = [A(1)² – 1] + B(1) (1 +1) + C(1)(1 – 1)
2 – 1 = A(0) + B(2) + C(0)
2B = 1 ⇒ B = 1/2
Substitute A = 1, B = 1/2 and C = 1/2 in (1)
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 13

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Question 7.
An electric manufacturing company makes small household switchs. The company estimates the marginal revenue function for these switches to be (x² + y²) dy = xy dx where x represents the number of units (in thounsands). What is the total revenue function?
Solution:
Given
Marginal revenue for the switches
(x² + y²) dy = xy dx
\(\frac { dy }{dx}\) = \(\frac { xy }{(x^2+y^2)}\) ……… (1)
It is a homogeneous differential equation same degree in x and y.
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 14
Integrating on both sides
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3 15
The total revenue function is
⇒ y = ce\(\frac { x^2 }{2y^2}\)

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.3

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

11th History Guide பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
புத்தர் தனது முதல் போதனையை …………… இல் நிகழ்த்தினார்.
அ) சாஞ்சி
ஆ) வாரணாசி
இ) சாரநாத்
ஈ) லும்பினி
Answer:
இ) சாரநாத்

Question 2.
அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பௌத்த நூல் ………….. ஆகும்?
அ) சீவகசிந்தாமணி
ஆ) அச்சரங்க சூத்திரம்
இ) கல்பசூத்திரம்
ஈ) சமனபலசுத்தா
Answer:
ஈ) சமனபலசுத்தா
Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
பகவதி சூத்திரம் ஒரு ………………… நூலாகும். இல் நிகழ்த்தினார்.
அ) பௌத்தம்
ஆ) சமணம்
இ) ஆசீவகம்
ஈ) வேதம்
Answer:
ஆ) சமணம்

Question 4.
……………………… வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.
அ) இரும்பு
ஆ) வெண்கலம்
இ) செம்பு
ஈ) பித்தளை
Answer:
அ) இரும்பு

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 5.
வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படைத்ததாக வளர்ந்த அரசு …………. ஆகும்.
அ) கோசலம்
ஆ) அவந்தி
இ) மகதம்
ஈ) குரு
Answer:
இ) மகதம்

கூடுதல் வினாக்கள்

Question 1.
…………………. தொழில் நுட்பத்தின் பயன்பாடு நகரமயமாக்க ஏற்படுத்தியது.
அ) செம்பு
ஆ) தங்கம்
இ) இரும்பு
ஈ) இதில் எதுவும் இல்லை
Answer:
இ) இரும்பு

Question 2.
மகாவீரர் பிறந்த இடம் ……………
அ) பாடலிபுத்திரம்
ஆ) குசுமபுரம்
இ) குண்டகிராமம்
ஈ) கபிலபஸ்து
Answer:
இ) குண்டகிராமம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?
அ) பால
ஆ) பிரகிருதம்
இ) சமஸ்கிருதம்
ஈ) இந்தி
Answer:
அ) பால

Question 4.
ஆரியர்கள் ஏறத்தாழ பொ. ஆ. மு. ……….. வாக்கில் கிழக்கு நோக்கி இடம் பெயர ஆரம்பித்தனர்.
அ) 1000
ஆ) 1500
இ) 1750
ஈ) 2000
Answer:
அ) 1000

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 5. ………….. என்ற சொல்லுக்கு ‘இனக்குழு தன் காலை பதித்த இடம் என்று பொருள்.
அ) மகாஸ்ரீனபதம்
ஆ) ஜனபதம்
இ) கிசாசம்சிக்கா
ஈ) குரு பாஞ்சாலம்
Answer:
ஆ) ஜனபதம்

Question 6.
தொடக்ககால நூல்களில் ………… மகாஜனபதங்கள் காணப்படுகின்றன.
அ) 10
ஆ) 13
இ) 16
ஈ) 17
Answer:
இ) 16

Question 7.
மிகவும் பிரபலமான விரிஜ்ஜி கண சங்கத்தின் தலை நகரம் …………………..
அ) மிதிலை
ஆ) வைசாலி
இ) ராஜகிருஹம்
ஈ) தட்சசீலம்
Answer:
ஆ) வைசாலி

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 8.
வேளாண் நிலத்தின் மீதான வரி ……………… எனப்பட்டது.
அ) சுரா
ஆ) சுல்கா
இ) பலி
ஈ) பாகா
Answer:
இ) பலி

Question 9.
செல்வமிக்க நில உரிமையாளர்கள் ………… என்றழைக்கப்பட்டனர்.
அ) தாசர்
ஆ) கிரகபதி
இ) கர்மகாரர்
ஈ) கிரிஷாகா
Answer:
ஆ) கிரகபதி

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 10.
விவசாயிகளும் கைவினைக் கலைஞர்களும், …………….. எனப்பட்டார்கள்.
அ) சூத்திரர்
ஆ) ஷத்திரியர்
இ) வணிகர்
ஈ) கர்மகாரர்
Answer:
அ) சூத்திரர்

Question 11.
பௌத்த ஆவணங்களின்படி ‘ஆசீவகம்’ என்ற பிரிவை தோற்றுவித்தவர் …………………….
அ) கிஸாசம்ஹிக்கா
ஆ) மக்காலி கோசம்
இ) கச்சாயனர்.
ஈ) நந்த வாச்சா
Answer:
ஈ) நந்த வாச்சா

Question 12.
கௌதமபுத்தரை சந்தித்த பேரரசர்.
அ) அசோகர்
ஆ) அஜாதா சத்ரு
இ) சந்திரகுப்தர்
ஈ)பிந்துசாரர்
Answer:
ஆ) அஜாதா சத்ரு

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 13.
இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப் பட்டதாக நம்பியவர்………………
அ) அஜிதன்
ஆ) சார்வாஹர்
இ) சோழர்கள்
ஈ) பல்லவர்கள்
Answer:
இ) சோழர்கள்

Question 14.
ஆசிவகர்கள் மீது வரி விதித்தவர்கள்.
அ) சேரர்கள்
ஆ) பாண்டியர்கள்
இ) சோழர்கள்
ஈ) பல்லவர்கள்
Answer:
இ) சோழர்கள்

Question 15.
சமண மதத்தை ஆதியில் தோற்றுவித்தவர் …..
அ) ரிஷபர்
ஆ) அஜிதானந்தர்
இ) அரிஷ்டநேமி
ஈ) மகாவீரர்
Answer:
அ) ரிஷபர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 16.
மகாவீரர் சமண மதத்தின் ……………… வது தீர்த்தங்கரர்.
அ) 21
ஆ) 22
இ) 23
ஈ) 24
Answer:
ஈ) 24

Question 17.
சமண மதத்தில் வென்னிற ஆடை உடுத்தியவர் …………………..
அ) திகம்பரர்கள்
ஆ) ஸ்வேதம்பரர்கள்
இ) ஆசிவகர்கள்
ஈ) ஹீனயானர்கள்
Answer:
ஆ) ஸ்வேதம்பரர்கள்

Question 18.
முதல் பௌத்த சங்கம் நடைபெற்ற இடம்
அ) காஷ்மீர்
ஆ) வைசாலி
இ) பாடலிபுத்திரம்
ஈ) ராஜகிருஹம்
Answer:
ஈ) ராஜகிருஹம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 19.
நான்காவது பௌத்த சங்கம் நடைபெற்ற இடம் ……………………
அ) காஷ்மீர்
ஆ) வைசாலி
இ) பாடலிபுத்திரம்
ஈ) ராஜகிருஹம்
Answer:
அ) காஷ்மீர்

Question 20.
நான்காவது பௌத்த சங்கம் …………… காலத்தில் நடந்தது.
அ) அசோகர்
ஆ) கனிஷ்கர்
இ) பிந்துசாரர்
ஈ) ஹர்சர்
Answer:
ஆ) கனிஷ்கர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 21.
நாளந்தா பல்கலைக் கழகத்திற்குத் தலைமை தாங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பௌத்த ஆசிரியர் ………….. அ) தம்மபாலர்
ஆ) சாமிபுத்தம்
இ) ராமாணந்தர்
ஈ) புத்தர்
Answer:
அ) தம்மபாலர்

Question 22.
பொ.ஆ. 470ல் வஜ்ரநந்தி என்பவரால் தமிழ்நாட்டில் திராவிட சமண சங்கம் நிறுவப்பட்ட இடம் …………………….
அ) திருச்சி
ஆ) திருநெல்வேலி
இ) மதுரை
ஈ) திருவண்ணாமலை
Answer:
இ) மதுரை

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

II. குறுகிய விடை தருக :

Question 1.
நமது ஆய்வுக்குச் சான்றாக உள்ள திரிபிடகங்களை எழுதுக.
Answer:
பாலி மொழியில் தொகுக்கப்பட்டது திரிபீடகம். அவை

  1. வினையபிடகம்,
  2. சுத்தபிடகம்,
  3.  அபிதம்ம பிடகம் என்பவையாகும்.

Question 2.
‘சார்வாகம்’ குறித்து அறிந்ததைக் கூறுக.
Answer:

  • இந்திய பொருள் முதல்வாதம் என்ற சிந்தனையாளர்கள் முதன்மையானவர் ‘சார்வாகம்’ ஆவார்.
  • இவர் ஒரு முறையான தத்துவ முறையை நிறுவினார்.
  • இவர் ஜயுறுவாதம் என்ற சிந்தனையை மேம்படுத்தினார். வேதங்களின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினார்.
  • அனுபவங்கள் வாயிலாகவே அறிவை பெறவும் முடியும் என நம்பினார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
மகாவீரருடைய போதனைகளின் மையக்கருத்து என்ன?
Answer:

  • மகாவீரரின் போதனைகளின் மையக் கருத்து அஹிம்சை ஆகும். சமணம் வலியுறுத்திய அளவிற்கு அஹிம்சையை வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை .
  • சமணம் கடவுளின் இருப்பை மறுத்ததோடு உருவ வழிபாட்டையும் எதிர்த்தது.
  • கடவுளை வழிபடுவதாலே, வேள்விகள் செய்வதாலோ முக்திபெற முடியாது என்றார் மகாவீரர்.
  • எளிமையான ஒழுக்கமிக்க வாழ்க்கையை மேற்கொள்வதன் மூலமாகவே, ஒருவர் துன்பங்களிலிருந்து தப்ப முடியும் என்றார்.

Question 4.
ஜனபதங்களுக்கும், மகாஜனபதங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கூறுக
Answer:

ஜனபதங்கள்

மகாஜனபதங்கள்

1. ஜன என்பது இனக்குழுக்கள் 1. மகாஜன என்பது பெரிய பிராந்திய அரசு
2. இனக்குழு தன் காலை பதித்த இடம் ஜனபதம் எனப்படும் 2. ஒன்றிற் மேற்பட்ட ஜனபதங்கள்

இணைக்கப்பட்ட பிரதேசமாகும்.

3. வரி அமைப்பு காணப்படவில்லை 3. வரி அமைப்பு காணப்படவில்லை
4. ஒரு நாட்டிற்கான அரசாங்கம் இறையாண்மை இங்கு காணப்படவில்லை 4. ஒரு நாட்டிற்கு தேவையான நிலம், மக்கள்,  அரசாங்கம், இறையாண்மை ஆகியவை

இங்கு காணப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 5.
தமிழ்நாட்டின் பௌத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.
Answer:

  • பல்லவ அரசன் 2ஆம் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் ஒரு சீன அரசரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பௌத்த கோயில் கட்டப்பட்டது.
  • சீனத்துறவி வு-கிங் இந்த பௌத்த மடத்துக்கு வருகை தந்தார்.
  • பொ.ஆ. 1006ல் முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு நாகப்பட்டினத்தில் பௌத்த கோயிலைக் கட்டினார்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
பதினாறு மகாஜன பதங்களை கூறுக.
Answer:
புராண, பௌத்த, சமண மரபுச் சான்றுகளின்படி 16 மகாஜனபதங்கள் பற்றி அறிய முடிகிறது.
அவையாவன:

  1. காந்தாரம்
  2. காம்போஜம்
  3. அசகம்
  4. வத்சம்
  5. அவந்தி
  6. சூரசேனம்
  7. சேதி
  8. மள்ளம்
  9. குரு
  10. பாஞ்சாலம்
  11. மத்ஸ்யம்
  12. வஜ்ஜி (விரஜ்ஜி)
  13. அங்கம்
  14. காசி
  15. கோசலம்
  16. மகதம்

Question 2.
புத்த சமண சமயத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை?
Answer:

  • இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள்.
  • கதைகள் போன்ற பௌத்த நூல்கள், சமணநூல்கள்.
  • அர்ரியன் போன்ற கிரேக்கர்களின் குறிப்புகள் ஆகியவை இக்காலத்துக்கான இலக்கியச் சான்றுகளாகும்.
  • தொல்லியல் சான்றுகளும் இவற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
மும்மணிகள் (திரிரத்தினங்கள்) என்றால் என்ன? அவைகள் யாவை?
Answer:
சமண மதத்தினர் அனைவரும் கடைபிடிக்க மூன்று கொள்கைகள்
(திரிரத்தினங்கள்) மும்மணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
அவையாவன:

  1. நன்னம்பிக்கை (சம்யோக் – தர்ஷனா)
  2. நல்லறிவு (சம்யோக் – ஞானா)
  3. நன்னடத்தை (சம்யோக் – மஹாவ்ரதா)

Question 4.
சமணத்துறவிகளுக்கான ஐமபெரும் சூளுரைகள் யாவை?
Answer:

  1. கொல்லாமை (அஹிம்சா)
  2. கள்ளாமை (அஸ்தேயா)
  3. பொய்யாமை (சத்யா )
  4. புலனடக்கம் (பிரும்மச்சரியா)
  5. பொருள் பற்றின்மை (அபரிக்ரஹா) ஆகியவை சமணத்துறவிகளின் ஐம்பெரும் சூளுரைகள் ஆகும்.

III. சுருக்கமான விடை தருக

Question 1.
காட்டைத் திருத்தியதில் இரும்பின் பங்களிப்பு குறித்து மதிப்பிடுக.
Answer:

  • ஆரியர்கள் ஏறத்தாழ பொ.ஆ.மு. 1000 வாக்கில் கிழக்கு நோக்கி இடம் பெயரத் தொடங்கினர்.
  • அவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்தபோது, அடர்ந்த காடுகளை எதிர் கொண்டனர்.
  • காடுகளைத் திருத்துவதில் இரும்பு முக்கிய பங்காற்றியது.
  • கங்கைச்சமவெளியின் வளம் செறிந்த மண்ணும் இரும்புக் கொழுமுனைகளின் பயன்பாடும் வேளாண் உற்பத்தியை மேம்படுத்தின.
  • பானை வணைதல், மர வேலைகள், உலோக வேலைகள் போன்ற கைவினைப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததிலும் இரும்பு முக்கிய பங்காற்றியுள்ளது.
  • கங்கை வட நீர்ப்பகுதியில் நிலப்பரப்பு வெகுவாக விரிவடைய இரும்பு கோடாரிகளம், இரும்பு கலப்பைகளுமே வழிவகுத்தன என்ற கருத்தை R.S. சர்மா முன்வைக்கிறார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 2.
கங்கைச் சமவெளியில் நிகழ்ந்த நகரங்களின் தோற்றத்துக்கான காரணங்கள் யாவை?
Answer:

  • ஆரியர்களின் வருகைக்குப்பிறகு கங்கைப் பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டது.
  • இரும்பு தொழில்நுட்ப பயன்பாட்டினால் வேளாண்மை பகுதி பெருகியது.
  • குடியிருப்புகள் உருவாயின.
  • கங்கைச்சமவெளி வளமானதால் வேளாண்மை செய்யவும், வணிகம் செய்யவும் ஏற்றபகுதியானது. அதனால் மக்கள் இங்கு அதிகம் குடியேற துவங்கினர்.
  • வேளாண் உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக் கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியன கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தன.
  • ஆதலால் கங்கைச் சமவெளி எளிதில் நகரமயமாக மாறியது.

Question 3.
இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுது
Answer:
வேளாண், உபரி , கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக்கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியவை கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்ற வழிவகுத்தது.
இது இந்திய வரலாற்றில் இரண்டாவது நகரமயமாக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.

கங்கைப் பகுதியில் உருவான நகரங்கள்:

  • ராஜகிருகம், சிராவஸ்தி, கௌசாம்பி, சம்பா போன்ற அரசியல் நிர்வாக மையங்கள்.
  • உஜ்ஜைனி, தட்சசீலம் போன்ற வணிக மையங்கள்
  • வைசாலி போன்ற புனித தலங்கள் உருவாயின.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 4.
பொ.ஆ.மு. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டைச்சேர்ந்த அவைதீகச் சிந்தனையாளர்களை அடையாளம் காண்க.
Answer:

  • பொ.ஆ.மு. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் சில அவைதீகச் சிந்தனையாளர்கள் கேள்விக்கு உட்படுத்தியதின் விளைவாக அறிவு மலர்ச்சி தோன்றியது.
  • இக்கால கட்டத்தில் தான் வைதீகக் கருத்துக்களைப் பற்றி கேள்வி எழுப்பிய சிந்தனையாளர்கள் தோன்றினர்.
  • அவை தீகச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர்கள்
    கோசலர்
    கௌதமபுத்தர்
    மகாவீரர் அஜித கேசகம்பளி ஆகியோர் ஆவார்.
  • இத்துறவிகளின் போதனைகள் புதிய ஆட்சி முறைகள் நகரமையங்களின் உருவாக்கம், கைத்தொழில்கள், தொலை தூர வணிகத்தின் வளர்ச்சி இவற்றால் விரைவில் மாறிக்கொண்டிருந்த சமூகத்தின் தேவைகளைப் பேசின.
  • இந்த அறிவு மலர்ச்சிவாதிகள் வேதக் கருத்துக்களான ஆன்மா , மனம், உடல் ஆகிறவற்றைக் கேள்விக்குள்ளாக்கினார்கள்.
  • அதன் வழியாக, புதிய மதங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தார்கள்.

Question 5.
தமிழ் நாட்டில் சமணம் செலுத்திய செல்வாக்கைக் குறிப்பிடுக.
Answer:

  • பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டிலிருந்து சமணம் தமிழ் நாட்டில் பரவியது.
  • மதுரை மற்றும் பிற இடங்களைச் சுற்றிலும் குன்றுகளில் சமணத்துறவிகள் தங்கியிருந்த கற்படுக்கைகளோடு கூடிய குகைகள் காணப்படுகின்றன.
  • தொடக்க காலத் தமிழ் இலக்கியத்தில் (நாலடியார், பழமொழி, சீவக சிந்தாமணி, யாப்பெருங்கல காரிகை, நீலகேசி) சமணத்தின் வலுவான தாக்கத்தை உணர முடிகிறது.
  • பொ.ஆ. 470ல் மதுரையில் வஜ்ரநந்தி என்பவரால் ஒரு திராவிட சமணச் சங்கம் நிறுவப்பட்டது.
  • சமணம் தமிழ் நாட்டில் பரவியதால், பல சமணக் கோயில்களும் கட்டப்பட்டன.
  • காஞ்சிபுரம் அருகே அழகான மேற்கூரை ஓவியங்களுடன் உள்ள திருப்பருத்திக்குன்றம் கோயில் சமணக் கோயில்களில் ஒன்றாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

கூடுதல் வினாக்கள்

Question 1.
மகாவீரரின் இளமைக்காலம் பற்றி கூறுக.
Answer:

  •  வர்த்தமான மஹாவீரர் சமணப்பரம்பரையில் 24வது தீர்த்தங்கரர்.
  • வைசாலிக்கு அருகாமையில் உள்ள குந்த கிராமத்தில் ஷத்ரிய வகுப்பைச் சேர்ந்த சித்தார்த்தருக்கும், திரிசலைக்கும் வர்த்தமானர் மகனாகப் பிறந்தார்.
  • தனது 30வது வயதில் துறவு பூண்ட வர்த்தமானர் 12 ஆண்டுகாலம் காடுகளில் சுற்றி அலைந்தார்
  • 42வது வயதில் ஞானத்தைப் பெற்றார்
  • அதன் பின் அவர் மகாவீரர் என்ற ஜீனர் என்றும் அழைக்கப்பட்டார்.
  • அவரது கருத்துக்கள் சமணம் என்று வழங்கப்பட்டது.

Question 2.
சமணம் ஒரு சமத்துவமான மதம் – தெளிவுபடுத்துக. (அல்லது)
சமண மதத்தின் மையக்கருத்துகள் யாவை?
Answer:

  • சமணம் ஒரு சமத்துவமான மதம்.
  • பிறப்பின் காரணமாக எந்த வித ஏற்றத்தாழ்வுகளையும் அனுமதிப்பதில்லை.
  • சமூகத்தில் ஒருவருடைய தகுதிநிலையை முடிவு செய்வது அவரது செயல்கள்தானே தவிர பிறப்பல்ல என கூறுகிறது.
  • ஒருவன் தன் செயலால் பிராமணனாக, சத்ரியனாக, வைசியனாக, சூத்திரனாக மாறுகிறான் என சமணம் நம்புகிறது.
  • பிறப்பின் காரணமாக பெருமை கொள்வது பாவம் எனக் கூறுகிறது.
  • பெண்களும் துறவிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் யாவை?
Answer:
இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம் :

  • அரச ஆதரவை சமணம் இழந்தது.
  • திகம்பரர், ஸ்வேதம்பரர் எனப் பிளவு ஏற்பட்டது.
  • ஒரு மத இயக்கமாகச் செயலாற்றும் துடிப்பைக் காலப்போக்கில் சமணம் இழந்தது.
  • குழு மன நிலை சமணத்தை பலவீனப்படுத்தியது.
  • சமண மத நடைமுறைகளின் கடுமையும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
  • ஒரு போட்டி மதப்பிரிவாக பௌத்தம் பரவி, சமணத்தை பின்னுக்கு தள்ளியது.

Question 4.
புத்தரின் நான்கு பெரும் உண்மைகள் யாவை?
Answer:

(i) துன்பம் பற்றிய உண்மை பிறப்பு, வயது, மரணம், விரும்பத்தக்கவை, பிரிவு, நிறைவேறாத விருப்பம் பற்றியது .
(ii) துன்பத்தின் காரணம் பற்றிய பெரும் உண்மை இன்பம், அதிகாரம், நீண்ட ஆயுள் போன்ற வற்றிற்கான ஆசையே துன்பத்திற்கான காரணம் ஆகும்.
(iii) துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை (நிர்வாணம்) துன்பத்திலிருந்து முழுமையான விடுதலை
(iv)துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழி பற்றிய பெரும் உண்மை எண் வழிப்பாதை (துக்க நிவாரண மார்க்கம்)

 

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

IV. விரிவான விடை தருக :

Question 1.
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவு மலர்ச்சிக்கான காரணங்கள் யாவை?
Answer:
அறிவுமலர்ச் சிக்கான காரணங்கள்:
பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டு, தீவிரமான அறிவு சார் கொந்தளிப்பின் காலமாகும்.
இவ்வெழுச்சிக்கான காரணங்கள்:
1. அரசு உருவாக்கமும், வேத மதத்தின் கடுமையும் சிந்தனை மற்றும் செயலுக்கான சுதந்திரத்தைக் காட்டுகிறது.
மத நடைமுறைகளுக்கு எதிரான கிளர்ச்சியாக அவைதீக மதங்கள் உருவாயின.
2. பிரதேச அடையாளங்களின் தோற்றம், சமூக பொருளாதார, அரசியல் மாற்றங்களை உந்தித் தள்ளியது.
அதிருப்தியுடன் இருந்த மேட்டுக்குடி மக்கள் மகதம் அல்லது மத்திய கங்கைச் சமவெளியில் வளர்ந்து வந்த அவைதீக மதங்களை நோக்கி நகர்ந்தார்கள்.
3. வேத மதம் முழுமையாக சமூகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியிருக்கவில்லை .
எனவே புதிதாக உருவாகி வந்த மதங்களை பின்பற்றுவது மக்களுக்கு கடினமானதாக இல்லை .
4. நகரமயமாக்கம், வணிக விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக வணிகர்கள், சேத்கள் (ளநவாள) போன்ற வங்கியாளர்கள் என புதியவர்க்கம் உருவானது.
இது தமது பொருளாதார தகுதி நிலைக்கு இணையான தகுதி நிலையைக் கோரியது.
5. ஆசிரமங்களாகப் பிரிக்கப்பட்ட வாழ்க்கைமுறை பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
அவ்வுரிமை தங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது சத்திரியர்களின் மனக்குறையை இருந்தது.
மேற்கூறிய காரணங்களால் பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டில் அறிவு மலர்ச்சி ஏற்பட்டது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 2.
ஆசீவகம் குறித்து விளக்கவும். மேலும் இந்தியாவில் அதன் பரவலையும்குறிப்பிடவும்.
Answer:
ஆசீவகம் :
அக்காலத்துறவிகள் குழுக்களாக செயல் பட்டனர். அவ்வாறான குழுக்கள் ஒன்றிலிருந்து ஆசீவகம் உருவானதாக நம்பப்படுகிறது. பௌத்த ஆவணங்களின்படி ஆசீவகம் என்ற பிரிவை தோற்றுவித்தவர் நந்த வாச்சா என்பவர். இவருக்கு அடுத்து கிஸா சம்கிக்கா, மக்காலி கோசலர் ஆகியோர் வழிநடத்தினர்.

கோசலர்-மகாவீரர் சந்திப்பு:
ஆசீவகர்களில் தலைசிறிந்தவர் மக்காலி கோசலர். மகாவீரரை நாளந்தாவில் சந்தித்தார். கோட்பாட்டு வேற்றுமை காரணமாக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்தனர்.

புத்துயிர்ப்பு கோட்பாடு:
கோசலர் சிராவஸ்திக்கு சென்று ஹலாஹலா என்ற குயவப் பெண்ணால் ஆதரிக்கப்பட்டார். இவர் புத்துயிர்ப்பு கோட்பாட்டை நம்பினார். ஆசீவக பிரிவின் தலைமையாக சிராவஸ்தி இருந்தது. ஊழ்வினைக் கோட்பாட்டை நம்பினார்கள். அடிப்படைக் கொள்கை நியதி அல்லது விதி என்பதாகும்.

தவிர்க்க முடியாத ஆறு அம்சங்கள்:
லாபம், நஷ்டம், இன்பம், துன்பம், வாழ்வு, மரணம் ஆகியன ஆகும்.
புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர்:
கோசலர் மறைவிற்குப் பிறகு புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர் என்ற இரு பரப்புரையாளர்கள் இதற்கு புத்துயிர்ப்பு கொடுத்தார்கள்.

புராணகஸ்ஸபரின் கருத்து:
செயல்களுக்கு நற்கூறுகள், தீய கூறுகள் என்பது கிடையாது. சித்திரவதை, காயம் இழைத்தல், கொலை ஆகியவற்றால் தீமையும் இல்லை. ஈகை, சுயக்கட்டுப்பாடு, உண்மையான பேச்சால் நன்மையும் இல்லை. ஏனென்றால் எல்லாமே முன்னரே முடிவு செய்தவை. எனவே, மனிதர்கள் எதையும் தமது செயல்களால் மாற்ற முடியாது என்கிறார்.
இருக்கும் ஒரே வழி செயலின்மைதான் என்பது அவரது கருத்து.

பகுதகச்சாயனாரின் கருத்து:
இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பினார்.

அஜித கேசகம்பளி:
ஒவ்வொரு மனிதனும் நெருப்பு, நீர், காற்று, உணர்வு ஆகிய நான்கு அடிப்படைப் பொருட்களால் உருவாக்கப்பட்டவன் என்று கருதினார்.
மரணத்திற்குப் பிறகு உடம்பு அழியும்போது புத்திசாலி, முட்டாள் எல்லோருமே முற்றிலுமாக அழிந்து போகிறார்கள். மரணத்திற்குப் பிறகு அவர்கள் வாழ்வதில்லை என்கிறார்.

குயவர்கள், வங்கியாளர்கள் போன்ற செல்வமிக்க துறவறம் பூணாத சீடர்கள் ஆசிவகத்திற்கு இருந்தார்கள். பௌத்தம், சமணம் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது ஆசீவகத்தின் செல்வாக்கு ‘ குறைவுதான் என்றாலும் நாடு – முழுவதும் பரவியிருந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.
Answer:
மகாவீரர் மறைவிற்குப்பின் 500 ஆண்டுகள் கழித்து சுமார் பொ.ஆ. 79-82ல் சமணத்தில் திகம்பரர்கள், ஸ்வேதாம்பரர்கள் என இரு பிரிவுகள் தோன்றின.

திகம்பரர்கள்:
மகதம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டபோது பத்ரபாஹீ தலைமையில் சில சமணத் துறவிகள், தமது கடும் விரதங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதற்காகத் தெற்கு நோக்கிச் சென்றார்கள். அவர்கள் திகம்பரர்கள் (வெளியை ஆடையாக அணிந்தவர் அல்லது நிர்வாணமானவர்) என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் உடைகள் ஏதுமின்றி இருந்தார்கள்)

ஸ்வேதாம்பரர்கள்:
ஸ்தூலபத்திரர் தலைமையில் மகதத்திலேயே இருந்தவர்கள் ஸ்வேதாம்பரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வெள்ளை ஆடையை உடுத்தினார்கள். இந்த பிரிவு மகதத்தில் சமணத்தைப் பலவீனப்படுத்தியது. பாடலிபுத்திர மாநாடு:
பத்ரபாகு மரணமடைந்த பிறகு ஸ்தூலபத்திரர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினர். 12 அங்கங்களைக் கொண்ட சமண நெறிமுறைகளை தொகுத்தது.

Question 4.
புத்தரின் எண் வழிப்பாதையை விவரி.
Answer:
உண்மையே தேடி அலைந்த சித்தார்த்தர்(புத்தர்) 35வது வயதில் பேரறிவு பெற்றார். அவரது போதனைகள் நான்கு பெரும் உண்மைகள் – எண் வழி மார்க்கம் என அழைக்கப்படுகிறது.
நான்கு பெரும் உண்மைகள்:

  1. துன்பம் பற்றிய பெரும் உண்மை
  2. துன்பத்தின் காரணம் பற்றிய பெரும் உண்மை
  3. துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை
  4. துன்பத்திலிருந்து விடுதலை பெறும் வழி பற்றிய பெரும் உண்மை (எண் வழிப்பாதை) ஆகியவையாகும்.

எண் வழிப்பாதைகள் :

  1. நன்னம்பிக்கை
  2. நல்லார்வம்
  3. நல்வாய்மை
  4. நற்செயல்
  5. நல் வாழ்க்கை முறை
  6. நன் முயற்சி
  7. நற்சிந்தனை

நல்ல தியானம் ஆகியவை எண்வழிப்பாதைகளாகும்.

  • புத்தர் கடவுள் பற்றி குறிப்பிடவோ, பேசவோ இல்லை .
  • கடவுளின் இருப்பை ஏற்கவும் இல்லை , மறுக்கவும் இல்லை .
  • பௌத்தம் சாதி முறையை ஏற்கவில்லை சமத்தவத்தை வலியுறுத்தியது.
  • அனைவரிடத்திலும் அன்பையும் அஹிம்சையையும் போதித்தது.
  • வணிகத்தையும், சிக்கனத்தையும் ஆதரித்தது.
  • ஆயுதங்கள், உயிருள்ள ஜீவன்கள், இறைச்சி, மது, விஷம் ஆகியவற்றை விற்பனை செய்வதை அனுமதிக்கவில்லை. நடை முறைக்கு சாத்தியமான ஒழுக்க நெறிகளை போதித்து சமத்துவ கோட்பாட்டிற்கு வித்திட்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 5.
இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை? இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள்:
Answer:
1. சமயப் பிரிவினை .
ஹீனயானா, மகாயானா, வஜ்ராயனா, தந்திராயனா, சகஜயானா ஆகிய பிரிவுகள் பௌத்தத்தின் உண்மைத் தன்மையை இழக்கச் செய்தன.
2. மொழி மாற்றம்.
பாலி, பிராஹிருதம் மொழியில் பரப்பப்பட்டு வந்த பௌத்தமதச் செய்திகள் கனிஷ்கரின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத மொழியில் எடுத்துச் செல்லப்பட்டன. இது பாமர மக்களுக்கும் பௌத்தத்திற்கும் இடையே இடைவெளி விழுந்தது.
3. அரச ஆதரவை இழத்தல்.
ஹர்ஷவர்த்தனரின் காலத்துக்குப்பிறகு பௌத்தம் அரச ஆதரவை இழந்தது. வேத மதம் அரச ஆதரவை பெற்றது. பௌத்த சமயம் வீழ்ச்சிக்கு இது வழி வகுத்தது.
4. வட இந்தியாவில் பக்தி இயக்கம்.
பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளான ராமானுஜர், ராமானந்தர் ஆகியோர் வேத மதத்தின் பெருமையை நிலை நாட்டினர். இதனால் பௌத்தமத வளர்ச்சி பாதித்தது.
5. ஹுணர்கள் படையெடுப்பு.
ஹுண ஆட்சியாளர்களான தோராமானர், மிகுரகுலர் ஆகியோர் பௌத்தர்களின் மீது வெறுப்புற்றனர். வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த பௌத்த மதத்தினரை அழித்தனர்.
6. இராஜபுத்திரர்களின் எதிர்ப்பு.
இராஜபுத்திர மன்னர்கள் வேத மதத்தின் தீவிர ஆதரவாளர்கள். ஆதலால் பௌத்த மதத்தினரை துன்புறுத்துவதிலும், கொல்வதிலும் ஈடுபட்டனர். இத்துடன் பௌத்த மதம் வீழ்ச்சியுற காரணமாயிற்று.
7. அயலவர் படையெடுப்பு.
இறுதியாக அராபியர்கள், துருக்கியரின் படையெடுப்புகள் பௌத்த துறவிகளை இந்தியாவை விட்டு வெளியேற்றி, நேபாளம், திபெத், இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்ல வைத்தனர்.
இதன் விளைவாக, பௌத்த மதம் இந்தியாவிலிருந்து மெல்ல மெல்ல மறைந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

கூடுதல் வினாக்கள்
Question 1.
பௌத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?
Answer:
புத்தரின் மரணத்திற்கு பிறகு, பௌத்தத்தின் விதிகளும் மற்ற விஷயங்களும் பௌத்த சங்கங்களில் முடிவு செய்யப்பட்டன. காலப்போக்கில் நான்கு பௌத்த சங்கங்கள் நடைபெற்றன.
1. முதல் பௌத்த சங்கம் :
தலைமை தாங்கியவர் உபாலி. இடம், ராஜ கிருகம். இந்த சங்கத்தில் உபாலி வினயபீடத்தையும், ஆனந்தர் சுத்த பீடத்தையும் வாசித்தார்.
2. இரண்டாம் பௌத்த சங்கம் :
புத்தரின் பரிநிர்வாணத்திற்கு 100 ஆண்டுகளுக்குப் பின் வைசாலியில் நடைபெற்றது. பௌத்த மதம் பெரியோரின் உபதேசங்களை நம்புவோர் என்றும் மகாசங்கிகா அல்லது பெருங்குழுவின் உறுப்பினர்கள் என்றும்இரண்டாக பிரிந்தது.
3. மூன்றாவது பௌத்த சங்கம்:
இதை அசோகர் பாடலிபுத்திரத்தில் கூட்டினார். இதற்குள்ள ஸ்தவிரவதின்கள் தன்மை வசமாக நிறுத்திக்கொண்டனர். எதிரான கருத்தக் கொண்டோரை மதத்திலிருந்து நீக்கினர். அபிதம்ம பிடகத்தில் கதவத்து என்ற கடைசிப்பகுதி சேர்க்கப்பட்டது.
4. நான்காவது பௌத்த சங்கம்:
மன்னர் கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்றது. சர்வஸ்திவாதிகள் என்போர் பௌத்தத்தின் முக்கியமான பிரிவினர். இப்பிரிவினர் கொள்கைகள் மஹாவி பாஷாவில்
தொகுக்கப்பட்டுள்ளன.

Question 2.
பௌத்த மத பிரிவிகளை பற்றி விளக்குக?
Answer:
ஸ்த விரவதின்கள், மகா சங்கிகா, சர்வஸ்திவாதிகள் ஆகியவை பௌத்தத்தின் முக்கியமான பிரிவுகளாக உருவாகின.
ஸ்தவிரவதின்கள், சர்வஸ்திவாதிகள் மத்தியில் புதிய கருத்துக்கள் உருவாகின. இது ஹீனயானம், மஹாயானம் என பௌத்தமாக இரண்டாக பிரிய வழி வகுத்தது.
மஹாயானம் :
இந்தியாவில் மஹாயானம் செல்வாக்குப் பெற்றது. பௌத்த கல்வியின் முக்கிய மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது. மஹாயானம் சீனா, ஜப்பானுக்கு பரவியது.
ஹீனயானம்:
இலங்கை, பர்மா, தாய்லாந்து முதலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது. இது வங்காளத்தைச் சேர்ந்த பால’ வம்ச அரசர்களால் ஆதரிக்கப்பட்டது.
வஜ்ராயனம்:
குப்தர்களின் ஆட்சியின் இறுதியில் வஜ்ராயனம் என்ற இடி, மின்னல் பாதை உருவானது. இது வங்கம், பீகார் பகுதிகளில் செல்வாக்குப்பெற்றது. 11ம் நூற்றாண்டில் திபெத்திற்கு பரவியது.
பீகாரின் விக்ரமசீலா பல்கலைக்கழகம் வஜ்ராயன. பௌத்தத்திற்கு முக்கியமான கல்வி நிலையமாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 3 பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

Question 3.
தமிழ் நாட்டில் பௌத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?
Answer:
பௌத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
தக்காணப் பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பௌத்தம் பரவியதை குறிப்பிடுகிறது.
காவிரிப்பட்டினத்தில் ஒரு பௌத்த வளாகம் இருந்ததை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.

வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமாவின் ‘தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு’ என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த வணிகள்கள் இருந்ததை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பௌத்தத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.

சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக்காப்பிய நூல்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பௌத்த இலக்கியமாகும். குண்டலகேசியும் பௌத்த இலக்கியமாகும்.
நாளந்தா பல்கலைக்கழக அறிஞர் தின்னகர் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் உள்ள அசோகரது ஸ்தூபிகளை பற்றி தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.

நாகப்பட்டிணத்தில் பல்லவ மன்னர் 2ஆம் நரசிம்ம வர்மன் காலத்தில் ஒரு பௌத்த கோயில் கட்டப்பட்டுள்ளது.)
பெ.மு. 1006ல் முதலாம் இராஜராஜரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற வர்மனால் சூளாமணி வர்ம விகாரம் எனப்படுகிற பௌத்த கோயிலைக் கட்டினார்.
இதன் மூலம் பௌத்த மதம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியலாம்.

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Business Maths Guide Pdf Chapter 4 Differential Equations Ex 4.2 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 4 Differential Equations Ex 4.2

Question 1.
Solve:
(i) \(\frac { dy }{dx}\) = aey
Solution:
\(\frac { dy }{dx}\) = aey
\(\frac { dy }{e^y}\) = adx ⇒ e-y dy = adx
Integrating on both sides
∫e-y dy = ∫adx
\(\frac { e^y }{(-1)}\) = ax + c
-e-y = ax + c ⇒ e-y + ax + c = 0

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.2

(ii) \(\frac { 1+x^2 }{1+y}\) = xy \(\frac { dy }{dx}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.2 1

Question 2.
y(1 – x) – x \(\frac { dy }{dx}\) = 0
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.2 2

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.2

Question 3.
(i) ydx – xdy = 0 dy
Solution:
ydx – xdy = 0
ydx = xdy
\(\frac { 1 }{x}\) dx = \(\frac { 1 }{y}\) dy
Integrating on both sides
∫\(\frac { 1 }{x}\)dx = ∫\(\frac { 1 }{y}\)dy
log x = log y + log c
log x = log cy
⇒ x = cy

(ii) \(\frac { dy }{dx}\) + ex + yex = 0
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.2 3

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.2

Question 4.
Solve : cosx (1 + cosy) dx – siny (1 + sinx) dy = 0
Solution:
cos x (1 + cos y) dx – sin y (1 + sin x) dy = 0
cos x (1 + cos y) dx = sin y (1 + sin x) dy
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.2 4

Question 5.
Solve: (1 – x) dy – (1 + y) dx = 0
Solution:
(1 – x) dy – (1 + y) dx = 0
(1 – x) dy = (1 + y) dx
\(\frac { dy }{(1+y)}\) = \(\frac { dx }{(1-x)}\)
Integrating on both sides
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.2 5

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.2

Question 6.
Solve:
(i) \(\frac { dy }{dx}\) = y sin 2x
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.2 6

(ii) log(\(\frac { dy }{dx}\)) = ax + by
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.2 7

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.2

Question 7.
Find the curve whose gradient at any point P (x, y) on it is \(\frac { x-a }{y-b}\) and which passes through the origin.
Solution:
The gradient of the curve at P (x, y)
\(\frac { dy }{dx}\) = \(\frac { x-a }{y-b}\)
(y – b) dy = (x – a) dx
Integrating on both sides
∫(y – b)dy = ∫(x – a)dx
⇒ \(\frac { (y-b)^2 }{2}\) = \(\frac { (x-a)^2 }{2}\) + c
(Multiply each term by 2)
∴ (y – b)² = (x – a)² + 2c ……… (1)
Since the curve passes through the origin (0, 0)
eqn (1) (0 – b)² = (0 – a)² + 2c
b² = a² + 2c
b² – a² = 2c ………. (2)
Substitute eqn (2) in eqn (1)
(y – b)² = (x – a)² + b² – a²

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.2

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

11th History Guide பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்.
அ) பிராமணங்கள்
ஆ) சங்கிதைகள்
இ) ஆரண்யகங்கள்
ஈ) உபநிடதங்கள்
Answer:
ஆ) சங்கிதைகள்

Question 2.
மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) குருபாஞ்சாலம்
ஆ) கங்கைச்சமவெளி
இ) சிந்துவெளி
ஈ) விதேகா
Answer:
அ) குருபாஞ்சாலம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
ஆதிச்சநல்லூர் ………………. மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அ) கோயம்புத்தூர்
ஆ) திருநெல்வேலி
இ) தூத்துக்குடி
ஈ) வேலூர்
Answer:
இ) தூத்துக்குடி

Question 4.
கீழ்க்காணும் இணைகளை கவனிக்கவும்.
(i) சேனானி – படைத்தளபதி
(ii) கிராமணி – கிராமத்தலைவர்
(iii) பலி – தன்னார்வத்தால் கொடுக்கப் பட்டது
(iv) புரோகிதர் – ஆளுநர்
மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
அ) (i)
ஆ) (ii)
இ) (iii)
ஈ) (iv)
Answer:
ஈ) (iv) புரோகிதர் – ஆளுநர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
கூற்று (கூ): முற்கால வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை
காரணம் (கா) :பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்
அ) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை,
இ) கூற்று சரியானது. காரணம் தவறானது.
ஈ) கூற்று , காரணம் இரண்டும் சரியானவை.
Answer:
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை,

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

கூடுதல் வினாக்கள்

Question 1.
சிந்து நாகரீகம் மறைந்த கால கட்டம் ……………………..
அ) பொ.ஆ.மு. 1500
ஆ) பொ .ஆ.மு. 1700
இ) பொ.ஆ.மு. 1900
ஈ) பொ.ஆ.மு. 2100
Answer:
இ) பொ.ஆ.மு. 1900

Question 2.
வேதங்களில் பழைமையானது ………….. வேதம்.
அ) ரிக்
ஆ)யஜூர்
இ) சாம
ஈ) அதர்வண
Answer:
அ) ரிக்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
இசைப்பாடல்களாக அமைந்த ……….. இந்திய
இசை மரபின் அடித்தளமாகக் கருதப்படுகிறது.
அ) ரிக் வேதம்
ஆ) யஜுர் வேதம்
இ) சாம வேதம்
ஈ) அதர்வண வேதம்
Answer:
இ) சாம வேதம்

Question 4.
வேளாண் நிலம் ……………… என்று அறியப்
பட்டிருந்தது.
அ) சீத்தா
ஆ) சுரா
இ) கருஷி
ஈ) ஷேத்ரா
Answer:
ஈ) ஷேத்ரா

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
‘சத்யமேவ ஜயதே’ என்ற சொற்றொடர் …………….. என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
அ) மஹாபாரதம்
ஆ) ஜென்ட் அவெஸ்தா
இ) முண்டக உபநஷத்
ஈ) ராமாயணா
Answer:
இ) முண்டக உபநஷத்

Question 6.
கீழ்க்காணும் இணைகளை கவனிக்கவும்.
(i) இந்திரன் – விடியலின் கடவுள்
(ii) சூரியன் – புரந்தரா
(iii) உஷா – இருளை அகற்றும் கடவுள்
(iv) மாருத் – வலிமையின் கடவுள்
மேற்கண்டவற்றில் எந்த இணை சரியானது?
அ) (i)
ஆ) (ii)
இ) (iii)
ஈ) (iv)
Answer:
(ஈ) (iv) மாருத் – வலிமையின் கடவுள்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 7.
கூற்று (கூ) :ரிக் வேத காலத்தில் பதினாறு – பதினேழு வயதில் திருமணம் நடைபெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
காரணம் (கா) :அப்போது குழந்தைகள் திருமணம் நடைபெற்றதாக தெரியவில்லை.
அ) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி. காரணம் தவறானது.
இ) கூற்று காரணம் இரண்டும் சரியானவை.
ஈ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
Answer:
அ) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 8.
ரிக் வேதம் மொத்தம் …………. காண்டங்களைக் கொண்டுள்ளது
அ) 5
ஆ) 7
இ) 10
ஈ) 13
Answer:
இ) 10

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 9.
அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான எ.ஜெ.ஸ்டுவர்ட், புகழ்பெற்ற மொழியில் அறிஞரான
…………………… ஆகிய இருவரும் ஆதிச்ச நல்லூர் சென்றனர்.
அ) ஆண்டிருஜாஹர்
ஆ) ஆர்.எஸ். சர்மா
இ) ராபர்ட் கால்டுவெல்
ஈ) ஜி.யு.போப்
Answer:
இ) ராபர்ட் கால்டுவெல்

Question 10.
ஆண்டிரு ஜாஹரால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடம்.
அ) சித்தன்னவாசல்
ஆ பையம்பள்ளி
இ கீழம்
ஈ) அதிச்சநல்லூர்
Answer:
ஈ) அதிச்சநல்லூர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

II. குறுகிய விடை தருக.

Question 1.
வேத கால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.
Answer:

  • வித் என்ற சொல்லிலிருந்து வேதம் என்ற சொல் பிறந்தது.
  • வேதங்கள் நான்கு – ரிக், யஜுர், சாம, அதர்வன. இதில் ரிக் வேதம் பழமையானது.
  • இது தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற சமய – இலக்கியங்களும் வேத கால இலக்கியங்கள் ஆகும்.

Question 2.
ஜென்ட் அவஸ்தாவைப் பற்றி எழுதுக.
Answer:

  • ஜென்ட் அவெஸ்தா எனப்படும் இப்பாரசீக – ஈரானிய நூல் ஜொராஸ்டிாய மதத்தைச் சேர்ந்த புனித நூலாகும்.
  • இந்தோ -ஈரானிய மொழிகளைப் பேசிவந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு, அவர்களின் கடவுள்கள் குறித்து இந்நூல் பல செய்திகளைக் கூறுகிறது.
  • இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன,
  • இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே அமைந்திருந்த ஆரியர்களின் தொடக்ககால வாழிடங்கள் பற்றி அறிந்துகொள்ள ஏதுவான துணைச்சான்றுகள் இந்நூல் கொண்டுள்ளது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
தொடக்க வேதகாலத்தில் பெண்களின் நிலையைக் கோடிட்டுக்காட்டுக.
Answer:

  • ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஆன்மீகம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
  • அபலா, விஸ்வவாரா, கோசா, லோபமுத்ரா -காத போன்ற பெண் கவிஞர்களும் ரிக் வேதகாலத்தில் வாழ்ந்தனர்.
  • சிறார் மணமோ , உடன்கட்டை ஏறும் சதி வழக்கமோ ரிக் வேதகாலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Question 4.
ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக.
Answer:

  • நிலம், நெருப்பு, காற்று, மழை, இடி மின்னல் போன்ற இயற்கை சக்திகளை ரிக் வேதகால மக்கள் வழிபட்டனர்.
  • பிருதிவி-பூமி, அக்னி-நெருப்பு, வாயு-காற்று, வருணன்-மழை, இந்திரன்-இடி மின்னல் ஆகிய கடவுளர்கள் ரிக் வேத காலத்தில் புகழ் பெற்றிருந்தனர்.
  • ஆதித்தி, உஷஸ் போன்ற பெண் கடவுளரும் இக்காலத்தில் வழிப்பட்டனர்.
  • ஆலயங்களோ, சிலை வழிபாடோ, முந்தைய வேதகாலத்தில் இல்லை. வழிபாட்டின் போது பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
இந்தியாவின் இரும்புக் காலம் குறித்து நீவீர் அறிந்ததென்ன?
Answer:

  • வட இந்தியாவின் இரும்புக் காலமானது ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டோடு ஒத்துப்போகிறது.
  • சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இக்காலக்கட்டத்தின் குடியிருப்புகள் அளவில் பெரியதானவை. அவை வட இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட பெருமளவிலான மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காட்டுகிறது.
  • தென் இந்தியாவில் இரும்புக்காலம் ஈமச் சின்னங்களுடன கூடிய பெருங்கற்காலப் – பண்டமாக உள்ளது.

கூடுதல் வினாக்கள்

Question 1.
ரிக் வேதம் குறிப்பு தருக.
Answer:

  • வேதங்களில் பழமையானது ரிக் வேதமாகும்.
  • இது மொத்தம் 10 காண்டங்களைக் கொண்டது,
  • அவற்றில் இரண்டிலிருந்து ஏழு வரையிலான காண்டங்கள் முதலில் எழுதப்பெற்றன.
  • 1, 8, 9, 10 ஆகிய காண்டங்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவை எனவும் கருதப்படுகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 2.
குறிப்பு தருக – கொடுமணல்.
Answer:

  • சங்க நூலான பதிற்றுப்பத்தில் சேர அரசனுக்குச் சொந்தமான கொடுமணம் என்ற ஊர் இங்கு கிடைக்கும் விலை மதிப்புமிக்க கற்களுக்காகப் புகழப்படுகிறது.
  • சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் கொடுமணம் தான் இன்றைய கொடுமணல் என சில தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
  • இங்கு ரோமானிய நாணயக் குவியல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • ஈமக் குழிகள், ஈமத் தாழிகள், கற்படுக்கைப் புதைப்பு எனப் பலவகைப்பட்ட புதைக்கும் முறைகள் கொடுமணலில் அகழ்ந்தெடுக்கப் பட்டன.

Question 3.
‘பத்து அரசர்களின் போர்’ பற்றி கூறுக.
Answer:

  • பரத குலமானது பத்து தலைவர்களால் எதிர்க்கப்பட்டது.
  • அவர்களுள் ஐவர் ஆரியர்களாவர். மற்றுமுள்ள ஐவர் ஆரியர் அல்லாதோர்.
  • இவர்களிடையே நடைபெற்ற போர் ‘பத்து அரசர்களின் போர்’ என அறியப்படுகிறது.
  • புருசினி ஆற்றங்கரையில் இப்போர் நடைபெற்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 4.
ரிக் வேதத்திலுள்ள ‘புருஷசுக்தம்’ கூறும் செய்திகள் யாவை?
Answer:
ரிக் வேதத்திலுள்ள புருஷசுக்தம்’ என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளவாறு பல வர்ணங்கள் தோன்றியுள்ளன.

  • புருஷ பலியிடப்பட்டபோது அவனுடைய வாயிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள்.
  • இரண்டு கைகளிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள்.
  • தொடைகளிலிருந்து தோன்றியவர்கள் வைசியர்கள்.
  • கால்களிலிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் என்று கூறுகிறது.

Question 5.
பிந்தைய வேதகால சடங்குகள் பற்றி எழுதுக.
Answer:

  •  சமுதாயத்தில் சடங்குகள் முக்கியமாயின.
  • சடங்குகளும், வேள்விகளும், பலியிடுதலும் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் என மக்கள் நம்பினர்.
  • சடங்குகள் மிகச் சரியாக நடத்தப்பட வேண்டுமென வற்புறுத்தப்பட்டது.
  • சடங்குகளை நடத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் முடியும் என்ற மனப்போக்கு , செல்வமிருந்தால் எதையும் சாதிக்கலாம் எனும் எண்ணத்தை உருவாக்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

III. சுருக்கமான விடை தருக

Question 1.
தென் இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடுகளைச் சுருக்கமாக விவரிக்கவும்.
Answer:

  • ஒரு முழுமை பெற்ற செம்புக் கற்காலப் பண்பாடு தென்னிந்தியப் பகுதிகளில் நிலவியதற்கான சான்றுகள் இல்லை.
  • சில இடங்களில் துளையிட்ட பாண்டங்களும், கெண்டி வடிவிலான பாண்டங்களும் கிடைத்துள்ளன.
  • இப்பகுதிகளில் கல்லினாலான கருவிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
  • வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் இக்கால மக்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளன.
  • சிறுதானியங்கள், பயிறு வகைகள். கொள்ளு போன்றவைச் சாகுபடி செய்தன.
  • இம்மக்கள் பழங்களையும், இலைகளையும், கிழங்குகளையும் சேகரித்து உண்டு வாழ்ந்தனர்.

Question 2.
தொடக்ககால வேதகாலத்தின் புவியியல் பரவல்களைப் பட்டியலிடுக.
Answer:
இந்தியத் துணைக் கண்டத்தில், தொடக்க வேதகால ஆரியர்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், மேற்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் வாழ்ந்தனர்.

Question 3.
ரிக் வேத கால சமூகப் பிரிவுகளைக் கோடிட்டு காட்டுக.
Answer:

  • வேதகால ஆரிய மக்கள் ஆரியர் அல்லாத ஏனைய மக்களிடமிருந்து நிறத்தையும், வகையையும் சுட்டிக்காட்டுவதற்காக ஆரியர்கள் ‘வர்ண’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர்.
  • ரிக் வேதம் ‘ஆரிய வர்ண’, ‘தச வர்ண’ என்று குறிப்பிடுகின்றது.
  • தாசர்களும், தசயுக்களும் அடிமைகளாகக் கருதப்பட்டு பிடிக்கப்பட்டனர்.
  • பிற்காலத்தில் இவர்கள் சூத்திரர் என்று அறியப்பட்டனர்.
  • சமூகத்தில் போர் புரிபவர்கள், மத குருமார்கள், சாதாரண மக்கள் என்னும் பிரிவுகள் தோன்றின.
  • ரிக் வேத காலத்தின் கடைப்பகுதியில் சூத்திரர் என்போர் தனிவகைப்பட்ட பிரிவாயினர். அடிமைகள் குருமார்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 4.
மேய்ச்சல் சமூகத்தின் இயல்புகளை ஆய்க.
Answer:

  • மேய்ச்சல் சமூகத்தினர் ஆரம்ப காலத்தில் நாடோடிகளாக இருந்து பிற்காலத்தில் நிலையான இடத்தில் வசித்தனர்.
  • வேளாண்மை செய்ய ஆரம்பித்தார்கள்.
  • கால்நடைகள் புனிதமாக கருதினர்.
  • பண்ட பரிமாற்றத்திலும், மறு விநியோகத்திலும் ஒரு பகுதியாக அது விளங்கியது.
  • கால்நடை மேய்ச்சல் வேளாண்மையின் துணைத் தொழிலானது.
  • கால்நடைகள் மற்றும் ஏனைய விலங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மேய்ச்சல் சமூகத்தின் சொத்துக்கள் மதிப்பிடப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 5.
தொடக்க வேதகால சமூகத்திற்கும் பின் வேதகால சமூகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் காட்டுக.
Answer:

தொடக்க வேதகால சமூகத்திற்கும் பின் வேதகால சமூகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடுகள்.
தொடக்க வேதகால சமூகம் பிந்தைய வேதகால சமூகம்
1. செம்புக்கால பண்பாடுகளின் கூறுகளோடு பொருந்துகிறது. இரும்புக்கால பண்பாடுகளின் கூறுகளோடு பொருந்துகிறது.
2. செம்புக்கால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டன. சாம்பல் நிற (ஓவியம் தீட்டப்பட்ட) மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.
3. சமூகம் சமத்துவம் தன்மை கொண்டதாகவே இருந்துள்ளது. பிற்காலத்தில் சமூக வேறுபாடுகள் தோன்றியுள்ளன.
4. பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை வகித்தனர். யாகங்களிலும், சடங்குகளிலும் கலந்து கொண்டனர். பிந்தைய வேதகாலத்தில் அவ்வுரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது.
5. கால்நடை வளர்ப்பு என்பது முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்தது கால்நடைகள் சொத்தாக கருதப்பட்டது. வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
6. இந்திரனே மிக முக்கிய கடவுளாவார் பிரஜாபதி முக்கியக் கடவுளானார். அக்னி, இந்திரன் ஆகிய கடவுள் செல்வாக்கை இழந்தனர்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
ஆதிச்சநல்லூரிலுள்ள புதை மேட்டிலிருந்து கிடைத்தவைகளை பட்டியலிடுக.
Answer:

  • அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் பல்வகைப்பட்ட தாழிகளும், மண்பாண்டங்களும்.
  • ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்புக் கருவிகள் (கத்தி, வாள், ஈட்டி, அம்பு), சில கல்மணிகள், ஒருசில தங்க நகைகள்.
  • வீட்டு விலங்குகளான எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, சேவல், காட்டு விலங்குகளான புலி, மிளா, யானை ஆகியவற்றின் வெண்கலப் பொம்மைகள்.
  • துணி, மரப் பொருள்கள் எச்சங்கள் ஆகியவைகள் ஆதிச்சநல்லூரில் உள்ள புதைமேட்டிலிருந்து கிடைத்தவைகளாகும்

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 2.
ரிக் வேதகால பெண்களின் நிலையை பற்றி கூறுக.
Answer:

  • பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தை வகித்தனர். என்ற போதிலும், அதைப் பொதுமைப்படுத்த முடியாது.
  • பெண்கள் கிராமக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். வேள்விகளில் பங்கெடுத்தனர்.
  • திருமணம் செய்துகொள்வது நடைமுறையில் இருந்தாலும் புராதன மணமுறைகளும் பின்பற்றப்பட்டன.
  • பலதார மணம் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. மறுமணமும் பழக்கத்தில் இருந்துள்ளது.
  • பதினாறு – பதினேழு வயதில் திருமணம் நடைபெற்றதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
  • வரலாற்று அறிஞர்கள் கருத்துப்படி அப்போது குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாகத்
    தெரியவில்லை .

Question 3.
ரிக் வேதகால சமூகத்தின் சிறப்பியல்புகள் யாவை?
Answer:

  • தொடக்க வேத காலத்தில் குலங்களும் இனக்குழுக்களும் சமூகத்தைக் கட்டமைத்தனர்.
  • வர்ணக் கோட்பாடும் ஆரியர்களின் அடையாளப் பெருமிதங்களும் இருந்தபோதிலும் பொதுவாகச் சமூகத்தில் பாகுபாடுகள் ஆழமாக வேரூன்றவில்லை.
  • கால்நடை மேய்ச்சல் வாழ்க்கைமுறை முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.
  • கால்நடைகளை மையப்படுத்திய மோதல்கள் அன்றாடம் நடந்தன.
  • கால்நடை வளர்ப்பு, மேய்ப்பு ஆகியவற்றிற்கு அடுத்த நிலையில் வேளாண்மை முக்கிய இடம் வகித்தது.
  • உலோகத்தினாலான பொருள்களும், மட்பாண்டங்களும், மரத்தினாலான பொருள்களும், துணிகளும், இன்னும் பல பொருள்களும் உற்பத்தி செய்யப்பட்டதைத் தொல்லியல் ஆய்வு உணர்த்துகின்றது. சமூகம் இனக்குழுக்களையும் மரபுவழி குடும்பங்களையும் கொண்டிருந்தன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 4.
பிந்தைய வேதகாலத்தில் உருவான வர்ண (ஜாதி) முறையை கூறுக.
Answer:

  • வர்ண முறையில் பளிச்செனப் புலப்படும் மாற்றங்கள் ஏற்பட்டன.
  • சமூகத்தில் மேல் மட்டத்தில் இரு பிரிவினரான பிராமண, சத்திரியர் ஆகியோரின் அதிகாரம் பெருகியது.
  • நால்வர்ண முறை ஆழமாக வேர் கொண்டு காலப்போக்கில் மேலும் இறுகியது.
  • பஞ்சவம்ச பிராமணத்தில் சத்திரியர்களே பிராமணர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என முதலிடத்தில் வைக்கப்பட்டனர்.
  • ஆனால் சதபத பிராமணம் சத்திரியர்களைவிடப் பிராமணர்களே உயர்ந்தவர்கள் எனக் கூறுகிறது.

Question 5.
பிந்தைய வேதகால பெண்கள் நிலையை கூறுக.
Answer:

  • சமூகம் பல்வேறு பிரிவுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கொண்டதாக மாறியதாலும், தந்தை வழிக் குடும்ப அமைப்புகள் முக்கியம் பெற்றிருந்தாலும் சமூகத்தில் பெண்களின் நிலை கீழிறக்கப்பட்டது.
  • தந்தை குடும்பத்தின் தலைவனாக இருந்தார். அடுத்த நிலையில் மூத்த மகன் முக்கியத்துவம் பெற்றிருந்தான்.
  • ரிக் வேத காலத்தில் பெண்கள் யாகங்களிலும், சடங்குகளிலும் கலந்து கொண்டனர்.
  • பின் வேதகாலத்தில் அவ்வுரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
  • பெண் குழந்தைகள் பிரச்சனைகளின் தோற்றுவாயாகக் கருதப்பட்டனர்.
  • பெண்கள் கால்நடைகள் வளர்ப்பது, பால்கறப்பது, தண்ணீர் இறைப்பது போன்ற பணிகளைச் செய்தனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 6.
பின் வேதகாலத்தில் தனிச்சிறப்பியல்புகள் யாவை?
Answer:

  • இனக்குழுக்களில் வம்சாவளித் தோன்றல்கள், கங்கைச் சமவெளியில் பல குறு அரசுகளின் ஆட்சி உருவாகியது.
  • வளர்ச்சிப் போக்கில் பொ.ஆ.மு. 600க்குப் பின்னர் அவை அரசுகளின் வளர்ந்ததே என்பது பின் வேதகாலத்தின் சிறப்பியல்புகளாகும்.
  • ஜனபதங்கள், ராஷ்டிரங்கள் எனும் பெயர்களில் நிலப்பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
  •  அரசர் அதிக அதிகாரங்களைப் பெற்றார்.
  • சமூகப் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆழமாக வேர்கொண்டன. வர்ண முறை வளர்ச்சியடைந்தது.

IV. விரிவான விடை தருக :

Question 1.
இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.
Answer:

பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகள்:
வட இந்தியாவில் செம்புகால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.

மட்பாண்டங்கள்:
பழுப்பு நிற மஞ்சள் நிற பண்பாடுகளில் ஜாடிகள் கொள்கலன்கள், தட்டுக்கள், அகலமான கிண்ணங்கள் ஆகிய வகைகள் உள்ளன.

காலம்:
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையாகும்.

செம்பு பொருட்குவியல் பண்பாடு:
ஆய்விடங்களில் செம்பினால் செய்யப்பட்ட உருவங்களும் ஏனைய பொருட்களும் அதிகம் கிடைப்பதால் இது செம்புப் பொருட்குவியல் பண்பாடு என்றும் அறியப்படுகிறது.

விளை பொருட்கள் :
நெல், பார்லி, பட்டாணி மற்றும் காய் வகைகள் விளைவிக்கப்பட்டன.

கால்நடை வளர்ப்பு:
எருது, பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை, நாய், பன்றி ஆகியவற்றை வளர்த்து வந்தனர்.

வீடு:
மரதட்டிகளின்மேல் களிமண் பூசிக் கட்டப்பட்ட சுவர், மேல் கூரை கொண்ட வீடுகளில் வசித்தனர். சுட்ட களிமண்ணில் அணிகலன்கள் மற்றும் சுடுமண் உருவங்களையும் செய்தனர். இப்பண்பாடு ஒரு கிராமிய பண்பாடு ஆகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 2.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய் விடங்களைப் பற்றி விவாதிக்க.
Answer:
ஆதிச்சநல்லூர், பையம்பள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.

ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டு ஆண்டிரு ஜாஹர் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டார்.
அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பாரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.

தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல மொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.

பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்காவைச் சேர்ந்த கிராமம் பையம்பள்ளி.
1906ல் நடத்திய அகழ்வாய்வில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு. 1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.

கொடுமணல் :
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் ஆற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980, 1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள், கருவிகள், அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.

சிப்பிகள், வளையல்கள், எச்சங்கள், சூளைச் சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைக்குழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாய்வில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 2 பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

Question 3.
வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒருகட்டுரை வரைக.
Answer:
அரசுமுறை:

  • வேதகால அரசு முறை என்பது இனக்குழு சமூகத்தின் அரசியலே ஆகும்.
  • இனக்குழுவின் தலைவரே அரசியல் தலைமையாக இருந்தார். அவர் ராஜன் (அரசன்) எனப்பட்டார்.
  • ராஜன் பல தூண்களைக் கொண்ட அரண்மனையில் வாழ்ந்தார். மதக்குருமார் களுக்கு கால்நடைகளையும், தேர்களையும், தங்க அணிகலன்களையும் பரிசாக வழங்கினார்.
  • ராஜன் ஒரு பாரம்பரியத் தலைவரானார்.
  • அரசருடைய முக்கிய பணி இனக்குழுக்களை காப்பதாகும். மக்களின் சொத்துக்களை பாதுகாத்தார்.
  • நிலப்பரப்பின் மீதும், மக்களின் மீதும் அதிகாரம் இருந்தது.
  • சாதாரண மக்களோடு நெருக்கமாய் இருந்தார். அவர்களோடு பொதுவில் உணவருந்தினார்.

நிர்வாகம்:

  • வேத காலத்தில் சபா, சமிதி, விததா, கணா என்ற அமைப்புகள் காணப்பட்டுள்ளன.
  • சபா என்பது மூத்தோர் அல்லது செல்வர்கள் பங்கேற்ற அமைப்பு.
  • சமிதி என்பது மக்கள் கூடும் இடமாகும். விததா என்பது இனக் குழுக்களின் அமைப்பாகும். ராணுவம் மற்றும் மதம் சார்ந்த பணிகளை இவை மேற்கொண்டன.
  • அரசர்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கு சபா, சமிதி ஆகிய அமைப்புகளின் ஆதரவை நாடினார்.
  • மதகுருக்கள் அரசருக்கு ஆலோசனை வழங்கி, ஊக்கப்படுத்தி, புகழ்ந்து தங்கள் செல்வாக்கைப் பெற்றனர்.
  • சேனானி என்பவர் படைத்தலைவர் ஆவார். பலி எனப்பட்ட வரிமுறை தானாகவோ அல்லது கட்டாயப்படுத்தி பெறப்பட்டது.
  • நிலப்பரப்பை கட்டுப்படுத்திய அதிகாரி விராஜபதி எனப்பட்டார். படைக்குழுக்களின் தலைவர் களான குலபா அல்லது கிராமணி என்பவர் களுக்கு இவர் உதவி செய்வார். கிராமங்களின் தலைவரும் கிராமணியே ஆவார்.

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Business Maths Guide Pdf Chapter 4 Differential Equations Ex 4.1 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 4 Differential Equations Ex 4.1

Question 1.
Find the order and degree of the following differential equations.
(i) \(\frac { dy }{dx}\) + 2y = x³
Solution:
Highest order derivative is \(\frac { dy }{dx}\)
∴ order = 1
Power of the highest order derivative \(\frac { dy }{dx}\) is 1
∴ degree = 1

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1

(ii) \(\frac { d^3y }{dx^3}\) + 3(\(\frac { dy }{dx}\))³+ 2\(\frac { dy }{dx}\) = 0
Solution:
Highest order derivative is \(\frac { d^3y }{dx^3}\)
∴ order = 3
Power of the highest order derivative \(\frac { d^3y }{dx^3}\) is 1
∴ degree = 1

(iii) \(\frac { d^2y }{dx^2}\) = \(\sqrt{y – \frac { dy }{dx}}\)
Solution:
[ \(\frac { d^2y }{dx^2}\) ]² = y – \(\frac { dy }{dx}\)
Highest order derivative is \(\frac { d^2y }{dx^2}\)
∴ order = 2
Power of the highest order derivative \(\frac { d^2y }{dx^2}\) is 2
∴ degree = 2

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1

(iv) \(\frac { d^3y }{dx^3}\) = 0
Solution:
Highest order derivative is \(\frac { d^3y }{dx^3}\)
∴ order = 3
Power of the highest order derivative \(\frac { d^3y }{dx^3}\) is 1
∴ degree = 1

(v) \(\frac { d^3y }{dx^3}\) + y + [ \(\frac { dy }{dx}\) – \(\frac { d^3y }{dx^3}\) ]3/2 = 0
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1 1
Highest order derivative is \(\frac { d^3y }{dx^3}\)
∴ order = 3
Power of the highest order derivative \(\frac { d^3y }{dx^3}\) is 3
∴ degree = 3

(vi) (2 – y”)2 = y”² + 2y’
Solution:
(2)² – 2(2) (y”) + (y”)² = (y”)² + 2y’
4 – 4y” = 2y’
Highest order derivative is y”
∴ order = 2
Power of the highest order derivative y” is 2
∴ degree = 2

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1

(vii) (\(\frac { dy }{dx}\))³ + y = x – \(\frac { dx }{dy}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1 2
Highest order derivative is \(\frac { dy }{dx}\)
∴ order = 1
Power of the highest order derivative \(\frac { dy }{dx}\) is 4
∴ degree = 4

Question 2.
Find the differential equation of the following
(i) y = cx + c – c³
(ii) y = c (x – c)²
(iii) xy = c²
(iv) x² + y² = a²
Solution:
(i) y = cx + c – c3 ……. (1)
Here c is a constant which has to be eliminated
Differentiating w.r.t x, \(\frac{d y}{d x}\) = c …… (2)
Using (2) in (1) we get,
\(y=\left(\frac{d y}{d x}\right) x+\frac{d y}{d x}-\left(\frac{d y}{d x}\right)^{3}\) which is the required differential equation.

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1

(ii) y = c (x – c)² ……… (1)
y = c (x² – 2cx + c²)
y = cx² – 2c²x + c³
Differentiating w.r. to x
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1 3
Substituting this value of c and (x – c) in (1), we get
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1 4

(iii) xy = c²
Differentiating w.r. to x
x(\(\frac { dy }{dx}\)) + y(1) = 0
∴ x(\(\frac { dy }{dx}\)) + y = 0

(iv) x² + y² = a²
Differentiating w.r. to x
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1 5

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1

Question 3.
Form the differential equation by eliminating α and ß from (x – α)² + (y – α)² = γ²
Solution:
(x – α)² + (y – α)² = γ² ……… (1)
where α and ß are parameters.
Since equation (1) contains two orbitary constants,
We differentiate it two times w.r.t. x
Differentiating (1) w.r.t. x, we get
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1 6
Substituting the value of (x – α) and (y – ß) in (5) we get
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1 7
This is the required differential equation.

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1

Question 4.
Find the differential equation of the family of all straight lines passing through the origin.
Solution:
The general equation for a family of lines passing through the origin is
y = mx ……. (1)
Differentiating w.r.t x,
\(\frac{d y}{d x}\) = m ……. (2)
Using (2) in (1)
y = (\(\frac{d y}{d x}\)) x is the required differential equation

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1

Question 5.
Form the differential equation that represents all parabolas each of which has a latus rectum 4a and whose axes are parallel to the x-axis.
Solution:
The equation of the family of the parabola is
(y – k)² = 4a (x – h) ……. (1)
where h and k are arbitrary constants,
[we have to differentiate the equation twice to eliminate h and k]
Differentiating equation (1) w.r.t. x
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1 8

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1

Question 6.
Find the differential equation of all circles passing through the origin and having their centers on the y axis, x² + (y – k)² = r²
Solution:
Equation of circle whose centre is (h, k)
(x – h)² + (y – k)² = r²
since the centre is on the y-axis (ie) (0, k) be the centre
(x – 0)² + (y – k)² = r²
x² + (y – k)² = r² ………. (1)
since the circle passing the origin (0, 0)
Eqn (1) becomes
0 + (0 – k)² = r²
k² = r² ⇒ r = k
Eqn (1) ⇒ x² + (y – k)² = k²
x² + y² – 2yk + k² = k²
x² + y² – 2yk = 0
x² + y² = 2yk ……….. (2)
Differentiating w.r.t. x
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1 9

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1

Question 7.
Find the differential equation of the family of parabola with foci at the origin and axis along the x axis, y² = 4a (x + a)
Solution:
Equation of parabola with foci at the origin and axis along the x-axis is
y² = 4a(x + a) ……… (1)
Differentiate w.r.t. x
2y \(\frac { dy }{dx}\) = 4a (1 + 0)
2y = \(\frac { dy }{dx}\) = 4a ⇒ a = \(\frac { y }{2}\), \(\frac { dy }{dx}\)
Substitute the value of a = \(\frac { y }{2}\) \(\frac { dy }{dx}\) in equ (1)
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1 10

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 4 Differential Equations Ex 4.1

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

11th History Guide பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
எழுத்துகள் அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் ……………………… எனப்படுகிறது.
அ) வரலாற்றுக்கு முந்தைய காலம்
ஆ) வரலாற்றுக் காலம்
இ) பழங்கற்காலம்
ஈ) புதிய கற்காலம்
Answer:
அ) வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
வரலாற்றின் பழமையான காலம் ……………….. ஆகும்.
அ) பழங்கற்காலம்
ஆ) புதிய கற்காலம்
இ) செம்புக்காலம்
ஈ) இரும்புக்காலம்.
Answer:
அ) பழங்கற்காலம்
Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 3.
பழங்கற்காலக் கருவிகள் முதன் முதலில் ………………. இல் அடையாளம் காணப்பட்டன.
அ) 1860
ஆ) 1863
இ) 1873
ஈ) 1883
Answer:
ஆ) 1863

Question 4.
மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் – 1, பாகோர் – 3, ஆகியவை …………………. நாகரிகம் நிலவிய இடங்கள்
அ) கீழ்ப்பழங்கற்காலம்
ஆ) இடைப்பழங்கற்காலம்
இ) மேல்பழங்கற்காலம்
ஈ) புதிய கற்காலம்
Answer:
இ) மேல்பழங்கற்காலம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 5.
மெஹர்கார் …………………… பண்பாட்டுடன் தொடர்புடையது.
அ) பழைய கற்காலப்
ஆ) புதிய கற்காலப்
இ) இடைக்கற்காலப்
ஈ) செம்புக்காலப்
Answer:
ஆ) புதிய கற்காலப்

Question 6.
…….. கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியா வுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.
அ) க்யூனிபார்ம்
ஆ) ஹைரோக்ளைபிக்ஸ்
இ) தேவநாகரி
ஈ) கரோஷ்டி
Answer:
அ) க்யூனிபார்ம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 7.
பர்சஹோம் …………………….. நிலவிய இடமாகும்
அ) காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு
ஆ) கங்கைச் சமவெளியின் புதிய கற்காலப் பண்பாடு
இ) கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப்பண்பாடு
ஈ) தென்னிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு
Answer:
அ) காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு

Question 8.
தொடக்கஹரப்பா காலகட்டம் என்பது …………………. ஆகும்.
அ) பொ .ஆ.மு.3000 – 2600
ஆ) பொ.ஆ.மு.2600-1900
இ) பொ .ஆ.மு.1900-1700
ஈ) பொ.ஆ.மு.1700-1500
Answer:
அ) பொ .ஆ.மு.3000 – 2600

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 9.
ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக …………………… இருந்தது.
அ) வேளாண்மை
ஆ மட்பாண்டம் செய்தல்
இ) கைவினைத்தொழில்கள்
ஈ) மீன்பிடித்தல்
Answer:
அ) வேளாண்மை

Question 10.
சிந்து நாகரிகம் ஏறத்தாழ ………………… இலிருந்து வீழ்ச்சி அடைந்தது.
அ) பொ .ஆ.மு. 1800
ஆ) பொ.ஆ.மு. 1900
இ) பொ .ஆ.மு.1950
ஈ) பொ .ஆ.மு. 1955
Answer:
ஆ) பொ.ஆ.மு. 1900

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

கூடுதல் வினாக்கள்

Question 1.
செம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் …………………….
அ) பழைய கற்காலம்
ஆ) புதிய கற்காலம்
இ) இரும்புக்காலம்
ஈ) இடைக்கற்காலம்
Answer:
இ) இரும்புக்காலம்

Question 2.
ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம் ……………………
அ) காலிபங்கன்
ஆ) லோத்தல்
இ) பனவாலி
ஈ) ரூபார்
Answer:
ஆ) லோத்தல்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 3.
ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரிகத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர்………………………
அ) சார்லஸ் மேசன்
ஆ) அலெக்ஸாண்டர்ப்ரன்ஸ்
இ) சர்ஜான் மார்ஷல்
ஈ) அலெக்சாண்டர் கன்னிங்காம்
Answer:
இ) சர்ஜான் மார்ஷல்

Question 4.
………………… எனப்படும் படிகக்கல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன் படுத்தினார்கள்.
அ) குவார்ட்சைட்
ஆ) கிரிஸ்டல்
இ) ரோரிசெர்ட்
ஈ) ஜாஸ்பர்
Answer:
இ) ரோரிசெர்ட்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 5.
மனித இனத்தின் மூதாதையர் முதலில் ………………….. தோன்றி பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றனர்.
அ) அமெரிக்காவில்
ஆ) ஆஸ்திரேலியா
இ) இந்தியாவில்
ஈ) ஆப்பிரிக்காவில்
Answer:
ஈ) ஆப்பிரிக்காவில்

Question 6.
ஹரப்பா பண்பாட்டில் ……….. இல்லை .
அ) மாடு
ஆ) நாய்
இ) குதிரை
ஈ) செம்மறி ஆடு
Answer:
இ) குதிரை

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 7.
ஹரப்பாமக்கள் ……………… அறிந்திருக்கவில்லை .
அ) செம்பை
ஆ இரும்பை
இ வெண்கலத்தை
ஈ) தங்கத்தை
Answer:
ஆ இரும்பை

Question 8.
ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத் தொடர் …………………. குறியீடுகளைக் கொண்டுள்ளது.
அ) 26
ஆ) 36
இ) 16
ஈ) 46
Answer:
அ) 26

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 9.
தற்கால மனிதனுக்கு நெருக்கமான தோற்றத்தைக் கொண்டிருந்த மனித மூதாதையர்……….. என்று அழைக்கப் படுகிறார்கள்.
அ) நர்மதை மனிதன்
ஆ) ஹோமினின்
இ ஹோமோ சேப்பியன்ஸ்
Answer:
ஆ) ஹோமினின்

Question 10.
ஹரப்பா நாகரிகம்………………. நாகரிகமாகும்.
அ) இரும்புக்கால
ஆ) பழங்கற்கால
இ) வெண்கலக்கால
ஈ) புதிய கற்கால
Answer:
இ) வெண்கலக்கால

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 11.
உணவு உற்பத்திக்கு வழிவகுத்த காலம்
அ) பழங்கற்காலம்
ஆ) வரலாற்றுக்கு முந்தைய காலம்
இ) புதிய கற்காலம்
ஈ) இடைக்கற்காலம்
Answer:
இ) புதிய கற்காலம்

II. குறுகிய விடை தருக.

Question 1.
வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?
Answer:

  • வரலாற்றின் முந்தைய காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை
  • தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைத்துள்ள நிலவியல் அடுக்குகள், கற்கருவிகள், மட்பாண்ட ஓடுகள், எலும்புக்கருவிகள், உலோகக் கருவிகள், பாறை ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் போன்றவைகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் ஆகும்.

Question 2.
பழங்கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
Answer:
வரலாற்றில் மிகவும் தொன்மையான காலம் பழங்கற்காலம் எனப்படுகிறது. இது மூன்றாகப்
பிரிக்கப்படுகிறது. அவையாவன

  1. கீழ்ப்பழங்கற்காலம்
  2. இடைப்பழங்கற்காலம்
  3. மேல் பழங்கற்காலம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 3.
ஹோமினின் குறித்து சிறு குறிப்பு வரைக.
Answer:

  • தற்கால மனிதனுக்கு நெருக்கமான தோற்றத்தைக் கொண்டிருந்த மனித மூதாதையர் ஹோமினின் என்று அழைக்கப்படுகிறார்கள.
  • இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஆப்பிரிக்காவில் அதிகமாகக் காணப்படுகின்றன.
  • இந்தியாவில் அவை அரிதாகவே உள்ளன.
  • அதிராம் பக்கத்தில் இராபர் ப்ரூஸ் ஃபூட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமினின் புதை படிவம் எங்கிருக்கிறது என்பதை அறியமுடியவில்லை .

Question 4.
இடைக்கற்காலப் பண்பாடு : குறிப்பு வரைக.
Answer:

  • இடைக்கால பண்பாட்டோடு தொடர்புடைய இடங்கள் இந்தியாவின் பெரும் பகுதிகளில் காணப்படுகிறது.
  • விலங்குகளை வேட்டையாடுதல், தாவர உணவுகளை சேகரித்தல், மீன் பிடித்தல் இவர்களின் முக்கிய தொழிலாக இருந்தன.
  • இக்கால மக்கள் நெருப்பைக் பயன்படுத்தினர். இறந்தோரைப்புதைத்தனர்.
  • உணவுக்காக விலங்குகளையும் தாவரங் களையும் தேடி இடம் பெயர்ந்து கொண்டே இருப்பது இடைக்கற்கால மக்களின் முக்கியமான பண்பாக இருந்தது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 5.
ஹரப்பா நாகரிகம் வெவ்வேறு கட்டங்களாக எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
Answer:
ஹரப்பா நாகரிகம் பல்வேறு கட்டங்களாக பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • தொடக்ககாலஹரப்பாபொ.ஆ.மு. 3000-2600
  • முதிர்ச்சி அடைந்த ஹரப்பா பொ.ஆ.மு. 2600 – 1900
  • பிற்காலஹரப்பாபொ.ஆ.மு. 1900-1700 ஒரு நகரப் பண்பாட்டிற்கான கூறுகள் முதிர்ச்சி பெற்றஹரப்பாவின் காலத்தில் இருந்தது.

Question 6.
பெருங்குளம் : சிறு குறிப்பு வரைக.
Answer:

  • மொக்ஞ்சாதாரோவின் சிறப்புக்குரிய பொது இடம் முற்றத்துடன் கூடிய பெரிய குளியல் குளமாகும்.
  • குளத்தில் நான்கு பக்கங்களிலும் நடை பாதை மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • உடைகள் மாற்றும் அறைகள், மற்றும் தண்ணீர் உள்ளே வர, கழிவுநீர் வெளியேற வடிகால் வசதி இருந்தது .
  • இக்குளம் சடங்குகளின்போது குளிப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கலாம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 7.
சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.
Answer:
சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு பொதுவாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

  • கால நிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தின் வீழ்ச்சி, தொடர் வறட்சியின் காரணங்களால் இந்நாகரிகம் வீழ்ச்சியுற்றது.
  • வெள்ளப்பெருக்கு, அவ்வப்போது ஏற்படும் நில நடுக்கம் போன்ற பேரிடர்களும் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.
  • ஆரியர்கள் போன்ற அயலவர்களின் படையெடுப்பும் சிந்து நாகரிக வீழ்ச்சிக்கு காரணமாயிருந்தது.
  • காலப்போக்கில் இம்மக்கள் சிந்து பகுதியிலிருந்து தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இடம்பெயர்ந்தார்கள்.
  • இதன் காரணங்களைக் சிந்து நாகரிகமும் வீழ்ச்சியுற்றது.

கூடுதல் வினாக்கள்

Question 1.
ஹோமா எரக்டஸ் : குறிப்பு வரைக.
Answer:

  • மனித இனத்தின் மூதாதையர் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
  • இவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டு வெளியே முதன் முதலாக இடம்பெயர்ந்த மனித இனம் ஹோமா எரக்டஸ் ஆகும்.
  • இவர்கள் ஹோமோ சேப்பியன்ஸை போல மேம்பட்ட மொழியைக் கொண்டிருக்கவில்லை.
  • சில ஒலிகள், மற்றும் சைகைகளைச் சார்ந்த மொழியை பயன்படுத்தி இருக்கலாம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 2.
நர்மதை மனிதன் குறிப்பு வரைக.
Answer:

  • இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹோமினின் புதை படிவம் மத்திய பிரதேசத்திலுள்ள ஹோசங்காபாத் அருகேயுள்ள ஹத்னோராவில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
  • அது ஒரு மண்டை ஓட்டின் மேல் பகுதி.
  • இதை நர்மதை மனிதன் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
  • ஆர்க்கைக் ஹோமோ சேப்பியன்ஸ் என்னும் மனித இனம் வாழ்ந்ததற்கான அடையாளமாக இது கருதப்படுகிறது.

Question 3.
இடை பழங்கற்காலம் நாகரிகம் பரவியிருந்த இடங்களை கூறுக.
Answer:
நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா , யமுனை உள்ளிட்ட ஆறுகளின் சமவெளிகளில் இடைபழங்கற்கால நாகரீகங்கள் பரவி இருந்தன.

Question 4.
ஹரப்பா மக்களின் கலைத்திறன் மற்றும் பொழுதுபோக்கு குறித்து குறிப்பு தருக.
Answer:
கலைத்திறன்:

  • ஹரப்பா நாகரிகப்பகுதிகளிலிருந்து கிடைக்கும் சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்களில் காணப்படும் ஓவியங்கள், வெண்கல உருவங்கள் ஆகியவை ஹரப்பா மக்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
  • ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த மதகுரு, செம்பாலான நடனமாடும் பெண், ஹரப்பா மொகஞ்சாதாரோ, டோலாவிரா ஆகிய இடங்களில் கிடைத்த கல் சிற்பங்கள் ஹரப்பாவின் கலைப்படைப்புகள் ஆகும்.

பொழுதுபோக்கு :
பொம்மை வண்டிகள், கிலுகிலுப்பைகள், சக்கரங்கள், பம்பரங்கள், சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்படும் காய்கள், கட்டங்கள் வரையப்பட்ட பலகைகள் ஆகியவை ஹரப்பா மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டுக்குச் சான்றாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

III. சுருக்கமான விடை தருக

Question 1.
அச்சூலியன் சோஹானியக் கருவித் தொழில்நுட்பம் குறித்து எழுதுக.
Answer:
பழங்கற்கால மக்களின் தொடக்ககால பண்பாடு அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளின் அடிப்படையில்
1. அச்சூலியன் மரபு
2. சோகனியன் மரபு
என இரு மரபுகளாக பிரிக்கப்படுகின்றது.
அச்சூலியன்மரபு:

  • கை கோடரி வகைக் கருவிகளைக் கொண்ட மரபு அச்சூலியன் மரபு.
  • தொடக்ககால, இடைக்கால, பிற்கால அச்சூலியன் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • பன்முகம் கொண்ட கோளவடிவம் கொண்ட பொருள்கள் கோடரி, வெட்டுக்கத்திகள், செதுக்கும் கருவிகள் ஆகியவை தொடக்க கால அச்சூலியன் மரபில் அடங்கும்.

சோகனியன் மரபு:

  • இன்றைய கூழாங்கல்லை செதுக்கி உருவாக்கப்படும் கருவிகளை கொண்ட சோகனியன் மரபு.
  • சோகனிய மரபு துண்டாக்கும் கருவிகளையும் அதைச்சார்ந்த வேலைகளுக்கான கருவி களையும் மட்டுமே கொண்டது.
  • இன்றைய பாகிஸ்தானில் உள்ள சோகன் ஆற்றின் வடி நீர்ப் பகுதியில் நிலவிய மரபு என்பதால் இது சோகனிய மரபு எனப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 2.
இந்தியாவின் இடைப்பழங்கற்காலத்தின் முக்கியக்கூறுகளை எழுதுக.
Answer:

  • இடைப்பழங்கற்கால மனிதர்கள் திறந்த வெளியிலும், குகைகளிலும், பாறைப்படுகைகளிலும் வசித்தார்கள்.
  • வேட்டையாடுபவர்களாகவும், உணவைச் சேகரிக்கப்படுபவர்களாகவும் இருந்தார்கள்.
  • சிறிய கருவிகளை பயன்படுத்தினர். கோடரியைப் பயன்படுத்தும் பழக்கம் குறைந்தது.
  • கற்கருவிகள் உற்பத்தியில் செர்ட், ஜாஸ்பர், கால்சிடெனி , குவார்ட்ஸ் ஆகிய கற்களை மூலப்பொருள்களாக பயன்படுத்தினர்.
  • மரக்கட்டை, விலங்குத்தோல், ஆகியவற்றை கையாள்வதற்கு துளையிடும் கருவி மற்றும் சுரண்டும் கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தினர்.

Question 3.
இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.
Answer:

  • இந்தியாவில் இடைக்கற்கால நாகரீகம் நிலவிய இடங்கள் இந்தியாவின் பெரும் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • கடற்கரைப்பகுதி, மணற்பாங்கான இடம், வடிநீர் பகுதி, வனப்பகுதி, ஏரிப்பகுதி, பாறை மறைவிடம், மலை மற்றும் மலை சார்ந்த பகுதி, கழிமுகப்பகுதி, என அனைத்து திணை சார் பகுதிகளிலும் இந்நாகரீகம்பரவியிருந்தது.
  • பீகாரில் பயிஸ்ரா, குஜாரத்தில் லங்னஜ், உத்திரபிரதேசத்தில் பாகர் 2, சோபனி மண்டோ , சாராய் நகர் ராஜ் மகாதகா, தம் தமா ஆந்திரத்தில் சன கன கல்லு, விசாகப்பட்டினம், கர்நாடகத்தில் கிப்பன ஹள்ளி ஆகிய இடங்கள் இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களாகும்.
  • ராஜஸ்தானில் உள்ள பாகோர், தில்வாரா, மும்பையின் கடற்கரைப்பகுதிகள்,
  • தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கிழக்குப்பகுதி தேரிக்குன்றுகள் (செம்மறைக்குன்றுகள்) பகுதிகளும் இடைக்கற்கால நாகரீகம் நிலவிய இடங்களாகும்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 4.
இடைக்கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத் தக்க பண்புகள் யாவை?
Answer:

  • இடைக்கற்கால மக்கள் ஓரளவு நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசித்தனர்.
  • குகைகளிலும், திறந்த வெளிகளிலும் வசித்தனர்.
  • இக்கால மக்கள், நெருப்பை பயன்படுத்தினர். இறந்தோரைப்புதைத்தார்கள்.
  • அவர்களுக்குக் கலைதிறன் இருந்ததை பிம்பிட்கா போன்ற இடங்களில் கிடைக்கும் சான்று களிலிருந்தும் அறியலாம்.
  • அவர்களின் நுண் கருவிகள் சிறிய விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாட உதவின.
  • மக்கள் பூக்களாலும் இலைகளாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள்.

Question 5.
சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடுக.
Answer:
சிந்து நாகரீகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக 1.5 மில்லியன்
ச.கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளன.
எல்லைகள்:

  • மேற்கில் பாகிஸ்தான் ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காஜென்டோர் குடியிருப்புகள்,
  • வடக்கில்ஷார்ட்டுகை (ஆப்கானிஸ்தான்)
  • கிழக்கில் ஆலம்புர்ஜிர் (உத்தரபிரதேசம்)
  • தெற்கில் தைமாபாத் (மஹாராஷ்டிரம்) என சிந்து நாகரீகப்பகுதிகளின் எல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 6.
ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத்தயாரிப்பு குறித்து எழுதுக.
Answer:

  • ஹரப்பா பொருளாதாரத்தில் கைவினைத் தயாரிப்பு ஒரு முக்கியமான பகுதியாகும்.
  • மணிகள் மற்றும் அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், உலோக வேலைகள் ஆகியவை கைவினைச் செயல்பாடுகளாக இருந்தன.
  • கார்னிலியன் (மணி) ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்) ஸ்டீட்டைட் நுரைக்கல் ஆகியவற்றிலும்,
  • செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும்
  • சங்கு , பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலன்களைச் செய்தார்கள்.
  • இவைகள் எண்ணற்ற வடிவமைப்பிலும் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டன.
  • இவை மெசபட்டோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

Question 7.
ஹரப்பா மக்களின் நம்பிக்கைகள்’ குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
Answer:

  • ஹரப்பா மக்கள் இயற்கையை வழிபட்டார்கள், அரச மரத்தை வழிப்பட்டிருக்கிறார்கள்.
  • அங்கு கிடைத்த சுடுமண் உருவங்கள் தாய் தெய்வத்தை போல் உள்ளன.
  • காலிபங்கனில் வேள்வி பீடங்கள் காணப் பட்டுள்ளன.
  • ஹரப்பா மக்கள் இறந்தோரைப் புதைத்தனர். புதைப்பதற்கான நடைமுறைகள் விரிவாக இருந்தன.
  • இறந்த உடல்களை எரித்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
  • ஹரப்பா புதை குழிகளில் மட்பாண்டங்கள், அணிகலன்கள், தாமிரக் கண்ணாடி, மணிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
  • இறப்பிற்கு பின்னரான வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

கூடுதல் வினாக்கள்

Question 1.
புதிய கற்கால புரட்சி – வரையறு:
Answer:
தொடக்க நிலைப் புதிய கற்காலப் பண்பாட்டு காலத்தில்

  • ஆறுகளின் மூலம் படியும் செழிப்பான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.
  • பழம் பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தியே மிக முக்கிய காரணமாகும்.
  • பெரிய கிராமங்கள் தோன்றின.
  • மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது.
  • நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன. எனவே பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமாக புதிய கற்காலப் புரட்சி எனப்படுகின்றன.

Question 2.
ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.
Answer:

  • ஹரப்பா மக்கள் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
  • கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள் வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டார்கள்.
  • வேளாண்மையில் கிடைத்த உபரி வருவாய் முக்கியமான பல செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கியது.
  • ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள். பாசனத்துக்கு கால்வாய் களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 3.
ஹரப்பா பண்பாட்டின் அரசியல் முறைகளை கூறுக.
Answer:

  • மட்பாண்டங்கள், முத்திரைகள், எடைக்கற்கள், செங்கற்கள், ஆகியவற்றில் காணப்படும் சீரான தன்மை அரசியல் முறை செயல்பட்டதை உணர்த்துகிறது.
  • அதிகாரம் படைத்த ஆட்சி அமைப்பில் ஹரப்பா மற்றும் மொஹஞ்சாதாரோ நகர அரசுகளுக்கான ஆட்சி அமைப்பின் கீழ் இயங்கி இருக்கலாம்.
  • பண்பாட்டுப் பொருள்களிலும் அளவீடுகளிலும் காணப்படும் சீரான தன்மை ஹரப்பா சமூகம் உறுதியான மைய நிர்வாகத்தின் கீழ் இயங்கி இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

IV. விரிவான விடை தருக :

Question 1.
வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.
Answer:

வரலாற்றின் முந்தைய காலத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை. இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைத்துள்ள கற்கருவிகள், மட்பாண்ட ஓடுகள் கலைப்பொருட்கள், உலோக கருவிகள் போன்ற தொல் பொருள் சான்றுகளின் அடிப்படையில் இக்கால வரலாற்றை அறிய முடிகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை வரலாற்றுக்கு முந்தைய காலத்தை
1. பழங்கற்காலம்
2. இடைக்கற்காலம்
3. புதியகற்காலம்
4. உலோகக்காலம்
என வகைப்படுத்தலாம்.
பழங்கற்காலம் :
இது
1. கீழ்ப்பழங்கற்காலம் (60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை)
2. இடைப்பழங்கற்காலம் பொ.ஆ.மு. 3,85,000 – 40,000)
3. மேல்பழங்கற்காலம் பொ.ஆ.மு. 40,000-10,000)

  • பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் பெரும்பொழுது நீர்நிலைகளுக்கு அருகாமையில் உள்ளன.
  • பழங்கற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடியும் உண்ணக்கூடிய தாவரங்கள் மற்றும் கிழங்குகளை சேகரித்தும் மக்கள் தங்களது உணவைத் தேடிக் கொண்டனர். இவர்களை உணவு சேகரிப்போர் என்றும்
    அழைக்கபடுகின்றனர்.
  • பழங்கற்கால மக்களின் மொழி மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து எதுவும் தெரியவில்லை .

இடைக்கற்காலம் :

  • இது பொ.ஆ.மு 10,000த்தில் தோன்றியது. பாறைக் குகைகளில் காணப்படும் ஓவியங்களி லிருந்து இடைக்கற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அறிய முடிகிறது.
  • உணவு சேகரிக்க, வேட்டையாட அதிகபட்சம் 5 செ.மீ நீளமுடைய நுண் கருவிகளை கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
  • வில் அம்பை வேட்டைக்குப் பயன்படுத்தினர், ஒரே இடத்தில் நீண்டகாலம் தங்கி வாழும் போக்கு வளரத் தொடங்கியது.
  • பயிரிடுதல், கால்நடை வளர்த்தல் போன்ற தொழில்கள் ஆரம்பித்தன.

புதிய கற்காலம் :

  • பொது ஆண்டுக்கு முன்பு 7000 – 5500 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும்.
  • வேளாண்மை, விலங்குகளை வளர்த்தல், கருவிகளை பளபளப்பாக்குதல் சக்கரத்தின் மூலம் மட்பாண்டம் செய்தல் போன்றவை இக்கால பண்பாட்டின் புதிய கூறுகளாகும்.
  • கிராம சமுதாயங்களை உருவாக்கினர். புல்லால் ஆன குடிசைகளுக்குப்பதில் களிமண் கற்களால் ஆன குடிசைகள் அமைக்கப்பட்டன.
  • இறந்தோரை புதைத்தனர். பருத்தி, கம்பளி ஆடைகளை அணிந்தனர்.
  • கோதுமை, பார்லி, நெல், தினை போன்றவை பயிரிடப்படுகின்றன.

உலோக காலம் :

  • இக்காலத்தில் செம்பும் வெண்கலமும் பயன்படுத்தப்பட்டது. உலோகத்தை உருக்கி வார்க்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தனர்.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செம்புக்கற்கால பண்பாடு வளர்ச்சி அடைந்தன. ஹரப்பா பண்பாடு செம்புகற்கால பண்பாட்டின் ஒரு பகுதியே.
  • தமிழ்நாட்டில் பையம்பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பாலான பொருள்கள், சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
  • தென்னிந்தியாவில் செம்பு காலமும் – இரும்பு காலமும் சமகாலம். கல்லறைக் குழிகளில் கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள், இரும்பு மண்வெட்டி, அரிவாள் சிறு ஆயுதங்கள் காணப்படுகின்றது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 2.
கீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக
Answer:

கீழ்ப் பழங்கற்காலம் இடைப்பழங்கற்காலம்
இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கி இருக்க வேண்டும் என மதிப்பிடப் பட்டுள்ளது. 3,85,000 – 40,000க்கு உட்பட்ட காலகட்டத்தில் நிலவியதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இக்காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஹோமோ ஏரக்டஸ் என்ற வகையினர் வாழ்ந்துள்ளனர் இக்காலக்கட்டத்துக்கும் ஹோமோ ஏரக்டஸ் வகையினர் வாழ்ந்துள்ளனர்.
மத்திய இந்தியா, இந்தியாவின் தென் கிழக்குப்பகுதி, சென்னைக்கு அருகிலும் அவர்கள் வாழ்ந்துள்ளன நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா , யமுனை உள்ளிட்ட ஆறுகளின் சமவெளிகளில் வாழ்ந்த இடங்கள் காணப்படுகின்றன.
வேட்டையாடியும், கிழங்கு கொட்டை, பழம் ஆகியவற்றை சேகரித்து வாழ்ந்தனர். வேட்டை ஆடுபவர்களாகவும் உணவை சேகரிப்பவர்களாகவும் வாழ்ந்தனர்.
திறந்த வெளியிலும் ஆற்றுச்சமவெளிகளிலும், குகைகளிலும் வசித்தனர். திறந்த வெளிகளிலும், குகைகளிலும், பாறை படுகைகளிலும் வசித்தனர்.
கற்களைச் செதுக்கி கோடாரி, சிறுகோடாரி செதுக்கிகருவி, பிளக்கும் கருவி, துண்டாக்கும் கருவிகளை உருவாக்கினர் இக்கருவிகள் சிறியதாயின. கற்கருவிகள் உற்பத்தியில் முலக்கல்லை தயார் செய்யும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினர்.

Question 3.
‘கருவித் தொழில் நுட்பத்தில், மேல் பழங்கற்காலம் புதுமையை நிகழ்த்தியது’ – தெளிவாக்குக.
Answer:

  • மனிதர்களின் அறிவாற்றல் திறன்களின் மேம்பட்டத்தன்மையை மேல் பழங்கற்கால மக்களிடம் காணமுடிகிறது.
  • கல்லில் வெட்டுக் கருவிகள் செய்யும் தொழிற் கூடங்கள் இக்காலகட்டத்தில் வளர்ச்சிபெற்றன.
  • கருவிகளுக்கான தொழில் நுட்பத்தில் புதுமையை புகுத்தினர்.
  • கற் கருவிகள், கத்தி, வாள்போல வெட்டுவாய் கொண்டவையாகவும் எலும்பால் ஆனவையாகவும் அமைந்திருந்தன.
  • மேல் பழங்கற்காலத்தில் சிறுகற்களில் செய்யப்பட்ட கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • இவற்றை உருவாக்க சிலிக்கான் செறிந்த மூலப்பொருட்கள் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 4.
தொடக்க புதிய கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகளை விளக்குக.
Answer:
புதியகற்கால தொடக்கம் :
1. வேளாண்மை, விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் ஆகியவற்றின் தொடக்கமாக புதிய கற்காலம் அமைந்தது.

பரவல்:
புதிய கற்கால பண்பாட்டின் பழைமையான சான்றுகள் எகிப்தின் செழுமை பிறப்பகுதி, மெசபடோமியா, சிந்து பகுதி, கங்கைப்பள்ளத்தாக்கு , சீனா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
காலம் : பொ.ஆ.மு. 10,000 – 5,000

வேளாண்மை :

  • தாவரங்களையும், விலங்குகளையும் பழக்கப்படுத்தியதின் மூலம் உணவு தானியங்கள் கால்நடைத் தீவனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியும் விநியோகமும் அளவில் அதிகரித்தன.
  • ஆறுகளின் மூலம் படியும் செம்பலான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.

புதியகற்கால புரட்சி :

  • பெரிய கிராமங்கள் தோன்றின. மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது. பழம்பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தி மிக முக்கியமான காரணமாகும். நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன.
  • எனவே இக்காலத்தின் பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமாக புதியகற்கால புரட்சி எனப்படுகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 5. ‘
காஷ்மீர் பகுதியின் புதிய கற்காலப் பண்பாடு ஹரப்பா நாகரிகத்தின் காலத்தைச் சேர்ந்தது’ . கூற்றை நிறுவுக.
Answer:

  • காஷ்மீர் பகுதியில் நிலவிய புதிய கற்காலப் பண்பாடும் ஹரப்பா நாகரீகமும் ஒரே சம காலத்தவையாகும்.
  • இக்காலக்கட்டத்தைச் சேர்ந்த முக்கியமான ஆய்விடமான பர்சாஹோம் சான்றாக உள்ளது.
  • முட்டை வடிவமுள்ள குழி வீடுகளில் வசித்தனர். புதிய கற்காலத்தில் காஷ்மீரில் வளர்ப்பு விலங்குகளாகச் செம்மறியும் வெள்ளாடும் இருந்தன.
  • பர்ஷாஹோமைச் சேர்ந்த புதிய கற்கால மக்கள் ஹரப்பா மக்களோடு வணிகத்தில் ஈடுபட்டனர்.
  • கோதுமை, பார்லி, பட்டாணி, பருப்பு ஆகியவற்றுக்கான விதைகள் அகழ்வாய்வு களின்போது கண்டெடுக்கப்பட்டன.
  • பருப்பு வகை பயன்பாடு அவர்களுக்கு மத்திய ஆசியாவுடன் இருந்த தொடர்பை கூறுகிறது. ஹரப்பா நாகரிகத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கருத முடிகிறது.

Question 6.
தென்னிந்தியாவில் புதிய கற்காலப் பண்பாடு எங்கு நிலவியது? அதன் முக்கியமான கூறுகளைக் குறிப்பிடுக.
Answer:
தென்னிந்தியாவில் புதிய கற்காலம் :
பரவியுள்ள இடங்கள் :

  • ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாட்டின் வடமேற்குப்பகுதிகளில் புதிய கற்கால பண்பாடு நிலவியதாக கண்டறியப்படுகிறது…
  • கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, துங்கபத்திரை, காவிரி சமவெளிகளிலும், கர்நாடகாவில் உள்ள சங்கனகல்லு , தெக்கலகோடா, பிரம்மகிரி, மஸ்கி, பிக்லிகல், வட்கல், ஹெமிங்கே, கல்லூர் ஆகிய இடங்களில் புதிய கற்காலப் பண்பாடு நிலவியுள்ளது.

முக்கிய கூறுகள் :

  • சில தொடக்கக்காலப் புதிய கற்கால ஆய்விடங்கள் சாம்பல் மேடுகளைக் கொண்டுள்ளன.
  • புதிய கற்கால வளாகத்தின் ஒரு பகுதியாக 200க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள உட்னுர், பல்வோய், கர்நாடகத்தில் உள்ள கொடெக்கல், குப்கல், படிகல் ஆகியவை இத்தகைய சாம்பல் மேடுகளைக் கொண்டுள்ளன.
  • மெல்லிய சாம்பலும், நுண்ணுயிர்களால் சிதைக்கப்பட்ட மாட்டுச்சாண அடுக்குகளும் இப்பகுதிகளில் காணப்படுகின்றன.
  • சாம்பல் மேட்டைச் சுற்றிலும் வீடுகளும், புதைகுழிகளும் மனித வாழிடங்களுக்கான சான்றுகளாக உள்ளன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 7.
சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?
Answer:

  • இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும், பாகிஸ்தானிலும் பொ. ஆ.மு. 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமாக சிந்து நாகரிகம் எனப்படும்.
  • இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால் அது ஹரப்பா நாகரீகம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஹரப்பா நாகரிகம் பல்வேறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொடக்க கால ஹரப்பா, முதிர்ச்சி அடைந்த ஹரப்பா, பிற்கால ஹரப்பா என மூன்று கட்டங்களாகப்பிரிக்கப்படுகிது.
  • ஒரு நகரப் பண்பாட்டிற்கான கூறுகள் முதிர்ச்சி பெற்ற ஹரப்பாவின் காலத்தில் இருந்தது.
  • சிந்து சமவெளியை சுற்றிலும் அகழ்வாய்வு செய்து பல இடங்களில் நாகரீக அடையாளம் கிடைத்தாலும் முதன் முதலில் ஹரப்பா என்ற இடத்தில் இந்நாகரிக அடையாளம் கிடைத்ததால் இது ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது.

Question 8.
திட்டமிடப்பட்ட நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ பற்றி எழுதுக.
Answer:
ஹரப்பா :

  • அரண்களால் பாதுகாக்கப்படும் தன்மை, நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர் வசதி ஆகியவை ஹரப்பா நகரங்களில் குறிப்பிடத்தகுந்த கூறுகள்.
  • ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்குச் சுட்ட, சுடாத செங்கற்களையும், கற்களையும் வீடு கட்ட பயன்படுத்தினர்.
  • நகரங்கள் சட்டக வடிவமைப்பைக் கொண்டிருந்தன. கழிவுநீர் வடிகால்கள் திட்ட வட்டமான ஒழுங்குடன் கட்டப்பட்டன.
  • வீடுகள் சேற்று மண்ணாலான செங்கற்களாலும் – கழிவுநீர் வடிகால்கள் சுட்ட செங்கற்களாலும் கட்டப் பட்டன.
  • வீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டிருந்தன.

மொகஞ்சதாரோ :

  • மொகஞ்சதாரோ ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம். அது கோட்டைப் பகுதியாகவும், தாழ்வான நகரமாகவும் ஒரு வேறு பட்ட பகுதிகளைக் கொண்டிருந்தது.
  • வீடுகளில் சுட்ட செங்கற்களால் தளம் அமைக்கப்பட்ட குளியலறையும் சரியான கழிவுநீர் வடிகாலும் இருந்தன.
  • மேல்தளம் இருந்ததை உணர்த்தும் வகையில் சில வீடுகள் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளன.
  • வீடுகளில் பல அறைகள் இருந்தன. பல வீடுகளில் சுற்றிலும் அறைகளுடன் கூடிய முற்றம் அமைந்திருந்தது.
  • மொஹஞ்சதாரோவில் உள்ள ஒரு கட்டிடம் சேமிப்பு கிடங்காக அடையாளம் காணப்படுகிறது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 9.
சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறு குறிப்பு வரைக.
Answer:
(அ) மட்பாண்டம் செய்தல்
(ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
(இ) எடைக்கற்களும் அளவீடுகளும்
(ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்
(அ) மட்பாண்டம் செயதல்

  • ஹரப்பா மக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பலவகைப்பட்ட சுட்ட மண்பாண்டங்களைப் பயன்படுத்தினர்.
  • மட்பாண்டங்கள் அடர் சிவப்பும் கறுப்பும் கலந்த வண்ணம் பூசப்பட்டிருந்தன.
  • அகன்ற பாத்திரத்தை வைப்பதற்கேற்ற தாங்கி, நீரைச் சேர்த்து வைக்கும் கலர், துளைகளுடன் கூடிய கலன் கையில் ஏந்துவதற்கு ஏற்ப குறுகிய பிடியுடன் உள்ள கோப்பை.
  • நுனி சிறுத்தும் தாங்கும் பகுதி நன்கு அகன்றும் உள்ள கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் போன்ற பல வகைகளில் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன.
  • அவற்றில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் இவைகள், மீன் செதில்கள், ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் வட்டங்கள், கோணல் மாணலான கோடுகள் பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பதிவுசெய்யப்பட்டுள்ளன.
  • ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் நன்கு சுடப்பட்டதாகவும், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கின்றன.

(ஆ) வணிகமும் பரிவர்த்தனையும் :

  • ஹரப்பாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வணிகமும் பரிவர்த்தனையும் முக்கிய பங்கு வகித்தன.
  • ஹரப்பா மக்களுக்கு மெசபடோமியாவுடன் நெருக்கமான வணிகத் தொடர்பு இருந்தது. அவர்கள் இந்தியாவில் பிற பண்பாடுகளைச் சேர்ந்த மக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
  • சுமேரிய நாகரிகம் நிலவிய ஓமன் பஹ்ரைன், ஈராக், ஈரான் ஆகிய இடங்களில் ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகளும் பொருள்களும் கிடைத்துள்ளன.
  • க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக்
  • ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி ஓமனிலும், ஹரப்பாவை சேர்ந்த முத்திரைகள், எடைக்கற்கள், தாயக்கட்டைகள், மணிகள் மெசபடோமியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • கார்னிலியன், வைடூரியம், செம்பு, தங்கம், பலவகைப்பட்ட மரங்கள் ஆகியவை ஹரப்பாவிலிருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி ஆயின.
  • ஹரப்பா மக்கள் இந்தியாவின் வேறு பகுதிகளோடு தொடர்பு கொண்டு, மூலப்பொருள்களைப் பெற்று, அவற்றை மேலும் சில செய்முறைகளுக்கு உட்படுத்தி உற்பத்தியில் ஈடுபட்டார்கள்.
    ஹரப்பா நாகரிகப்பகுதிகளில் கிடைக்கும் நிக்கல் பொருள்களும் மெசபடோமியாவுடன் இருந்த தொடர்புக்கு ஒரு சான்றாகும்.

(இ) எடைக்கற்களும் அளவீடுகளும் :

  • வணிக பரிவர்த்தனைக்காக ஹரப்பாவில் சரியான எடைக்கற்களும் அள வீடுகளும் பயன்படுத்தப்பட்டன.
  • ஹரப்பா நாகரிகப்பகுதிகளிலிருந்து படிகக் கல்லாலான, கன சதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன.
  • எடையின் விகிதம் இருமடங்காகும் படி 1:2:4:8 16:32 எனபின்பற்றப்பட்டுள்ளது.
  • இம்முறை அணிகலன்களையும் உலோகங்களையும் எடைபோட பயன்பட்டிருக்கலாம்.
  • சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் ஒரு இஞ்ச் = 1.75 செ.மீ ஆகக் கொள்ளும் விதத்தில் அளவு கோலையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

(ஈ) முத்திரைகளும் எழுத்து முறையும் :

(அ) முத்திரைகள் :

  • ஸ்டீட்டைட், செம்பு, சுடுமண் , தந்தம் போன்றவற்றாலான முத்திரைகள் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • போக்குவரத்துக்கு உட்படும் பொருள்கள் மீது குறியீட்டு அடையாளப்படுத்துவதற்காக முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம்.
  • பொருள்களின் உரிமையாளரைக் குறிப்பதற்கு அவை பயன்பட்டிருக்கலாம்.

(ஆ) எழுத்துமுறை :

  • ஹரப்பா எழுத்துமுறையை இன்று வரைக்கும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
  • 5000த்துக்கும் மேற்பட்ட எழுத்துத் தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
  • ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்துத் தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது. அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 1.
சிந்து நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒப்பிடுக :
Answer:

  • இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முதல் நகர மயமாக்கத்தின் வெளிப்பாடு சிந்து நாகரிகமாகும்.
  • சிந்து நாகரிகம் வடமேற்கு இந்தியாவில் ஒரு முக்கியமான பண்பாட்டு முறைமையாக இருந்தபோது, ஏராளமான பண்பாடுகள் இந்தியாவின் வேறு, வேறு பகுதியில் இருந்தன.
  • சிந்து எழுத்துக்களின் பொருளை இன்னும் கண்டறிய முடியவில்லை .
  • தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள பெருங்கால தாழிகளில் மெல்லிய கீரல்களாக எழுதப்பட்டுள்ள வாசகங்களும் சில இடங்களின் பெயர்களும் சிந்து நாகரிகத்திற்கு தமிழ் பண்பாட்டுக்கும் இடையேயான உறவை நிறுவுவதற்கான சான்றுகளாக முன் வைக்கப்படுகின்றன.
  • தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவிலும் இடைக்காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து வந்ததற்குப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன.
  • இவர்களில் சில சமூகங்கள் சிந்து பகுதியிலிருந்து இடம் பெயர்ந்திருக்கலாம்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 1 பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை

Question 2.
இந்தியா ஹரப்பா நாகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவையாக இருந்தது ஆராய்க.
Answer:

  • மேய்ச்சல் சமூக மக்கள், வேளாண்மை செய்வோம், வேட்டையாடிகள் – உணவு சேகரிப்பவர்கள், வணிகர்கள் போன்ற பல குழுக்கள் சிந்து பகுதியில் வசித்தனர்.
  • இத்தகைய மக்கள் இக்கால கட்டத்தில் கன்னியாகுமரியிலிருந்து – காஷ்மீர் வரையிலும், குஜராத்திலிருந்து அருணாசல பிரதேசம் வரையிலும் பரவி இருக்கலாம்.
  • இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்து நாகரிகமும் செழிப்புற்றிருந்த போது, பிற பகுதிகளில் பல்வேறு பண்பாடுகள் வளர்ந்து கொண்டிருந்தன.
  • இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியிலும் (கேரளா) இலங்கையிலும் வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்ந்தனர்.
  • படகு போக்குவரத்து குறித்த அறிவுடன் இருந்த ஹரப்பா மக்கள் தென்னிந்தியாவுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கு தெளிவான தொல்லியல் சான்றுகள் கிடைக்கவில்லை.
  • தென்னிந்தியாவின் வடபகுதி குறிப்பாக கர்நாடாக, ஆந்திரபிரதேசம் ஆகியவை புதிய கற்கால பண்பாடுகளுடன் மேய்ச்சல் மற்றும் கலப்பைச் சார்ந்த வேளாண்மையிலும் ஈடுபட்டு வந்தன.
  • புதிய கற்காலப் பண்பாடு காஷ்மீர் – கங்கைச்சமவெளி ஆகிய வட இந்தியப் பகுதியிலும், மத்திய இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் பரவி இருந்த போது தக்காணத்திலும் மேற்கு இந்தியாவிலும் செம்பு கால பண்பாடு நிலவியது.
  • இவ்வாறு இந்தியா ஹரப்பா நாகரீக காலத்தில் பல்வேறு பண்பாடுகளில் கலவை நிலப்பகுதியாக விளங்கியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

12th History Guide நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றில் எது சுதந்திரமான வர்த்தக நகரம் இல்லை ?
அ) நூரெம்பெர்க்
ஆ) ஆன்ட்வெர்ப்
இ) ஜெனோவா
ஈ) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
Answer:
ஈ) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்

Question 2.
கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது?
அ) மறுமலர்ச்சி
ஆ) சமயச் சீர்திருத்தம்
இ) புவியியல் கண்டுபிடிப்பு
ஈ) வர்த்தகப் புரட்சி
Answer:
அ) மறுமலர்ச்சி

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
கீழ்க்கண்ட போப்பாண்டவர்களில் இத்தாலிய மறுமலர்ச்சிக்கு ஆதரவாகச் செயல்படாதவர் யார்?
அ) ஐந்தாம் நிக்கோலஸ்
ஆ) இரண்டாம் ஜூலியஸ்
இ) இரண்டாம் பயஸ்
ஈ) மூன்றாம் பால்
Answer:
ஈ) மூன்றாம் பால்

Question 4.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எவருடைய வெற்றி பெரிதும் ஊக்கம் தந்தது?
அ) மார்க்கோ போலோ
ஆ) ரோஜர் பேக்கன்
இ) கொலம்பஸ்
ஈ) பார்தோலோமியோ டயஸ்
Answer:
இ) கொலம்பஸ்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
கூற்று : காகிதம் கி.மு (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் தோன்றியது.
காரணம் : நகரும் அமைப்பிலான அச்சு இயந்திரத்தை ஜெர்மனி கண்டுபிடித்தது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answer:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

Question 6.
பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல?
அ) பகுத்தறிவுவாதம்
ஆ) ஐயுறவுவாதம்
இ) அரசில்லா நிலை
ஈ) தனித்துவம்
Answer:
இ) அரசில்லா நிலை

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 7.
நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
அ) அரிஸ்டாட்டில்
ஆ) பிளாட்டோ
இ) ரோஜர் பேக்கன்
ஈ) லாண்ட்ஸ்டெய்னர்
Answer:
இ) ரோஜர் பேக்கன்

Question 8.
மனிதகுலத்தை சமயமரபு அல்லது அதிகாரம் மூலமாக ஆட்சி செலுத்தாமல் காரணங்கள் மூலம் ஆட்சி செலுத்த வேண்டும் என்று விரும்பியவர் யார்?
அ) தாந்தே
ஆ) மாக்கியவல்லி
இ) ரோஜர் பேக்கன்
ஈ) பெட்ரார்க்
Answer:
இ) ரோஜர் பேக்கன்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 9.
துருக்கியர்களுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி இத்தாலிக்கு சென்றவர் யார்?
அ) ஜியோவனி அவுரிஸ்பா
ஆ) மேனுவல் கிரைசாலொரஸ்
இ) ரோஜர் பேக்கன்
ஈ) கொலம்பஸ்
Answer:
ஆ) மேனுவல் கிரைசாலொரஸ்

Question 10.
கூற்று : கலிலியோ கலிலிதேவாலய விரோத போக்குக்காக கிறித்தவதிருச்சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
காரணம் : சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகின்றன என்ற கோபர்நிகஸின் சூரியமையக் கோட்பாட்டை அவர் ஏற்றார்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 11.
கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை அல்லது அறிக்கைகள்?
அறிக்கை I : இத்தாலியர்கள் தாங்கள் பண்டைய வைக்கிங்கின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாக்க முயன்றனர்.
அறிக்கை II : துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து மூலமாக கடல் பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன.
அறிக்கை III : கிறித்தவ சமயத்தைப் பரப்பும் ஆர்வம் புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதில் ஊக்கம் தந்தது.
அறிக்கை IV : பெர்டினான்ட் மெகல்லன் மேற்குநோக்கிப் பயணித்து பிரேசிலைக் கண்டுபிடித்தார்.
அ) I, II மற்றும் III
ஆ) II மற்றும் III
இ) 1 மற்றும் III
ஈ) அனைத்தும் சரி
Answer:
ஆ) II மற்றும் III

Question 12.
கீழ்க்கண்டவற்றில் எது லியானர்டோ டாவின்சியின் ஓவியம் இல்லை?
அ) வர்ஜின் ஆஃப் ராக்ஸ்
ஆ) இறுதி விருந்து
இ) மோனலிசா
ஈ) மடோனாவும் குழந்தையும்
Answer:
ஈ) மடோனாவும் குழந்தையும்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 13.
போப்பாண்டவரால் கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை நவீனமயமாக்கியவர் யார்?
அ) டோனடெல்லா
ஆ) ரபேல்
இ) லியானர்டோ டாவின்சி
ஈ) மைக்கேல் ஆஞ்சிலோ
Answer:
ஈ) மைக்கேல் ஆஞ்சிலோ

Question 14.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை ?
அ) மார்லோவ் – டிடோ
ஆ)ஷேக்ஸ்பியர் – கிங் லியர்
இ) பிரான்சிஸ் பேக்கன் – நோவும் ஆர்கனும்
ஈ) ரோஜர் பேக்கன் – டெக்கமரான்
Answer:
ஈ) ரோஜர் பேக்கன் – டெக்கமரான்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 15.
கூற்று : துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் கிழக்குப் பகுதிக்கு ஒரு கடல் வழித்தடத்தை கண்டுபிடிக்க ஊக்கமாக இருந்தது.
காரணம் : கிழக்கில் இருந்து கிடைக்கும் பொருட்களின் தேவைகள் அதிகரித்ததால் கடல்வழி – வாணிபத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் விரும்பின.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு கட்ட ஈ) கூற்று தவறு காரணம் சரி.
Answer:
இ) கூற்று சரி காரணம் தவறு

Question 16.
மெகல்லனின் மறைவுக்குப் பிறகு எந்தக் கப்பல் திரும்பியது?
அ) சாண்டா மரியா
ஆ) பிண்ட்டா
இ) நினா
ஈ) விட்டோரியா
Answer:
ஈ) விட்டோரியா

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 17.
ஸ்பெயினுக்காக மெக்சிகோவைக் கைப்பற்றியவர் யார்?
அ) பெட்ரோ காப்ரல்
ஆ) கொலம்பஸ்
இ) ஹெர்னன் கார்ட்ஸ்
ஈ) ஜேம்ஸ் குக்
Answer:
இ) ஹெர்னன் கார்ட்ஸ்

Question 18.
இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றியால் மேலாதிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
அ) 1519
ஆ) 1532
இ) 1533
ஈ) 1534
Answer:
ஈ) 1534

Question 19.
கூற்று : கொள்ளை நோய்க்கான காரணங்களை விளக்க முடியாததால் கொள்ளை நோய் தேவாலயத்தின் நிலையை பலவீனப்படுத்தியது.
காரணம் : போப்பாண்டவரின் அதிகாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 20.
ஏழாம் கிரிகோரியால் கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஆட்சியாளர் யார்?
அ) ஏழாம் ஹென்றி
ஆ) எட்டாம் ஹென்றி
இ) இரண்டாம் ஹென்றி
ஈ) ஆறாம் ஹென்றி
Answer:
ஈ) ஆறாம் ஹென்றி

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
கிறித்தவ சீர்திருத்த இயக்கத்துக்கு எராஸ்மஸ் எவ்வாறு வழியமைத்தார்?
Answer:
எராஸ்மஸ் :

  • எராஸ்மஸ், தேவாலாய வழக்கங்கள் மற்றும் போதனைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
  • இவரது சிறந்த படைப்பு “மடமையின் புகழ்ச்சி” என்பதாகும்.
  • இது கிறித்துவ துறவிகள் மற்றும் இறையியல் போதகர்களையும் கேலி செய்தது.

Question 2.
பிளாரன்ஸின் மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு வரைக.
Answer:
மெடிசி குடும்பம் :

  • இத்தாலிய நகரங்களில் ஒன்றான பிளாரன்ஸில் சக்தி வாய்ந்த வர்த்தக குடும்பம் மெடிசி குடும்பம்.
  • காசிமோ டி மெடிசி என்பவர் இத்தாலி முழுவதும் வங்கிக் கிளைகளை நடத்தினார்.
  • மைக்கேல் ஆஞ்சிலோ, லியானர்டோ டாவின்சி உள்ளிட்ட பல ஓவியக் கலைஞர்களுக்கு மெடிசி குடும்பம் ஆதரவு அளித்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
1493ஆம் ஆண்டின் போப்பின் ஆணை பற்றி நீவிர் அறிந்ததென்ன?
Answer:

  • ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவிய போட்டியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் போப் ஆறாம் அலெக்சாண்டர் ஒரு ஆணையை வெளியிட்டார்.
  • அது போப்பின் ஆணை என்றழைக்கப்பட்டது.
  • அதன்படி உலகை கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிரித்து, மேற்குப் பகுதியில் உரிமை கொண்டாட ஸ்பெயினுக்கும், கிழக்குப் பகுதியில் உரிமை கொண்டாட போர்ச்சுகல் நாட்டிற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

Question 4.
ஸ்பெயின் நாட்டு கப்பற்படையின் குறிப்பிடத்தகுந்த விளைவு என்ன?
Answer:

  • 1588இல் ஸ்பெயினின் அரசர் இரண்டாம் பிலிப் ஸ்பெயின் நாட்டு கப்பல் படையை 130 கப்பல்கள் மற்றும் 31,000 படைவீரர்களுடன் இங்கிலாந்து மீது போர் தொடுக்க அனுப்பினார்.
  • எனினும் ஆங்கிலேயர்கள் எளிதாக கையாளக்கூடிய தங்கள் படைகளின் நடவடிக்கையால் ஸ்பெயின் நாட்டுப் படையை வீழ்த்தினார்கள்.
  • நவீன உலகில் ஒரு வலுவான சக்தியாக பிரிட்டிஷார் உருவெடுக்க இது காரணமாக அமைந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
வோர்ம்ஸ் சபையின் வெளிப்பாடு என்ன என்று தெரிவிக்கவும்.
Answer:

  • போப்பிற்கும், மார்டின் லூதருக்கும் இடையேயான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.
  • மார்டின் லூதரின் புத்தகங்கள் அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்பட்டன.
  • வோர்ம்ஸ் சபையால் லூதர் சட்டத்திற்கு புறம்பானவர் என்று அறிவிக்கப்பட்டார்.

Question 6.
நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer:

  • பிரபுக்களின் சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நட்சத்திர சேம்பர் என்ற பெயரில் நீதிமன்றத்தை ஏழாம் ஹென்றி உருவாக்கினார்.
  • நீதிமன்ற நடைமுறைகள் நடந்த வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையின் மேல் சுவரில் நட்சத்திரங்கள் ஓவியமாக தீட்டப்பட்டிருந்ததால் இந்தப் பெயர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 7.
இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப்பிரபுத்துவ நடைமுறை ஏன் தோல்வி கண்டது?
Answer:

  • இடைக்காலத்தில் ஐரோப்பாவைத் தாக்கிய கொள்ளை நோய் பிரபுத்துவ ஆட்சியை அதன் நடைமுறையை வலுவிழக்கச் செய்தது.
  • பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து பிரபுக்கள் தங்கள் வேலையாட்களை இழந்ததோடு வரிவருமானத்தையும் இழந்தனர்.
  • சிலுவைப் போர்களின் போது பெரும் எண்ணிக்கையில் பிரபுக்கள் உயிரிழந்தனர்.
  • புதிய மன்னராட்சியை உறுதிப்படுத்துவதில் நிலப்பிரபுத்துவ முறையின் வீழ்ச்சி முக்கியப் பங்காற்றியது.

Question 8.
ரொட்டியும் திராட்சை ரசமும் உண்பது இயேசுவின் சதையும் இரத்தமும் உண்பதற்கு சமம் என்ற சமயச் சடங்கு தான் என்பதை விளக்குக.
Answer:

  • இயேசு நாதரின் புனித இறுதி விருந்தை ஒத்த புனித சமயச் சடங்கை கத்தோலிக்கர்கள் தங்கள் தேவாலயங்களில் பின்பற்றினார்கள்.
  • இயேசு கிறிஸ்து மேற்கொண்ட தியாகங்களை நினைவுகூறும் வகையில் இந்தச் சடங்கில் கத்தோலிக்க கிறித்தவர்கள் பங்கேற்றனர்.
  • ரொட்டியும், திராட்சை ரசமும் இயேசுவின் சதையும், இரத்தமும் என்று அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்கின்றனர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 9.
ஸ்பெயினில் சமய விசாரணை நீதிமன்ற அமைப்பு என்ன செய்தது?
Answer:

  • ஸ்பெயின் நாட்டின் நீதிவிசாரணை அமைப்பை அரசர் அமைத்தார்.
  • அதன் மூலம் மதம் மாறிய யூதர்களும் மூர்களும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
  • சமய நம்பிக்கை அற்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டனர்.

Question 10.
யார்க் மற்றும் லான்காஸ்டிரியன் குடும்பங்களுக்கு இடையேயான மோதல் ஏன் ரோஜாப்பூ போர் – என்று அழைக்கப்பட்டது? இந்தப் போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது?
Answer:

  • அரச சிம்மாசனத்தை அடைய யார்க் மற்றும் லன்காஸ்டர் என்ற இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
  • அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக் குறிகளை அணிந்தனர்.
  • எனவே இது ரோஜா பூக்கள் போர் என அழைக்கப்பட்டது.
  • இந்த மோதலில் ஹென்றி டியூடர் வெற்றி பெற்று ஏழாம் ஹென்றி என்று பட்டத்துடன் இங்கிலாந்தில் புதிய அரசாட்சியை அமைத்தார்.
  • யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத்துடன் திருமண உறவு மூலம் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக உருவெடுத்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 11.
டிரென்ட் சபையின் பணி என்ன என்று எடுத்துரைக்கவும்.
Answer:

  • டிரென்ட் சபை 18 ஆண்டுகளில் மூன்று முறை சந்தித்துபைபிள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
  • தேவாலய போதனைகள் மற்றும் இரட்சிப்பை அடைவதற்கான ஏழு திருவிருட்சாதனங்கள் குறித்தும் நம்பிக்கை வெளியிட்டது.
  • போப்பாண்டவரின் அதிகாரத்தை உறுதி செய்வது, பாதிரிமார்களின் பிரம்மச்சர்யம் ஆகியன நிலைநிறுத்தப்பட்டன.
  • அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்து மற்றும் மேரியின் உருவ வழிபாட்டையும் சபை ஆதரித்தது.
  • இந்த டிரென்ட் சபையால் கத்தோலிக்க சமயம் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட்டது.

Question 12.
வரலாற்றில் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கையினை நினைவு கூறப்படுவது ஏன்?
Answer:

  • பிரெஞ்சு அரசர் ஏழாம் சார்லசுக்காக ஜோன் ஆஃப் ஆர்க் என்ற பெயருடைய ஒரு இளம்பெண் வீரதீரமாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார்.
  • எனவே ஆர்லியன்ஸின் பணிப்பெண் என்ற பட்டம் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கைக்கு வழங்கப்பட்டது.
  • 1920ஆம் ஆண்டு அவருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர் பட்டம் வழங்கியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி விளங்கியது ஏன்?
Answer:

  • லத்தீன் கிறித்தவ உலகத்தின் இதர பகுதிகளைக் காட்டிலும் இத்தாலியில் பெருமளவுக்கு சமயச்சார்பின்மை கலாச்சாரம் நடைமுறையில் இருந்தது.
  • ஏதென்ஸ் நகர மக்களின் பெரிகிளிஸ் காலத்து படைப்புகளையும், கிரேக்க மற்றும் ரோமானிய கலாச்சாரங்களின் கடந்த கால படைப்புகளையும் கண்டுபிடித்தனர்.
  • சட்டம் மற்றும் தத்துவயியல் படிப்புகளுக்காகவே முதன்மையாக இத்தாலிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
  • கிழக்கத்திய நாடுகளுடனான வர்த்தகத்தை புத்துயிர் பெறச் செய்ததில் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்ட இத்தாலிய நகரங்கள் அதிக செல்வம் ஈட்டின.

Question 2.
மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட இலக்கிய சாதனைகளை குறிப்பிடவும்.
Answer:

  • இங்கிலாந்தின் இலக்கியவாதிகளில் முக்கியமானோர்கள் வில்லியம் ஷேக்ஸ்பியர், கிறிஸ்டோபர் மர்லோவ, பிரான்சிஸ் பேக்கன் ஆகியோராவர்.
  • ஆங்கில இலக்கியத்தின் முடிசூடா மன்னர் வில்லியம் ஷேக்ஸ்பியர் 38 நாடகங்களையும், மனிதர்களின் பல்வேறு உணர்வுகள் குறித்த பல கவிதைகளையும் எழுதியுள்ளார்.
  • ஏஸ் யூ லைக் இட், தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ, மிட் சம்மர் நைட்ஸ் டிரீம் போன்ற நகைச்சுவை நாடகங்களும் ஒத்தெல்லோ, ஹாம்லெட், கிங்லியர். ரோமியோவும் ஜூலியட்டும் போன்ற சோகமயமான் நாடகங்களும் சில உதாரணங்களாகும்.
  • ஆங்கில நாடக ஆசிரியரான கிறிஸ்டோபர் மார்லோவ், டிடோ, தி குயீன் ஆஃப் கார்தேஜ், டம்பர்லெய்ன் தி கிரேட் ஆகிய முக்கிய படைப்புகளை அளித்துள்ளார்.
  • ‘அனுபவ வாதத்தின் தந்தை’ என்று அழைக்கக்கூடிய பிரான்சிஸ் பேக்கன் தூண்டல் பகுத்தறிவே விஞ்ஞானத்தின் அடிப்படை என்றார்.
  • இவரது படைப்பான “நோவும் ஆர்கனும்” என்ற நூல் முக்கியப் படைப்பாக விளங்குகிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
இத்தாலிய மற்றும் ஆங்கிலேய கடல்பயணிகளின் சாதனைகள் என்ன?
Answer:

  • இத்தாலிய கடற்பயணி ஜான் கேபட் கனடாவை கண்டுபிடித்து ஆங்கில காலனியாக்கினார்.
  • ஜியோவனி டா வெர்ராசானோ என்பவர் பிரான்ஸ் நாட்டுக்காக கிழக்கு கனடா மாகாணங்களை இணைத்தார்.
  • ஆங்கிலேய கடற்பயணி ஹென்றி ஹட்சன் வடஅமெரிக்காவிலிருந்து பசிபிக்கடல் பகுதிக்கு பாதைகாண பாட முயன்றார்.

Question 4.
வர்த்தகப் புரட்சியின் எதிர்மறை விளைவுகள் என்ன?
Answer:

  • வர்த்தகப் புரட்சியின் முக்கிய எதிர்மறை விளைவாக அமைந்தது அடிமைத்தனம் மீண்டும் புத்துயிர் பெற்றதே ஆகும்.
  • ஸ்பானிய, போர்த்துகீசிய மற்றும் ஆங்கிலேயே காலனிகளில் சுரங்கம் மற்றும் தோட்ட விவசாயம் வளர்ச்சி கண்டதையடுத்து அடிமைகளை திறமையற்ற தொழிலாளர்களாக ஆளெடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.
  • டிரான்ஸ் அட்லாண்டிக் அடிமை வர்த்தகம் மூலமாக 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மோசமான கதை நவீன உலகை உருவாக்குவதில் ஒரு அவமானச் செயலாக பதிவுபெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
ஜெனோவாவில் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஜான் கால்வின் ஆற்றிய பங்கை ஆராய்க.
Answer:

  • பிராட்டஸ்டன்ட் இயக்கத்தின் பிற்கால தலைவர்களில் ஒருவர் ஜான் கால்வின் ஆவார்.
  • கிறித்தவ சமய நிறுவனங்கள் என்ற அவரது லத்தீன் மொழிப் புத்தகம் அவரது கருத்துக்களை உள்ளடக்கியது.
  • கால்வின் ஒரு மிகப்பெரிய ஒருங்கிணைப்பாளர்.
  • கால்வீனியம் என்ற சமயப்பிரிவு அவரது வாழ்நாளிலேயே பிரபலம் அடைந்தது.

Question 6.
ஐரோப்பாவில் எதிர்சீர்திருத்த இயக்கத்துக்கு இயேசு சபையின் பங்களிப்பு பற்றி விவாதிக்கவும். –
Answer:

  • இக்னேஷியஸ் லயோலா என்பவரால் இயேசு சபை தோற்றுவிக்கப்பட்டது.
  • பாரிஸ் என்ற இடத்தில் புதிய தேவாலய முறைமையை 1534 ஆகஸ்டு 15இல் ஏற்படுத்தினார்.
  • பிரம்மச்சர்யம், வறுமை, கீழ்ப்படிதல் ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகிய உறுதிமொழிகளைக் கடைபிடித்தனர்.
    இயேசு சங்கம் தேவாலயத்துக்கு உண்மையான சிறந்த தொண்டர்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றது. இச்சபையின் தொண்டர்கள் ஜெசூட்டுகள் உலகெங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை தொடங்கினார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 7.
1441.2இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக.
Answer:

  • 1492ல் கொலம்பஸ் ஸ்பானிய ஆட்சியாளர்களின் உதவியுடன் கடற்பயணம் மேற்கொண்டார்.
  • இவர் 1492 ஆகஸ்ட் 3ல் பாலோஸ் துறைமுகத்திலிருந்து மூன்று கப்பல்களில் பயணித்தார்.
  • 2 மாதங்களுக்கு பின் இந்தியா என்று அவரால் நம்பப்பட்ட நிலப்பகுதியை அடைந்தார்.
  • ஆனால் அது உண்மையில் அமெரிக்கா என்னும் புதிய கண்டமாகும்.

Question 8.
போர்த்துகீசிய கடல்பயணி பெட்ரோ காப்ரல் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பிடுக.
Answer:

  • வாஸ்கோடகாமா சென்ற வழியைப் பின்பற்றி இந்தியா வந்தடைந்தார். சாமரின் ஒரு கோட்டை கட்டி
    வர்த்தகம் செய்ய காப்ரலை அனுமதித்தார். அரபு வணிகர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்ப டதால் மோதல் நிகழ்ந்தது.
  • கொச்சினில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டார். கண்ணனூரில் துறைமுகத்தை நிறுவினார்.
  • இறுதியாக 1501 ஜூன் 23ல் போர்ச்சுக்கல் திரும்பினார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள் ஆற்றிய பங்களிப்பை ஆராயவும்.
Answer:
“தாந்தே, பெட்ரார்க் என்ற இரண்டு பெரும் இத்தாலிய மொழி கவிஞர்களை பிளாரன்ஸ் உருவாக்கியிருந்தது”.
தாந்தே:
தாந்தேயின் தெய்வீக இன்பியல், இறை அருள் மூலமாக மனித குலம் இரட்சிப்பு பெறமுடியும் என்பது அதன் கருப்பொருளாகும்.
பெட்ரார்க்:

  • ‘இத்தாலிய மறுமலர்ச்சி இலக்கியத்தின் தந்தை’ என்று கருதப்படுகிறார்.
  • கிரேக்க மற்றும் ரோமானிய கையெழுத்துப் பிரதிகளைத்தேடி, சமயத்துறவிகள் நூலகங்களுக்குச் சென்றார்.
  • கடிதங்களை அவர் மறுபடியும் கண்டுபிடித்தார்.

பொக்காசியோ:
பிளாரன்ஸ் நகரை சேர்ந்தவரான ஜியோவனி பொக்காசியோ, பிளேக் என்ற கருங்கொள்ளை நோயிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, பிளாரன்ஸ் நகருக்கு வெளியே ஒரு குடியிருப்பில், ஏழு இளம்பெண்களும் மூன்று இளைஞர்களும் தங்கியிருந்தபோது கூறியதாக எழுதப்பட்ட 100 கதைகளின் தொகுப்பை டெக்கமரான் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.

நிக்கோலோ மாக்கியவல்லி:

  • இவரின் ‘தி பிரின்ஸ்’ என்ற படைப்பு ஆட்சியாளர்களுக்கு அரசியல் வழிகாட்டியாக அமைந்தது.
  • இந்த நூலில் ஒரே நேரத்தில் மனிதனாக, மிருகமாக, சிங்கமாக, நரியாக மாறத் தெரிந்திருக்க வேண்டும் என்று இவர் கூறுகிறார்.
  • பக்திமானாக, உண்மையாக மனிதநேயத்துடன் பக்தியுடனும் இருப்பது போல் தோற்றமளிப்பது பலனளிக்கும், நல்லொழுக்க குணம் இருப்பது மிகவும் பலனளிக்கும் என்று அவர் கூறுகிறார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 2.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.
Answer:
இங்கிலாந்து:

  • அரச சிம்மாசனத்தை அடைய யார்க் மற்றும் லன்காஸ்டர் என்ற இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
  • அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக் குறிகளை அணிந்தனர்.
  • எனவே இது ரோஜா பூக்கள் போர் என அழைக்கப்பட்டது.
  • இந்த மோதலில் ஹென்றி டியூடர் வெற்றி பெற்று ஏழாம் ஹென்றி என்று பட்டத்துடன் இங்கிலாந்தில் புதிய அரசாட்சியை அமைத்தார்.
  • யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத்துடன் திருமண உறவு மூலம் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக உருவெடுத்தது.

பிரான்சு :

  • ஜோன் ஆப் ஆர்க் என்ற இளம் பெண் நூறாண்டு போரில் அரசர் சார்லசுக்காக போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார்.
  • ஜோன் ஆப் ஆர்க்கின் மறைவுக்குப் பிறகு நூற்றாண்டுகள் போரைத் தொடர்ந்த பிரெஞ்சு அரசு ஆங்கிலேயர்களை வெற்றி கண்டது.
  • ஏழாம் சார்லஸின் மகன் 11 ஆம் லூயி பர்கண்டி பகுதிக்கு திரும்பினார்.
  • 1483 ஆம் ஆண்டு இப்பகுதி பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
  • பிரான்சு ஒரு வலுவான மத்திய மன்ட்சி நடைபெறும் அரசாக உருவெடுத்தது.
  • பதினோறாம் லூயி பிரான்சை வலுப்படுத்தி ஒன்றுபடுத்தினார்.

ஸ்பெயின்:

  • அராபிய அரசர்களின் வழிதோன்றல்களாகிய முஸ்லீம் மன்னர்கள் மூர்களின் கட்டுப்பாட்டில் ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகள் இருந்தன.
  • அராகன் மற்றும் காஸ்டைல் முக்கிய அரசுகள்.
  • அராகன் அரசர் பெர்டினாண்ட், காஸ்டைல் இளவரசியை மணம் முடித்து மூர்களை விரட்டவும், ஸ்பெயினை இணைக்கவும் கடினமாக உழைத்தனர்.
  • 1479ல் அரசரும் அரசியும் அதிகாரத்தைக் கைபற்றி, மன்னர் சபையில் இருந்த பிரபுகளை நீக்கியதன் மூலம் அரசர்களைக் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தார்.
  • ஸ்பெயின் தனி நாடாக உருவெடுத்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
கிழக்குப் பகுதிக்கு புதிய கடல் வழித்தடங்களை கண்டுபிடிப்பதில் போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முன்முயற்சிகளை விவரிக்கவும். நவீன உலகின் பொருளாதார வரலாற்றில் ஏன் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது?
Answer:
போர்ச்சுக்கல் :

  • கடலாய்வின் முதலாவது தொடர் பயணங்களை போர்ச்சுக்கல் மேற்கொண்டது.
  • போர்ச்சுக்கல் அரசர் ஹென்றியின் முயற்சியால் மெடீரா மற்றும் அசோர் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • இவரது மாலுமிகள் எவர்டி தீவுகள் முனையைக் கண்டறிந்தனர்.
  • பார்தோலோமியோ டயஸ் என்பவர் ஆப்பிரிக்காவின் தென்முனை வரை சென்றார். இது கிழக்கு நோக்கி பயணிக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதால் “நன்னம்பிக்கை முனை” என்று அழைக்கப்பட்டது.
  • 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா இதன் வழியே பயணித்து இந்தியாவை வந்தடைந்தார். வாஸ்கோடகாமாவின் இந்தியாவிற்கான புதிய கடல் வழி கண்டுபிடிப்பு ஐரோப்பிய மற்றும் ஆசிய வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.
  • பெட்ரோ காப்ரல் பிரேசிலை கண்டுபிடித்து போர்ச்சுக்கல் காலனியாக்கினார். பின்னர் இந்தியாவில் கொச்சினில் வர்த்தகம் செய்து கண்ணனூரில் துறைமுகத்தையும் நிறுவினார்.

ஸ்பெயின்:

  • கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயினின் ஆதரவுடன் பயணித்து இந்தியா என்று நம்பி அமெரிக்காவை கண்டு பிடித்தார்.
  • ஸ்பெயினின் ஹெர்னன் கார்ட்ஸ் என்பவர் ஸ்பெயினுக்காக மெக்சிகோவை கைப்பற்றினார்.
  • இவரே தென் அமெரிக்காவில் இன்கா அரசை வீழ்த்தி பெரு நாட்டை கைப்பற்றினார்.

முக்கியத்துவம் :

  • கடல் வழித்தடங்களை கண்டுபிடித்து காலனிகள் தோற்றுவித்த போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முன் முயற்சிகள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் தூண்டு கோளாயிற்று.
  • ஐரோப்பிய கடல் கடந்த வாணிபம் பெரிதும் தழைக்கத் தொடங்கியது. குடியேற்ற ஆதிக்கமும் பேரரசு ஆதிக்கமும் தோன்றின.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 4.
பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?
Answer:

  • தேவாலயத்தின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக கிளர்ச்சி ஏற்படுத்தியவர்கள் பிராட்டஸ்டன்ட் என்றழைக்கப்பட்டனர்.
  • ரோமன் கத்தோலிக்க கிறித்துவர்கள் தேவாலயங்கள் தங்களுக்கும் கடவுளுக்கும் இடையே ஓர் ஊடகமாக செயல்படுவதை ஏற்றார்கள்.
  • ஆனால் தேவாலயங்களின் அதிகாரங்கள் பன்மடங்கு பெருகியதை மன்னர்களும் மக்களும் எதிர்க்க ஆதரித்தனர்.
  • பாவமன்னிப்பு வழங்க பணம் பெற்றது, வேண்டியவர்களுக்கு வேலை வழங்குவது, தேவாலய
    பணிகளை பணத்துக்கு விற்பது போன்றவை பிராட்டஸ்டன்ட் வளர காரணமாயிற்று.

மார்டின் லூதரும் பிராட்டஸ்டன்ட் இயக்கமும் :

  • கிறிஸ்துவப் பாதிரியாரான மார்ட்டின் லூதர் ரோமுக்கு சென்ற போது தேவாலயத்தின் ஊழல் மற்றும் ஆடம்பரம் குறித்து வருந்தினார்.
  • ரோமானிய தேவாலயத்துக்கு எதிராக 95 குறிப்புகள் என்ற தலைப்பில் 95 புகார்களை எழுதி ஜெர்மனி விட்டன்பர்க்கில் உள்ள தேவாலயத்தின் கதவில் ஆணி அடித்து தொங்கவிட்டார்.
  • கடவுளின் மீது இருக்கும் ஒருவரது நம்பிக்கை மூலம்தான் இரட்சிப்பை அடைய முடியும் என்று கூறினார்.
  • மார்டின் லூதரின் முற்போக்கான கருத்துக்கள் பலரை ஈர்த்தன.
  • லூதர் பைபிளை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார்.
  • லூதரன் பிராட்டஸ்டன்ட்கள் சில விதிகளையும் நெறிமுறைகளையும் வகுத்தனர்.
  • இதன் மூலம் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை மார்டின் லூதர் ஒருங்கிணைத்தார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. பகுத்தறிவின் காலம் பற்றிய பொருள் மற்றும் முக்கியத்துவம் பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும்.
2. உலக புறஎல்லை வரைபடத்தில் கொலம்பஸ், வாஸ்கோடகாமா, மெகல்லன் ஆகியோர் சென்ற கடல்வழித்தடங்களைக் குறிக்கவும்.
3. மறுமலர்ச்சி தொடர்பான வீடியோ பதிவுகளை மாணவர்கள் இணையத்தில் காணலாம்.
4. வட மற்றும் தென் அமெரிக்காவின் பூர்வகுடிகள் மீது ஐரோப்பியர்கள் நடத்திய இனப்படுகொலை குறித்த திரைப்படங்கள்/வீடியோ பதிவுகளை மாணவர்கள் காணலாம்.

12th History Guide நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் Additional Questions and Answers

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
…………. பெற்ற வெற்றியானது வெளிநாட்டு அமைப்புகளுக்கு பெரிதும் ஊக்கமளிப்பதாக அமைந்தது.
அ) பார்தோலோமியோ டயஸ்
ஆ) கொலம்பஸ்
இ) அமெரிக்கோ வெஸ்புகி
ஈ) மெகல்லன்
Answer:
ஆ) கொலம்பஸ்

Question 2.
“நவீன நடைமுறைச் சோதனை அறிவியலின் தந்தை” என அழைக்கப்படுபவர் ………………….
அ) தாந்தே
ஆ) பெட்ரார்க்
இ) பொக்காசியோ
ஈ) ரோஜர் பேக்கன்
Answer:
ஈ) ரோஜர் பேக்கன்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
கான்ஸ்டான்டிநோபிள் வீழ்ச்சியுற்ற ஆண்டு …………….
அ) 1543
ஆ) 1453
இ) 1345
ஈ) 1534
Answer:
ஆ) 1453

Question 4.
“தெய்வீக இன்பயியல்” என்ற நூலை எழுதியவர் ……………………….
அ) தாந்தே
ஆ) பெட்ரார்க்
இ) ரோஜர் பேக்கன்
ஈ) மாக்கியவல்லி
Answer:
அ) தாந்தே

Question 5.
100 கதைகளின் தொகுப்பை டெக்கமரான் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டவர்.
அ) ஜியோவனி பொக்காசியோ
ஆ) நிக்கோலோ மாக்கியவல்லி
இ) லியானர்டோ டாவின்சி
ஈ) வில்லியம் ஹார்வி
Answer:
அ) ஜியோவனி பொக்காசியோ

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 6.
“மறுமலர்ச்சி கால மனிதர்” என்று அழைக்கப்பட அனைத்து தகுதிகளையும் கொண்டு திகழ்ந்தவர்.
அ) மைக்கேல் ஆஞ்சிலோ
ஆ) லியானர்டோ டாவின்சி
இ) வில்லியம் ஹார்வி
ஈ) ரபேல்
Answer:
ஆ) லியானர்டோ டாவின்சி

Question 7.
சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சுற்றும் சூரிய மையக் கோட்பாட்டை அறிவித்த வானியல் நிபுணர் ……………………
அ) கலிலியோ கலிலி
ஆ) வில்லியம் ஹார்வி
இ) மைக்கேல் ஆஞ்சிலோ
ஈ) நியூட்டன்
Answer:
அ) கலிலியோ கலிலி

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 8.
“ஆங்கில இலக்கியத்தின் மூடிசூடா மன்னர்” ……
அ) பிரான்சிஸ் பேக்கன்
ஆ) வாஸ்கோடகாமா
இ) வில்லியம் ஷேக்ஸ்பியர்
ஈ) மாக்கியவல்லி
Answer:
இ) வில்லியம் ஷேக்ஸ்பியர்

Question 9.
முதலாம் எலிசபெத் காலம் “ எலிசபெத் காலம்” என்று அழைக்கப்பட்ட ஆண்டுகள் …………………
அ) 1558-1603
ஆ) 1603-1658
இ) 1503-1558
ஈ) 1553-1608
Answer:
அ) 1558-1603

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 10.
கூற்று : இத்தாலிய நகரங்களில் தொடங்கிய மறுமலர்ச்சி மேற்கத்திய ஐரோப்பாவின் இதர நகரங்களுக்குப் பரவியது.
காரணம் : இத்தாலியர்கள் தாங்கள் ரோமானிய மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாத்து வந்தனர்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. கூற்றை காரணம் விளக்குகிறது.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்று தவறு. காரணம் சரி ஈ) கூற்றும் காரணமும் சரி
Answer:
ஈ) கூற்றும் காரணமும் சரி

Question 11.
கூற்று : நீண்ட தூர ஆபத்தான கடல் பயணங்களுக்கு புதிய மேம்படுத்தப்பட்ட கப்பல் வடிவமைப்பு பெரிதும் உதவவில்லை .
காரணம் : ஆழம் அதிகம் இல்லாத நீர்ப்பகுதியில் செல்லக்கூடிய இலகு ரக காரவெல் கப்பல் கட்டமைப்பும் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பாகும்.
அ) கூற்று சரி. காரணம் தவறு
ஆ) கூற்று தவறு. காரணம் சரி
இ) கூற்று சரி. காரணம் விளக்கவில்லை .
ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி
Answer:
ஆ) கூற்று தவறு. காரணம் சரி

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 12.
பொருத்துக

I II
1 மோனலிசா அ. ஜியோவனிடா வெர்ராசானோ
2 இரத்த ஒட்டம் ஆ. பிலிப்பைன்ஸ்
3 மெகல்லன் இ. இலியானர்டோ டாவின்சி
4 பிரான்ஸ் நாட்டுக்காக நிலப்பகுதிகளை ஆராய்ந்தவர் ஈ. வில்லியம் ஹார்வி


Answer:
இ) 3 4 2 1

Question 13.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை?
அ) போப்பின் ஆணை – 1493
ஆ) வாஸ்கோடகாமா – கோழிக்கோடு
இ) பெட்ரோ காப்ரல் – பிரேசில்
ஈ) மார்டின் லூதர் – இயேசு சங்கம்
Answer:
ஈ) மார்டின் லூதர் – இயேசு சங்கம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 14.
இயேசு சங்கத்தை தோற்றுவித்தவர்
அ) போப் பத்தாம் லியோ
ஆ) ஜான் வைகிளிஃப்
இ) மார்டின் லூதர் .
ஈ) இக்னேஷியஸ் லயோலா
Answer:
ஈ) இக்னேஷியஸ் லயோலா

Question 15.
கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை (அல்லது) அறிக்கைகள்?
அறிக்கை 1 : தேவாலயங்களில் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பிராட்டஸ்டன்ட் பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டனர்.
அறிக்கை II : தேவாலயத்தின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி போட்டவர்கள் பிராட்ஸ்டன்ட் என்றழைக்கப்பட்டனர்.
அறிக்கை III : இடைக்காலத்தின் பிற்பகுதியில் கைவினை குழுக்களால் பாகம் உற்பத்தி முறை நன்றாக செயல்பட்டது.
அறிக்கை IV : உலகத்தின் பல புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதற்காக இத்தாலிய கடற்பயணியான ஜான் கேபட் என்பவரை இங்கிலாந்து நியமித்தது.
அ) I, II மற்றும் IV)
ஆ) II மற்றும் III
இ) III மற்றும் IV
ஈ) அனைத்தும் சரி
Answer:
அ) I, II மற்றும் IV

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

II. சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
‘தி பிரின்ஸ்’ என்ற நூலில் மாக்கியவல்லி கூறும் கருத்துக்கள் யாவை?
Answer:

  • ‘தி பிரின்ஸ்’ என்ற நூலில் ஒரே நேரத்தில் மனிதனாக, மிருகமாக, சிங்கமாக, நரியாக மாறத் தெரிந்திருக்க வேண்டும் என்று மாக்கியவல்லி கூறுகிறார்.
  • எப்போது தமது செயல்பாடு தமக்கு எதிராக மாறக்கூடும் என்பது தெரியாது என்பதால் தனது வாக்கை ஒருவர் காப்பாற்ற முடியாது; அதனால் சொல்லவும் கூடாது என்கிறார்.
  • எப்போதும் நேர்மையாக இருப்பது என்பது மிகவும் அனுகூலமற்றது.
  • ஆனால் பக்திமானாக, உண்மையாக, மனிதநேயத்துடன், பக்தியுடனும் இருப்பது போல் தோற்றமளிப்பது பலனளிக்கும், நல்லொழுக்ககுணம் இருப்பது மிகவும் பலனளிக்கும் என்று அவர் கூறுகிறார்.

Question 2.
மைக்கேல் ஆஞ்சிலோ பற்றிய குறிப்பு தருக.
Answer:

  • மறுமலர்ச்சி காலத்தின் மிகப்பெரிய சிற்பி மைக்கேல் ஆஞ்சிலோ தாகம்
  • போப்புகளால் கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம் இவரால் நவீனமயமானது.
  • புகழ் பெற்ற பியட்டா என்ற கன்னி மரியாளின் சிலையையும் அவர் வடித்துள்ளார்.
  • கிறிஸ்து உயிரிழந்ததை அடுத்து கன்னி மரியாள் அவரது உடலுக்கு அருகே சோகமே வடிவாக வைக்கப்பட்டிருக்கும் இந்த சிலை (கெர்ரோவிலிருந்து கொண்டுவரப்பட்ட) ஒரே பளிங்குக் கல்லிலானது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
எதிர் சீர்திருத்த இயக்கம் என்பது என்ன?
Answer:

  • விசுவாசமான ரோமானிய தேவாலய ஆதரவாளர்கள் தேவாலயத்துக்குள் நடந்த சீர்கேடுகளைக் களைய சீர்திருத்தங்களை உள்ளிருந்தபடியே நடத்தினார்கள்.
  • இந்த சீர்திருத்த இயக்கம் எதிர் சீர்திருத்த இயக்கம்’ என்று அழைக்கப்பட்டது. இது போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக உறுதியாக களம் கண்டது.

Question 4.
குறிப்பு தருக – ஜான் வைகிளிஃப்
Answer:

  • பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் மொழிபெயர்ப்பாளர் ஜான் வைகிரிஃப்.
  • சமய சீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி என அழைக்கப்பட்டார். –
  • அவர் தனது வாழ்நாளில் ரோமானிய தேவாலயத்தின் கோபத்தில் இருந்து தப்பித்தார்.
  • ஆனால் இவர் மறைந்து (1415) 31 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உடலைத் தோண்டி எடுத்து அவரது எலும்புகளை எரியூட்டுமாறு கிறித்தவ திருச்சபை ஆணையிட்டது. வைகிளிஃபின் எலும்புகள் எரியூட்டப்பட்டாலும் அவரது கருத்துகளை ஒடுக்க முடியவில்லை .

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 5.
ஏழு திருவருட் சாதனங்கள் யாவை?
Answer:

  • ஞானஸ்நானம்
  • உறுதி பூசுதல்
  • திருவிருந்து
  • பாவமன்னிப்பு
  • நோயில் பூசுதல்
  • குருத்துவ துறவறம்
  • திருமணம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சியின் விளைவுகள் யாவை?
Answer:

  • நவீன கால தொடக்கத்தின் அடையாளமாக மறுமலர்ச்சி விளங்குகிறது.
  • கேட்டு அறியும் உணர்வு அதனால் விளைந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குல வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தின.
  • திசை காட்டும் கருவி மற்றும் வான இயல் குறித்த புதிய நம்பிக்கை புவியியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவின.
  • மக்களின் அரசியல் பொருளாதார வாழ்க்கையில் இந்த கண்டுபிடிப்புகளின் தாக்கம் மிகவும் ஆழமானதாகும்.
  • பகுத்தறியும் உணர்வினால் சமயச் சீர்த்திருத்த இயக்கம் தோன்றியது. சமயம் குறித்த மக்களின் கருத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 2.
வாஸ்கோடகாமாவின் கடல்வழிப் பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • வாஸ்கோடகாமா கிழக்குப் பகுதி நோக்கி தனது வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கினார்.
  • லிஸ்பனில் இருந்து நான்கு கப்பல்களில் பயணம் மேற்கொண்ட அவர் மொசாம்பிக் தீவை சென்றடைந்தார்.
  • பின்னர் அவர் மேலும் தெற்கே பயணம் செய்து கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள ‘கப்பட் (கப்பக்கடவு) என்ற கடற்கரையை அடைந்தார்.
  • இந்தியாவின் ஒரு பகுதியை அடைந்த அவர் இந்தியாவுடனான நேரடி வர்த்தக வாய்ப்புகளை திறந்து விட்டார்.
  • இந்தப் பயணம் இந்தியாவின் சில பகுதிகளை காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர உதவியது.
  • கோவா அவ்வாறான ஒரு பகுதியாகும்.

Question 3.
வர்த்தகப் புரட்சியின் தொடக்கத்துக்கான காரணங்கள் யாவை?
Answer:

  • மத்தியத் தரைக்கடல் வர்த்தகம் இத்தாலிய நகரங்களால் கைப்பற்றப்பட்டது.
  • இத்தாலிய நகரங்கள் மற்றும் வடக்கு ஐரோப்பாவில் உள்ள வர்த்தக அமைப்பான ஹன்சீடிக்லீக் எனும் அமைப்பை சேர்ந்த வர்த்தகர்கள் இடையே வர்த்தகம் செழிப்படைந்து மேம்பட்டது.
  • வெனிஸின் டூகா நாணயமும் பிளாரன்ஸின் ப்ளோரின் நாணயமும் அறிமுகம் செய்யப்பட்டது.
  • வர்த்தகம், கப்பல் மூலம் சரக்குப் போக்குவரத்து மற்றும் சுரங்கத்தொழில் மூலமாக ஈட்டப்பட்ட பெரும் தொகை சேர்ந்தது.
  • போர் சாதனங்களுக்கான தேவையும் அதிகம் வரி வசூலிக்கக்கூடிய சொத்தை உருவாக்கும் வகையில் வணிகத்தை மேம்படுத்த புதிய அரசர்கள் கொடுத்த ஊக்கம் ஆகியவை வர்த்தகப் புரட்சியின் தொடக்கத்திற்கு காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 4.
வர்த்தகப் புரட்சியின் நேர்மறை விளைவுகள் யாவை?
Answer:

  • நடுத்தர வர்த்தகத்தை பொருளாதார அதிகாரம் பெற்றவர்களாக உயர்த்தியது, வர்த்தகப் புரட்சியின் இதர முக்கியமான முடிவுகளாகும்.
  • வணிகர்கள், வங்கியாளர்கள், கப்பல் முதலாளிகள், முதன்மை முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்துறை தொழில் முனைவோர் போன்ற பலரும் இந்த நடுத்தர வகுப்பு நிலையில் உள்ளடங்கினார்கள்.
  • அதிகரிக்கும் வளமையின் விளைவாகவும் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக அரசரை ஆதரிப்பதன் விளைவாகவும் அவர்கள் அதிக அதிகாரம் பெற்றனர்.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சிக்கான காரணங்களை விவரி?
Answer:

  • சிலுவைப் போர்களின் போது வெனிஸ், பிளாரன்ஸ், ஜெனோவா, லிஸ்பன், பாரிஸ், இலண்டன், ஆன்ட்வெர்ப், ஹாம்பர்க் மற்றும் நூரெம்பர்க் ஆகிய சுதந்திரமான, வர்த்தக நகரங்கள் உருவானது.
  • பிரான்ஸின் பாரிஸிலும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டிலும் இத்தாலியின் போலோக்னோவிலும் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டதும் மறுமலர்ச்சியின் பிறப்புக்குத் தேவையான தொடக்க நிலைமைகளை உருவாக்கின.
  • ஆக்ஸ்ஃபோர்டில் வசித்த ஆங்கிலப் பேராசிரியரான ரோஜர் பேக்கன் “நவீன நடைமுறைச் சோதனை அறிவியலின் தந்தை” என்றழைக்கப்படுவார்.
  • மனிதகுலமானது சமயமரபு மற்றும் அதிகாரத்தினால் ஆட்சி செய்யப்படாமல் காரண காரியங்களால் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்.
  • அறிஞர்களால் ஈர்க்கப்பட்ட இத்தாலிய அறிஞர்கள் பைசாண்டியத்தைச் சேர்ந்த கான்ஸ்டான்டிநோபிள் மற்றும் இதர நகரங்களுக்கு கையெழுத்துப் பிரதிகளைத் தேடி பயணம் மேற்கொண்டனர்.
  • 1413க்கும் 1423க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஜியோவனி அவுரிஸ்பா என்ற அறிஞர் மட்டும், சோபோகில்ஸ், யூரிபைட்ஸ், தூசிடைட்ஸ் ஆகியோரின் படைப்புகள் உள்பட 250 கையெழுத்துப் பிரதி நூல்களை இத்தாலிக்கு கொண்டு வந்தார்.
  • 1453ஆம் ஆண்டு கான்ஸ்டான்டி நோபிளின் வீழ்ச்சிக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறிய செவ்வியல் அறிஞர்கள் மேற்கத்திய ஐரோப்பாவிற்கு சென்றதால் செவ்வியல் படைப்புகளை கற்கும் நடவடிக்கைகள் ஊக்கம் பெற்றன.
  • சீனாவில் காகிதம் தோன்றியிருந்தாலும், ஜெர்மனிக்கு காகிதம் பதினான்காம் நூற்றாண்டில்தான் அறிமுகமானது.
  •  அதன் பிறகு தான் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவரால் நகரும் தட்டச்சு மற்றும் அச்சகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
  • அச்சுப்பணிக்குப் பிறகே உலகின் அறிவு சார்ந்த வாழ்க்கை மேலும் உத்வேகம் பெற்று அறிவ விரைவாகப் பரவியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 2.
கடல் ஆய்வுக்கு வழிவகுக்கும் பல காரணிகள் யாவை?
Answer:

  • ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தாலியர்களுடன் பொருட்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
  • அந்தப் பொருட்களை வாங்கிய இத்தாலியர்கள் அவற்றை ஐரோப்பாவில் வர்த்தகம் செய்தனர். குறிப்பாக போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஆசிய நாடுகளுடன் நேரடியாக வர்த்தகம் செய்ய விரும்பின.
  • அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அவை புதிய கடல்வழித் தடங்களைக் கண்டுபிடிப்பதற்கு ஊக்கம் தந்தன.
  • இந்த முடிவானப் பொருளாதாரக் காரணம்தான் புதிய வர்த்தக வழித்தடங்களை கண்டுபிடிப்பதற்கான உத்வேகத்தைக் கொடுத்தது.
  • கிழக்கத்திய நாடுகளில் இருந்து பொருட்களுக்கான தேவை அதிகரித்ததை அடுத்து ஐரோப்பிய நாடுகள் அதிக லாபம் ஈட்டவும் கடல்வழி வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும் விரும்பின.
  • எனவே அவர்கள் கடல் வழி ஆய்வில் முதலீடுகளைச் செய்ய விரும்பினர்.
  • ‘முட்டாள்கள் தேர்தலில் போட்டியிடட்டும் சாதித்துக்காட்ட விரும்புபவர்கள் புது இடங்களுக்குச் சென்று ஆராயட்டும்’ என்ற அந்தக் காலகட்டத்தின் சிந்தனைக்கு ஏற்ப பணமும் புகழும் கிடைக்க வாய்ப்பாக இருந்த சாதனை முயற்சிக்கு பலர் தூண்டப்பட்டனர்.
  • சமயத்தை பரப்ப வேண்டும் என்ற ஆர்வம் புதிய நிலப்பரப்புகளை கண்டுபிடிக்க ஊக்கம் தந்தது. –
  • ஆரம்ப நாட்களில் இது முதன்மைக் காரணமாக இருக்கவில்லை .
  • அந்தக் காலத்தில் சீர்திருத்த இயக்கங்களின் கருத்துகளுடன் கடவுளைப் பற்றிய வார்த்தை பரவி முக்கியத்துவம் பெற்றது.
  • மறுமலர்ச்சியை அடுத்து தொழில்நுட்ப மேம்பாடு பல துறைகளில் ஏற்பட்டது.
  • அதில் ஒன்றாக வரைபடங்களை உருவாக்கும் “கார்ட்டோகிராபி” என்ற துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டது.
  • நீண்ட தூர ஆபத்தான கடல் பயணங்களுக்கு புதிய மேம்படுத்தப்பட்ட கப்பல் வடிவமைப்பு பெரிதும் உதவியது.
  • துப்பாக்கிகள் மற்றும் இதர ஆயுதங்களைப் பயன்படுத்தியதனால் கடல் பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன.
  • ஐரோப்பாவில் மாலுமிகளுக்கான “திசைகாட்டி கருவி” (Mariner’s Compass) கண்டுபிடிக்கப்பட்டது. இது கடல் ஆய்வுக்கு மேலும் உதவியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 3.
சமய சீர்திருத்த இயக்கத்தின் விளைவுகள் யாவை?
Answer:
ஐரோப்பிய நாடுகளில் பிரிவுகள்:

  • நாட்டின் சமயவழிபாடுகளில் பிரிவுகளை ஏற்படுத்தியது.
  • வடஜெர்மனி லூதரன் சபையாகவும் தென் ஜெர்மனி கத்தோலிக்கத்தை தொடர்வதையும் கொண்டன.
  • இங்கிலாந்து பிராட்டஸ்டன்ட் ஆகவும் ஸ்காட்லாந்தும் அயர்லாந்து மக்களும் தீவிர கத்தோலிக்க ஆதரவாளர்களாக மாறினர்.
  • கல்வியறிவு:
  • சீர்திருத்த இயக்கத்தின் பல்வேறு சமய போதனைகளை அச்சிட அச்சகம் உதவியது. பைபிளை படித்து புரிந்து கொள்ள மக்களுக்கு ஊக்கம் தரப்பட்டது.
  • உள்ளூர் மொழியை போதனைகளுக்குப் பயன்படுத்தியதும் பைபிளை வேறு வட்டார மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ததும் சாதாரண மக்களைச் சென்றடைவதற்கான புதிய வழிகளைக் காட்டின.
  • பெண்களின் நிலை :
  • தேவாலயங்களில் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பிராட்டஸ்டன்ட் பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டனர்.
  • இதனால் வீட்டிலும் தேவாலயங்களிலும் பெண்களின் நிலை வலுப்பெற்றது.
  • பெண்கள் பிராட்டஸ்டன்ட் வழிமுறையில் குழந்தைகளை வளர்க்கவும் ஊக்கம் பெற்றனர்.
  • இதனால் பெண்களின் கல்வியறிவு மேம்பட்டது.

அரசர்களின் அதிகாரம்:
எட்டாம் ஹென்றி போன்ற சில அரசர்களுக்கு, தேவாலயம் மற்றும் அரசு இரண்டுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த இந்த சீர்திருத்த இயக்கம் அதிக அதிகாரங்களை வழங்கியது.

காலனிகளுக்கான போட்டி:
கத்தோலிக்கர்களும் பிராட்டஸ்டன்ட்களும் உலகின் இதர பகுதிகளில் வாழும் மக்களை தத்தமது பிரிவுகளுக்கு மாற்றம் செய்ய விரும்பினார்கள்.

கிறித்தவ சமயத்தின் பரவல்:
காலனிகளில் தங்கம் மற்றும் வெள்ளி கிடைத்ததை அடுத்து ஐரோப்பிய நாடுகள் கடற்பயணிகளை உலகின் பல பகுதிகளுக்கு கிறித்தவ இயக்கத் தொண்டர்கள் என்ற போர்வையில் அனுப்பியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 10 நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

Question 4.
வர்த்தக புரட்சியின் முக்கிய விளைவுகள் யாவை?
Answer:

  • வங்கித்துறை வளர்ச்சி என்பது வர்த்தகப் புரட்சிக்கான முக்கிய காரணியாகும்.
  • சுரங்கத்தொழில், உருக்குதல் தொழில் ஆகிய புதிய தொழில்கள் வளர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சியால் மேலும் ஊக்கம் பெற்றன.
  • வணிக அமைப்புகளிலும் மாற்றம் வந்தது.
  • இடைக்காலத்தின் பிற்பகுதியில் கைவினைக் குழுக்களால் உருவாக்கப்பட்ட உற்பத்தி முறை செயலிழந்தது.
  • பதினேழாம் நூற்றாண்டில் நெறிப்படுத்தப்பட்ட கம்பெனி என்பது கூட்டுப் பங்கு நிறுவனங்களாக புதிய வகையில் உருமாற்றம் பெற்றது.
  • பிந்தைய கட்டங்களில், வர்த்தகப் புரட்சியின் ஒரு பகுதியாக வணிகவியற்கொள்கை என்றழைக்கப்பட்ட புதிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் ஏற்கப்பட்டன.
  • நடுத்தர வர்க்கத்தை பொருளாதார அதிகாரம் பெற்றவர்களாக உயர்த்தியது.
  • வர்த்தகப் புரட்சியின் முக்கிய எதிர்மறை விளைவாக அடிமைத்தனம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
  • பூர்வீக அமெரிக்கர்களை வேலை வாங்குவது கடினமாக இருந்ததால் அவர்களை அடிமை ஆக்கும் முயற்சி தோல்வி கண்டது.
  • இறுதியாக, வர்த்தகப் புரட்சி தொழிற்புரட்சிக்கு வழி அமைத்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 9 ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

12th History Guide ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக.
i) ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள்
ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக விதைகளின் பயன்பாடு
iii) தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினைத் தேர்வு செய்க.
அ) ii,i, iii
ஆ) i, iii, ii
இ) iii, ii,i
ஈ) ii, iii,i
Answer:
ஆ) i, iii,ii

Question 2.
இந்திய அரசாங்கம் …………… வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
அ) முதலாளித்துவ
ஆ) சமதர்ம
இ) தெய்வீக
ஈ) தொழிற்சாலை
Answer:
ஆ) சமதர்ம
Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?
அ) 1951
ஆ) 1952
இ) 1976
ஈ) 1978
Answer:
அ) 1951

Question 4.
கொடுக்கப்பட்டுள்ள விடைக் குறிப்புகளைக் கொண்டு பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. தொழில் மேம்பாடு கொள்கைத் தீர்மானம் 1. 1951-56
ஆ. இந்திய அறிவியல் நிறுவனம் 2. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்
இ. மகலனோபிஸ் 3. 1909
ஈ முதலாவது ஐந்தாண்டு திட்டம் 4. 1956

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் 1
Answer:
இ) 4 3 2 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
நில சீர்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
அ) 1961
ஆ) 1972
இ) 1976
ஈ) 1978
Answer:
ஆ) 1972

Question 6.
பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர்.
அ) ராம் மனோகர் லோகியா
ஆ) ஜெயப்பிரகாஷ் நாராயணன்
இ) வினோபா பாவே
ஈ) சுந்தர் லால் பகுகுணா
Answer:
இ) வினோபா பாவே

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 7.
கூற்று : ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது.
காரணம் : பல நிலச்சுவான்தாரர்கள் குத்தகைதாரர்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி ; காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 8.
தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
அ) 1951
ஆ) 1961
இ) 1971
ஈ) 1972
Answer:
அ) 1951

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 9.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
அ) 2005
ஆ) 2006
இ) 2007
ஈ) 2008
Answer:
அ) 2005

Question 10.
எந்த ஆண்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன?
அ) 1961
ஆ) 1991
இ) 2008
ஈ) 2005
Answer:
ஆ) 1991

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 11.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது?
அ) 200
ஆ) 150
இ) 100
ஈ) 75
Answer:
இ) 100

Question 12.
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது?
அ) 1905
ஆ) 1921
இ) 1945
ஈ) 1957
Answer:
இ) 1945

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 13.
1951ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?
அ) 5
ஆ) 7
இ) 6
ஈ) 225
Answer:
அ) 5

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
நாடு விடுதலை அடைந்த போது இந்திய பொருளாதாரத்தின் நிலைகள் குறித்து ஒரு குறிப்பு வரைக.
Answer:

  • 1947இல் இந்தியா விடுதலையடைந்த போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலுவற்றதாகவும் பல பிரச்சனைகளையும் எதிர் கொண்டது.
  • கைவினைத் தொழில்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியதால் திறமைமிக்க கைவினைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
  • வேளாண் துறையில் மக்கள் நெருக்கடி அதிகமானதோடு தனி நபரின் தலாவருமானமும் குறைந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 2.
ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய கடமைகள் யாவை?
Answer:

  • பொருளாதாரத்தை வளர்த்தல்.
  • வேளாண்துறை நிலைமைகளை மேம்படுத்துதல்.
  • உற்பத்தித் துறையை விரிவாக்கம் செய்தல்.
  • வேலை வாய்ப்புகளைப் பெருக்கி வறுமையைக் குறைத்தல் போன்ற மாபெரும் கடமைகளை ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கம் எதிர் கொண்டது.

Question 3.
சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீ அறிந்ததென்ன?
Answer:

  • சமதர்ம சமூக அமைப்பு என்பது ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது, சுரண்டலை ஒழிப்பது, செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதைத் தடுப்பது ஆகியனவாகும்.
  • சமூகநீதியானது அனைத்து குடிமக்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பைப் பெறுவதாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 4.
இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக?
Answer:

  • முதலாவதாக கருத்தியல் நிலையில் அரசாங்கம் ஒரு சமதர்ம வளர்ச்சிக்கு உறுதியளித்தது. இது பொருளாதாரத்தின் மீது அரசின் அதிக அளவிலான கட்டுப்பாட்டை உள்ளடக்கியிருந்தது.
  • இரண்டாவது நடைமுறை சார்ந்தது. நடைமுறையில் கனரகத் தொழில்களை உருவாக்க வேண்டிய பொறுப்பை அரசே ஏற்க வேண்டியிருந்தது. ஏனெனில் அவற்றை உருவாக்க மிக அதிகமான முதலீடு தேவைப்பட்டது.

Question 5.
பூமிதான இயக்கம் பற்றி எழுதுக.
Answer:

  • நிலம் இல்லாத ஏழைகளுக்கு உபரியாக நிலம் உள்ளவர்களிடமிருந்து நிலங்களை தானமாக பெற்றுத் தருவது பூமிதான இயக்கமாகும்.
  • வினோபா பாவே தனது பூமிதான இயக்கத்தின் மூலம் பெரும் நிலவுடைமையாளர்கள் தங்களிடம் உபரியாக உள்ள நிலங்களைத் தாங்களாவே முன்வந்து வழங்க இணங்க வைத்த முயற்சிகள் மக்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
குத்தகை சீர்திருத்தங்களின் நோக்கங்கள் யாவை?
Answer:

  • குத்தகையை முறைப்படுத்துவது.
  • குத்தகைதாரர்களின் உரிமைகளை பாதுகாப்பது.
  • நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றிற்கான உரிமையை குத்தகைதாரர்களுக்கு அளிப்பது.

Question 2.
இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவுகள் யாவை?
Answer:

  • இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது.
  • விவசாயிகளிடமிருந்து உபரி உணவு தானியங்களை விலைக்கு வாங்கிய அரசு பெருமளவில் தானியக் கையிருப்பை ஏற்படுத்தி அவற்றை இந்திய உணவுக் கழகத்திற்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைத்தது.
  • மக்களுக்கான உணவு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.
  • பசுமைப்புரட்சி மிகவும் வெற்றிகரமானதாக இருந்தபோதிலும் அது சில எதிர்மறையானவிளைவுகளையும் ஏற்படுத்தியது.
  • வசதி வாய்ப்புகள் நிறைந்த பகுதிகள் வசதி வாய்ப்புகள் குறைந்த பகுதிகள் ஆகியவற்றிற்கு இடையிலான ஏற்ற தாழ்வுகளை அதிகரித்தது.
  • காலப்போக்கில் விவசாயிகளிடையே அதிக அளவில் ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதன் விளைவாகச் சூழலியல் பிரச்சனைகள் தோன்றலாயின.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
மத்திய அரசு 1980களில் கொண்டு வந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை விளக்குக?
Answer:

  • 1980இல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
  • கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • நிலத்தை மேம்படுத்துவதற்காகவோ பால் உற்பத்திக்காகப் பசுக்கள் அல்லது ஆடுகளை வழங்குதல் அல்லது சிறிய கடைகள் வைக்கவோ அல்லது வேறுவணிகத் தொடர்பான வியாபாரங்கள் செய்வதற்கான உதவியாகவோ இருக்கலாம்.
  • இதன் இலக்கு ஐந்து ஆண்டுகளில் (1980-1985) ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆண்டொன்றுக்கு 600 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்குவது.
  • இந்த உதவிகள் 15 மில்லியன் குடும்பங்களுக்கு சென்றடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • 1999 ஆம் ஆண்டு வரையின் 53:5 மில்லியன் குடும்பங்களை இத்திட்டம் சென்றடைந்தது.

Question 4.
இந்திய வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் யாவை?
Answer:
இந்திய வேளாண்மையில் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் இரண்டு வகைப்படும். அவையாவன,

  1. நிறுவன காரணி – நில உடைமை மற்றும் விவசாய தொழிலாளர்கள் இடையே நிலவிய சமூக பொருளாதார சிக்கல்கள்.
  2. தொழில்நுட்ப காரணி – வீரிய விதைகள், இரசாயன உரங்கள், நீர்ப்பாசனம் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தாமை ஆகியவையாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணிகள் யாவை?
Answer:

  • நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள்.
  • கட்டுமானப் பணிகளை முடிப்பதில் ஏற்படும் தாமதத்தால் அதிக முதலீட்டு செலவு.
  • தேவைக்கு அதிகமானோர் பணியமர்த்தப்பட்டனர். இதனால் நிறுவனங்களை இயக்குவதற்கான செலவு அதிகரித்தது. இவைகள் பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணங்களாகும்.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.
Answer:
1. ஜமீன்தாரி முறை ஒழிப்பு :

  • ஜமீன்தார் என்பவர்கள் நில உடைமையாளர் வகுப்பைச் சேர்ந்தவர்களாவர். தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து குத்தகை வசூல் செய்து அரசுக்கு குறிப்பிட்ட அளவு வரியாக செலுத்துவர்.
  • ஜமீன்தார்கள் பொதுவாக விவசாயிகளிடமிருந்து அதிக தொகையினை வசூலித்து அவர்களை வறிய நிலைக்கு உள்ளாக்கினர்.
  • இவர்களின் உரிமைகளை ஒழித்து இவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு விவசாயிகளுக்குத் தருவது அரசின் குறிக்கோளாகும்.
  • 1951மற்றும் 1955 இல் அரசு நிறைவேற்றிய அரசியல் அமைப்பு சட்டதிருத்தங்கள் மூலம் 1956ல்ஜமீன்தாரி முறை ஒழிப்பு நிறைவு பெற்றது.
  • இதன்மூலம் 30 லட்சம் குடியானவர்களும், குத்தகைதாரர்களும் 62 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு உரிமையாளர்களாயினர்.
  • இருந்த போதிலும் இச்சீர்திருத்தத்தின் மூலம் திட்டமிடப்பட்ட நோக்கங்களில் ஒரு சிறுபகுதியை மட்டுமே எட்ட முடிந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

2. குத்தகை சீர்திருத்தம் :

  • இந்தியாவில் பயிரிடப்படும் மொத்த நிலத்தில் ஏறத்தாழ 50 விழுக்காடு நிலங்கள் குத்தகை முறையின் கீழ் இருந்தன.
  • குத்தகை என்பது பொருளாக, நிலத்தில் விளைந்த விளைச்சலில் குறிப்பிட்ட பங்காக பெறப்பட்டது.
  • நில உரிமையாளர்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பது, என முடிவு செய்தது.
  • குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும். குத்தகை உரிமையை மரபுரிமையாக்குவதற்கும் இயற்றப்பட்ட சட்டங்கள் வெற்றி பெறவில்லை.
  • ஒரு முழுமையான நடைமுறைப்படுத்தக் கூடிய நில உச்ச வரம்பு இல்லாத சூழ்நிலையில் குத்தகை சீர்திருத்தங்கள் பயனற்று போயின.

Question 2.
நிலச் சீர்திருத்தங்கள் அவற்றின் நோக்கங்களில் தோல்வியடைந்தது ஏன் என்பதை விளக்குக.
Answer:

  • நிலத்தின் தரம் ஒரே மாதிரியாக இல்லாததால் நில உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் நிலங்களின் அளவை நிர்ணயம் செய்வது சிக்கல்கள் நிறைந்த பணியாக இருந்தது.
  • இந்தச் சீர்திருத்தம் நில உச்ச வரம்புச் சட்டத்தில் சில வகையான நிலங்களுக்கு வழங்கப்பட்ட சில விதி விலக்குகளை சிலர் பயன்படுத்திய விதம் குறித்தும் நில ஆவணங்கள் திருத்தம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.
  • உணரத்தக்க அளவில் செயல் திறனில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை .
  • பொருளாதார ரீதியாக, நில உரிமையையும், பாதுகாப்பையும் பெற்ற வேளாண் குடி மக்களின் கீழ் வேளாண்துறை செழித்தோங்கும் என்ற கனவு கனவாகவே இருந்தது.
  • ஒட்டு மொத்தமாக பார்க்கையில் நிலச்சீர்திருத்த சட்டம் மிகப்பெரும் வெற்றியைப் பெறவில்லை.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம் குறித்து மதிப்பிடுக.
Answer:

  • கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை சமூகத் துறையில் இடம் பெற்றிருப்பதோடு கல்வியின் நிலையம் சுகாதாரக் குறிப்பான்களுமே ஒரு நாட்டின் சமூகவளர்ச்சியை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களாக உள்ளன.
  • இந்தியாவில் 1951 இல் 18.3 விழுக்காட்டிலிருந்து எழுத்தறிவு நிலை 2011இல் 74 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
  • ஆண்களில் 82 விழுக்காட்டினரும், பெண்களில் 65 விழுக்காட்டினரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். எழுத்தறிவில் பெண்கள் பின்தங்கியிருந்தனர்.
  • தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைப்பள்ளி வரையிலான பள்ளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது.
  • மேல்படிப்பு மையங்களின் எண்ணிக்கையும் பெருகிற்று. 2014-15 இல் நாட்டில் 12.72 லட்சம் தொடக்க உயர் தொடக்கப் பள்ளிகளும் 2.45 லட்சம் இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் 38,498 கல்லூரிகளும் 43 மத்தியப் பல்கலைக்கழகங்களும் 316 மாநிலப் பல்கலைக்கழகங்களும் செயல்பட்டன.
  • நகர மற்றும் கிராமப்புறங்களில் இடைநிற்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தோராகவே இருந்தனர்.
  • குறிப்பாகப் பெண் குழந்தைகளே இடை நிற்றலில் அதிகமாக இருந்தனர்.
  • சேர்க்கை விகிதத்திலும் இடைநிற்றல் விகிதத்திலும் மிகப்பெரும் பிராந்திய வேறுபாடுகள் காணப்பட்டன. ஆகவே பின்தங்கிய மாநிலங்களிலும் பகுதிகளிலும் பள்ளிக் கல்வியின் நிலை மோசமாகவே இருந்தது.
  • இடைநிற்றல் பிரச்சனையை தீர்க்க அரசாங்கத்தினால் அனைவருக்கும் கல்வித்திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மற்றும் அண்மையில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் போன்றவற்றின் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 4.
முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.
Answer:

  • முதலாவது ஐந்தாண்டு திட்டம் (1951-56) வேளாண்மையை வளர்ப்பதிலும் குறிப்பாக வேளாண் உற்பத்தியிலும் கவனம் செலுத்தியது.
  • மொத்த முதலீட்டில் 31 விழுக்காடுகள் வேளாண்மைக்கும் நீர்பாசனத்திற்கும் ஒதுக்கப்பட்டது.
  • இதற்கு பின்னர் தொழில் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மொத்த முதலீட்டில் வேளாண்மைக்கான பங்கு 20 விழுக்காட்டிற்கும் 24 விழுக்காட்டிற்கும் இடையே இருந்தது.
  • பொதுவாக மகலனோபிஸ்திட்டம் என அறியப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் (1956-61)பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு கரைத் தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியது. முதலாவது திட்டத்தில் 6 விழுக்காடாக இருந்த தொழில்துறையின் பங்கு இரண்டாவது திட்டத்திற்குப் பின்னர் 24 விழுக்காடாக உயர்ந்தது.
  • முதலிரண்டு திட்டங்களும் ஓரளவிற்கு மிதமான 4 விழுக்காடுவளர்ச்சியை இலக்காகக் கொண்டிருந்தன. இதை பொருளாதார நிபுணர்கள் இந்து வளர்ச்சி விகிதம் என அழைத்தனர்.
  • இந்த வளர்ச்சி விகிதங்கள் அடையப்பட்டதால் அவை வெற்றி பெற்ற திட்டங்களாகக் கருதப்பட்டன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
இந்திய விடுதலைக்குப்பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க.
Answer:
அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் :

  • விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்து ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் 1909இல் J.R.D. டாட்டா மற்றும் மைசூர் மகாராஜா ஆகியோரின் நிதியுதவியில் பெங்களூருவில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனம் மட்டுமேயாகும்.
  • 1945 இல் முன்னவர் ஹோழி. J.பாபா என்பாரின் முன்னெடுப்பில் டாட்டா என்பவரின் நிதியுதவியுடன் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பெற்றது.
  • புனேயில் அமைக்கப்பட்ட தேசிய வேதியியல் ஆய்வகம் புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வகம் ஆகியவை நாடு விடுதலை பெற்ற காலத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்டவை.

ஆராய்ச்சி நிறுவனங்களின் வகைகள் :

  • அறிவியல் துறையின் வானியற்பியல், மண்ணியல், நிலவியல், சார் இயற்பியல், உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் கணித அறிவியல் மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகின.

அணுசக்தி ஆணையம் :

  • அணுச்சக்தி ஆணையமானது அணு அறிவியலின் வளர்ச்சிக்கு மைய முகமையானதாக திகழ்கிறது. அணுச்சக்தி உற்பத்தி அணு ஆயூத உற்பத்தி ஆகிய இரண்டின் மீதும் கவனம் செலுத்தும்.
  • போர்திறம் சார்ந்த ஆய்வுக்கான பல நிறுவனங்களுக்கு அணுசக்தி ஆணையம் நிதியளிக்கிறது.

வேளாண்மை:
வேளாண்மை வளர்ச்சியும் ஆய்வுகளையும் இந்திய வேளாண்மை ஆய்வுக்கழகம் ஒருங்கிணைக்கிறது. இதன் ஆய்வுகள் வேளாண்மை குறித்து மட்டுமல்லாமல் துணை நடவடிக்கைகளாக மீன் வளர்ப்பு, வனங்கள், பால்வளம், தாவர மரபியல், உயிரி – தொழில் நுட்பம், பல்வேறு பயிர் வகைகளான நெல், உருளைக்கிழங்கு வகைகள், பழங்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளையும் இவ்வமைப்பு மேற்கொள்கிறது.

வேளாண்மை பல்கலைக்கழகங்கள் :

  • வேளாண்மை பல்கலைக்கழகம் கல்வி கற்பித்தல், வேளாண்மை நடைமுறைகள் குறித்த ஆய்வு ஆகியவற்றில் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளன.
  • இந்தியாவில் 67 வேளாண்மை பல்கலைகழகம் உள்ளன. இவற்றில் 3 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் :

  • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியலின் வெவ்வேறு பிரிவுகளுக்காக நிறுவப்பெற்ற சிறப்பு நிறுவனங்களாகும்.
  • முதல் IIT கரக்பூரில் நிறுவப்பெற்றது. தொடர்ந்து டெல்லி பம்பாய் கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டன.
  • இச்சமயம் நமது நாட்டில் 23 IIT கள் செயல்படுகிறது.
  • 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களும், 23 இந்திய தகவல் தொழில் நுட்பகழக நிறுவனங்களும் செயல்படுகின்றன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் குறித்த வகுப்பறையில் விவாதம் நடத்தவும்.

12th History Guide ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் Additional Questions and Answers

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 1. 1950இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில் துறையில் பங்கு ………….
அ) 3 விழுக்காடுகள்
ஆ) 13 விழுக்காடுகள்
இ) 23 விழுக்காடுகள்
ஈ) 31 விழுக்காடுகள்
Answer:
ஆ) 13 விழுக்காடுகள்

Question 2.
இந்திய மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு …………. சார்ந்திருந்தனர்.
அ) வணிகம்
ஆ) குடிசைத் தொழில்
இ) வேளாண்மை
ஈ) கால்நடை வளர்த்தல்
Answer:
இ) வேளாண்மை

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
ஜமீன்தார் என்பவர் ……….. வகுப்பை சேர்ந்தோராவார்.
அ) நிலவுடைமையாளர்
ஆ) விவசாயி
இ) தொழிலாளர்
ஈ) வணிகம்
Answer:
அ) நிலவுடைமையாளர்

Question 4.
ரயத் என்பதன் பொருள்.
அ) கிராமம்
ஆ) வணிகர்
இ) நிலம்
ஈ) விவசாயி
Answer:
ஈ) விவசாயி

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
‘மகல்’ என்பதன் பொருள்.
அ) கிராமம்
ஆ) நகரம்
இ) மாநகரம்
ஈ) ஒன்றியம்
Answer:
அ) கிராமம்

Question 6.
நிலையான நிலவரித்திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பகுதி
அ) சென்னை
ஆ) மும்பை
இ) வங்காளம்
ஈ) பஞ்சாப்
Answer:
இ) வங்காளம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 7.
இந்திய அரசியல் அமைப்பில் 2வது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?
அ) 1951
ஆ) 1955
இ) 1965
ஈ) 1972
Answer:
ஆ) 1955

Question 8.
பின்வருவனவற்றை கால வரிசைப்படுத்துக?
i) ஜமீன்தாரி முறை ஒழிப்பு நிறைவு பெற்றது.
ii) இந்திய அரசியல் அமைப்பின் 2வது திருத்தம்.
iii) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்திட்டம் அறிமுகம்.
அ) ii,i, iii
ஆ) i, ii, iii
இ) iii, ii,i
ஈ) i, iii, ii
Answer:
அ) ii, i, iii

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 9.
கொடுக்கப்பட்டுள்ள விடை குறிப்புகளைக் கொண்டு பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. திட்டக்குழு 1. ராஷ்டீரிய மத்யமிக் சிக்ஷா அபியான
ஆ. 2வது ஐந்தாண்டு திட்டம் 2. சர்வ சிக்ஷா அபியான்
இ அனைவருக்கும் கல்வி திட்டம் 3. 1950
ஈ அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் 4. 1956-61

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் 2
Answer:
ஆ) 3 4 2 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 10.
இந்தியாவில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகங்கள்.
அ) 67
ஆ) 76
இ) 57
ஈ) 75
Answer:
அ) 67

Question 11.
விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த ஒரே ஒரு அறிவியல் ஆய்வு நிறுவனம் அமைக்கப்பட்ட இடம்.
அ) புனே
ஆ) டெல்லி
இ) பெங்களூரு
ஈ) சென்னை
Answer:
இ) பெங்களூரு

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 12.
கூற்று : அரசாங்கம் வேளாண்மையை வளர்ப்பதற்காகத் தொழில்நுட்ப மாற்று பாதைக்கு மாறியது.
காரணம் : 1960 களில் கடுமையான உணவு தானியப் பற்றாக்குறை ஏற்பட்டது.
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றை காரணம் விளக்குகிறது.
ஆ கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று, காரணம் சரி, கூற்றை காரணம் விளக்கவில்லை .
Answer:
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றை காரணம் விளக்குகிறது

Question 13.
திட்டக்குழு கலைக்கப்பட்ட ஆண்டு …………………..
அ) 1950
ஆ) 1951
இ) 2005
ஈ) 2015
Answer:
ஈ) 2015

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 14.
திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கும் பதிலாக 2015-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு ………………….
அ) புதிய ஐந்தாண்டுத் திட்டம்
ஆ) தாராளமயமாக்கல்
இ) நிதி அயோக்
ஈ) பாரத மிகு மின் நிறுவனம்
Answer:
இ) நிதி அயோக்

Question 15.
2012-ல் பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை …………
அ) 252
ஆ) 5
இ) 225
ஈ) 255
Answer:
இ) 225

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான இருகாரணிகளின் தொடர்புகளை பற்றி கூறுக.
Answer:
1. நிறுவனம் சார்ந்த காரணிகள் :
நில உடைமை வர்க்கத்தை சேர்ந்தோருக்கும் இடையே நிலவிய சமூக பொருளாதார உறவுகளைக் குறிப்பதாகும்.
2. தொழில்நுட்பக் காரணிகள் :
சிறந்த விதைகள், மேம்படுத்தப்பட்ட வேளாண்மை முறைகள், ரசாயன உரங்களைப் பயன்படுத்துதல் டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றோடு தொடர்புடையவையாகும்.

Question 2.
ஜமீன்தார்கள் என்போர் யார்?
Answer:

  • ஜமீன்தார் என்பவர் நிலவுடமையாளர் வகுப்பைச் சேர்ந்தோராவர்.
  • ஆங்கிலேயர் ஆட்சியின்போது நிரந்தர நிலவரி திட்டத்தின் கீழ் இடைத்தரகர்களாக நியமிக்கப்பட்டனர்.
  • இவர்கள் தங்கள் நிலங்களில் விவசாயம்செய்யும்விவசாயிகளிடமிருந்து குத்தகைவசூல்செய்து அரசுவுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு தொகையை நிலவரியாக செலுத்த கடமைப்பட்டவர்கள் ஆவர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
மறைமுக வேலையின்மை – குறிப்பு தருக.
Answer:

  • சுதந்திரம் பெற்ற போது இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினர் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையைச் சார்ந்திருந்தனர்.
  • தானிய உற்பத்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவளிக்கப் போதுமானதாக இல்லை.
  • இந்நிலை தானாக தனிநபரின் வருமானத்தை மிகவும் குறைந்த நிலைக்குக் கொண்டு சென்றது.
  • இத்தகைய சூழல் “மறைமுக வேலையின்மை ” என அழைக்கப்படுகிறது.

Question 4.
நில உச்சவரம்பு என்றால் என்ன?
Answer:

  • நில உச்ச வரம்பு என்பது தனிநபர்கள் அதிகபட்சம் எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை குறிப்பிடுகின்றது.
  • இதனை நடைமுறைப்படுத்த 1950க்கு பின்னர் சட்டங்கள் இயற்றப்பட்டன.
  • தமிழ்நாட்டில் முதன்முறையாக 1961ல் நடைமுறைபடுத்தப்பட்டது.

Question 5.
குத்தகை சீர்திருத்தங்களின் போது மேற்கொள்ளப்பட்ட இரண்டு குறிக்கோள்கள் யாவை?
Answer:

  • நில உடைமையாளர்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிப்பது.
  • நிலத்தின் பயன்பாட்டுத் தன்மையை மேம்படுத்துவது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 6.
பசுமைபுரட்சி என்றால் என்ன?
Answer:

  • வேளாண்மையை மேம்படுத்த புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தப்பட்டன.
  • உயர்ரக வீரிய வித்துக்கள் பயன்படுத்தி தானிய உற்பத்தியை அதிகரிக்கப்பட்டது.
  • பூச்சிக்கொல்லி மருந்துக்கள், ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன.
  • நிலத்தை உழவு செய்ய டிராக்டர் போன்ற கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவாக உணவு உற்பத்தி அதிகரிக்கச் செய்தது
  • இதற்கு பசுமை புரட்சி என்று பெயர்.

Question 7.
அணுசக்தி ஆணையம் – குறிப்பு தருக.
Answer:

  • அணுசக்தி ஆணையம் அணு அறிவியலின் வளர்ச்சிக்கு மைய முகமையாகத் திகழ்கிறது.
  • அணுசக்தி உற்பத்தி, அணு ஆயுத உற்பத்தி ஆகிய இரண்டின் மீதும் கவனம் செலுத்தும்.
  • இது போர்த்திறம் சார்ந்த முக்கியத்துவம் பெற்றதாகும்.
  • அறிவியல் சார்ந்த ஆய்வுகளுக்காக பல நிறுவனங்களுக்கு அணுசக்தி ஆணையம் நிதியளிக்கிறது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
‘ஜமீன்தார்கள்’ பற்றிய பொதுமக்களின் கருத்து யாது?
Answer:

  • ஜமீன்தார்கள் பொதுவாக விவசாயிகளிடமிருந்து அதிக தொகையினை வசூலித்து அவர்களை வறிய நிலைக்க உள்ளாயினர்.
  • பொது மக்களின் கருத்துப்படி, ஜமீன்தார்கள் எனும் இவ்வகுப்பினர் நீதிநெறிமுறையற்றவர்கள், ஆடம்பர பிரியர்கள், பயனற்றவர்கள், சுயமாக சம்பாதிப்பது வருமானத்தில் வாழ்கின்றவர்கள் என்று கருதப்பட்டனர்.
  • ஜமீன்தார்களின் உரிமைகளை ஒழிப்பதும் நிலங்களை மீட்டு விவசாயிகளுக்குத் தருவதும் அரசின் முக்கிய குறிக்கோளாக கருதினர்.

Question 2.
ஆங்கிலேயர்களின் மூன்று வகையான வருவாய் வசூல் முறையைப் பற்றி கூறுக.
Answer:
ஆங்கிலேயர்களால் மூன்று வகையான வருவாய் வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அ. நிலையான நிலவரித்திட்டம்

வங்காளம் மற்றும் வட இந்தியாவின் பெரும்பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிரந்தர நிலவரித்திட்டத்தின் கீழ், நிலவரியைச் செலுத்தும் பொறுப்பு ஜமீன்தார்கள் எனப்படும் குத்தகைதாரர்களிடம் விடப்பட்டது.
ஆ. ரயத்துவாரிமுறை

  • ரயத் என்றால் விவசாயி என்று பொருள்.
  • ரயத்துவாரி முறையின் கீழ் விவசாயிகள் நிலவரியை நேரடியாக
  • அரசாங்கத்திடம் செலுத்தினர்.

இ. மகல் வாரிமுறை

  • நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மகல்வாரி முறை காணப்பட்டது.
  • இதில் நிலவரியைச் செலுத்துவது கிராமத்தின் கூட்டு பொறுப்பாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
1948 இல் அறிவிக்கப்பட்ட முதல் தொழில் கொள்கையின் தன்மை யாது? (அ) தொழிலகங்களை எவ்வாறு பிரித்தது?
Answer:
1948 இல் அறிவிக்கப்பட்டது முதல் தொழில் கொள்கை அறிக்கை தொழிலகங்களை நான்கு வகையாகப் பிரித்தது.

  1. போர்த்துறை சார்ந்த தொழிலகங்கள் அரசின் முற்றுமைகளாக இருக்கும். (அணுசக்தி, ரயில்வே, ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள்
  2. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 18 தொழிலகங்கள் (கனரக இயந்திரங்கள். உரம், வீரியமிக்க ரசாயணங்கள், போர்க்கருவிகள் மற்றவை) அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.
  3. பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டிலும் இடம் பெறும் தொழிலகங்கள்.
  4. தனியார் தொழிலகங்கள் என நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டது.

Question 4.
ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.
Answer:
ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகள் :

  • பொருளாதாரத்தை விரிவுபடுத்துதல்
  • தேசிய வருமானத்திலும் தனிநபர் வருமானத்திலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி.
  • தொழிற்சாலைகளின் உற்பத்தி அதிகரிப்பு
  • வேளாண்மையில் நவீன இடுபொருட்களைப் பயன்படுத்துவது அதிகரித்தவுடன் வேளாண் உற்பத்தியும் அதிகரித்தது.
  • பொருளாதாரம் அதிக அளவில் பன்முகப்படுத்தப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 5.
திட்டக் குழுவைப் பற்றி நீர் அறிவது யாது?
Answer:
திட்டக்குழு:

  • பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான திட்டங்களை வடிவமைப்பதற்காக 1950ல் திட்டக்குழு (Planning Commission) நிறுவப்பட்டது.
  • இதன் தலைவராக பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இருந்தார்.
  • ஒவ்வொரு திட்டமும் பொருளாதாரத்தின் செயல்பாடுகளையும், எதிர்கால வளர்ச்சிக்கு கிடைக்கப்பெறும் மூல வளங்களையும் திட்டக்குழு மதிப்பீடு செய்தது.
  • வேளாண்மை , தொழிலகம், ஆற்றல், சமூகத் துறைகள் மற்றும் தொழில் நுட்பம், முழுமையான பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்தன.
  • தன்னிறைவுப்பொருளாதாரத்தை உருவாக்குவது திட்டமிடலின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

Question 6.
“இந்தியா சமதர்ம பாணியிலான சமூகம்” என்பதைப் பற்றி கூறுக.
Answer:
பொருளாதார வளர்ச்சியைப் பெற

  • சுதந்திர செயல்பாட்டு முறை
  • முதலாளித்துவ பாதை
  • சமதர்ம பாதை என இருவழிகள் இருந்தன.
    இந்தியா இரண்டாவது பாதையைத் தேர்வு செய்தது. இந்திய அரசியலைமைப்பின் முகவுரையில் “ஒரு இறையாண்மை உடைய, சமதர்ம, மக்களாட்சி குடியரசு” என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
நிலசீர்த்திருத்தச் சட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகளை ஆய்க :
Answer:

  • நிலச்சீர்திருத்தச்சட்டம் மிகப்பெரும் வெற்றியைப் பெறவில்லை .
  • பொருளாதார ரீதியாக நில உரிமையையும் பாதுகாப்பையும் பெற்ற வேளாண் குடிமக்களின் கீழ் வேளாண்துறை செழித்தோங்கும் என்ற கனவு கனவாகவே இருந்தது.
  • உணரத்தக்க அளவில் செயல்திறனில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை .
  • தொழில்நுட்ப வளர்ச்சியினால் வேளாண்மை முன்னேறியுள்ளதால் அதிகம் திறமை வாய்ந்த நிலச்சந்தை ஒன்று செயல்படுவதாகத் தெரிகிறது. அது நீண்ட கால வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும்.
  • ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டதால் நற்பயனை அளித்துள்ளது.
  • நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் விவசாயிகளை தங்கள் உரிமைகள் குறித்த அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாறியதோடு அவர்களை அதிகாரம் மிக்கவர்களாகவும் மாற்றியுள்ளது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 2.
நில உச்சவரம்பு என்றால் என்ன? நில உச்ச வரம்புச் சட்டங்களை அமல்படுத்துவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களையும் விவரி:
Answer:
நில உச்சவரம்பு :

  • நில உச்சவரம்பு என்பது தனிநபர்கள் அதிகபட்சம் எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை குறிப்பிடுகின்றது.
  • இதனை நடைமுறைப்படுத்த 1950 களுக்குப் பின்னர் சட்டங்கள் இயற்றப்பட்டன

நில உச்சவரம்பை நடைமுறைப்படுத்துதல் :

  • தமிழ்நாட்டில் முதன் முறையாக 1961ல் நடைமுறை படுத்தப்பட்டது.
  • 1972 வரை ஒரு ‘நில உரிமையாளர்’ எவ்வளவு நிலங்களைச் சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
  • 1972க்குப் பின்னும் அடிப்படை அலகானது குடும்பம்’ என மாற்றப்பட்டது.
  • இதனால் நில உரிமையாளர் தனது குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அளவு நிலங்களுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள்.

நடைமுறைச் சிக்கல்கள் :

  • நிலத்தின் தரம் ஒரே மாதிரியாக இல்லை .
  • நீர்பாசனநிலங்கள், மானாவரிநிலங்கள், ஒருபோக நிலங்கள் மற்றும் இருபோக நிலங்கள் என வேறுபாடுகள் இருந்ததால் நில உச்ச வரம்பு சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

விதிவிலக்குள்ள நிலங்கள் :

  • பழத்தோட்டங்கள், காய்கறி, பூக்கள் விளையும் தோட்டங்கள், நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், அறக்கொடை, சமயம் சார்ந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் , கரும்பு பயிரிடப்படும் பெரும் தோட்டங்கள் ஆகியவைகள் நில உச்சவரம்பு சட்டத்திலிருந்து விலக்கு பெற்றன.
  • இந்த விதி விலக்குகளை சிலர் பயன்படுத்தியவிதம் குறித்தும், சில ஆவணங்கள் திருத்தம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.
  • இறுதியில் 65 லட்சம் ஹெக்டேர் நிலம் உபரியாக கையகப்படுத்தப்பட்டு 55 லட்சம் குத்தகைதாரர்களுக்கு
    தலா ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு சற்று கூடுதலாக விநியோகம் செய்யப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 9 ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Question 3.
1991 ஆம் ஆண்டு தாராளமயமாக்கல் – தொழில் கொள்கை அறிக்கையின் தன்மை பற்றியும் அதன் விளைவுகளையும் விவாதி.
Answer:
1991 தொழில் கொள்கையின் தன்மை :

  • 1991 இல் இந்திய அரசு தன்னுடைய தொழில் கொள்கையில் ஒரு மாற்றத்தை அறிவித்தது.
  • இது உரிமங்கள் வழங்கப்படுவதிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதாகவும் தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்வதாகவும் தனியார்துறையின் அதிகமானபங்கேற்பை அனுமதிப்பதாகவும் அமைந்தது.
  • நாட்டில் பொருளாதாரம் குறித்து நுகர்வோரின் மனதில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
  •  மத்திய தர வர்க்கம் ஆசைப்பட்ட உயர்ந்த வாழ்க்கை கிட்டியது.

நேர்மறை விளைவு :

  • தாராளமயமானது இந்தியாவை மிக அதிகமாக அந்நிய நாடுகளின் முதலீட்டினை ஈர்க்கும் இடமாக மாறியுள்ளது.
  • மாநில அரசுகள் தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்தது.
  • இவை அனைத்தும் ஒரு செல்வ செழிப்பான பொது சூழலை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்மறை விளைவுகளில் :

  • தாராளமயமாக்கலும் உலகமயமாக்கலும் அதிக ஊதியம் மற்றும் குறைந்த ஊதியம் பெறுவோர்க்கு இடையிலான ஊதிய ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது.
  • முறை சார்ந்த தொழில்களில் புதிய வேலைகளுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
  • முறை சாராத தொழில்களில் புதிய வேலைகளுக்கான வாய்ப்பு அதிகம் உருவாயிற்று.
  • இவ்விரு துறைகளுக்குமிடையிலான ஏற்றத் தாழ்வுகளும் அதிகரித்து விட்டன.

முடிவு :

  • தாராளமயமாக்களின் அளவானது சுதந்திரப் பொருளாதாரத்தை ஆதரிப்போர் மற்றும் இடதுசாரி பொருளாதார நிபுணர்கள் ஆகிய இருசாராருக்கும் மகிழ்ச்சியளிக்கவில்லை .
  • தனியாருக்கு சுதந்திரம் வழங்கியதன் மூலம், சமூக நீதியையும், மக்கள் நலத்தையும் உறுதிப்படுத்தி, முன்னேற்ற வேண்டிய தனது பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொண்டதாக சில பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

12th History Guide இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?
அ) மார்ச் 23, 1940
ஆ) ஆகஸ்ட் 8, 1940
இ) அக்டோபர் 17, 1940
ஈ) ஆகஸ்ட் 9, 1942
Answer:
இ) அக்டோபர் 17, 1940

Question 2.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. இந்து – முஸ்லீம் கலவரம் 1. மோகன் சிங்
ஆ ஆகஸ்ட் கொடை 2. கோவிந்த் பல்லப் பந்த்
இ. பிரிவினைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் 3. லின்லித்கோ பிரபு
ஈ இந்திய தேசிய இராணுவம் 4. நவகாளி

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் 1

Answer:
இ) 4 3 2 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 3.
கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது?
அ) வேவல் பிரபு
ஆ) லின்லித்கோ பிரபு
இ) மௌண்ட்பேட்டன் பிரபு
ஈ) இவர்களில் யாருமில்லை
Answer:
இ) மௌண்ட்பேட்டன் பிரபு

Question 4.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் 1. டோஜா
ஆ. சீனக் குடியரசுத் தலைவர் 2. வின்ஸ்ட ன் சர்ச்சில்
இ பிரிட்டிஷ் பிரதமர் 3. ஷியாங் கே ஷேக்
ஈ. ஜப்பான் பிரதமர் 4. எஃப்.டி. ரூஸ்வெல்ட்

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் 2

Answer:
இ) 4321

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 5.
சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்?
அ) 1938
ஆ) 1939
இ) 1940
ஈ) 1942
Answer:
ஆ) 1939

Question 6.
மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது செத்துமடி” என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்?
அ) சட்டமறுப்பு இயக்கம்
ஆ) ஒத்துழையாமை இயக்கம்
இ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
ஈ) இவை அனைத்தும்
Answer:
இ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்

Question 7.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?
அ) உஷா மேத்தா
ஆ) பிரீத்தி வதேதார்
இ) ஆசப் அலி
ஈ) கேப்டன் லட்சுமி
Answer:
அ) உஷா மேத்தா

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 8.
இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) மோதிலால் நேரு
இ) இராஜாஜி
ஈ) சுபாஷ் சந்திர போஸ்
Answer:
அ) ஜவஹர்லால் நேரு

Question 9.
1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?
அ) வேவல் பிரபு
ஆ) லின்லித்கோ பிரபு
இ) மௌண்ட்பேட்டன் பிரபு
ஈ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
Answer:
ஆ) லின்லித்கோ பிரபு

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 10.
கூற்று : வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதன் குறிக்கோளை அடையவில்லை.
காரணம் : அப்போதைய பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்கு முறையைப் பின்பற்றியது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு –
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
Answer:
அ) கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது

Question 11.
இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?
அ) ஜெர்மனி
ஆ) ஜப்பான்
இ) பிரான்ஸ்
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Answer:
ஆ) ஜப்பான்

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 12.
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர்………………………… ஆகும்.
அ) சுபாஷ் படைப்பிரிவு
ஆ) கஸ்தூர்பா படைப்பிரிவு
இ) கேப்டன் லட்சுமி படைப்பிரிவு
ஈ) ஜான்ஸி ராணி படைப்பிரிவு
Answer:
ஈ) ஜான்ஸி ராணி படைப்பிரிவு

Question 13.
சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?
அ) இரங்கூன்
ஆ) மலேயா
இ) இம்பால்
ஈ) சிங்கப்பூர்
Answer:
ஈ) சிங்கப்பூர்

Question 14.
இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது?
அ) செங்கோட்டை, புதுடெல்லி
ஆ) பினாங்
இ) வைஸ்ரீகல் லாட்ஜ், சிம்லா
ஈ) சிங்கப்பூர்
Answer:
அ) செங்கோட்டை, புதுடெல்லி

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 15.
1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி
அ) வேவல் பிரபு
ஆ) லின்லித்கோ பிரபு
இ) மௌண்ட்பேட்டன் பிரபு
ஈ) கிளமண்ட் அட்லி –
Answer:
அ) வேவல் பிரபு

Question 16.
1946இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) மௌலானா அபுல் கலாம் ஆசாத்
இ) ராஜேந்திர பிரசாத்
ஈ) வல்லபாய் படேல்
Answer:
அ) ஜவஹர்லால் நேரு

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 17.
சரியான வரிசையில் அமைத்து விடையைத் தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
(ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம்
(iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(iv) இராஜாஜி திட்டம்
அ) ii, i, iii, iv
ஆ) i, iv, iii, ii
இ) iii, iv, i, ii
ஈ) iii, iv, ii, i
Answer:
அ) ii, i, iii, iv

Question 18.
பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(ii) நேரடி நடவடிக்கை நாள்
(iii) ஆகஸ்ட் கொடை
(iv) தனிநபர் சத்தியாகிரகம்
அ) i, ii, iii, iv
ஆ) iii, i, ii, iv
இ) iii, iv, i, ii
ஈ) i. iii, iv, ii
Answer:
இ) iii, iv, i, ii

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 19.
இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?
அ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
ஆ) மௌண்ட்பேட்டன் பிரபு
இ) கிளமண்ட் அட்லி
ஈ) F.D.ரூஸ்வெல்ட்
Answer:
இ) கிளமண்ட் அட்லி

Question 20.
பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்?
அ) ஆகஸ்ட் 15, 1947
ஆ) ஜனவரி 26, 1950
இ) ஜூன், 1948
ஈ) டிசம்பர், 1949
Answer:
இ) ஜூன், 1948

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?
Answer:
1929-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் மாநாடு லாகூரில் நடைபெற்றது. அம்மாநாட்டில்

  • முதன் முறையாக, முழு விடுதலை வேண்டி தீர்மானம் இயற்றப்பட்டது.
  • பூர்ண சுதந்திரம் அடைவதே, காங்கிரசின் குறிக்கோள் என அறிவிக்கப்பட்டது.
  • உப்பு வரியை எதிர்த்து சட்டமறுப்பு இயக்கம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

Question 2.
ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக?
Answer:
லின்லித்கோ பிரபுவால் ஆகஸ்ட் கொடை 8 ஆகஸ்ட் 1940 அன்று அறிவிக்கப்பட்டது.

  • வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன் அந்தஸ்து, அதிகமான இந்தியர்களைக் கொண்டு செயற்குழுவை விரிவாக்கம் செய்தல்.
  • இந்திய உறுப்பினர்களை கொண்ட போர் ஆலோசனைக் குழுவை உருவாக்கல்
  • சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரித்தல்
  • போருக்குப் பின் இந்திய மக்கள் தங்களுக்கென்ற ஒரு அரசியல் சாசனத்தை இயற்ற உள்ள உரிமையை ஏற்று அதற்கு வாய்ப்பளிக்க உறுதியளித்தல் இதுவே ஆகஸ்ட் நன்கொடையின் சிறப்பாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 3.
கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?
Answer:
கிரிப்ஸின் முன்மொழிவை காங்கிரஸ் நிராகரித்தல் :

  • டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.
  • அரசியல் சாசன வரைவுக்குழுவில் பங்கெடுக்கும் அரசாட்சி நடைபெற்ற மாகாணங்களைச் சேர்ந்தோர் பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.
  • இவை அனைத்துக்கும் மேலாக ஓங்கி நின்றது இந்தியப் பிரிவினை பற்றிய குழப்பமாகும். எனவே கிரிப்ஸின் முன்மொழிவை காங்கிரஸ் நிராகரித்தது.

Question 4.
சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?
Answer:
சிம்லா மாநாடு:

  • வைஸ்ராய் வேவல் பிரபு ஜூன் 1945இல் பிரதமர் சர்ச்சிலின் ஒப்புதல் பெற்று சிம்லா மாநாட்டைக் கூட்டினார்.
  • வைஸ்ராய்வைத்த முன்மொழிவின்படிவைஸ்ராய், முப்படைகளின் தளபதி இந்தியாவின் சாதி இந்துக்கள், முஸ்லீம்கள் சமஅளவில் முக்கியத்துவம் அளித்து பிரதிநிதித்துவமும், பட்டியல் இனங்களுக்கென்று தனிப்பிரதித்துவமும் வழங்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் பற்றிய உரையாடலைத் துவங்கத் திட்டமிடப்பட்டது.
  • இம்முன்மொழிவு யாருக்கும் திருப்தியாய் இல்லை.
  • தீர்மானமெனத்தையும் எட்டாமலேயே 25 ஜூன் முதல் 14 ஜூலை வரை நடந்த சிம்லா மாநாடு முடிவுந்தது.
  • குறிப்பாக வைஸ்ராயின் குழுவிற்கு உறுப்பினர்களை அனுப்புவதில் இந்திய தேசிய காங்கிரஸிற்கும், முஸ்லீம்
    லீகிற்கும் இருந்த உரிமைப் பற்றியப் பிரச்சனையை முன்வைத்தே பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 5.
கேப்டன் மோகன் சிங் எவ்வாறு இந்திய இராணுவத்தை ஏற்படுத்தினார்?
Answer:

  • தென்கிழக்கு ஆசியாவில் நிலை கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியப் படை வீரர்களால் ஜப்பானியப் படைகளுக்கு ஈடு கொடுத்து நிற்க முடியவில்லை.
  • பிரிட்டிஷ் இந்திய படைகளின் அதிகாரிகள் அவர்களின் கீழிருந்த படை வீரர்களை போர்க் கைதிகளாக
    விடுவித்துவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
  • மலேயாவில் இவ்வாறு கைவிடப்பட்ட பட்டிஷ் இந்திய இராணுவத்தின் அதிகாரியான கேப்டன் மோகன் சிங் ஜப்பானியர்களின் உதவியை நாடினார்.
  • ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த போர்க் கைதிகள் யாவரும் மோகன் சிங்கின் தலைமையின் கீழ் விடப்பட்டனர்.
  • ஜப்பானிடம் சிங்கப்பூர் வீழ்ந்ததால் மேலும் பல போர்க் கைதிகள் உருவானதில் மோகன்ராஜ் சிங்கின்
    கட்டுப்பாட்டில் 45,000 போர்வீரர்கள் வந்தனர்.
  • இவர்களில் 40,000 பேரைத் தேர்ந்தெடுத்து 1942இன் இறுதியில் இந்திய தேசிய இராணுவத்தை கேப்டன் மோகன் சிங் ஏற்படுத்தினார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக.
Answer:

  • முஸ்லீம் லீக்
  • ஷிரோமணி அகாலிதல்
  • இந்து மஹாசபா ஆகிய அமைப்புகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்கவில்லை.

Question 2.
சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்.
Answer:

  • இந்தியாவை பொறுத்தமட்டில் விரைவில் சுயாட்சியை உணர்த்தும் அரசு முறையை நிறுவுதல் என்று மொழிந்திருந்தார். ஆனால் அவர் வெளியிட்ட வரைவில் விடுதலை பற்றிய உறுதியான நிலைப்பாடு ஏதும் இருக்கவில்லை .
  • அரசியல் சாசன வரைவுக்குழு – மாகாண சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டும், அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்டவர்களாலும் ஏற்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
  • ஏதாவது ஒரு மாகாணத்திற்கு புதிய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொள்ளத் தயக்கமிருந்தால், அம்மாகாணம் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க பிரிட்டிஷ் அரசோடு தனிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுத்த உரிமை இருப்பதாக கிரிப்ஸ் முன்மொழிவு அறிவித்தது. இதில் பழைய வரைவுகளிலிருந்து மாற்றம் இருப்பதாக தெரியவில்லை.
  • இது பற்றி நேரு, “நான் முதன் முறையாக இவ்வரைவை வாசித்தபோது கடுமையான மனஅழுத்தத்திற்கு
    உட்பட்டேன்” என்று கூறியுள்ளார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 3.
இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் நீக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்குக.
Answer:

  • இந்திய தேசிய காங்கிரஸில் சுபாஷ் சந்திரபோஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
  • காங்கிரஸிற்குள் சுபாஷ் சந்திரபோஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கல்கத்தாவில் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் போஸ் இராஜினாமா செய்தார்.
  • பின்னர் ஃபார்வர்டு பிளாக் கட்சியை துவக்கியதோடு அதைத் தொடர்ந்து இந்திய தேசிய ராணுவத்தையும்
    உருவாக்கி காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து தனித்து புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். எனவே ஆகஸ்ட் 1939ல் சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

Question 4.
1946இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் யாவர்?
Answer:
முகம்மது அலி ஜின்னா, லியாகத் அலிகான், முகமது இஸ்மாயில்கான் மற்றும் குவாஜா சர் நிஜாமுதீன் ஆகியோர் 1946ல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம் பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் ஆவர்.

Question 5.
எத்தகைய சூழ்நிலையில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி சிந்தித்தார்?
Answer:

  • துவக்கத்திலிருந்தே இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தையும், காந்தியடிகளையும் சர்ச்சில் வெறுப்புணர்வோடே அணுகி வந்தார். > போரில் இந்தியர்களின் ஒத்துழைப்பு தேவை என்ற போதும் அவர்தம் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை.
  • இதற்கிடையே ஒருபுறம் விடுதலைக்கான எந்த உறுதியும் கொடுக்காமல் காலணிய அரசு இழுத்தடித்தது.
  • மறுபுறம் சுபாஷ் சந்திரபோஸ் அச்சு நாடுகளோடு கைகோர்த்து சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்துச்
    செல்ல நெருக்கடி கொடுத்தார்.
  • 1942ல் ஜெர்மனியில் இருந்து போஸ் ஆசாத் ஹிந்து ரேடியோ மூலம் இந்திய மக்களை தொடர்பு
    கொண்டு உரை நிகழ்த்தினார். இப்பின்புலத்தில்தான் காந்தியடிகள் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் பற்றி சிந்திக்கலானார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
1. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.
Answer:
வெள்ளையனே வெளியேறு இயக்கம்:

  • கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வியால் காந்தி ஏமாற்றமடைந்தார். இயக்கத் தலைமையைக் காந்தியடிகளிடத்துக் காங்கிரஸ் ஒப்படைத்தது.
  • ஆகஸ்டு 8, 1942ல் காங்கிரஸ் மாநாடு தீர்மானம் நிறைவேற்றி ஆங்கிலேயரை இந்தியாவை விட்டு வெளியேறும்படி கூறியது. விடுதலைக்கான கடைசி போராட்டம் என்று காந்தி அறிவித்தார். அவர் நிகழ்த்திய உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்பதே முடிவு என அறிவித்தார்.
  • ஆங்கிலேயரின் ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வரும்படி காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. காங்கிரஸ் தடை செய்யப்பட்டது.
  • எல்லா முதன்மை தலைவர்களும் கைதாயினர். அடக்கு முறையையும் கொடுங்கோண்மையையும் அப்பாவி மக்கள் மீது அரசு ஏவியது.
  • ஆகஸ்டு 9ல் மும்பை, அகமதாபாத் மற்றும் புனேயில் அமைதியின்மை ஏற்பட்டது. ஆகஸ்ட் 11ல் நிலைமை விரைந்து மோசமானது.

இயக்கத்தின் போக்கு:

  • தீவைப்பு, கொள்ளை, படுகொலை ஆகியவற்றில் மக்கள் இறங்கித் தண்டவாளங்களை பெயர்த்துக் காவல் நிலையம், புகைவண்டி நிலையம் ஆகியவற்றிற்குத் தீ வைத்தனர். இந்தியாவை விட்டு வெளியேறுக இயக்கம் தென்னிந்தியாவிலும் பெரும் ஆதரவு பெற்றது.
  • எதிர்ப்பின் ஆரம்பக்கட்டம் நகர்புறங்களை மையமாகக் கொண்டும் இரண்டாம் நிலையில் அது கிராமப்புறங்களிலும் பரவியது.
  • காங்கிரஸிற்குள் இருந்த சோசலிஷவாதிகள் தலைமறைவாக இருந்து கிராமத்து இளைஞர்களைக் கொரில்லா முறையில் ஒருங்கிணைத்தனர்.
  • காந்தியடிகளின் 10 பிப்ரவரி 1943ல் துவங்கி 21 நாட்கள் உண்ணாவிரதம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது இயக்கத்திற்கு வலுவேற்றியது.

இயக்கத்தின் தீவிரம் :

  • துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்கள் 1060 பேர். அரசின் 208 காவல் கண்காணிப்பு நிலைகளும், 332 இருப்பு பாதை நிலையங்களும் 945 அஞ்சல் அலுவலகங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டன.
  • 205 காவல்துறை வீரர்களாவது தங்கள் பணியை விடுத்து புரட்சியாளர்களோடு கைகோர்த்தனர்.

வானொலி பயன்படுத்தப்படல் :

  • “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் மற்றொரு சிறப்பம்சம் புரட்சியாளர்கள் பம்பாய் நகரில் வானொலி ஒலிபரப்பு முறையை நிறுவி இதன் ஒலிபரப்பு மெட்ராஸ் வரை கேட்கப்பட்டது. இதற்கு வித்திட்டவர் உஷா மேத்தா என்பவராவார்.
  • இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளையனே வெளியேறு இயக்கம் காலனிய அரசுக்குப் பேரிடியாக சென்று விழுந்தது.
  • இவ்வியக்கம் எந்நிலையிலும் எதிர்பார்த்திருக்க முடியாத அளவிற்கு மக்களின் பேராதரவைக் கொண்டு வந்து சேர்த்ததோடு அவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தி காலனிய ஆட்சியாளர்களுக்கு தாங்கள் தவிர்க்க முடியாத பெரும் சக்தி என்ற உண்மையைப் பறை சாற்றியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 2.
சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியது?
Answer:

  • டெல்லியின் செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணையில் காந்தியடிகளின் குரலுக்கு இசைந்து 1920களின் ஆரம்பத்தில் தனது சட்டப்பணிகளை துறந்த ஜவஹர்லால் நேரு நீண்ட இடைவேளைக்குப் பின் தனது தொங்கலாடையை அணிந்து இந்திய தேசிய இராணுவ வீரர்களின் சார்பில் வழக்கில் ஆஜரானார்.
  • காலனிய அரசின் பிடிவாதமான முரட்டுப்போக்கு மற்றுமொரு பேரியக்கத்திற்கு மேடையமைத்துக் கொடுத்தது.
  • இந்திய தேசிய காங்கிரசும் 25 ஜூன் முதல் 10 ஜூலை 1945 வரை நடைபெற்ற சிம்லா மாநாட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து நேரடியாக மக்களைத் திரட்டும் பொருட்டு நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்தியது.
  • அண்மையில் இந்திய அரசியல் சட்டம் 1935இன் கீழ் தேர்தல் வருவதாக இருந்தாலும் இக்கூட்டங்களில்
  • ஓட்டுக் கேட்பதைவிட பெரும்பாலும் இந்திய தேசிய இராணுவ விசாரணையைப் பற்றியே பேசப்பட்டது.
  • இப்பின்புலத்தில் காலனிய அதிகாரம் ஷா நவாஸ் கான், P.K. ஷெகல் மற்றும் G.S. தில்லோம் ஆகிய
    மூன்று முக்கிய அதிகாரிகளைப் பிரித்தெடுத்து விசாரணை நடத்தியது.
  • கடையடைப்புகளும், ஊர்வலங்களும் பொது வேலைநிறுத்தங்களும் இந்திய தேசிய இராணுவ வாரம் 1 கடைபிடிக்கப்பட்ட போது நடந்தேறியதோடு வீரர்களின் உடனடி விடுதலையும் வலியுறுத்தப்பட்டது.

Question 3.
இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.
Answer:

  • போருக்குப் பின்பு ஒரு ஆணையத்தின் மூலம் இஸ்லாமியர்கள் முழு பெரும்பான்மையில் வாழும் தொடர் மாவட்டங்களைப் பிரித்தெடுத்து அங்கே வயது தகுதி அடைந்தோரைக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றிய முடிவை எடுத்தல் வேண்டும்.
  • ஒரு வேளை ஓட்டெடுப்பின் முடிவில் பிரிவினை உறுதி செய்யப்பட்டால், அம்முக்கிய பணிகளான பாதுகாப்பு, தொலைத் தொடர்பு போன்றவற்றை பொதுவில் செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தல் வேண்டும்.
  • எல்லையில் அமையப் பெற்ற மாவட்டங்களுக்கு இரு இறையாண்மை கொண்ட நாடுகளில் ஏதோ ஒன்றில் சேர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
  • இத்திட்டங்கள் யாவும் முழுமையான அதிகார மாற்றம் ஏற்பட்ட பின் செயல்முறைக்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 4.
இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படை கலகம் ஒரு சிறப்பான அத்தியாயம் என ஏன் கருதப்படுகிறது?
Answer:

  • போரினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, விலைவாசி ஏற்றத்திலும், உணவு, தானிய பற்றாக்குறையிலும் போர்கால தொழிற்சாலைகள் மூடப்பட்டதின் மூலமாகவும் வேலையில்லா திண்டாட்டத்தின் மூலமும் பிரிட்டிசாருக்கு எதிரான உணர்வாக கிளம்பி இந்திய தேசிய இராணுவ விசாரணை எதிர்ப்பு இயக்கங்களோடு கலந்தன.
  • HMIS தல்வார் என்ற போர் கப்பலில் மாலுமியாக பணியாற்றிய B.C. தத் என்பவர் அக்கப்பலின் பக்கவாட்டில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதினார்.
  • இதனையடுத்து அக்கப்பலில் மாலுமியாக பணியாற்றிய 1100 மாலுமிகள் உடனடியாக போராட்டத்தில் இறங்கினர்.
  • தத்தின் கைது நடவடிக்கை 18 பிப்ரவரி 1946 அன்று வெடித்து கிளம்பிய கிளர்ச்சிக்கு உந்துவிசையாக அமைந்தது.
  • அதன் மறுநாள் கோட்டைக் கொத்தளத்தில் பணியிலிருந்த மாலுமிகளும் அதிக எண்ணிக்கையில் கிளர்ச்சியில் இருந்ததோடு, பம்பாய் நகரை வாகனங்களில் வலம் வந்தவாறே காங்கிரஸ் கொடியை ஏந்தி அசைக்கவும் பிரிட்டிஷ் விரோதக் கூச்சல்களை எழுப்பினர்.
  • விரைவில் ஜவுளித் தொழிற்சாலை ஊழியர்களும் ஆதரவுப் போராட்டத்தில் இறங்கினர்.
  • போராட்ட அலை கடற்படை முழுவதும் பரவியதால் 78 கப்பல்களிலும் 20 கரை சார்ந்த பணியிடங்களிலும் இருந்த 20,000 மாலுமிகள் 18 பிப்ரவரிக்குப் பின் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
  • மாலுமிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பம்பாய், பூனா, கல்கத்தா, ஜெசூர், அம்பால நகரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராயல் இந்திய விமானப் படை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட மாலுமிகள் பல்வேறு துறைமுகங்களிலும் கப்பலின் முகட்டில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் கொடிகளை ஒருங்கே கட்டியிருந்தனர்.
  • பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள் மாலுமிகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டுக் காலனிய இறுதியில் மாலுமிகள் சரணடைய வேண்டியதாயிற்று.
  • இராயல் இந்தியக் கடற்படை மாலுமிகளின் போராட்டம் இந்திய தேசிய இயக்க வரலாற்றில் ஒரு உன்னதமானப் பக்கம் என்பதோடு ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தின் கடைசி அத்தியாயமாகவும் திகழ்கிறது

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

V. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. தமிழ் நாட்டிலுள்ள இந்திய தேசிய இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் குறித்த விவரங்களையும்
படங்களையும் குறிப்பேட்டில் வைக்கவும்.
2. உமது பகுதியிலிருந்து இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய நபர்களின் குடும்பப் பின்புலம் குறித்தப் பட்டியல் ஒன்றைத் தொகுக்கவும்.

12th History Guide இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Additional Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
இந்திய தேசிய காங்கிரஸில் ………………… தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அ) அன்னிபெசன்ட்
ஆ) G. சுப்ரமணிய அய்யர்
இ) சுபாஷ் சந்திரபோஸ்
ஈ) ரவீந்திரநாத் தாகூர்
Answer:
இ) சுபாஷ் சந்திரபோஸ்

Question 2.
அமெரிக்காவின் முத்து துறைமுகம் ஜப்பானால் தாக்கப்பட்ட நாள்
அ) 7 டிசம்பர் 1941
ஆ) 17 டிசம்பர் 1941
இ) 17 டிசம்பர் 1940
ஈ) 7 ஜூன் 1941
Answer:
அ) 7 டிசம்பர் 1941

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 3.
கூற்று : புரட்சியாளர்கள் பம்பாய் நகரில் இரகசியமாக வானொலி ஒலிபரப்பு முறைமையை நிறுவினார்கள்.
காரணம் : இந்த இரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர் உஷா மேத்தா, அதன் ஒலிபரப்பு மெட்ராஸ் வரை கேட்கப்பட்டது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம் இல்லை
ஆ) கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்றும், காரணமும் சரி. கூற்றிற்கு காரணம் சரியான விளக்கமாகும்
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answer:
இ) கூற்றும், காரணமும் சரி. கூற்றிற்கு காரணம் சரியான விளக்கமாகும்

Question 4.
ஆகஸ்ட் நன்கொடையை அறிவித்தவர் ………………………………..
அ) லின்லித்கோ பிரபு
ஆ) ஸ்ட்ராஃபோர்டு
இ) மோதிலால் நேரு
ஈ) லிட்டன் பிரபு
Answer:
அ) லின்லித்கோ பிரபு

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 5.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற ஆண்டு ……………………………….
அ) 1939
ஆ) 1942
இ) 1945
ஈ) 1947
Answer:
ஆ) 1942

Question 6.
சரியான கூற்றினை எடுத்து எழுதுக.
அ) லண்டனில் நடந்த 3வது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தியடிகளும் அம்பேத்காரும் சென்றனர்.
ஆ) காங்கிரஸின் கட்டுப்பாட்டில் சாதி இந்துக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என அம்பேத்கார் கவலை அடைந்தார்.
இ) தீண்டத்தகாதோருக்கு தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதை காந்தியடிகள் எதிர்க்கவில்லை.
ஈ) சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தில் தனித்தொகுதி இடம்பெறவில்லை .
Answer:
ஆ) காங்கிரஸின் கட்டுப்பாட்டில் சாதி இந்துக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என அம்பேத்கார் கவலை அடைந்தார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

Question 7.
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை .
அ) பஞ்சாப் துணை ஆளுநர் – ரெஜினால்டு டையர்
ஆ) திராவிட இயக்கம் – தென்னிந்தியா
இ) மோதிலால் நேரு – கம்யூனிஸ்ட் கட்சி
ஈ) A.O. ஹுயூம் – காங்கிரஸ்
Answer:
இ) மோதிலால் நேரு – கம்யூனிஸ்ட் கட்சி

Question 8.
பின்வருவனவற்றுள் எது எவை சரியானவை அல்ல.
அ) அம்பேத்கார் ‘மஹத் சத்தியாகிரகம்’ என்னும் அமைப்பை உருவாக்கினார்.
ஆ) தீண்டத் தகாதோருக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதை மகாத்மா காந்தி வரவேற்றார்
இ) 1932 ஆகஸ்டில் வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.
ஈ) 1909 இந்திய அரசியல் சட்டத்தின் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
Answer:
ஆ) தீண்டத் தகாதோருக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதை மகாத்மா காந்தி வரவேற்றார்

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

II. சுருக்கமான விடை தருக

Question 1.
தனிமனித சத்தியாகிரகம் என்பது என்ன?
Answer:

  • காந்தியடிகள், சர்வாதிகாரத்திற்கு எதிரான போரை வலுவிழக்கச் செய்ய விரும்பாததால் தனிமனித சத்தியாகிரகம் என்ற உபாயத்தைக் கைகொண்டார்.
  • காந்தியடிகளால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியாகிரகிகளை அவர்களின் பேச்சுரிமையை மையப்படுத்திப் போருக்கு எதிரானப் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தூண்டினார்.

Question 2.
தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் அத்துமீறல் பற்றி விவரி,
Answer:

  • தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் அத்துமீறல்களில் முக்கியமானதாக கருதப்படுவது முத்துத் துறைமுகம் என்ற அமெரிக்க துறைமுகம் 7 டிசம்பர் 1941ல் தாக்கப்பட்டதாகும்.
  • அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்டும், சீனக் குடியரசுத் தலைவரான ஷியாங் கே ஷேக்கும் ஜப்பானின் அதிரடிப் போக்கை நிறுத்த முனைந்தார்கள்.
  • ஜப்பானியப் படைகள் 1941இன் முடிவில் பிலிப்பைன்ஸ், இந்தோ-சீனா இந்தோனேசியா, மலேசியா, பர்மா போன்ற பகுதிகளை மண்டியிட வைத்து இந்தியாவின் வடகிழக்கு எல்லை வழியாக நுழையத் தயாராயின.
  • தென்கிழக்கு ஆசியாவின் வீழ்ச்சி பிரட்டிஷாரையும் இந்திய தேசியக் காங்கிரஸையும் கவலை கொள்ள செய்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 7 இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

III. விரிவான விடையளிக்கவும்

Question 1.
இந்திய தேசியப் படை பற்றி எழுதுக.
Answer:
அ. இந்திய தேசியப் படை உருவாதல்:

  •  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பல நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்தியாவிற்கு ஆதரவாளர்களைத் திரட்டினார்.
  • 1942 இல் பர்மாவை அடைந்தார்.
  • அங்க ஜப்பானியர் சுமார் 20000 இந்தியர்களை போர்க் கைதிகளாக வைத்திருந்தனர். ஜப்பானின் துணையுடன் இக்கைதிகளை ஒன்றுபடுத்தி ‘இந்திய தேசியப் படை’ என்ற இராணுவ அமைப்பை உருவாக்கினார்.

ஆ. இந்திய மக்கள் புத்துணர்வு பெறுதல் :

  • இந்தியக் கைதிகளை ஒன்றுபடுத்தி இந்திய தேசியப்படை என்ற இராணுவ அமைப்பை உருவாக்கியதன் மூலம், நேதாஜி இந்திய மக்கள் புத்துணர்வு பெறக் காரணமாக விளங்கினார்.
  • இவரது தாரக மந்திரமான ‘ஜெய்ஹிந்த்’ இந்தியா முழுவதும் எதிரொலித்தது.
  • ‘டில்லியை நோக்கி செல்’ என்ற கோஷத்தையும் நேதாஜி எழுப்பினார்.
  •  இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மணிப்பூர் வரை இந்திய தேசியப் படை வந்தது.

இ. இந்திய தேசியப் படையின் தோல்வி:

  • 1946ஆம் ஆண்டு ஜப்பான் சரண்டையந்ததால் இந்திய இந்திய தேசியப் படையைச் சார்ந்த வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.
  • அதே ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.