Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.4 உண்மை ஓளி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 8.4 உண்மை ஓளி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 8.4 உண்மை ஓளி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.4 உண்மை ஓளி

Question 1.
ஜென் கதைகளில் வேறு சிலவற்றை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
மன நிறைவு ஓர் ஊரில் செல்வன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் அளவுக்கதிகமாகச் செல்வம் இருந்தது. வேலையாட்கள் நிறைய பேர் இருந்தனர். ஆனால் அவனால் மனம் நிறைவுடன்வாழ முடியவில்லை . ஒரு நாள் அந்த ஊருக்கு ஜென் துறவி ஒருவர் வந்தார்.

அவரிடம் செல்வந்தன் தனக்கு மனநிறைவுக்கு வழி சொல் வேண்டினான். துறவி மூன்று கல்லைச் செல்வந்தனைத் தூக்கத் செய்து மலை மீது அவனால் ஏறமுடியவில்லை . மிகவும் கனமாக உள்ளது ,என்னால் தூக்க முடியவில்லை என்றான். துறவி ஒருகல்லைத் தூக்கிப் போடச் சொன்னார். இதே போலவே ஒவ்வொரு முறையும் கூற ஒவ்வொரு கல்லாய் தூக்கிப் போடச் சொன்னார்.

இறுதியில் துறவி இப்போது பாரம் குறைந்ததா? என்றார். செல்வந்தரும் ,ஆம்! என்றார். உன்னிடம் உள்ள அளவில்லாத செல்வம்தான் பாரம். அதனை ஏழைகளுக்கு கொடுத்துவிட பாரம் குறைந்து உன்மனம் நிறைவடையும் என்றார். அவனும் அப்படியே செய்து மன நிறைவு அடைந்தேன்.

Question 2.
உண்மை ஒளி’ படக்கதையை வகுப்பறையில் நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:

காட்சி -1

ஜென் குரு :
குழந்தைகளே! உண்மையான ஒளி எது என்பதைப் பற்றி இன்று அறிந்து கொள்ளப் போகிறோம்.

மாணவர்கள் :
அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம் ஐயா!

ஜென் குரு :
பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிரும் ஒன்றே. பசி, தாகம், தூக்கம் ஆகியவை எல்லா உயிர்களுக்கும் உண்டு.

மேலும் இரவும் பகலும் மாறி மாறி வருவது போல வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இப்பொழுது உங்களை ஒரு கேள்வி கேட்கட்டுமா? இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது என்பதை எந்த நொடியில் நீங்கள் அறிவீர்கள்?

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.4 உண்மை ஓளி

மாணவன் :
தொலைவில் நிற்கும் விலங்கு குதிரையா? கழுதையா? என்பதை அடையாளம் காணக்கூடிய நொடியில் வெளிச்சம் வந்துவிட்டதை நான் அறிவேன் ஐயா.

ஜென் குரு :
இல்லை. வேறு யாராவது கூறுங்கள் பார்ப்போம்.

மாணவன் :
தூரத்திலிருக்கும் மரம் ஆலமரமா? அரசமரமா? என்பதை அடையாளம் காணக்கூடிய நேரத்தில் உண்மையாக விடிந்துவிட்டது என்பதை அறியலாம். சரிதானே ஐயா!

ஜென் குரு :
இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா? மாணவர்கள் எங்களுக்குத் தெரியவில்லை ஐயா. தாங்களே கூறி விடுங்கள்.

ஜென் குரு :
ஒரு மனிதரைக் காணும் போது இவர் உடன்பிறந்தவர் என்று எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதுதான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள்.

மாணவர்கள் :
இரவும் பகலும் வெறும் கால வேறுபாடுகள் தான். உண்மையான ஒளி உள்ளத்தின் உள்ளே ஏற்பட வேண்டியது என்பதை தாங்கள் புரிந்துகொண்டோம் ஐயா.

ஜென் குரு :
உள்ளுக்குள் ஒளி இல்லையென்றால் உச்சி வெயில் கூடக் காரிருளே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மீண்டும் நாளை சந்திப்போம். வகுப்பு முடிந்து மாணவர்கள் கலைந்து செல்கின்றனர்.)

காட்சி – 2

(குரு அருகில் உள்ள சிற்றூருக்குப் புறப்படுகிறார்.)
ஜென் குரு :
(மனதிற்குள்) இருட்டுவதற்குள் ஊரை அடைய வேண்டும்.

ஜென் குரு :
(வழியில்) ஆ! யாரது சாலையோரம் படுத்துக்கிடப்பது. (குதிரையை நிறுத்தி, கீழே இறங்கிய குரு அந்த மனிதனை எழுப்புகிறார்)

ஜென் குரு :
குழந்தாய்! எழுந்திரு. நீ யார்? ஏன் இங்கே படுத்திருக்கிறாய்?
(மனதிற்குள்) இவன் மயக்கம் அடைந்திருக்கிறான்.
(படுத்திருப்பவனுக்கு நீரைப் பருகத் தருகிறார் குரு.)

ஜென் குரு :
குழந்தாய்! எழுந்திரு . இந்த நீரைக் கொஞ்சம் குடி.
(மயக்கமடைந்தவன் எழுந்து உட்காருகிறான்.)

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.4 உண்மை ஓளி

வழிப்போக்கன் :
பசியால் மயங்கி விழுந்து விட்டேன். ஐயா. நான் பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டும்.

ஜென் குரு :
அப்படியா! சரி என்னிடம் குதிரையிருக்கிறது. நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். (குரு , அவனைத் தன் குதிரையின் மீது உட்கார வைக்கிறார்.)

ஜென் குரு :
மெதுவாக ஏறுப்பா! பார்த்து உட்கார். (குதிரையில் ஏறிய அவன் குதிரையை அடித்து விரட்டத் தொடங்குகிறான்.)

ஜென் குரு :
ஆ! என்ன இது? ஓ! இவன் திருடன் போல இருக்கிறது. என் குதிரையைத் திருடவே இப்படி நடித்திருக்கிறான். (குரு ஏமாற்றத்துடன் நடந்து ஊரை அடைகிறார்.)

காட்சி – 3

இடம் : சந்தை
ஜென் குரு – (மனதிற்குள்) இங்கு எப்படியாவது ஒரு குதிரையை வாங்கிக் கொண்டுதான் ஊருக்குத் திரும்ப வேண்டும்.

ஜென் குரு :  ஆ! அதோ அங்கு நிற்பது என்னுடைய குதிரையைப் போல் உள்ளதே
(குருவிடம் குதிரையைத் திருடியவன் அங்கு நிற்கிறான். குரு அவன் தோளைத் தொடுகிறார்)

ஜென் குரு : குழந்தாய்!

திருடன் : ஆ. நீங்களா? (குரு மெல்லச் சிரிக்கிறார்)

ஜென் குரு : யாரிடமும் சொல்லாதே !

திருடன் : எதை? ஏன்?

ஜென் குரு : குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால், இது உனக்கு எப்படிக் கிடைத்தது என்று யாரிடமும் சொல்லாதே.

திருடன் : (மனத்திற்குள்) இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.4 உண்மை ஓளி

ஜென் குரு : நீ நினைப்பது எனக்குப் புரிகிறது குழந்தாய்! ஆனால், நான் ஏமாந்து போனது தெரிந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால் கூட அவர்களுக்கு யாரும் உதவ முன்வர மாட்டார்கள். புரிகிறதா? குறுகிய தன்னலத்துக்காக நல்ல கோட்பாடுகளை அழித்துவிடக்கூடாது. இதை நீ தெரிந்து கொள்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

Question 1.
‘உண்மை ஒளி படக்கதையைக் கதையாகச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த துறவிகள் ஜென் துறவிகள். அவர்களின் சிந்தனைக் கதையே ஜென் கதைகள். அக்கதைகளுள் ஒன்று உண்மை ஒளி.’

குருவும் சீடர்களும் :
ஜென் குருவிடம் சிலர் பாடக் கற்றுக் கொண்டு இருந்தனர். ஒரு நாள் உண்மை ஒளி எது? என்பதைப் பற்றிப் பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார். பசி, தாகம், தூக்கம் ஆகியவை அனைத்து உயிர்களுக்கும் ஒன்றே. இரவு பகல் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்று குரு சொல்லிக் கொடுத்தார். பிறகு சீடர்களிடம், ”இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது” என்று எப்படி அறிவீர்கள்? என்றார்.

உண்மை ஒளி :
அதற்கு சீடன் ஒருவன், “தொலைவில் தெரிவது குதிரையா? கழுதையா? என்பதைக் காணக்கூடிய அளவு வெளிச்சம் நான் அறிவேன்” என்றான். மற்றொருவன், “தொலைவில் தெரிவது ஆலமரமா? அரசமரமா? என்பதைக் காணக்கூடிய நேரத்தில் உண்மையாக விடிந்ததை நான் அறிவேன்” என்றான். இவை எல்லாம் தவறு என்றார் குரு. ஒரு மனிதரைக் காணும் போது என் உடன் பிறந்தவர் என்று எப்போது உணர்கிறீர்களோ, அப்போது தான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள் என்றார் குரு.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.4 உண்மை ஓளி

குருவை ஏமாற்றிய திருடன் :
ஒரு நாள் குரு குதிரையில் அருகில் உள்ள சிற்றூருக்குப் புறப்பட்டுச் செல்கின்றார். சாலையோரத்தில. ஒருவன் மயங்கிக் கிடந்தான். குரு அவனிடம் தண்ணீர் கொடுத்து’ நீ யார்?’ என்று கேட்க, அவன் ‘பக்கத்து ஊர் செல்ல வேண்டும்.

பசியால் மயங்கி விழுந்துவிட்டேன்.’ என்றான். குரு இரக்கம் கொண்டு அவனை குதிரை மீது அமரச்செய்தார். குதிரையை அடித்து அவன் வேகமாகச் சென்று விட்டான். அவன் திருடன் என்பதையும் , தான் ஏமாற்றப்பட்டதையும் அறிந்தார்.

திருடனுக்கு அறிவுரை :
குதிரை வாங்க குரு குதிரைச் சந்தைக்குச் சென்றார். அங்கு அந்தத் திருடன் குதிரையை விற்றுக் கொண்டிருந்தார். குரு யாரிடமும் எதையும் சொல்லாதே! என்றார். அதற்கு திருடன், இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என்று நினைக்கின்றாரோ? என்று மனதில் நினைத்தான்.

அதற்கு குரு , நான் ஏமாந்து போனது தெரிந்தால் உண்மையில் சாலையில் மயக்கம் அடைந்து யார் கிடந்தாலும் அவருக்கு யாரும் உதவ மாட்டர்கள் என்றார். குருவின் பெருமையை நினைத்து தலைகுனிந்தான் திருடன்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.4 உண்மை ஓளி

முடிவுரை :
ஒருவரை ஏமாற்றுவது மற்றவர்களுக்குச் செய்யும் உதவியைக்கூட தடுக்கும் என்பதை இக்கதை மூலம் அறியமுடிகின்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.3 ஒப்புரவு நெறி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 8.3 ஒப்புரவு நெறி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 8.3 ஒப்புரவு நெறி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.3 ஒப்புரவு நெறி

Question 1.
பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்கள் பற்றிய செய்திகளைத் திரட்டி வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:

  1. பாரி, திருமுடிக்காரி, வல்வில் ஓரி, ஆய் அண்டிரன், பேகன், நள்ளி, அதியமான் நெடுமானஞ்சி ஆகிய கடை எழுவள்ளல்கள் பிறருக்காவே தம் வாழ்நாள் முழுதும் வாழ்ந்தவர்கள்.
  2. சீதக்காதி ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர்.
  3. காந்தியடிகள் நம் நாட்டு மக்களுக்காவே வாழ்ந்தவர்.
  4. அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசப் பண்டிதர் தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காகவே வாழந்தவர்.
  5. அன்னை தெரஸா தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்காகவே வாழ்ந்தவர்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது ……………….. நெறி.
அ) தனியுடமை
ஆ) பொதுவுடமை
இ) பொருளுடைமை
ஈ) ஒழுக்கமுடைமை
Answer:
ஆ) பொதுவுடமை

Question 2.
செல்வத்தின் பயன் ……………….. வாழ்வு.
அ) ஆடம்பர
ஆ) நீண்ட
இ) ஒப்புரவு
ஈ) நோயற்ற
Answer:
இ) ஒப்புரவு

Question 3.
வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை …………….. என்றும் கூறுவர்.
அ) மருந்து
ஆ) மருத்துவர்
இ) மருத்துவமனை
ஈ) மாத்திரை
Answer:
அ) மருந்து

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.3 ஒப்புரவு நெறி

Question 4.
உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் ………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) முடியரசன்
ஈ) கண்ண தாசன்
Answer:
ஆ) பாரதிதாசன்

எதிர்ச்சொற்களைப் பொருத்துக.

1. எளிது – புரவலர்
2. ஈதல் – அரிது
3. அந்நியர் – ஏற்றல்
4. இரவலர் – உறவினர்
Answer:
1. எளிது – அரிது
2. ஈதல் – ஏற்றல்
3. அந்நியர் – உறவினர்
4. இரவலர் – புரவலர்

தொடர்களில் அமைத்து எழுதுக.

1. குறிக்கோள் ………………..
Answer:
வாழ்க்கை குறிக்கோள் உடையது.

2. கடமைகள் ………………
Answer:
ஒரு குடிமகனாக நம் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம்.

3. வாழ்நாள் ……………….
Answer:
வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் குன்றக்குடி அடிகளார்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.3 ஒப்புரவு நெறி

4. சிந்தித்து ……………….
Answer:
ஒரு செயல் செய்வதற்கு முன் நன்றாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்.

குறு வினா

Question 1.
பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் எது?
Answer:
பொருளீட்டுவதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.

Question 2.
பொருளீட்டுவதன் நோக்கமாகக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?
Answer:
மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்கான நோக்கமாகும்.

சிறு வினா

Question 1.
ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம் யாது?
Answer:
(i) ஒருவர் செய்யும் செயலானது அது தரும் பயனைவிட, செய்பவரின் மனப்பாங்கு, உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது.

(ii) தரத்தைக் காட்டுகிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் மட்டும் போதாது, உதவி செய்தல் எதற்காக? தற்காப்புக்காகவும் இலாபத்திற்காகவும் கூட உதவி செய்யலாமே!

(iii) சொல்லப்போனால் இத்தகைய உதவிகள் ஒருவகையில் வாணிகம் போலத்தான்.
அதே உதவியைக் கட்டுப்பாட்டு உணர்வுடன், உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைந்து, உதவி செய்தவதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.3 ஒப்புரவு நெறி

Question 2.
ஊருணியையும் மரத்தையும் எடுத்துக்காட்டிக் குன்றக்குடி அடிகளார் கூறும் செய்திகள் யாவை?
Answer:

  • ஊருணி, தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமை உடையது, அதைத் தடுப்பார் யாருமில்லை.
  • ஊருணித்தண்ணீர் எடுத்து அனுபவிக்கப்படுவது. பழுத்த பயன்மரத்தின் கனிகளை அனைவரும் எடுத்து அனுபவிக்கலாம்.
  • பயன்மரம் பழங்களைத் தருவது உரிமை எல்லைகளைக் கவனத்தில் கொண்டல்ல.
  • மருந்துமரம் உதவி செய்தலில் தன்னை மறந்த நிலையிலான பயன்பாட்டு நிலை ஒன்றே காணப்பெறுகிறது.
  • நோயுடையார் எல்லாரும் பயன்படுத்தலாம். ஒப்புரவை விளக்கப் பயன்படுத்தியுள்ள இந்த உவமைகள் இன்றும் பயன்படுத்தலாம்.

சிந்தனை வினா

Question 1.
ஒப்புரவுக்கும் உதவிசெய்தலுக்கும் வேறுபாடு யாது?
Answer:
உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைத்து, உதவி செய்தவதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு. இல்லை என்று கேட்போருக்கு நாமே அவருக்குத் தேவையானதைக் கொடுப்பது உதவி செய்தல். ஒப்புரவில் பெறுபவர் உறவினர். உதவி செய்தலில் பெறுபவர் ஏழைகள் அனைவரும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஒப்புரவு நெறியை அறிமுகம் செய்வது ……………..
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) புறநானூறு
ஈ) பழமொழி
Answer:
அ) திருக்குறள்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.3 ஒப்புரவு நெறி

Question 2.
செல்வத்தப் பயனே ஈதல் – என்று கூறும் கூறும் ……………..
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) அகநானூறு
ஈ) பதிற்றுப்பத்து
Answer:
ஆ) புறநானூறு

Question 3.
தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமை உடையது ……………..
அ) ஊருணி
ஆ) பயன்மரம்
இ) மருந்து மரம்
ஈ) ஒப்புரவு
Answer:
அ) ஊருணி

Question 4.
ஊருணி, பயன்மரம் பற்றிக் குறிப்பிடும் நூல் ………………..
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) அகநானூறு
ஈ) பதிற்றுப்பத்து
Answer:
அ) திருக்குறள்

Question 5.
வாழ்க்கையின் கருவி ……………..
அ) ஒப்புரவு
ஆ) பொருள்
இ) வறுமை
ஈ) மருந்து
Answer:
ஆ) பொருள்

Question 6.
ஊருணியை அகழ்ந்தவன் …………….
அ) திருவள்ளுவர்
ஆ) அப்பரடிகள்
இ) மனிதன்
ஈ) வள்ளல்
Answer:
இ) மனிதன்

Question 7.
செல்வத்துப் பயன் ……………… வாழ்க்கை .
அ) ஒப்புரவு
ஆ) பொருள்
இ) வறுமை
ஈ) மருந்து
Answer:
அ) ஒப்புரவு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.3 ஒப்புரவு நெறி

குறுவினா

Question 1.
மனிதர்கள் தம் படைப்பாற்றல் கொண்டு படைத்தவையாக குன்றக்குடி அடிகளார் கூறுவன யாவை?
Answer:

  1. ஊருணி
  2. பயன்மரம்
  3. மருந்து மரம்

Question 2.
எவற்றை மனித வாழ்க்கையில் நடைபெறும் போராட்டம் என்று குன்றக்குடி அடிகளார் கூறுகின்றார்?
Answer:
பொருள் ஈட்டல், சேர்த்தல், பாதுகாத்தல் மனித வாழ்வில் நடைபெறும் ஒரு பணி இல்லை ஒரு போராட்டம் என்கின்றார் குன்றக்குடி அடிகளார்.

Question 3.
ஒப்புரவு நெறி என்றால் என்ன?
Answer:
அறநெறியில் பொருள் ஈட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறி ஆகும்.

Question 4.
குன்றக்குடி அடிகளார் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:

  1. நாயன்மார் அடிச்சுவட்டில்
  2. குறட்செல்வம்
  3. ஆலயங்கள் சமுதாய மையங்கள்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.3 ஒப்புரவு நெறி

Question 5.
குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள் யாவை?
Answer:

  1. அருளோசை
  2. அறிக அறிவியல்

சிறுவினா

Question 1.
ஊருணி , பயன்மரம் பற்றி வள்ளுவர் குறிப்பிடும் குறட்பாக்கள் எவை?
Answer:
”ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.”
“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.”
– ஆகியன ஊருணி, பயன்மரம் பற்றி வள்ளுவர் குறிப்பிடும் குறட்பாக்கள் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.2 அறம் என்னும் கதிர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 8.2 அறம் என்னும் கதிர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 8.2 அறம் என்னும் கதிர்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.2 அறம் என்னும் கதிர்

Question 1.
பிறருடன் பேசும் போது நீங்கள் பயன்படுத்தும் இன்சொற்களைத் தொகுத்துக் கூறுக.
Answer:
வாழ்க வளமுடன், வணக்கம், நலமா, அன்புடையவரே, சகோதரரே, நன்று, அருமை, இனிமை, பாராட்டு, வாழ்த்துகள், வெற்றி உமதே, முயற்சி திருவினையாக்கும் ஆகியன பிறருடன் பேசும் போது நான் பயன்படுத்தும் இன்சொற்கள்.

Question 2.
உன் அன்னை பயன்படுத்திய இன்சொல்லால் நீ மகிழ்ந்த நிகழ்வு ஒன்றைக் கூறுக.
Answer:
ஒரு முறை நான் தேர்வில் தோல்வி அடைந்து விட்டேன். என் நண்பர்கள், அப்பா, ஆசிரியர் எனப் பலரும் என்னைத் திட்டினார்கள். ஆனால் என் அன்னை மட்டும், தோல்வியே வெற்றியின் முதல் படி. இப்போது நீ பெற்றிருப்பது தோல்வியன்று, வெற்றியின் முதல் படி கவலைப்படாதே என்றார். அவ்வினிமைச் சொல் என்னை ஊக்கப்படுத்தியது.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காந்தியடிகள் எப்போதும் ……………….. ப் பேசினார்.
அ) வன்சொற்களை
ஆ) அரசியலை
இ) கதைகளை
ஈ) வாய்மையை
Answer:
ஈ) வாய்மையை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.2 அறம் என்னும் கதிர்

Question 2.
‘இன்சொல்’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது …………….
அ) இனிய + சொல்
ஆ) இன்மை + சொல்
இ) இனிமை + சொல்
ஈ) இன் + சொல்
Answer:
இ) இனிமை + சொல்

Question 3.
அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……………
அ) அற கதிர்
ஆ) அறுகதிர்
இ) அறக்கதிர்
ஈ) அறம்கதிர்
Answer:
இ) அறக்கதிர்

Question 4.
‘இளமை ‘ என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ………………….
அ) முதுமை
ஆ) புதுமை
இ) தனிமை
ஈ) இனிமை
Answer:
அ) முதுமை

பொருத்துக.

1. விளைநிலம் – உண்மை
2. விதை – இன்சொல்
3. களை – ஈகை
4. உரம் – வன்சொல்
Answer:
1. விளைநிலம் – இன்சொல்
2. விதை – ஈகை
3. களை – வன்சொல்
4. உரம் – உண்மை

குறுவினா

Question 1.
அறக்கதிர் விளைய எதனை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?
Answer:
அறக்கதிர் விளைய உண்மையை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.2 அறம் என்னும் கதிர்

Question 2.
நீக்கவேண்டிய களை என்று அறநெறிச் சாரம் எதனைக் குறிப்பிடுகின்றது?
Answer:
நீக்கவேண்டிய களை என்று வன்சொல்லை அறநெறிச் சாரம் குறிப்பிடுகின்றது.

சிறுவினா

Question 1.
இளம்வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப்பாடியார் கூறுவன யாவை?
Answer:

  1. இன்சொல்லை விளை நிலமாகக் கொள்ள வேண்டும்.
  2. அதில் ஈகை என்னும் பண்பை விதையாகக் கொண்டு விதைக்க வேண்டும்.
  3. வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும்.
  4. உண்மைபேசுதல் என்னும் எருவினை இடுதல் வேண்டும்.
  5. அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்.
  6. அப்போது தான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும்.
    – இளம்வயதில் இச்செயல்களைச் செய்ய வேண்டும் என்று முனைப்பாடியார் – கூறுகின்றார்.

சிந்தனை வினா

Question 1.
இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை எனக் கருதுகிறீர்கள்?
Answer:
அன்பு, இன்சொல் பேசுதல், உண்மை பேசுதல், களவாமை, புறங்கூறாமை, எளிமை, சிக்கனம், மனஉறுதி, கோபம் கொள்ளாமை, நேர்மை ஆகியன இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகளாகக் கருதுகின்றேன்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.2 அறம் என்னும் கதிர்

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
முனைப்பாடியாரின் காலம் ……………
அ) கி.பி.5
ஆ) கி.பி.13
இ) கி.பி.10
ஈ) கி.பி.12
Answer:
ஆ) கி.பி.13

Question 2.
அறநெறிச் சாரம் ……………….. பாடல்களைக் கொண்டது.
அ) 225
ஆ) 223
இ) 252
ஈ) 525
Answer:
அ) 225

Question 3.
இளம் வயதிலேயே விதைக்க வேண்டிய பண்பு ………………..
அ) இனியசொல்
ஆ) ஈகை
இ) வன்சொல்
ஈ) உண்மைபேசுதல்
Answer:
ஆ) ஈகை

Question 4.
இளமையில் பாய்ச்ச வேண்டிய நீர் ………………
அ) அன்பு
ஆ) ஈகை
இ) வன்சொல்
ஈ) உண்மை பேசுதல்
Answer:
அ) அன்பு

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.2 அறம் என்னும் கதிர்

Question 5.
வித்து என்பதன் பொருள் ……………….
அ) களை
ஆ) பெற
இ) நிலம்
ஈ) விதை
Answer:
ஈ) விதை

குறுவினா

Question 1.
முனைப்பாடியார் – குறிப்பு வரைக.
Answer:

  • முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர்.
  • காலம் : கி.பி13 ஆம் நூற்றாண்டு.
  • படைப்பு : அறநெறிச்சாரம்

Question 2.
அறநெறிச்சாரம் – குறிப்பு வரைக.
Answer:

  • முனைப்பாடியார் இயற்றிய நூல் : அறநெறிச்சாரம்
  • 225 பாடல்களைக் கொண்டது.
  • அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப்பெயர்பெற்றது.

Question 3.
எதனை விளைநிலமாகக் கொள்ள வேண்டும் என்று முனைப்பாடியார் கூறுகின்றார்?
Answer:
இனிய சொல்லை விளைநிலமாகக் கொள்ள வேண்டும் என்று முனைப்பாடியார் கூறுகின்றார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.2 அறம் என்னும் கதிர்

முனைப்பாடியார்:

முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர்.
காலம் : கி.பி13 ஆம் நூற்றாண்டு.
படைப்பு : அறநெறிச்சாரம்

சொல்லும் பொருளும்

1. வித்து – விதை
2. ஈன – பெற
3. நிலன் – நிலம்
4. களை – வேண்டாத செடி
5. பைங்கூழ் – பசுமையான பயிர்
6. வன்சொல் – கடுஞ்சொல்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.1 புதுமை விளக்கு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 8.1 புதுமை விளக்கு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 8.1 புதுமை விளக்கு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.1 புதுமை விளக்கு

Question 1.
பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களைத் திரட்டுக.
Answer:

  1. பொய்கை ஆழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசை ஆழ்வார்
  5. நம்மாழ்வார்
  6. மதுரக்கி ஆழ்வார்
  7. பெரியாழ்வார்
  8. ஆண்டாள்
  9. திருமங்கை ஆழ்வார்
  10. தொண்டரடிப் பொடியாழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. குலசேகர ஆழ்வார்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
“இடர் ஆழி நீங்குகவே” – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ………………..
அ) துன்பம்
ஆ) மகிழ்ச்சி
இ) ஆர்வம்
ஈ) இன்பம்
Answer:
அ) துன்பம்

Question 2.
‘ஞானச்சுடர்’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது ………………….
அ) ஞான + சுடர்
ஆ) ஞானச் + சுடர்
இ) ஞானம் + சுடர்
ஈ) ஞானி + சுடர்
Answer:
இ) ஞானம் + சுடர்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.1 புதுமை விளக்கு

Question 3.
இன்பு + உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ………………
அ) இன்பு உருகு
ஆ) இன்பும் உருகு
இ) இன்புருகு
ஈ) இன்பருகு
Answer:
இ) இன்புருகு

பொருத்துக.

1. அன்பு – நெய்
2. ஆர்வம் – தகளி
3. சிந்தை – விளக்கு
4. ஞானம் – இடுதிரி
Answer:
1. அன்பு – தகளி
2. ஆர்வம் – நெய்
3. சிந்தை – இடுதிரி
4. ஞானம் – விளக்கு

குறு வினா

Question 1.
பொய்கையாழ்வாரும்பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக எவற்றை உருவகப்படுத்துகின்றனர்?
Answer:
பொய்கையாழ்வார் அகல்விளக்காகப் பூமியையும், பூதத்தாழ்வார் அகல்விளக்காக அன்பையும் உருவகப்படுத்துகின்றனர்.

Question 2.
பொய்கைஆழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டினார்?
Answer:
பொய்கை ஆழ்வார் தன் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டினார்.

சிறுவினா

Question 1.
பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.
Answer:
ஞானத்தமிழ் பயின்ற பூதத்தாழ்வார் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர்விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினார்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.1 புதுமை விளக்கு

சிந்தனை வினா

Question 1.
பொய்கையாழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார். நீங்கள் எவற்றை எல்லாம் விளக்காக உருவகப்படுத்துவீர்கள்?
Answer:
நான் அறிவு, தன்னம்பிக்கை, முயற்சி, கடின உழைப்பு, ஊக்கம், கல்வி, உயிர், உண்மை ஆகியற்றையெல்லாம் விளக்காக உருவகப்படுத்துவேன்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பூமியைப் பொய்கை ஆழ்வார் உருவகப்படுத்துவது ………………..
அ) அகல் விளக்கு
ஆ) கடல்
இ) பாமாலை
ஈ) அன்பு
Answer:
அ) அகல் விளக்கு

Question 2.
துன்பத்தைப் பொய்கை ஆழ்வார் உருவகப்படுத்துவது ……………….
அ) அகல் விளக்கு
ஆ) கடல்
இ) பாமாலை
ஈ) அன்பு
Answer:
ஆ) கடல்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.1 புதுமை விளக்கு

Question 3.
சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடையவர் ……………..
அ) திருமால்
ஆ) பொய்கை ஆழ்வார்
இ) பூதத்தாழ்வார்
ஈ) பேயாழ்வார்
Answer:
அ) திருமால்

Question 4.
அந்தாதி என்பது ………………… வகைகளுள் ஒன்று.
அ) காப்பிய
ஆ) புதின
இ) சிற்றிலக்கிய
ஈ) பேரிலக்கிய
Answer:
இ) சிற்றிலக்கிய

Question 5.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடலைத் தொகுத்தவர் …………….
அ) நாதமுனி
ஆ) பொய்கை ஆழ்வார்
இ) பூதத்தாழ்வார்
ஈ) பேயாழ்வார்
Answer:
அ) நாதமுனி

குறு வினா

Question 1.
அந்தாதி என்றால் என்ன?
Answer:
ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவது அந்தாதி ஆகும்.

Question 2.
முதலாழ்வார் மூவர் யாவர்?
Answer:

  1. பொய்கை ஆழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்

Question 3.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் – குறிப்பு வரைக.
Answer:

  1. திருமாலைப் போற்றிப் பாடிவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.
  2. அவர்கள் பாடிய பாடல்கள் தொகுப்பே நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்’ ஆகும்.
  3. இதனைத் தொகுத்தவர் : நாதமுனி.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 8.1 புதுமை விளக்கு

பொய்கையாழ்வார்:

  • பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்.
  • நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும்.

பூதத்தாழ்வார்:

  • பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர்.
  • நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதி இவர் பாடியதாகும்.

சொல்லும் பொருளும்

பாடல் – 1

வையம் – உலகம்
வெய்ய – வெப்பக்கதிர் வீசும்
சுடர் ஆழியான் – ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
இடர் ஆழி – துன்பக்கடல்
சொல்மாலை – பாமாலை

பாடல் – 2

தகளி – அகல்விளக்கு
ஞானம் – அறிவு
ஆர்வம் – விருப்பம்
சுடர் – ஒளி
நாரணன் – திருமால்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.5 அணி இலக்கணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 7.5 அணி இலக்கணம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 7.5 அணி இலக்கணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.5 அணி இலக்கணம்

Question 1.
பின்வரும் தொடர்களில் உள்ள உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவற்றைக் கண்டறிந்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.5 அணி இலக்கணம் 1

பாடநூல் மதிப்பீட்டு வினா

குறுவினா

Question 1.
உவமை, உவமேயம், உவம உருபு விளக்குக.
Answer:
ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை உவமை அல்லது உவமாகம் என்பர். உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். ‘போல’, ‘போன்ற’ என்பவை உவம உருபுகளாகும்.

Question 2.
உவமை அணிக்கும் எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி.உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.5 அணி இலக்கணம்

மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.

நான் விரும்பும் கவிஞர்

வணக்கம்.
பாவேந்தரே நான் விரும்பும் கவிஞராவார். இளமையிலே வளமை மிகும் கவி பாடும் ஆற்றல் அவருக்கிருந்தது. கற்கண்டுச் சுவையனைய சொற்கொண்டு பாடினார். விற்கொண்டு அடிப்பது போல் விரைந்து வரும் சொல்லம்பால் தீமைகளைச் சாடினார்.

சமுதாயத்தையோ, மூட நம்பிக்ககைளையோ சாடும் போது புரட்சி வேகம் பிறக்கப்பாடினார்.

‘ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பராகி விட்டால் – ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி,
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!’
எனப் பாடியவர் அவர்.

‘இருட்டறையில் உள்ளதடா உலகம்: சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே’ எனக் குமுறினார். ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற்பழுத்த பலா!’ எனக் கூறி விதவையர் மணத்தை வேண்டினார்! ‘புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்!’ எனச் சபதம் செய்தார். எண்ணற்ற தமிழ் நெஞ்சில் இன்றும் – என்றும் குடியிருப்பவர் நம் பாவேந்தன்.

நன்றி.

எனக்குப் பிடித்த பாடல்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.5 அணி இலக்கணம் 2

சொல்லக் கேட்டு எழுதுக.

1. மாடுகள் கொண்டு நிலத்தை உழுதனர்.
2. நீர்வளம் மிக்க ஊர் திருநெல்வேலி.
3. நெல்லையில் தமிழ்க் கவிஞர் பலர் வாழ்ந்தனர்.
4. அகத்தியர் வாழ்ந்த மலை பொதிகை மலை.
5. இல்லாத பொருளை உவமையாக்குவது இல்பொருள் உவமை அணி.

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.5 அணி இலக்கணம் 3

வினாக்கள்:
Question 1.
பனை மரம் தரும உணவுப் பொருள்கள் யாவை?
Answer:
பதனி, நுங்கு,

Question 2.
பனை மரம் யாருக்கு கிலுகிலுப்பையைத் தரும்?
Answer:
பனை மரம் அழுகின்ற பிள்ளைகளுக்குக் கிலுகிலுப்பையைத் தரும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.5 அணி இலக்கணம்

Question 3.
‘தூதோலை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
Answer:
தூது + ஓலை.

Question 4.
பனைமரம் மூலம் நமக்குக் கிடைக்கும் பொருள்களைப் பட்டியலிடுக.
Answer:
பதனி, நுங்கு, ஓலை. கிலுகிலுப்பை , கயிறு, தும்பு.

Question 5.
பாடலுக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.
Answer:
பனைமரம்.

பின்வரும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

என்னைக் கவர்ந்த நூல்.

என்னைக் கவர்ந்த நூல் – சிலப்பதிகாரம்

முன்னுரை:
அன்னைத் தமிழில் பல கோடி நூல்கள் இருப்பினும், என்னைக் கவர்ந்த நூல் சிலப்பதிகாரமே ஆகும். அதனைப் பற்றி விரிவாகக் காண்போம்.

சிலப்பதிகாரம் அமைப்பு:
சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று பெரும் பிரிவுகளையும், முப்பது காதைகளாகிய சிறுபிரிவையும் கொண்டுள்ளது. இந்நூலை இளங்கோவடிகள் இயற்றியுள்ளார்.

சிலப்பதிகாரக் கதை:
புகார் நகரத்தில் கோவலனும், கண்ணகியும் திருமணம் செய்து வாழ்கின்றனர். கண்ணகியைப் பிரிந்து கோவலன் மாதவியுடன் வாழ்கின்றார். அவளைப்பிரிந்து மீண்டும் கண்ணகியுடன் மதுரை செல்கின்றார். கண்ணகியின் சிலம்பை விற்கச் சென்ற இடத்தில் கொல்லப்படுகின்றான். கண்ணகி நீதியை நிலைநாட்டி மதுரையை எரித்து, வானுலகம் செல்கின்றாள்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.5 அணி இலக்கணம்

சிறப்புகள்:

  1. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
  2. முத்தமிழ்க் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் நூல்.
  3. குடிமக்களைக் கதை மாந்தராகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நூல் இது.

கவர்ந்த காரணம்:
மூவேந்தர்களைப் பற்றியும், முத்தமிழ் பற்றியும், முச்சுவை பற்றியும், முந்நீதிகளைப் பற்றியும் ஒரே நூலில் விளக்குவதால் சிலப்பதிகாரம் என்னை மிகவும் கவர்ந்தது. பொதுமக்களைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டதாலும் என்னைக் கவர்ந்தது இந்நூல்.

முடிவுரை:
சிலப்பதிகாரம் மிகவும் இனிமையான நூல் என்பதை அறிந்து, நான் படித்தேன், என்னைக் கவர்ந்தது. நீங்களும் படியுங்கள்! உங்களையும் கவரும்!

மொழியோடு விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர்.

தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப் பெயர்களையும் அவற்றின் சிறப்பையும் அறிவோம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.5 அணி இலக்கணம் 4
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.5 அணி இலக்கணம் 5
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.5 அணி இலக்கணம் 6

தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.

1. என் தாயார் என்னை ……………… காத்து வளர்த்தார்.
(கண்ணை இமை காப்பது போல, தாயைக்கண்ட சேயைப் போல)
Answer:
கண்ணை இமை காப்பது போல

2. நானும் என் தோழியும் ………………… இணைந்து இருப்போம்.
(இஞ்சி தின்ற குரங்கு போல, நகமும் சதையும் போல)
Answer:
நகமும் சதையும் போல

3. திருவள்ளுவரின் புகழை …………………. உலகமே அறிந்துள்ளது.
(எலியும் பூனையும் போல, உள்ளங்கை நெல்லிக்கனி போல)
Answer:
உள்ளங்கை நெல்லிக்கனி போல

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.5 அணி இலக்கணம்

4. அப்துல் கலாமின் புகழ் ………………… உலகமெங்கும் பரவியது.
(குன்றின் மேலிட்ட விளக்கு போல, குடத்துள் இட்ட விளக்கு போல)
Answer:
குன்றின் மேலிட்ட விளக்கு போல.

5. சிறுவயதில் நான் பார்தத நிகழ்ச்சிகள் ………………. என் மனத்தில் பதிந்தன.
(கிணற்றுத்தவளை போல, பசுமரத்தாணி போல)
Answer:
பசுமரத்தாணி போல.

கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.

(எ.கா) திருநெல்வேலி – திரு, நெல், வேலி, வேல்

1. நாகப்பட்டினம் ………………
2. கன்னியாகுமரி ……………
3. செங்கல்பட்டு …………….
4. உதகமண்ட லம் …………………..
5. பட்டுக்கோட்டை ………………..
Answer:
1. நாகம், பட்டினம், பட்டி, நாடி.
2. கன்னி, குமரி, மரி, கனி.
3. செங்கல், பட்டு, கல், கட்டு.
4. கமண்டலம், மண்டலம், உலகம், உண்.
5. பட்டு, கோட்டை, படை, கோடை.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.5 அணி இலக்கணம்

நிற்க அதற்குத் தக….

கலைச்சொல் அறிவோம்

1. கரிகம் – civilization
2. நாட்டுப்புறவியல் – folklore
3. அறுவடை – harvest
4. நீர்ப்பாசனம் – irrigation
5. அயல்நாட்டினர் – foreigner
6. நாகரிகம் – civilization
7. நாட்டுப்புறவியல் – folklore
8. அறுவடை – harvest
9. நீர்ப்பாசனம் – irrigation
10. அயல்நாட்டினர் – foreigner
11. வேளாண்மை – agriculture
12. கவிஞர் – poet
13. நெற்பயிர் – paddy
14. பயிரிடுதல் – cultivation
15. உழவியல் – agronomy

கூடுதல் வினாக்கள்

குறுவினா

Question 1.
அணி என்பதன் பொருள் யாது?
Answer:
அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்.

Question 2.
அணி என்றால் என்ன?
Answer:
ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.5 அணி இலக்கணம்

Question 3.
இல்பொருள் உவமை அணி என்றால் என்ன?
Answer:
உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

Question 1.
உங்களுக்கு பிடித்த கவிதை ஒன்றைப் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
வாழ்க்கை

“பெட்டி படுக்கைகளை
சுமந்தபடி
ஒரு
பிரயாணம்

எப்போது சுமைகளை
இறக்கி வைக்கிறோமோ
அப்போது

சுற்றி இருப்பவர்கள்
நம்மைச்
சுமக்க தொடங்குகிறார்கள்”.
– மு. மேத்தா

பாடநூல் மதிப்பீட்டு வினா

Question 1.
டி.கே.சி. குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாகியுள்ளனர். அவர்களுள் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

எட்டையபுரம்:
கவிமணி பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம். எட்டையபுர சமஸ்தானம் நெடுகிலும் ஊர் ஊராய்ப் புலவர்களும் கவிராயர்களும் வாழ்ந்தனர். தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் – அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி நகர்தான்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

பாரதியாரும் தேசிகவிநாயகனாரும் நம்மோடு ஒட்டியவர்கள், அவர்களை விட்டுவிட்டு, கொஞ்சம் முந்தியுள்ள கவிஞர்களைப் பார்க்கலாம். கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் பாரதியாரின் பிறப்பிடமாகிய எட்டையபுரம் இருக்கிறது. அங்தே சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர், அவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

சீவைகுண்டம் – கொற்கை:
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகிற மார்க்கத்திலே பதினெட்டாவது மைலில் ஆற்றுக்கு வடகரையில் சீவைகுண்டம் இருக்கிறது. பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார்.

கொற்கை என்கிற சிறு ஊர்தான் அது. அதன் புகழோ அபாரம். சுமார் இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னிருந்த ஒரு பெருங்கவிஞர் முத்தொள்ளாயிர ஆசிரியர்.

கருவை நல்லூர்:
சங்கரன்கோயிலுக்கு வடக்கே எட்டு மைலில் முக்கியமான ஸ்தலம் கருவைநல்லூர், இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர். கோயிலும் சுற்று வீதிகளும் அழகாய் அமைந்திருக்கின்றன. இத்திருத்தலத்தின் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார்.

குற்றாலம்:
கவி இல்லாமலே மனசைக் கவரக்கூடிய இடம் குற்றாலம். கோயில், அருவி, சோலை பொதிந்த மலை, தென்றல் எல்லாம் சேர்த்து அமைந்திருப்பதைப்பார்த்தால், உலகத்திலேயே இந்த மாதிரி இடம் இல்லை என்றே சொல்லலாம். சுமார் ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன் திருஞான சம்பந்தர் இங்கு வந்தார். நுண் துளி தூங்கும் குற்றாலம் என்று பாடினார்.

பிற்காலத்திலே எழுந்த தமிழ் இலக்கியங்களில் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி, அஃது உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்தது. இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன் குற்றாலத்துக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ள மேலகரத்தில் வாழ்ந்துவந்த திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய நூல்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.4 திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

முடிவுரை:
தமிழ்மணம் கமழும் நகர், தமிழ் வளர்த்த நகர் என்று போற்றுதலுக்குரிய நகர் திருநெல்வேலி என்பதை அறியமுடிகின்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 1.
உங்களுடைய மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்கள் பற்றிய செய்திகளைத் தேடித் தொகுக்க.
Answer:
கொடிவேரி அணை, வெள்ளோடு பறவைகள் சரணாலயம், பெரியார் – அண்ணா நினைவகம், பவானி சங்கமேஸ்வரர் கோயில், ஜவுளிச் சந்தை, அந்தியூர் குருநாத சாமி கோயில், பண்ணாரி அம்மன் கோயில், பவானி சாகர் ஆகியன ஈரோடு மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்கள்.

Question 2.
தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள் பற்றிய செய்திகளைத் தொகுக்க.
Answer:
திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர் , திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு – ஆகியன தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
திருநெல்வேலி ……………….. மன்னர்களோடு தொடர்பு உடையது.
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
Answer:
இ) பாண்டிய

Question 2.
இளங்கோவடிகள் …………………. மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.
அ) இமய
ஆ) கொல்லி
இ) பொதிகை
ஈ) விந்திய
Answer:
இ) பொதிகை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 3.
திருநெல்வேலி ………………. ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) வைகை
இ) தென்பெண்ணை
ஈ) தாமிரபரணி
Answer:
ஈ) தாமிரபரணி

பொருத்துக

1. தண்பொருநை – பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
2. அக்கசாலை – குற்றாலம்
3. கொற்கை – தாமிரபரணி
4. திரிகூடமலை – முத்துக் குளித்தல்
Answer:
1. தண்பொருநை – தாமிரபரணி.
2. அக்கசாலை – பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
3. கொற்கை – முத்துக்குளித்தல்
4. திரிகூடமலை – குற்றாலம்

குறு வினா

Question 1.
தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?
Answer:
பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி ஆகியவை தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் ஆகும்.

Question 2.
கொற்கை முத்து பற்றிக் கூறுக.
Answer:

  1. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது.
  2. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றது.
  3. கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.

சிறு வினா

Question 1.
திருநெல்வேலிப் பகுதியில் நடைபெறும் உழவுத் தொழில் குறித்து எழுதுக.
Answer:
(i) திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத்தொழில். தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெறுகின்றது.

(ii) இங்குக் குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் கூடப் பயன்பாட்டில் உள்ளன. இருபருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது.

(iii) மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 2.
திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.
Answer:
(i) அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர்.

(ii) சங்கப்புலவர்களான மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர்.

(iii) ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரைத் தமிழின்பால் ஈர்த்த பெருமை திருநெல்வேலிக்கு உரியது.

Question 3.
திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றிக் கூறுக.
Answer:
நெல்லையில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன.
(i) காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிறைவைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

(ii) மேல வீதியை அடுத்து கூழைக்கடைத் தெரு உள்ளது. அதாவது தானியங்கள் விற்கும் கடைத் தெரு ஆகும்.

(iii)  முற்காலத்தில் பொன் நாணயங்களை உருவாக்குபவர் வாழ்ந்த இடம் அக்கசாலைத் தெரு. பெரு வணிகம் நடைபெற்ற இடம் பேட்டை.

சிந்தனை வினா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 1.
மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
Answer:

  1. இயற்கை வளம் மிகுந்ததாக இருக்க வேண்டும்.
  2. அனைத்துப் பொருட்களும் அருகில் கிடைக்கும் படி இருக்க வேண்டும்.
  3. சாதி மத பேதமின்றி மதநல்லிணக்கத்தைப் போற்றும் படியாக இருக்க வேண்டும்.
  4. சுற்றுப்புறத்தூய்மை உடையதாக இருக்க வேண்டும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகர் …………………
அ) பாளையங்கோட்டை
ஆ) பேட்டை
இ) சேரன்மாதேவி
ஈ) செங்கோட்டை
Answer:
அ) பாளையங்கோட்டை

Question 2.
முற்காலத்தில் வேணுவனம் என அழைக்கப்படும் இடம் ……………….
அ) பாளையங்கோட்டை
ஆ) பேட்டை
இ) சேரன்மாதேவி
ஈ) செங்கோட்டை
Answer:
ஆ) பேட்டை

Question 3.
பாண்டியர்களின் இரண்டாவது தலைநகர் …………….
அ) பாளையங்கோட்டை
ஆ) திருநெல்வேலி
இ) சேரன்மாதேவி
ஈ) செங்கோட்டை
Answer:
ஆ) திருநெல்வேலி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 4.
இலக்கியங்களில் திரிகூடமலை என்று குறிக்கப்படும் மலை ………………
அ) பொதிகை மலை
ஆ) குற்றால மலை
இ) பொருநை
ஈ) பேட்டை
Answer:
ஆ) குற்றால மலை

Question 5.
திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு …………….
அ) காவிரி ஆறு
ஆ) தாமிரபரணி ஆறு
இ) நொய்யல் ஆறு
ஈ) வைகை ஆறு
Answer:
ஆ) தாமிரபரணி ஆறு

Question 6.
தண்பொருநை நதி என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டநதி …………….
அ) காவிரி ஆறு
ஆ) தாமிரபரணி ஆறு
இ) நொய்யல் ஆறு
ஈ) வைகை ஆறு
Answer:
ஆ) தாமிரபரணி ஆறு

குறுவினா

Question 1.
மூவேந்தர் யாவர்?
Answer:
சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் மூவேந்தர் என்று அழைக்கப்பட்டனர்.

Question 2.
திருநெல்வேலி என்னும் பெயர் பெற்ற தன் காரணம் யாது?
Answer:
நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல அமைந்திருந்ததால் திருநெல்வேலி – எனப்பெயர் பெற்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Question 3.
திருநெல்வேலியில் சிறப்புமிக்க பழமையான மலைகள் யாவை?
Answer:

  1. பொதிகை மலை
  2. குற்றால மலை

Question 4.
இரட்டை நகரங்கள் யாவை?
Answer:
திருநெல்வேலியும், பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் என அழைக்கப் படுகின்றன.

Question 5.
பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படுவதன் காரணம் யாது?
Answer:
பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால், பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படுகின்றது.

Question 6.
பண்டைய வரலாற்றை நினைவூட்டும் திருநெல்வேலி ஊர்கள் யாவை?
Answer:

  • சேரன்மாதேவி
  • கங்கைகொண்டான்
  • திருமலையப்பபுரம்
  • வீரபாண்டியப்பட்டினம்
  • குலசேகரன் பட்டனம்

Question 7.
திருநெல்வேலி ஈர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் யாவர்?
Answer:

  • ஜி.யு. போப்
  • கால்டுவெல்
  • வீரமாமுனிவர்

Question 8.
திருநெல்வேலியில் வாழ்ந்த தமிழ்ப்புலவர் யாவர்?
Answer:
மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

சிறுவினா

Question 1.
திருநெல்வேலி – பெயர்க்காரணம் யாது?
Answer:

  1. முற்காலத்தில் திருநெல்வேலிக்கு மூங்கில் காடு என்னும் பொருள் கொண்ட ‘வேணுவனம்’ என்னும் பெயர் இருந்தது.
  2. மூங்கில் நெல் மிகுதியாக விளைந்ததால் அப்பகுதிக்கு ‘நெல்வேலி’ என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
  3. நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப்பெயர் பெற்றது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.2 வயலும் வாழ்வும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 7.2 வயலும் வாழ்வும் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 7.2 வயலும் வாழ்வும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.2 வயலும் வாழ்வும்

Question 1.
வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதி வருக.
Answer:
ஏர், மண்வெட்டி, உழவு இயந்திரம், விதைக்கலப்பை, களைவெட்டும் இயந்திரம், நீர் பாசன இயந்திரம், ஊசலாடும் கூடை, வேளாண் வானூர்தி, தாள்க்கத்தி, கதிரடி இயந்திரம், களம், படல், உமி நீக்கி, இணை அறுவடை இயந்திரம்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உழவர் சேற்று வயலில் ……………… நடுவர்.
அ) செடி
ஆ) பயிர்
இ) மரம்
ஈ) நாற்று
Answer:
ஈ) நாற்று

Question 2.
வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை ………………… செய்வர்.
அ) அறுவடை
ஆ) உழவு
இ) நடவு
ஈ) விற்பனை
Answer:
அ) அறுவடை

Question 3.
‘தேர்ந்தெடுத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) தேர் + எடுத்து
ஆ) தேர்ந்து + தெடுத்து
இ) தேர்ந்தது + அடுத்து
ஈ) தேர்ந்து + எடுத்து
Answer:
ஈ) தேர்ந்து + எடுத்து

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.2 வயலும் வாழ்வும்

Question 4.
‘ஓடை + எல்லாம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல ……………….
அ) ஓடை எல்லாம்
ஆ) ஓடையெல்லாம்
இ) ஓட்டையெல்லாம்
ஈ) ஓடெல்லாம்
Answer:
ஆ) ஓடையெல்லாம்

பொருத்துக.

1. நாற்று – பறித்தல்
2. நீர் – அறுத்தல்
3. கதிர் – நடுதல்
4. களை – பாய்ச்சுதல்
Answer:
1. நாற்று – நடுதல்
2. நீர் – பாய்ச்சுதல்
3. கதிர் – அறுத்தல்
4. களை – பறித்தல்

வயலும் வாழ்வும் பாடலில் உள்ள மோனை,எதுகைச் சொற்களை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.2 வயலும் வாழ்வும் 1

பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழக்கில் எழுதுக.

(எ.கா.) போயி – போய்
பிடிக்கிறாங்க – பிடிக்கிறார்கள்
வளருது – வளர்கிறது
இறங்குறாங்க – இறங்குகிறார்கள்
வாரான் – வரமாட்டான்

குறுவினா

Question 1.
உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?
Answer:
நாற்றுப் பறிக்கும்போது உழவர்கள் வயல் வரப்பில் உள்ள நண்டுகளைப் பிடித்தனர்.

Question 2.
நெற்கதிரிலிருந்து நெல்மணியை எவ்வாறு பிரிப்பர்?
Answer:
கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து நெற்கதிரிலிருந்து நெல்மணியைப் பிரிப்பர். இதற்கு போரடித்தல் என்று பெயர்.

சிறுவினா

Question 1.
உழவுத்தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக.
Answer:
ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர்.

அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.2 வயலும் வாழ்வும்

சிந்தனை வினா

Question 1.
உழவுத்தொழிலில் காலந்தோறும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றி எழுதுக.
Answer:
ஆற்றங்கரையில் நாகரிகம் உருவாகக் காரணமானது உழவுத்தொழில். விதைகளை விதைப்பதும், அவற்றுக்கு நீர்பாய்ச்சி வளர்ப்பது மட்டுமே பழங்காலத்தில் நடைபெற்றது. பின்னர், மனிதன் தன் சுய அறிவால் உழவுத்தொழிலுக்கு உதவியாக மாடுகளைப் பயன்படுத்தி இயற்கை எருக்களைக் கொண்டு பயிரிட்டான். பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, உழுகருவிகளையும் விதைத்தல் கருவிகளையும், பூச்சிக்கொல்லி, செயற்கை உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கினான்.

கூடுதல் வினா

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே ……………. எனப்படுகிறது.
2. நாட்டுப்புறப்பாடல்களை ………………. என்றும் வழங்குவர்.
3. பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை ………………….. என்னும் நூலில் கி.வா. ஜெகந்நாதன் தொகுத்துள்ளார்.
Answer:
1. நாட்டுப்புறப்பாடல்
2. வாய்மொழி இலக்கியம்
3. மலை அருவி

சிறுவினா

Question 1.
போரடித்தல் என்றால் என்ன?
Answer:
அறுவடை செய்த நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்வர். நெல் தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.2 வயலும் வாழ்வும்

சொல்லும் பொருளும்

1. குழி – நில அளவைப்பெயர்
2. சீலை – புடலை
3. சாண் – நீட்டல் அளவைப்பெயர்
4. மடை – வயலுக்கு நீர் வரும் வழி
5. மணி – முற்றிய நெல்
6. கழலுதல் – உதிர்தல்
7. சும்மாடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.1 விருந்தோம்பல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 7.1 விருந்தோம்பல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 7.1 விருந்தோம்பல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.1 விருந்தோம்பல்

Question 1.
வள்ளல்கள் எழுவரின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
பாரி, திருமுடிக்காரி, வல்வில் ஓரி, ஆய் அண்டிரன், பேகன், நள்ளி, அதியமான் நெடுமானஞ்சி ஆகியோர் கடை எழுவள்ளல்கள்.

Question 2.
விருந்தோம்பல் பண்பை விளக்கும் கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
ஓர் ஊரில் சிவனடியார் வாழ்ந்து வந்தார். அவரும் அவரது குடும்பமும் தினமும் யாரேனும் ஒருவருக்காவது விருந்தோம்பல் செய்வது வழக்கம். சிவனடியாரின் குடும்பம் மிகுந்த வறுமையில் இருந்தாலும் அதனைக்காட்டாது, விருந்தினரை உபசரிப்பர். விருந்தினர் உண்ட பின்புதான் அனைவரும் உண்ணுவர். காலையில் இருந்து மாலை வரை உணவு தயாராக இருந்தும் விருந்தினர் வராததால் யாரும் உண்ணாமல் பட்டினி கிடந்தனர்.

சிவனடியாரின் குழந்தைகளும் காலையில் இருந்து மாலை வரை பட்டினியாகக் கிடந்து, அழ ஆரம்பித்துவிட்டனர். இரவு நேரத்தில் பெரியவர் ஒருவர் வந்தார். ஆனால் அவரோ தான் யார்வீட்டிலும் உண்ணுவதில்லை, இரவு தங்குவதற்கு இடம்தாருங்கள், அது போதும் – என்றார். சிவனடியார் தன் நிலையை உணர்த்தி, தாங்கள் உண்டால் தான். என்னுடைய குழந்தைகள் உண்ண முடியும் என்றார். குழந்தைகளுக்காக அந்தப் பெரியவரும் சாப்பிட்டார். பிறகு அனைவரும் உண்டனர்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மரம் வளர்த்தால் ………………… பெறலாம்.
அ) மாறி
ஆ) மாரி
இ) காரி
ஈ) பாரி
Answer:
ஆ) மாரி

Question 2.
‘நீருலையில்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) நீரு + உலையில்
ஆ) நீர் + இலையில்
இ) நீர் + உலையில்
ஈ) நீரு + இலையில்
Answer:
இ) நீர் + உலையில்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.1 விருந்தோம்பல்

Question 3.
மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) மாரியொன்று
ஆ) மாரி ஒன்று
இ) மாரியின்று
ஈ) மாரியன்று
Answer:
அ) மாரியொன்று

குறு வினா

Question 1.
பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
Answer:

  1. அங்கவை
  2. சங்கவை

Question 2.
‘பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை ‘ – எவ்வாறு?
Answer:

  1. மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.
  2. பாரி மகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.1 விருந்தோம்பல்

சிந்தனை வினா

தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.

ஈகை, உயிரிரக்கம், நடுவுநிலைமை, பிறருக்கென வாழ்தல், எளிய வாழ்க்கை , தூய அன்பு, உலகப்பொதுமை ஆகியன தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகள் ஆகும்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
திண்ணை என்பதைக் குறிக்கும் சொல் ……………..
அ) மாரி
ஆ) புகவா
இ) மடமகள்
ஈ) முன்றில்
Answer:
ஈ) முன்றில்

Question 2.
மாரி என்பதன் பொருள் ………………
அ) மழை
ஆ) உணவு
இ) இளமகள்
ஈ) திண்ணை
Answer:
அ) மழை

Question 3.
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர்
அ) காரியாசான்
ஆ) முன்றுறை அரையனார்
இ) விளம்பிநாகனார்
ஈ) பாரி
Answer:
ஆ) முன்றுறை அரையனார்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.1 விருந்தோம்பல்

Question 4.
பழமொழி நானூறு ………………… நூல்களுள் ஒன்று.
அ) பதினெண்கீழ்க்கணக்கு
ஆ) பதினெண்மேல்கணக்கு
இ) சிற்றிலக்கியம்
ஈ) காப்பியம்
Answer:
அ) பதினெண்கீழ்க்கணக்கு

குறு வினா

Question 1.
முன்றுறை அரையனார் – குறிப்பு வரைக.
Answer:

  1. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
  2. இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
  3. பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.

Question 2.
பழமொழி நானூறு – குறிப்பு வரைக.
Answer:

  1. பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  2. இது நானூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால், இது பழமொழி நானூறு என்னும் பெயர் பெற்றது.

Question 3.
”ஒன்றாகு முன்றிலோ இல்” என்னும் பழமொழியின் பொருள் யாது?
Answer:
ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பதே ”ஒன்றாகு முன்றிலோ இல்” என்னும் பழமொழியின் பொருள் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 7.1 விருந்தோம்பல்

சொல்லும் பொருளும்

1. மாரி – மழை
2. மடமகள் – இளமகள்
3. வறந்திருந்த – வறண்டிருந்த
4. நல்கினாள் – கொடுத்தாள்
5. புகவா – உணவாக
6. முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை ) இங்கு வீட்டைக் குறிக்கிறது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 6.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 6.6 திருக்குறள்

பாடநூல் மதிப்பீட்டு வினா

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
…………………… தீமை உண்டாக்கும்.
அ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்வதால்
ஆ) செய்யத் தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
இ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்
Answer:
இ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

Question 2.
தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ……………… இருக்கக் கூடாது.
அ) சோம்பல்
ஆ) சுறுசுறுப்பு
இ) ஏழ்மை
ஈ) செல்வம்
Answer:
அ) சோம்பல்

Question 3.
‘எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) எழுத்து + தென்ப
ஆ) எழுத்து + என்ப
இ) எழுத்து + இன்ப
ஈ) எழுத் + தென்ப
Answer:
ஆ) எழுத்து + என்ப

Question 4.
‘கரைந்துண்ணும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………..
அ) கரைந்து + இன்னும்
ஆ) கரை + துண்ணும்
இ) கரைந்து + உண்ணும்
ஈ) கரை + உண்ணும்
Answer:
இ) கரைந்து + உண்ணும்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 5.
கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது …………………..
அ) கற்றனைத்தூறும்
ஆ) கற்றனைதூறும்
இ) கற்றனைத்தீரும்
ஈ) கற்றனைத்தோறும்
Answer:
அ) கற்றனைத்தூறும்

பொருத்துக.

1. கற்கும் முறை – செயல்
2. உயிர்க்குக் கண்கள் – காகம்
3. விழுச்செல்வம் – பிழையில்லாமல் கற்றல்
4. எண்ணித் துணிக – எண்ணும் எழுத்தும்
5. கரவா கரைந்துண்ணும் – கல்வி
Answer:
1. கற்கும் முறை -பிழையில்லாமல் கற்றல்
2. உயிர்க்குக் கண்கள் – எண்ணும் எழுத்தும்
3. விழுச்செல்வம் – கல்வி
4. எண்ணித் துணிக – செயல்
5. கரவா கரைந்துண்ணும் – காகம்

குறுவினா

Question 1.
‘நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும்’ எப்போது?
Answer:
நாம் ஒருவருடைய பண்பை அறிந்த அவருக்கு நன்மை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும்.

Question 2.
தீமை உண்டாக்கும் இரண்டு செயல்கள் யாவை?
Answer:
செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 3.
துன்பத்தில் துன்பம் உண்டாக்குபவர் யார்?
Answer:
துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர்.

பாடப்பகுதியிலிருந்து படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.6 திருக்குறள் 1
Answer:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.6 திருக்குறள் 2
Answer:
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 102 38 கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

கூடுதல் வினா

குறுவினா

Question 1.
எப்படிக் கற்று? எப்படி நடக்க வேண்டும்?
Answer:
கற்க வேண்டியவற்றைப் பிழை இல்லாமல் கற்க வேண்டும். கற்றபின் கற்ற வழியில் நடக்க வேண்டும்.

Question 2.
கண் போன்றவை எவை?
Answer:
எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் கண்கள் போன்றவை.

Question 3.
மக்கள் அறிவு எதனைப் போல வளரவேண்டும்?
Answer:
தோண்டும் அளவிற்கு ஏற்ப மணற்கேணியில் நீர் ஊறும். அதுபோல் கற்கும் அளவிற்கு ஏற்ப மக்களுக்கு அறிவு வளரும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 6.6 திருக்குறள்

Question 4.
அழிவில்லாத சிறந்த செல்வம் எது ? ஏன்?
Answer:
அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. ஒருவருக்கு அதனைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை.

Question 5.
ஒரு செயலை எப்படி செய்யவேண்டும்?
Answer:
எந்தச் செயலையும் நன்கு சிந்தித்த பின் தொடங்க வேண்டும். தொடங்கிய பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

Question 6.
யாரிடம் செல்வம் சேரும்?
Answer:
காகம் தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தன் சுற்றத்தாரைக் கூவி அழைத்து உண்ணும். அத்தகைய பண்பு உடையவர்களிடமே செல்வமும் சேரும்.